www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

சிந்திப்போம்!

தாயகத்துள் சுயத்தை அழிக்கும் பிளாஸ்ரிக்

-நமது ஈழநாடு-

பிளாஸ்ரிக்குகளின் வருகையால் வன்னி-யாழ்ப்பாணப் பகுதிகள் சுய சார்புக் கைத்தொழில்கள் அழிந்து வருகின்றன. உள்ளூர் கைத்தொழில் களின் உற்பத்தி சந்தைவாய்ப்புகள் பற்றிய ஒரு கருத்துத்திரட்டலை மேற்கொண்டபோது அது தெரியவந் துள்ளது.தமிழ் மக்களிடம் அன்றாட பயன் பாட்டுப்பொருட்களாக அண்மைக் காலம்வரை உள்ளூர் உற்பத்திப் பொருட்களே இருந்துவந்தன. பனம் கைத்தொழிற் பொருட்களான பெட்டி, சுளகு, நீர்த்துப்பெட்டி, இடியப்பத் தட்;டு, விசிறி, கடகம், மீன்பறி, நீர் இறைப்புப்பட்டை, பாய்வகைகள், மண்பானைகள், சட்டிகள், அகப்பை, மேசை, கதிரை உள்ளிட்டன. 2 ஆண்டுகளின் முன்வரை மக்கள் பயன்பாட்டில் இருந்தன. இதன் காரணத்தால் உள்ளூரில் பாரம்பரிய மாகத்தொடர்ந்து ஒரு தொழிற்துறை வருமானம் தருவதாக உயிர்வாழ்ந்து வந்தது.

ஆனால், இப்பொழுது அது மூச்சி ழுத்துக் கொண்டு அல்லது சேடம் இழுத்துக்கொண்டிருக்கின்றது. பொரு ளாதாரத்தடை நீக்கம் ஒருபுறம், உலக அரசுசாரா உதவு நிறுவனங் கள் மறுபுறம் இதற்கான காரணி களாகும்.போர், பொருளாதாரத் தடைக் காலத்திலும் இப்பொழுதும் இடம் பெயர்ந்த மீளக்குடியமரும் மக் களுக்கு அன்றாட வாழ் வுத்தேவைக்கான பொரு ட்கள் வழங்கப்பட்டன. வழங்கப்படுகின்றன. வழங்கப்படும் பொருட் கள் அனைத்தும் சூழலை மாசுறச் செய்யும் பொருட் களேயாகும். சட்டி, சரு வம், பானை, பாய், எல் லாமே பிளாஸ்ரிக் தயா ரிப்புகளாகும்.

சுற்றுச் சூழலைப் பற்றிக் கதைக் கும் அதே நிறுவனங்கள் அதற்கு நிவாரணமாக வழங்குகின்றன. இதன் மூலம் சூழல் மாசடை தலுக்கான, என்றுமே அழியாத பிளாஸ்ரிக்கு கள் நமது சூழலில் சேர்க் கப்படுகின்றன. சூழலை மாசடையச் செய்யும் இந்த தொழிற்துறைக்கு வருமானம் கொடுத்து, அதனை ஊக்குவிப்ப தான உலக நிறுவனங் களின் இந்த செயற்பாடு அமைந்துள்ளது. இந்த நிறுவனங் கள் தம் சொந்த நாடுகளில் சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை கொண் டனவாக உள்ளன.ஆனால் எம் சூழலை மாசடையச் செய்யும் பொருட்களை உற்பத்தி செய்வோருக்கு இலகுவான சந்தை வாய்ப்பை தேடிக்கொடுக்கின்றன.

இதேவேளை போரால் பாதிப்புற்ற மக்களிடம் இருக்கும் சூழலை மாச டையச்செய்யாத தொழிற்துறைக்கு எதுவித ஊக்குவிப்பும் கிடையாது. கடைசி உள்ளூர் உற்பத்திகளைக் கூட இவை கொள்வனவு செய்ய உதவவில்லை. மறுபுறம் பொருளா தாரத் தடைத்தளர்வால் பிளாஸ்ரிக் அலுமினிய உற்பத்திகள் சகல வகை களிலும் தமிழர் தாயகப் பகுதிக்கு வந்து சேர்ந்துவிட்டன. இவையே மக்களிடம் அதிக நுகர்வுப்பொருட் களாக உள்ளன.
இதனால், பனம் பொருள் உற்பத் தித்தொழில், மட்பாண்ட உற்பத்தித் தொழில், மரவேலைத் தொழில் என் பன உயிரிழந்து வருகின்றன.

வன்னியில்-பூநகரி, யாழ்ப்பாணத் தில் - வடமராட்சி, தீவகப் பகுதி களில் அதிகம் பனம்பொருள் உற் பத்திகள் குடிசைக் கைத்தொழிலாக நடந்தன. அவற்றின் உற்பத்தியாளர் களை சந்தித்து நாம் கேட்டபோது ஒரு நாளைக்கு அதிகம் 2 கடகம், அல்லது 2 சுளகு, அல்லது 2 பாய் களை இழைக்கமுடியும். 2 கடகம், என்றால் 200 ரூபா கிடைக்கும். சுளகு என்றால் 150 ரூபா கிடைக் கும். பாய் என்றாலும் இப்படியே கிடைக்கும். இதைவிட இப்பொழுது கூலித்தொழிலின் சம்பளம் நாளாந்தம் அதிகம். அதனால் தாம் இப்பொழுது பனம் பொருள் உற்பத்தித் தொழிலை விட்டு கூலித்தொழிலுக்கே செல்வ தாகவும், பனம் பொருள் உற்பத்தி யாளர்கள் கூறுகின் றனர்.

