உலர்ரந்தான் உண்மை உணர்வித்தான்
-திருமதி.காமினி பரராஜசிங்கம் யேர்மனி:சூரியன்.கொம்-
தேரோடும் நல்லை நகர் வீதியில் விழி
நீரோடி மண் கனத்த நாள் அது
ஆம் அதுதான் செப்ரெம்பர் இருபத்தியாறு.
பசியோடுபோராடும் மைந்தன் பார்த்திபன்
உயிரோடு மீளவேண்டும் என தமிழ் இனம்
விழியிலே விளக்கேந்தி காத்திருந்த அந்த
பன்னிரண்டு நாட்கள்
மனங்கள் கனத்து தீ கனன்ற பொழுதுகள்.
ஆகிம்சாமூர்த்தியாம் அண்ணல் காந்தியைப் போற்றும்
பாரததேசம்தானே பார்த்திபனைப் பதைபதைக்க வைத்தது.
உண்ணாநோன்பிருந்த உத்தமன் திலீபன்
பருகும் நீரையும் உறுதியுடன் நிராகரித்தான்.
அன்புக்கரம் நீட்டி வந்தோம் என்றவர்கள்
அண்ணலை அணுஅணுவாய் வதைத்தனர்.
நீரும் வற்றி உடல் உலர்கிறது
நெஞ்சில் கனன்ற விடுதலைத் தீ அணையவில்லை.
கோரிக்கைகள் நிறைவேறவில்லை.
கொடுங்கோலர் கண்களோ திறக்கவிலலை.
பன்னிரண்டு நாட்களும் பதைபதைக்கவிடிகிறது.
மெல்ல மெல்ல வீரன் விழிகள்மூடுகின்றன.
உன்னதன திலீபனின் உடல்கூட்டை விட்டு
உயிர்பிரிநதது உறுதிப்படுத்தபபடுகிறது.
பார்த்திபன் பாதத்தில் வைத்தியர் சிரம்
பணிந்துதொழுது நிமிர்ந்தபோது
ஓவென்ற மக்கள் ஓலம்
வானைக்கிழித்து வையததை உலுக்க
எல்லாமே நடந்து முடிந்து விட்டது.
நல்லைப்பெருவெளியெங்கும
கண்ணீராறு பெருக்கெடுத்தோடியது.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு