தாலி அடிமைச் சின்னமா?
-சந்திரலேகா,அவுஸ்ரேலியா-
தாலி பெண்ணுக்கு வேலி என்று ஒரு பழைய சினிமாப் பாடல் உள்ளது. தாலியின் பெருமை பேசும் படங்களும் வந்தன. தகுதியில்லாதவன் கட்டினால் அதனைக் கழற்றி வீசுவதில் தவறில்லை என்று கூறும் படங்களும் வந்தன. எவ்வாறாயினும் திருமணத்தில் கணவனால் கட்டப்படும் தாலி ஒரு பெண் திருமணமானவள் என்பதைக் குறித்த போதும் அது கணவன் மனைவியிடை அன்பான பந்தத்தை வளர்க்கவும் காரணமாக அமைந்தது, இன்றும் அமைகிறது. மனைவியின் கழுத்தில் தாலியைக் காணும் கணவன் இவள் எனது மனைவி. எனக்குச் சொந்தமானவள். இவÇ¢ல் வாழ்நாள் முழுவதும் அன்பு செலுத்துவதுடன் கஷ்டப்படாது இவளை வாழ வைக்கவேண்டியதும் எனது கடமை என்று நினைக்கிறான். தாலியைச் சுமந்திருக்கும் பெண்ணோ இவன் என்னை மணந்து எனக்கு புதிய வாழ்வு தந்தவன். அவனுக்கு உரியவளாக நான் வாழவேண்டும் என்று நினைக்கிறாள். இவ்வாறான எண்ணங்கள் இருவரிடையே உள்ள பந்தத்தை வலுவுடையதாக்குகின்றன. அந்த பந்தம் குடும்பம் என்ற அமைப்புக்கு அடித்தளம் அமைக்கின்றது.
யாழ்ப்பாணத்திலேயே பொற்கொடியில் தாலியைக் கோர்த்துக் கட்டும் வழக்கம் உள்ளது. இந்தியாவில் எத்தனை பணம் இருந்தாலும் தாலியை மஞ்சள் கயிற்றில் கோர்த்துக் கட்டுவதே வழக்கம். கஷ்டம் வரும் போது உதவும் என்ற வகையில் தான் இந்த பொன்னில் கொடி செய்யும் முறை யாழ்ப்பாணத்தில் வந்திருக்க வேண்டும். பின் அது அந்தஸ்த்தைப் பறை சாற்றும் சின்னமாக காலப்போக்கில் மாறிவிட்டது. "மாப்பிள்ளை எத்தனை பவுணில் தாலிக் கொடி போட்டவர்?" என்று விசாரிக்கும் வழக்கம் இன்றும் ஊர்கÇ¢ல் காணப்படுகிறது. வசதி உள்ளவர்கள் இருபத்தைந்து பவுணில் கொடி போடும் வழக்கம் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் காணப்பட்டது. பின்னர் பலரும் எட்டுத் தொடக்கம் 10 பவுணுக்குள் கொடி போடும் முறை சாதாரண நடைமுறையாகியது. ஆயினும் தமிழர் புலம் பெயர ஆரம்பித்த பின்ன÷ þó¾ ¿¨¼Ó¨È¢ø Á¡üÈõ ²üÀ¼ ¬ÃõÀ¢ò¾Ð. சிறப்பாக பிரான்ஸ்சில் உள்ள சிலர் தம்மிடமுள்ள பணப்புழக்கத்தைப் பறைசாற்ற ஏற்கெனவே 10 பவுணில் தாலிக் கொடி அணிந்திருந்த மனைவிமாருக்கு 60 பவுணில் கொடி செய்து போÎÅதாக பரீசிலிருந்து வெÇ¢வரும் ஈழநாடு பத்திரிகையில் ஒரு முறை படித்தேன். இவை அனைத்தும் தனிப்பட்டவர்களது விருப்பத்தைப் பொறுத்தது. திருமணத்தில் அணியப்படும் தாலி என்ற மங்கலச் சின்னம் முக்கியமானதே தவிர அது எத்தனை பவுணில் கோர்க்கப்படுகின்றதென்பது முக்கியமானதல்ல.