உலகளவில் சூழலை பாதுகாக் கத்தக்க பயன்பாடு முடிந்தபின் உக்கி, மக்கி அழிந்து போகக் கூடியதாக இவையே உள்ளன. மறுபுறம், மட்பாண்ட உற்பத்தியாளர்களி டம் கேட்டபோது இப்போது அதிக மாக வந்திருக்கும் அலு மினியம் - பிளாஸ்ரிக் பொருட் கள் மட்பாண்டங் களுக்கான பயன் பாட்டைக்குறைத்து விட்டதாக கூறு கின்றனர். இன்னும் இவற்றுக்காக சந்தைகளில் இருக்கும் கடைக் காரர்களிடம் கருத்தறிந்தோம், பனம் பொருள் உற்பத்திப் பொருட்கள் போல பிளாஸ்ரிக்கில் வந்துவிட்டன.

மக்கள் இதனையே அதிகம் வாங்கு கின்றனர். 10 விழுக்காட்டுக்குக் குறைவானோரே பனம் பொருள் உற்பத்திகளை வாங்குகின்றனர். கட்டுமானங்களுக்கு மணல் அள்ளக் கூட பிளாஸ்ரிக் பொருட் கள் வெட்டப்பட்ட பிளா ஸ்ரிக் கொள்கலன்களே அதிகம் பயன்படுகின்றன. இதனால் கடகங்கள் கூட அதிகம் விற்பனையாவ தில்லை. தொப்பிகள், அலங்காரப் பொருட்கள், பெட்டிகள், பாய்களை இங்குவரும் சிங்களவரே அதிகம் வாங்குகின்ற னர். இப்பொழுது சிங் களவரின் வருகை குறைந் ததால் அவற்றின் வழி விற்பனையும் குறைந்து விட்டது.

மட்பாண்டங்களைப் பொறுத்தவரை அதிக விற்பனை பொங்கலன்றே நடக்கும். ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக பொங் கலுக்கான பானை விற் பனையில் 20 விழுக்காடே நடந்திருக்கின்றது. 80 விழுக்காடு அலுமினியப் பானைகளே. முருக வேலையிலும் கதிரை, மேசைகள் பிளாஸ்ரிக்குகளே பிடித்து விட்டன.இந்த நிலையில் சூழல் அழிப்பை சந்தைகள் அரசாழ்கின்றன.எமது சூழல் மக்களை வாழ வைத்த தொழிற்துறை சேடம் இழுத் துக்கொண்டிருக்கின்றது. இனி அவை தொல்பொருட்கலைச்சாலை அல்லது அரும்பொருட்கலைச்சாலைகளிலேயே பார்க்கக்கூடியதாக இருக்கும்.நம் தாயகத்தின் சுயம் உயிரிழந்து கொண்டிருக்கின்றது.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

சிறீலங்காவின் தேசக்கொடியானது அறியாமையின் சின்னமா? - 2

-யாழில் இருந்து வல்லபை:-[மூலம்:சூரியன்.கொம்]
1. இலங்கையின் சிங்கள அரசர்கள், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தை மாத்திரம்தானா பண்டைய காலம் முதல் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் காலம்வரை பயன்படுத்தி வந்திருந்தனர்? அப்படியானால், தென்னிலங்கையில் காணப்படும் பிராமி எழுத்து நாணயங்களிலும், ஏனைய நாணயங்களிலும், சிற்பங்களிலும், ஏனையவைகளிலும் காணப்படும் ஆண்யானை, ஆண்குதிரை, எருது, ஆமை, மயில், அன்னம், சேவல், மீன் மற்றும் அடையாளங்கள் எந்தெந்தச் சமூகங்களை அடையாளப்படுத்துகின்றன?
2. சிங்கள அரசர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் ஆண்சிங்க அடையாளத்தையும், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லையா?

3. சிங்கம் வீரமானது, வலிமையானது. ஆப்படியாயின், வலிய, வீர சிங்கத்திற்கும், வாளுக்கும் (Sword) என்ன தொடர்பு?

4. வாளேந்தும் ஆண்சிங்கம் ஏன் எமது வலது கைப்பக்கம் பார்த்தவண்ணம் வைக்கப்படாது, துட்டகாமணீயின் கொடியிலும், கண்டி இராச்சியக் கொடியிலும் எமது இடது கைப்பக்கம் பார்த்வண்ணம் வைக்கப்பட்டுள்ளது?

5. பௌத்தமானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளைக் கொடுப்பது. மஹாவம்ஸவில் தேவநம்பியதிஸ்ஸவின் ராணியான அனுலாவும், அவளது பரிவாரங்களும் பிக்குணிகளாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பௌத்த இலங்கையில் எப்படிச் சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தவென ஆண்சிங்கம் பயன்படுத்தப்பட்டது?

6. ஆண்சிங்கம் சிங்கள இனத்தை அடையாளப்படுத்துவதாயின், கண்டியின் தமிழ் அரசனனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஏன் வாளேந்தும் ஆண் சிங்கத்தினைத் தனது கொடியில் அடையாளமாக வைத்தான்?

7. கண்டியில் தலதா மாளிகாலவில் (Dalada Maligawa) புத்தபெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுவந்துள்ளது. ஆகவே கண்டியில் புத்தபெருமானின் அற ஆட்சியே இருந்துள்ளது. இந்த நிலையில் கண்டி இராச்சியத்தில் புத்தபெருமானின் அற ஆட்சியை அடையாளப்படுத்தும் கொடிகளே அன்றும் பறக்கவிடப்பட்டிருக்க முடியும். அப்படியானால், வாளேந்தும் ஆண் சிங்கமானது ஏனைய மிருகங்களைக் கொன்று தின்னும் மிருக சிங்கமல்லாது, ஒளிமயமான, அன்புமயமான, அருள்மயமான சிங்கத்தை, புத்தபெருமானைக்த்தான் அடையாளப்படுத்துகிறதா?

8. தம்புள்ள கற்பாறைக் கோயிலானது புத்தபெருமானின் கோயிலாகும். ஆகவே, அக்கோயிலில் புத்தபெருமான் தொடர்பானவையும், பௌத்தம் தொடர்பானவையும் தான் காணப்படமுடியுமேயன்றி, ஒரு இனம், சாதி, குழு போன்றவவைகளை அடையாளப்படுத்தும் விடயங்களும், தமிழர் மீதான சிங்களவரின்; போர் வெற்றிபற்றியோ இருக்கமுடியாது. இந்தநிலையில், போரில் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் துட்டகாமணீ உயர்த்திய கொடியானது புத்தபெருமானின் அற ஆட்சியானது இலங்கை பூராகவும் நிலைநாட்டுப்பட்டதைக் குறிக்கிறதா? அதாவது, வாளேந்தும் ஆண் சிங்கக் கொடியானது புத்தபெருமானைக் குறிக்கிறதா? ஆந்தக் கொடியில், ஏன் வாளேந்தும் ஆண் சிங்கமானது நடுவு நிலைத் தன்மையையுடையதான முறையில் வைக்கப்பட்டுள்ளது? அது பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தவா?

இந்த எட்டுக் கேள்விகளுள், மூன்றாம், ஐந்தாம் கேள்விகளுக்கு ஒருவித விளக்கத்தினைக் கொடுக்க முன்னைய ஆராய்வாளர்களும், அரசியல்வாதிகளும் முற்பட்டு இருந்துள்ளனர். ஆனால், அவர்களது விளக்கங்கள் விஞ்ஞானத் தன்மையற்றதாகவே காணப்படுகின்றன.

அவர்கள் ஏனைய ஆறு கேள்விகளையும் எழுப்பவேயில்லை! இதனால், இந்த இரண்டு கேள்விகளுக்கான அவர்களது விடைகளும் கற்பனாவாதமாக ஆகியுள்ளது.

1. ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது அடையாளங்கள்:

ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள், ஒருமித்தும், தனித்தனியாகவும், இரண்டு ஒன்றாகவும், நாணயங்கள், சிற்பங்கள், கல்வெட்டுக்கள், ஏனையவைகளில் தென்னிலங்கையிலும், வட இலங்கையிலும், தென்னிந்தியா, வட இந்தியா, கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படுகின்றன.



சந்திரவட்டக்கல்

தென்னிலங்கையில், அநுராதபுரவில்; கண்டெடுக்கப்பட்ட சந்திரவட்டக் கல்லில் (Moon Stone) ஆண்யானை, ஆண்சிங்கம், ஆன்குதிரை, எருது என்பவை திரும்பத்திரும்ப வளைவில் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. உள்வளைவில் அன்னபறவை மீண்டும்மீண்டும் செதுக்கப்பட்டுள்ளது. ஆனால், இவைகள் எவற்றைக் குறிக்கின்றன என்பதை ஆராய்வாளர்கள் விஞ்ஞான hPதியாக ஆராய்ந்தறிய முடியாத நிலையில், கற்பனாவாதக் கதைகளை ?ஆய்வு? விளக்கங்களாகக் கூறி, எழுதி வந்துள்ளனர்.



கரந்தைச்செப்பேட்டு முத்திரை

தென்னிந்தியாவில் கரந்தைச் செப்பேட்டு முத்திரையில், ஆண்சிங்கம், ஆண்யானை, ஆண்குதிரை, எருது என்ற நான்கும், இரட்டைமீன் அடையாளத்துடனும், சுவஸ்திகா அடையாளத்துடனும், குடை, இருபுறம் சாமரைகளின்கீழ் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.



Lion Capital

வட இந்தியாவின் Sarnath இல் அசோகச் சக்கரவர்த்தியால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் உயர்ந்த து}ணின் உச்சியில் ?Lion Capital? வைக்கப்பட்டிருந்தது. இந்த ?Lion Capital?இன் மேற்புறமாக நான்கு சிங்கங்கள் நாலு திசைகளையும் பார்த்தவண்ணம் அமர்ந்துள்ளன. இவை இருக்கும் தளத்திற்குக் கீழே இருக்கும் உருளைக் குற்றியின் சுவரில் ஆண்யானை, ஆண்குதிரை, ஆண்சிங்கம், எருது என்பவைகள் தம்மச் சக்கரத்தால் பிரிக்கப்பட்டு அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த ?Lion Capital? எவற்றினை அடையாளப்படுத்துகின்றது என்பதை, இன்றுவரை ஆராய்வாளர்கள் ஆராய்ந்தறியவில்லை, அவர்களால் அறிய முடியவில்லை.
இவற்றினைப் போலவே, இந்தோனேசியாவின் Boru Buddur(பெரும்புத்தூர் ? ) என்ற இடத்துக் கோயிற் சிற்பங்களில், போதிசத்வவின் கதையானது சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதிலும், போதிசத்வவுடன் ஆண்யானை, ஆண்சிங்கம், ஆன்குதிரை, எருது என்பவைகள் காணப்படுகின்றன. ஆனால், ஆராய்வாளர்களால் இவை எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அறியமுடியவில்லை.

ஆனால், வட இலங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ள பண்டைய நாணயங்களும், இலங்கையின் தென்பகுதியான Ruhunu பகுதியில் 1998ஆம் ஆண்டுக் காலத்தில் கண்டெடுக்கப்பட்ட பிராமி எழுத்து, மற்றும் நாணயங்களும், இந்த நான்கு மிருகங்களும் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பதை அறியப் பெருதும் உதவுகின்றன.