தாலி பற்றிப் பேசும் போது பலருக்கு பல விதமான வினாக்கள் நெஞ்சில் எழுகின்றன. எப்போது எவ்வாறு தாலி திருமணத்தைக் குறிக்க ஆரம்பித்தது? ஏன் இது பெண்களுக்கு மட்டும் அணிவிக்கப்படுகிறது? இது ஆணின் உயர்வையும் பெண் அவனுக்கு கீழ்ப்பட்டவள் என்பதையும் காட்டுகிறதா? அல்லது அது இருவரிடையே உருவாகும் புதிய அல்லது அழியாத பந்தத்தை உருவகமாகக் குறிக்கின்றதா? கல்வியும் தர்க்க ரீதியான சிந்தனைப் போக்கும் இன்று மரபு ரீதியாகக் கைக்கொள்ளப்படும் பல விஷயங்கள் பற்றிய கேள்விகளை எழுப்புவதுடன் பலரை இவற்றிற்குப் பாதகமான போக்கில் சிந்திக்கவும் வைக்கிறது. தாலி நிரந்தரமாக மணமான பெண்ணின் கழுத்தில் இருந்தாலும் சரி அல்லது அது வங்கியில் நகைப் பெட்டிக்குள் தூங்கினாலும் சரி அதனது முக்கியத்துவம் திருமணத்தில் குறைந்து போவதில்லை. இந்தியாவின் தென் பகுதியிலும் மேற்குப் பகுதியிலும் உருவாகிய தாலி கட்டும் வழக்கம் திருமணத்தில் பிரிக்க முடியாத முக்கிய அம்சமாகத் திகழ்வதுடன் அது மணமகளுக்கு ஒரு அந்தஸ்த்தையும் கௌரவத்தையும் வழங்குகிறது.
திருமணத்தின் போது மகளைத் தந்தை கன்னிகாதானம் செய்த பின் தாலியின் மேல் நீர் ¦¾Ç¢த்து திருமணத்தை நடத்தும் புரோகிதர் பின் வரும் மந்திரத்தைக் கூறுகிறார். "இந்தப் பொன் உங்கள் செல்வத்தைப் பெருக்கட்டும். இந்த நீர் உங்கள் திருமண வாழ்வைத் தூய்மைப்படுத்தி உங்கள் வளத்தை அதிகரிக்கட்டும். மணமகளான நீ உன்னை உன் கணவனுக்கு வழங்குவாயாக."
தாலி கட்டும் போது மணமகன் சார்பில் கூறப்படும் மந்திரம் இது. "நான் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். ஓ ¦ºªபாக்கியவதி, நான் இம்மங்கல நாணை உன் கழுத்தில் கட்டுகிறேன். நூறு வருடங்கள் நீ சுமங்கலியாக நிறைவான வாழ்வு வாழ கடவுள் உனக்கு அருளட்டும்."