கந்தரோடையில் காணப்படும் தமிழ் புத்தசமயத்தடன் தொடர்புடைய சின்னங்கள்


கந்தரோடையில் கண்டெடுக்கப்பட்ட நாணயம்

யாழ்ப்பாணக் குடாநாட்டின் கந்தரோடையில், ஒரு பக்கத்தில் ஆண்சிங்கத்தைக் கொண்டிருக்கும் நாணயத்தின் மற்றப் பக்கத்தில், வட்டத்தினுள், சதுரத்தின் முலைகளில் வைக்கப்பட்டதுபோன்று வைக்கப்பட்ட நான்கு குத்துக்ளும் காணப்படுகின்றன இதுபோன்ற நாணயங்கள், அநுராதபுர, Akkurugoda (1998), மற்றும் இடங்களிலும் கிடைத்துள்ளன. இவற்றின் விபரங்களையும், படங்களையும், ஒருவர் Ceylon Coins and Currency?(1924); H.W. Codrington இன் நூலின், Plate II இலும், ?Ruhuna ? An ancient Civilization Re-visited? (1999)@ Osmond Bopearachchi & Rajah M. Wickremesinghe; Coin Nos: H.27, 28,& 29 இலும் காணலாம்.

பூநகரிப் பகுதியில் சென்ற தசாப்தத்தில் கண்டெடுக்கப்பட்ட ஒருவகை நாணயத்தின் ஒரு பக்கத்தில் குதிரையும், வட்டத்தினுள் நான்கு குத்துகளும் காணப்படுகின்றன. இதன் படத்தினை ஒருவர், ?பூநகரி ? தொல்; பொருளாய்வு? (1993) ப. புஷ்பரட்ணம் பக்கம்-53 இல் காணலாம்.



குதிரையும், வட்டத்தினுள் நான்கு குத்துகளும்

இலங்கையின் வட பெருநிலப்பகுதியின் வீரபாண்டியன்முனை என்ற இடத்தில, ஒரு பக்கத்தில் எருதின் அடையாளத்தையும், மறுபக்கத்தில் வட்டத்தினுள் இருக்கும் நான்கு குத்துகளைக்கொண்ட அடையாளமும் உள்ள செப்பு நாணயம் அண்மைக்காலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதன் படத்தினை ஒருவர் ?Ancient Coins of Sri Lankan Tamil Rulers?(2002)@ P. Pushparatnam, Page ?77 இல் காணலாம்.



இவைகளிலிருந்து, இந்த நாணயங்களில் வட்டத்தினுள் இருக்கும் நான்கு குத்துகள் பொதுவாக இருக்கும் நிலையில், ஆண்சிங்கமும், ஆன்குதிரையும், எருதும் ஒன்றையே குறிக்கவேண்டும் என்பது தெளிவாகிறது.

இது சாத்தியமாவதாயின், ஆண்குதிரையும், ஆண்சிங்கமும், எருதும் மூன்று சமூகங்களைக் குறிக்காது, ஒரு குறிப்பிட்ட பெரிய மனிதனையே அடையாளப்படுத்த வேண்டும். அப்படியானால், ஆண்சிங்கத்தாலும், ஆண்குதிரையாலும், எருதாலும் அடையாளப் படுத்தப்பட்ட அந்த பெரியோன், நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப்பட்டவொரு தொகுதி யுடன் தொடர் பானவனாக இருக்கவேண்டும்! இப்படி, நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப் பட்டவொரு தொகுதியுடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ள ஒரு மனிதன் யார்? அந்த நான்கு விடயங்கள் ஒன்றிணைக்கப்பட்ட தொகுதி என்ன? இவற்றை ஆராய்ந்தறிவதே, இங்கு மிக முக்கியமான விடயமாகும்.

இதைப்போலவே, நாணயத்தின் ஒருபக்கத்தில் வட்டத்தினுள் மூன்று குத்துகளையும், மறுபக்கத்தில் ஆண்யானை, ஆண்சிங்கம் என்பவைகளைத் தனித்தனியே கொண்ட நாணயங்களும் இலங்கையின் வட, தென் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஆண்சிங்கமும், ஆண்யானையும் குறிப்பிட்ட ஒரு பெரியோனை அடையாளபடுத்தவேண்டும் அப்பெரியோன் மூன்று விடயங்களைக் கொண்டவொரு தொகுதியுடன் தொடாபுடையவனாக இருக்கவேண்டும்.

இந்தநிலையில், இந்த நாணயங்கள், ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள் குறிப்பிட்டவொரு பெரியோனை அடையாளப்படுத்துகிறது என்பதையும்@ அப்பெரியோன் நான்கு விடயங்களைக் கொண்டவொரு தொகுதி, மூன்று விடயங்களைக் கொண்டவொரு தொகுதி என்பவைகளுடன் தொடர்புடையவன் என்பதை வலியுறுத்து கின்றன.

இவற்றை உறுதிப்படுத்தும்வகையில், தென்னிலங்கையின் Akkurugoda யில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு வகை நாணயங்களில் Bope. Coin No:F.8 இல், ஒருபக்கத்தில் ஆண்யானையும், மற்றப்பக்கத்தில் ஆண்குதிரையும் காணப்படுவதுடன் No:A.8 இல், ஒரு பக்கத்தில் ஆண்யானையும், ஆண்;குதிரையும் காணப்படுகின்றன@ Coin No: E.23, ஒரேபக்கத்தில் ஆண்யானையும், எருதும் காணப்படுகின்றன வன்னிப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட நாணயத்தின் ஒருபக்கத்தில் எருதும், மற்றப் பக்கத்தில் ஆண்யானையும் காணப்படு கின்றன.

ஒட்டுமொத்தத்தில், ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகள் ஒரு பெரியோனை அடையாளப்படுத்துகின்றன அவன் நான்கு விடயங்களைக் கொண்டவொரு தொகுதியுடனும், மூன்று விடயங்களைக் கொண்ட தொகுதியுடனும் தொடர்புடையவனாக உள்ளான். இது, இந்த இரண்டு தொகுதி விடயங்களும், அவடைய போதனையுடன் தொடர்பானதாகவே இருக்கமுடியும் என்ற முடிவுக்குவர நிர்ப்பந்திக்கிறது. அப்படியாயின், இப்படியான தொகுதி விடயங்கள் எந்தப் போதனையில் காணப்படுகின்றன?

இப்படியான தொகுதிகளை நாம் பௌத்த போதனையிலும் காணமுடியும். பௌத்தமானது மும்மணியினால் ஆனது (Triple-gem) புத்த(ன்) மணி, தம்ம(ம்) மணி, சங்க(ம்) மணியினால் ஆனது. பௌத்தத்தின் அடிப்படையானது, நான்கு பெரும் உண்மைகளாகும் (the Four Noble Truths).

ஆகவே, ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்பவைகளால் அடையாளப்படுத்தப்பட்டவன், புத்தபெருமான் ஆகும்!

இதை நாம் மேலதிக ஆதாரங்களுடாக உறுதிப்படுத்தவேண்டும். இதனை இரண்டு வழிகளில் செய்யமுடியும். ஆவையாவன:

1. ஆண்யானை, ஆண்சிங்கம், ஆண்குதிரை, எருது என்ற அடையாளங்களுடன் நாணயங்கள், கல்வெட்டுக்கள், செப்பேடுகள், சிற்பங்கள், ஏனையவைகளில் காணப்படும் வேறு அடையாளங்கள் புத்தபெருமானுடனும், பௌத்தத்துடனும்தான்; தொடர்பானவையா என்பதை ஆராய்ந்து உறுதிப்படுத்துவது@

2. இலக்கியங்கள், நூல்களில், புத்தபெருமான் இந்த நான்கு ஆண் மிருகங்களாலும் அடையாளப்படுத்தப்பட்டு விபரிக்கப்பட்டுள்ளாரா என்பதை ஆராய்ந்தறிவது.

இவற்றுள் முதவாவதானது, எம்மைப் புத்தபெருமானும், பௌத்தமும் எப்படியெப்படிப் பௌதீக ரீதியாக அடையாளப்படுத்தப்படலாம் என்பதை ஆராய்ந்தறிய நிர்ப்பந்திக்கிறது.


இவை பற்றி அடுத்த பகுதியில் ஆராய்வோம் அதற்கு இணையத்தளம் ஊடக மீண்டும் சந்திப்போம் அது வரை சிந்திப்போம்.

இங்கு ஆராயப்பட்டவை பற்றி ஏனையோருக்கு அறியக் கொடுங்கள். உங்களது கருத்துக்களையும், ஆய்வுகளையும் இந்த இணையத் தளமூடாக முன்வைத்து, வாதியுங்கள். அறிவியலே இலங்கையில் சமூகங்களை நிலைக்க வைக்கும், முன்னேற வைக்கும், மேன்மையான மனித வாழ்க்கையை அமைக்க வைக்கும்.


Abimānasingha(m) Sitthāwathai Uthayakumār(a) B. Sc. (Mech. Eng),
Ex- Legionnaire ( Legion Etrangere- Francaise)

அனுப்பியவர் Admin

605 கருத்துக்கள்

சிறீலங்காவின் தேசக்கொடியானது அறியாமையின் சின்னமா? -1

-யாழில் இருந்து வல்லபை -[மூலம்:சூரியன்.கொம்]
(Is the National Flag of Sri Lanka a
Symbol of Ignorance? Part 1 By Vallapai From Jaffna)
இலங்கையில் பௌத்தத்தைக் காப்பவர்கள் தாங்களே எனக் கூக்குரல் இட்டுவருபவர்கள், புத்தபெருமானையும், பௌத்தத்தையும் கேவலப்படுத்துவது துன்பமானது.

இலங்கையின் அரசியல் பிரச்சனைக்கு அறிவியல் ரீதியாக, பேச்சுவார்த்தையூடாகத் தீர்வு காண முற்பட்டு, நாட்டின் அரசியல் யாப்பினிலும் மாற்றங்களை ஏற்படுத்த முற்பட்டிருக்கும் நிலையில், தேசக்கொடியில் மாற்றங்களை ஏற்படுத்துவதும் தவிர்க்கப்படமுடியாதது.
1. நுழைவு:

கொடிகள் (Flags) பண்டைக்காலம் முதல் பயன்பாட்டில் இருந்து வந்துள்ளனவென ஆராய்வாளர்கள் கூறுவர். பண்டைய இலக்கியங்களிலும், நூல்களிலும் கொடிகள் பற்றிக் கூறப்பட்டு, இருப்பதையும், பாறைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும், சிலைகளிலும், ஏனைய தொல்பொருட்களிலும், கொடிகளின் அடையாளங்கள் இடப்பட்டிருப்பதையும் வைத்தே, ஆராய்வாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

சில உதாரணங்களாக:
தொல்காப்பியம் என்ற, காலத்தால் மிகவும் முற்பட்டதெனக் கூறப்பட்டுவரும் தமிழ் இலக்கண நூலின் பொருளதிகாரத்தின் மரபியலில், அரசர்க்குரியவை என்பதில், பின்வருமாறு கூறப்பட்டுள்ளது:

படையும், கொடியும், குடையும், முரசும்,
நடைநவில் புரவியும், களிறும், தேரும்,
தாரும், முடியும் நேர்வன பிறவும்,
தெரிவு கொள் செங்கோல் அரசர்க்குரிய.

தென்னிந்தியாவின் சேர, சோழ, பாண்டிய அரசர்கள், முறையே வில், புலி, மீன் அடையாளங்களைப் பொறித்த கொடிகளைக் கொண்டிருந்ததைத் தமிழ் இலக்கியங்களுடாக அறிய முடிகிறது. தமிழகத்துக் கல்வெட்டுக்களில் இந்த மூன்று அடையாளங்களும் காணப்படுகின்றன.