இன்றுள்ள முறையில் தாலி கட்டும் முறை என்று அறிமுகப்படுத்தப்பட்டது என்பது பற்றி நோக்குவது பயனுள்ளது. நிச்சயமாக பண்டைய இந்தியாவில் இவ்வழக்கம் இருக்கவில்லை. இந்தியாவின் ஏனைய பகுதிகÇ¢ல் மணமக்களைப் பாதுகாக்கும் வண்ணம் கங்கணங்களை கட்டும் முறை காணப்பட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் தாலி என்ற சொல் வழக்கு தால விருட்சத்தின் அதாவது பனையின் ஓலையால் தயாரிக்கப்பட்ட கழுத்தணியை அணியும் வழக்கத்துடன் ஆரம்பித்திருக்கலாம். பனையோலை உலர உலர நீண்ட காலம் அழியாது நிலைக்கும் என்பதால் அதை அணிந்து வந்துள்ளனர். சங்க இலக்கியங்கÇ¢ல் ஒரு ஆண் தான் கொன்ற புலியின் பல்லைத் தன் வீரத்தின் அடையாளமாகத் தன் காதலியின் கழுத்தில் அணியும் வழக்கம் காணப்பட்டதை அகநானுறு குறிப்பிடுகின்றது. அதனைச் சிலப்பதிகாரமும் கூறுகிறது. பாதுகாப்புக்காக அணியப்படும் ஐம்படைத் தாலியை தாலி என்ற சொல்லால் குறிப்பிடும் வழக்கமும் இருந்ததை அகநானுறு, புறநானூறு, திணைமாலை நூற்றைம்பது ஆகியவற்றிலிருந்து அறியமுடிகிறது. சிலப்பதிகாரம் மங்கல அணி என்று ஒரு சொல்லைக் கூறுகிறது. ஆனால் அது தாலியைக் குறிப்பிடுகிறதா என்பதற்கு ஆதாரமில்லை. கோவலன் கண்ணகி திருமணத்தில் அக்கினியை வலம் வந்தமை கூறப்பட்டபோதும் அப்போது தாலி அணிவித்தமை பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எட்டாம் நுற்றாண்டளவில் வாழ்ந்த ஆண்டாளும் நாச்சியார் திருமொழியில் வரும் கண்ணனுடனான திருமணம் பற்றிய கனவுப் பாடலில் கைத்தலம் பற்றுதல் அதாவது இன்றும் பிராமண திருமணங்கÇ¢ல் முக்கிய அம்சமாக இருக்கும் பாணிக்கிரகணம் பற்றி மட்டுமே குறிப்பிடுகிறார்.
இன்று கைக்கொள்ளும் முறையில் தாலி அணியும் முறை கிபி 958ம் ஆண்டு கல்வெட்டொன்றில் முதல் முதலாகக் குறிப்பிடப்படுகிறது. விஜயநகர ஆட்சியில் நாயக்க மன்னர்கள் தமிழ்நாட்டை ஆண்ட காலத்தில் (1336-1732) இம்முறை பரவலாகியது. இதனால் தமிழ் நாட்டில் ஆரம்பிக்கப்பட்டதாகக் கருதப்படும் தாலி கட்டும் முறை 10ஆம் நூற்றாண்டு வரையிலேயே ஆரம்பித்திருக்க வேண்டும்.
இன்று தென்னிந்திய தமிழ் சைவ வைஷ்ணவ திருமணங்கÇ¢ல் பொற் தாலி அணிவிக்கப்படுகிறது. இந்த தாலியில் அவரவர் சமய பண்பாட்டுச் சின்னங்கள் பொறிக்கப்படுகிறது. 108 பருத்தி நூல் இழைகளால் பின்னப்பட்டு மஞ்சள் பசையில் தோய்க்கப்பட்ட கயிற்றில் இத்தாலி கோர்க்கப்பட்டு மணமகனால் மணமகÇ¢ன் கழுத்தில் கட்டப்படும். இதனைக் கட்டும் போது மணமகன் முதல் முடிச்சைப் போட அவரது சகோதரிகள் மிகுதி இரண்டு முடிச்சுகளையும் போடுவார்கள். முதலாவது முடிச்சு இத் திருமணத்தை சம்பிரதாய பூர்வமாக நிறைவு செய்து தம்பதிகளை திருமணமானவர்கள் என்று ஏற்றுக் கொள்ள வைக்கிறது. இரண்டாவது முடிச்சு மணமகளை மணமகனது குடும்பத்திற்கும் அவர்களது மரபிற்கும் வரவேற்கிறது. மூன்றாவது இப் பெண் இப்போது எல்லோரது முன்னிலையிலும் திருமணமாகிவிட்டவள் என்பதை சமூகத்திற்கு அறிவிக்கிறது.