அரசர்களை விட, கடவுள்களும் கொடிகளைக் கொண்டிருந்ததாக, தமிழ் இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. முருகனைச் சேவலங்கொடியோன் எனத் தமிழ் இலக்கியங்கள் குறிப்பிட்டுள்ளன. முருகனைக் கம்பன், கோழியான் எனவும் பாடியுள்ளான்.

இலக்கியங்கள், விஞ்ஞான நூல்களைவிட, பண்டைய பாறைச் சிற்பங்களிலும், ஓவியங்களிலும், சிலைகளிலும், கொடிகளைக் காணமுடிகிறது.

உதாரணமாக: தென்னிலங்கையின் தம்புள்ள (Dambulla) எனுமிடத்தில் உள்ள பாறைக் கற்கோயிலில், காணப்படும் ஓவியங்களுள் ஒன்றானது, போரில் வென்ற துட்டகாமணீ என்ற அரசன், வாளேந்தும் ஆண்சிங்கம் பொறிக்கப்பட்ட கொடியினை கையில் ஏந்தி நிற்பதாகக் கூறப்படுகிறது.

அரசர்களும், கடவுள்களும் ஏன் குறிப்பிட்ட சில அடையாளங்கள் இடப்பட்ட கொடிகளைக் கொண்டிருந்தனர் என்பதற்கு, இன்றைய ஆராய்வாளர்கள் பல்வேறு விளக்கங்களைக் கொடுத்து வருகின்றனர். உதாரணமாக: தம்புள்ள பாறைக் கோயிலிலுள்ள ஓவியமானது, துட்டகாமணீ என்ற சிங்கள அரசன் தமிழர்களைப் போரில் வென்று, முழு இலங்கையையும்; ஒரு குடைக்கீழ்க் கொணர்ந்த பின்னர், சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தும் வாளேந்தும் ஆண்சிங்க அடையாளம் பொறித்த கொடியினை உயர்த்தினான் எனக் கூறுவர். ஆனால், சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஏன் தமது கொடிகளில் முறையே வில், புலி, மீன் அடையாளங்களை இட்டனர் என்பதற்கான விளக்கங்களை இன்றைய ஆராய்வாளர்களால் அறிய முடியவில்லை. அதேவேளையில், மயிலை வாகனமாகக் கொண்ட முருகனது கொடியில் ஏன் சேவல் அடையாளம் இடப்பட்டுள்ளது என்பதற்கும், ஆராய்வாளர்களால் விஞ்ஞான hPதியிலான விளக்கங்களை ஏற்படுத்த முடியவில்லை.

வாளேந்தும் ஆண்சிங்க அடையாளம் பொறித்த கொடியினை, இலங்கையில் சிங்களத் துட்டகாமணீ என்பவன் மாத்திரம்தான் கொண்டிருந்தான் என்பதற்கில்லை. கண்டி இராச்சியத்தின் கடைசி அரசனும், தமிழ் அரசனுமான ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனும், கண்டி இராச்சியமும் பிரித்தானியரால் கைப்பற்றப்பட்ட பின்னர், கைப்பற்றப்பட்ட பொருட்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவற்றுள் சில லண்டனில் Royal Military Hospital Chelsea இல் வைக்கப்பட்டிருந்தன. அவற்றுள் வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியும் அடங்கும் எனவும், பின்னர் அது இலங்கைக்கு 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரையில் கொண்டுவரப்பட்டது எனவும் கூறுவர்.

தென்னிலங்கை ஆராய்வாளர்கள் வாளேந்தும் ஆண் சிங்கமானது சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்துகிறது என்ற விளக்கத்தினை இன்று கொடுத்துவரும்போதும், கண்டியின் கடைசி அரசனான ஸ்ரீவிக்கிரம இராஜசிஙகன் தமிழனாக இருந்தபோதும், ஏன் அவன் சிங்கள இனத்தவரை அடையாளப்படுத்தும் வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியிகைத் தனது கொடியாகக் கொண் இருந்தான் என்ற கேள்விக்கு, விஞ்ஞான ரீதியிலான விளக்கத்தினை அவர்களால் கொடுக்க முடியவில்லை.

ஆனால், இரு கொடிகளிலும் காணப்படும் ஆண்சிங்கத்தின் வலது முன்னங்கால் ஆனது சிறிது மேலே உயர்த்தப்பட்டு, அதில் நிலைக்குத்தாக வாள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், இரு ஆண் சிங்கங்களும், எமது இடது கைப்பக்கத் திசையை நோக்கியிருக்கும் விதத்தில்தான் வைக்கப்பட்டுள்ளன. எதுவிதத்திலும், தம்புள்ள ஓவியத்தில் காணப்படும் கொடியின் அமைப்பானது படம்-1இல் காட்டியவாறு காணப்படுகையில், கண்டியின் தமிழ் அரசனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொடியின் அமைப்பானது, படம்-2இல் காட்டியவாறு காணப்படுகிறது. படம்-1இல், சூரியனும், சந்திரனும் காணப்படுகின்றன. இந்த இரண்டு கொடிகளினது அமைப்புக்களும் ஏன் வேறுபடுகின்றன என்பதற்கோ, ஏன் சிங்கமானது தம்புள்ள ஓவியத்தில் இரு முக்கோணம் போன்ற பகுதிகளின் மையமான இடத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கோ ஆராய்வாளர்களால் விளக்கத்தினை ஏற்படுத்த முடியவில்லை. மேலும், ஏன் இரண்டு கொடிகளிலும், ஆண் சிங்கமானது எமது வலது கைப்பக்க திசையை நோக்கியிருக்க வைக்கப்படாது, எமது இடது கைப்பக்கத் திசையை நோக்கியிருக்கும் விதத்தில் வைக்கப்பட்டுள்ளது என்பதற்கும் ஆராய்வாளர்களால் விளக்கத்தினை ஏற்படுத்திக்கொள்ள முடியவில்லை.


படம்-1 தம்புள்ள ஓவியத்தில் காணப்படும் கொடியின் அமைப்பு


படம்-2 ஸ்ரீவிக்கிரமராஜசிங்கனின் கொடியின் அமைப்பு


படம்-3 தற்போதைய ஸ்ரீ லங்காவின் தேசக்கொடி


2. சிறீ லங்காவின் இன்றைய தேசக் கொடி:

சுதந்திர இலங்கையின் தேசக் கொடியினை நிர்ணயிக்கவென, S.W.R.D பண்டார நாயக்க, சேர் ஜோன் கொத்தலாவல, J.R. ஜயவர்த்தன, டாக்டர் L.A. ராஜபக்ஸ என்ற நான்கு சிங்களவர்களையும் G.G. பொன்னம்பலம், S. நடேசன் என்ற இரு தமிழர்களையும் T.B. ஜயா என்ற இசுலாமியரையும் கொண்ட விசேட நாடாளுமன்றக் குழுவொன்று அமைக்கப்பட்டது. இக்குழுவிற்கு பண்டாரநாயக்க Chairmanஆக நியமிக்கப்பட்டார். பிறகாலத்தில், அன்று Commissioner of Archeologyயாக இருந்த S. பரணவிதான குழுவின் Secretaryஆக நியமிக்கப்பட்டார். இந்த விசேட குழுவில் நான்கு சிங்களவர்களும், இரண்டு இலங்கைத் தமிழர்களும், ஒரு இசுலாமியரும் நியமிக்கப்பட்டிருந்தமையானது, இறுதி முடிவானது சிங்களவர்களால்தான் ஏடுக்கப்படும் நிலை அங்கு காணப்பட்டத்தை உறுதிப்படுத்துகிறது.

மேலும், வாளேந்தும் ஆண் சிங்கமானது சிங்கள இனத்தவர்களைக் அடையாளப்படுத்தப்படுகிறது என்ற முடிவிற்குச் சிங்களவர்கள் ஏற்கனவே வந்து, சுதந்திரத்தின்போது பிரித்தானியரின் தேசக்கொடியான Union Jack கொடி இறக்கப் பட்டபோது, வாளேந்தும் ஆண்சிங்கக் கொடியே ஏற்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், இசுலாமியரும், இலங்கைத் தமிழரும் கொடியில் எப்படி அடையாளப்படுத்தப்படுவது, மேலதிகமாகக் கொடியில் ஏதாவது வலியுறுத்தப்படவேண்டுமா என்பவைகள் தொடர் பாகவே முடிவெடுக்கப்படவேண்டியிருந்தது.

இரண்டுவருடகாலங்களின் பின்னர், அந்த விசேட குழு அதனது இறுதி அறிக்கையைச் சமர்ப்பித்தது. ஆனால், S. நடேசன் அந்த அறிக்கையை ஏற்க மறுத்து, தனித்தவொரு அறிக்கையைச் சமர்ப்பித்திருந்தார். அவரது கருத்துப்படி, தேசக்கொடியினில் எல்லா மக்களுக்கும் பொதுவாக ஒரு அடையாளம் இருந்தால் போதுமானது, அது இலங்கைப் பிரஜைகள் அனைவரையும் ஒன்றிணைக்க உதவும் என்பதாகும்.

இவர்களது ஆய்வுகளின் முடிவுக்கிணங்க உருவாக்கப்பட்ட சிறீலங்காவின் இன்றைய தேசக் கொடியானது, படம்-3இல் காட்டியவாறு அமைந்தது.

சிறீலங்காவின் தேசக்கொடியில் காணப்படும் பச்சை நிற வரியானது, இசுலாமிய மக்களை அடையாளப்படுத்துவதாகவும், காவி நிற வரியானது, இலங்கைத் தமிழர்களை அடையாளப்படுத்துவதாகவும் வாளேந்தும் ஆண் சிங்கமானது, சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்துவதாகவும், தேசக்கொடி பற்றிய சிங்கள, ஆங்கில நூல்களிலும், பத்திரிகைகளின் கட்டுரைகளிலும், மாணவர்களுக்குக் கற்பிக்கப்படும் நூல்களிலும் கூறப்பட்டுவருகிறது.

சிங்கத்தை உள்ளடுக்கும் விளிம்பிலுள்ள பொன் நிறப் பெட்டியானது பௌத்த சங்கவைக் குறிக்கும் எனவும், ஆண் சிங்கம் இருக்கும் நீள சதுரப்பெட்டியின் முலைகளில் உட்புறமாக வைக்கப்பட்டுள்ள நான்கு பொன் நிற வெள்ளரசமிலைகள் Metta, Karuna, Muditta, Upekkha என்பவைகளை அடையாளப்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இலங்கையின் அரசியல் யாப்பு வெளியீடுகளில் இலங்கையின் தேசக் கொடியின் நிறப்படம் கொடுக்கப்பட்டும், சிறீலங்காவின் தேசிய கீதம் கொடுக்கவும் பட்டும், அதன் சொற்கள் பாடும்போது எப்படிச் சரியாக உச்சரிக்கப்படவேண்டும் என்பது பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளபோதும், தேசக் கொடியில் காணப்படும் அடையாளங்கள் எவற்றை அடையாளப்படுத்துகின்றன என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை.

இந்தநிலையில், சிங்கள, ஆங்கில நூல்கள், ஊடகங்களிலும், பாட நூல்களிலும் தொடுக்கப்பட்டுவரும் விளக்கங்கள் எந்தவொரு அரசினாலும் அதிகார பூர்வமாக நிராகரிக்கப்படாத நிலையில், சரியானவை என்றே கருதவேண்டியுள்ளது.

ஆனால், வாளேந்தும் ஆண்சிங்கம் அடையாளம் தொடர்பாகப் பல கேள்விகள் எழவே செய்கின்றன.