தெலுங்குத் திருமணங்கÇ¢ல் மணமகனுக்கும் மணமகளுக்கும் கைகÇ¢ல் மஞ்சள் கங்கணங்கள் கட்டப்பட்டபின் அது வரை அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்காது தடுப்பாகப் போடப்பட்டிருந்த வெள்ளைத்துணி நீக்கப்படும். பின்னர் மணமகன் sotrum எனப்படும் தாலியை மணமகளுக்கு கட்டுவான். கேரளாவில் தாலி சிறிய இலை வடிவில் அமைந்துள்ளது. "தாலி கெட்டு" என்று கூறப்படும் சடங்கில் இது மஞ்சள் கயிற்றில் கோர்க்கப்பட்டு மணமகனால் மணமகளுக்கு கட்டப்படும். கர்நாடகத்தில் தாலி பதக் அதாவது பதக்கம் எனப்படுகிறது. மகாராஷ்ரத்தில் கறுப்பு மணி மாலையில் இணைக்கப்பட்ட தங்கத் தாலியை மணமகன் மணமகÇ¢ன் கழுத்தில் கட்டுகிறான். இந்தியாவின் வடக்கு கிழக்குப் பகுதிகÇ¢ல் தாலியின் இடத்தை வேறு ஆபரணங்கள் அல்லது குங்குமம் எடுக்கிறது. பெங்கோல், ஒறிஸ்ஸா, அஸ்ஸாம் ஆகிய இடங்களiல் திருமணமான பெண்கள் இரும்பு காப்புகளை அணிகின்றனர். அத்துடன் பவளமும் சிப்பியும் கலந்த ஆபரணம் தாலிக்கு பதிலாக அணியப்படுகிறது. ராஜஸ்தானில் திருமணமான பெண்கள் பச்சை நிறக் காப்பு அணிகின்றனர்.
தாலி என்பதை சமூக, பண்பாட்டு சமய வெÇ¢ப்பாடாகவே காணுதல் வேண்டும். தென் பகுதியில் மஞ்சள் மங்கலச் சின்னமாகக் கருதப்பட வடக்கில் கறுப்பு மங்கலம் நிறைந்த நிறமாகக் கருதப்படுகிறது. அத்துடன் கறுப்பு மணிகள் தீமைகளை அகற்றும் என்று அங்கு எண்ணப்படுகிறது. ஆரம்பத்தில் நல்லெண்ண இணைப்பைக் காட்டுவதற்காக மணமகனும் மணமகளும் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிற்றைக் கட்டிக் கொண்டனர். பின்னரே மணமகன் பெண்ணின் தகப்பனிடமிருந்து பெண்ணைப் பொறுப்பெடுப்பதன் அடையாளமாக மணமகÇ¢ன் கழுத்தில் தாலி கட்டும் முறை வந்தது என்று கூறப்படுகிறது. இந்த தாலி கணவன் மனைவிடையே உருவாகும் ஆழமான அன்பையும் விருப்பையும் உருவகமாகக் குறிப்பதுடன் கணவனின் நீண்ட வாழ்வையும் குறித்து நிற்கிறது.
புலம் பெயர்ந்த பின்னர் தமிழர் எத்தனையோ வகைகல் மாறிவிட்ட போதும் திருமணத்தின் போது மணப்பெண் சேலை அணிவதும் மாப்பிள்ளை அவளுக்குத் தாலி அணிவிப்பதும் இன்னும் மாறவில்லை. மணமகள் தொடர்ந்து தாலியை அணிந்திருக்கிறாளோ þø¨Ä§Â¡ திருமணத்தின் போது தாலி கட்டும் மரபு மாறவில்லை. இனியும் மாறும் என்று நான் நினைக்கவில்லை. தாலி என்பது சில பெண்கள் நினைப்பது போல அடிமைச் சின்னமல்ல. அது கணவன் மனைவியரிடையே அன்பையும் பிணைப்பையும் ஏற்படுத்த உதவும் ஒரு மங்கலச் சின்னமாகும்.