1. இலங்கையின் சிங்கள அரசர்கள், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தை மாத்திரம்தானா பண்டைய காலம் முதல் ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் காலம்வரை பயன்படுத்தி வந்திருந்தனர்? அப்படியானால், தென்னிலங்கையில் காணப்படும் பிராமி எழுத்து நாணயங்களிலும், ஏனைய நாணயங்களிலும், சிற்பங்களிலும், ஏனையவைகளிலும் காணப்படும் ஆண்யானை, ஆண்குதிரை, எருது, ஆமை, மயில், அன்னம், சேவல், மீன் மற்றும் அடையாளங்கள் எந்தெந்தச் சமூகங்களை அடையாளப்படுத்துகின்றன?

2. சிங்கள அரசர்களைத் தவிர்ந்த ஏனையவர்கள் ஆண்சிங்க அடையாளத்தையும், வாளேந்தும் ஆண்சிங்க அடையாளத்தையும் பயன்படுத்தியிருக்கவில்லையா?

3. சிங்கம் வீரமானது, வலிமையானது. ஆப்படியாயின், வலிய, வீர சிங்கத்திற்கும், வாளுக்கும் (Sword) என்ன தொடர்பு?

4. வாளேந்தும் ஆண்சிங்கம் ஏன் எமது வலது கைப்பக்கம் பார்த்தவண்ணம் வைக்கப்படாது, துட்டகாமணீயின் கொடியிலும், கண்டி இராச்சியக் கொடியிலும் எமது இடது கைப்பக்கம் பார்த்வண்ணம் வைக்கப்பட்டுள்ளது?

5. பௌத்தமானது ஆண்களுக்கும், பெண்களுக்கும் சம உரிமைகளைக் கொடுப்பது. மஹாவம்ஸவில் தேவநம்பியதிஸ்ஸவின் ராணியான அனுலாவும், அவளது பரிவாரங்களும் பிக்குணிகளாகக் கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே மாறியதாகக் கூறப்பட்டுள்ளது. இந்தநிலையில், பௌத்த இலங்கையில் எப்படிச் சிங்கள இனத்தவர்களை அடையாளப்படுத்தவென ஆண்சிங்கம் பயன்படுத்தப்பட்டது?

6. ஆண்சிங்கம் சிங்கள இனத்தை அடையாளப்படுத்துவதாயின், கண்டியின் தமிழ் அரசனனான ஸ்ரீவிக்கிரமராஜசிங்கன் ஏன் வாளேந்தும் ஆண் சிங்கத்தினைத் தனது கொடியில் அடையாளமாக வைத்தான்?

7. கண்டியில் தலதா மாளிகாலவில் (Dalada Maligawa) புத்தபெருமானின் புனித தந்ததாது வைக்கப்பட்டுவந்துள்ளது. ஆகவே கண்டியில் புத்தபெருமானின் அற ஆட்சியே இருந்துள்ளது. இந்த நிலையில் கண்டி இராச்சியத்தில் புத்தபெருமானின் அற ஆட்சியை அடையாளப்படுத்தும் கொடிகளே அன்றும் பறக்கவிடப்பட்டிருக்க முடியும். அப்படியானால், வாளேந்தும் ஆண் சிங்கமானது ஏனைய மிருகங்களைக் கொன்று தின்னும் மிருக சிங்கமல்லாது, ஒளிமயமான, அன்புமயமான, அருள்மயமான சிங்கத்தை, புத்தபெருமானைக்த்தான் அடையாளப்படுத்துகிறதா?

8. தம்புள்ள கற்பாறைக் கோயிலானது புத்தபெருமானின் கோயிலாகும். ஆகவே, அக்கோயிலில் புத்தபெருமான் தொடர்பானவையும், பௌத்தம் தொடர்பானவையும் தான் காணப்படமுடியுமேயன்றி, ஒரு இனம், சாதி, குழு போன்றவவைகளை அடையாளப்படுத்தும் விடயங்களும், தமிழர் மீதான சிங்களவரின்; போர் வெற்றிபற்றியோ இருக்கமுடியாது. இந்தநிலையில், போரில் வெற்றிபெற்றதாகக் கூறப்படும் துட்டகாமணீ உயர்த்திய கொடியானது புத்தபெருமானின் அற ஆட்சியானது இலங்கை பூராகவும் நிலைநாட்டுப்பட்டதைக் குறிக்கிறதா? அதாவது, வாளேந்தும் ஆண் சிங்கக் கொடியானது புத்தபெருமானைக் குறிக்கிறதா? ஆந்தக் கொடியில், ஏன் வாளேந்தும் ஆண் சிங்கமானது நடுவு நிலைத் தன்மையையுடையதான முறையில் வைக்கப்பட்டுள்ளது? அது பௌத்தத்தின் அடிப்படைத் தத்துவத்தை வலியுறுத்தவா?

இந்த எட்டுச்சந்தேகங்களுடன் அடுத்த பகுதியில் இந்த இணையத்தளம் (www.Sooriyan.com Email to: Vallapai@Sooriyan.com ) ஊடக மீண்டும் சந்திப்போம் அது வரை சிந்திப்போம்.

இங்கு ஆராயப்பட்டவை பற்றி ஏனையோருக்கு அறியக் கொடுங்கள். உங்களது கருத்துக்களையும், ஆய்வுகளையும் இந்த இணையத் தளமூடாக முன்வைத்து, வாதியுங்கள். அறிவியலே இலங்கையில் சமூகங்களை நிலைக்க வைக்கும், முன்னேற வைக்கும், மேன்மையான மனித வாழ்க்கையை அமைக்க வைக்கும்.

Abimānasingha(m) Sitthāwathai Uthayakumār(a) B. Sc. (Mech. Eng),
Ex- Legionnaire ( Legion Etrangere- Francaise)

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]