www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

செவ்வாய்க்கிரக மர்மங்கள் சொல்வது தான் என்ன?

2003 ஆண்டு ஆகஸ்ட் மாதம் செவ்வாய்க்கிரகம் பூமிக்கு மிக நெருக்கமாக வந்து சென்றது. ஏறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்க ஒருமுறைதான் இந்த அற்புதம் நடக்கும்.சந்திரனில் மனிதன் காலடி எடுத்துவைத்து முப்பத்திமூன்று ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டன. சந்திரன் பற்றி ஓரளவுக்குப்பல உண்மைகளையும் கண்டுபிடித்தாகிவிட்டது. அடுது;து செவ்வாய்க்கிரகத்தில் இறங்கி அந்த கிரகத்தில் உள்ள பல உண்மைகளையும் கண்டறிந்துவிட வேண்டுமென்பது உலகளவில் உள்ள விஞ்ஞானிகளின் விருப்பம். ஆனால் செவ்வாயக்கிரகம் பற்றிய ஆராய்ச்சி ஒன்றும் லேசுப்பட்ட விஷயமாக தெரியவில்லை. காரணம் பூமியிலிருந்து வெகு தொலைவில் செவ்வாய்க்கிரகம் இருப்பதுதான்.

முதன் முறையாகச்சந்திர மண்டலத்திற்கு ஆம்ஸ்ரடாங் பயணம் மேற்கொண்டபோது ஒன்றரை நாட்களில் அங்கு போய் சேர்ந்துவிட்டார். சந்திர மண்டலத்தில் நான்கு நாட்கள் தங்கி ஆராய்ச்சி செய்தார். மீண்டும் அங்கிருந்து கிளம்பி பூமிக்க வந்துசேர ஒன்றரைநாள் ஆனது. ஆகமொத்ததில் சந்திரமண்டல பயணம் ஒரு வார டூர்தான். ஆனால் செவ்வாய்க்கிரகத்திற்கு போய்ச்சேர்வதற்கே கிட்டத்தட்ட ஆறு மாதகாலம் ஆகும். அவ்வளவு து}ரம் போய்விட்டுஉடனே திரும்பிவிடமுடியாது. குறைந்தது ஒருமாத காலமாவது அங்கு தங்கியிருந்து ஆராய்ச்சி செய்யவேண்டும்.ஆராய்ச்சியை முடித்துவிட்டு திரும்பிவர ஆறுமாதம். ஆக பதின்மூன்று மாதகாலம் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டுபரபரப்பாக செயல்பட்டால் தான் செவ்வாய்க்கிரகத்திற்கே போய்வர முடியும்.

இவ்வளவு து}ரத்திற்கும் ஒரு மனிதனை அனுப்பமுடியுமா? அனுப்பவேண்டுமென்றால் அந்த மனிதனை எப்படி தயார்படுத்த வேண்டும்? செவ்வாயக்கிரகத்திற்கு போனபிறகு அந்த மனிதனுக்கு திடீரென நெஞ்சுவலி வந்துவிட்டால் என்னசெய்வது? திடீரென்று கம்யூட்டர் கோளாறாகிவி;ட்டால் என்ன நடக்கும்? இப்படி நு}ற்றக்கணக்கான கோணங்களில் மண்டை வீங்குகின்ற அளவுக்கு யோசித்துக்கொண்டிருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இவ்வளவு து}ரத்துக்கு ஒரு மனிதனை அனுப்புவதைவிட இயந்திர மனிதனை அனுப்புவதே நல்லது என்கிறார்கள் விஞ்ஞானிகள். மனிதன் செய்கிற வேலைகளில் 95 சதவீத வேலைகளை இயந்திர மனிதனே செய்துவிடுகிறான். மேலும் இயந்திர மனிதனுக்கு நெஞ்சுவலியும் வராது தலைவலியும் வராது.செவ்வாய்க்கிரகத்தைப்பற்றி ஆராய்ச்சி விஞ்ஞானிகள் இவ்வளவு ஆர்வம் காட்டுவது ஏன்? அந்தக்கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்பதற்கு அவ்வப்போது கிடைக்கும் சில சான்றுகள் தான்.
1878 ஆம் ஆண்டு ஷியாபரலி என்கின்ற வானியல் நிபுணர் செவ்வாய்ககிரகத்தில் நீண்ட கால்வாய்கள் இருப்பதாக கண்டுபிடித்தார். செயற்கை கிரகத்pல் உள்ள(?) மனிதர்கள் செயற்கை முறையில் அந்த கால்வாய்களை வெட்டியிருக்கலாம் என்றும் சொன்னார்.பர்சிவல் என்கிற வாயினல் நிபுணரும் இதே கருத்தை சொல்ல செவ்வாய்க்கிரகத்தில் மனிதன் இருக்கிறான் என்று எல்லோருமே நம்ப ஆரம்பித்தார்கள்.... பிறகு சக்தி வாய்ந்த டெலஸ்கோப் மூலம் மேலும் ஊடுருவி பார்த்த போது கால்வாயும் இல்லை வாய்க்காலும் இல்லை.

அவையெல்லாம் வெறும் பொய்த்தோற்றங்கள் என்று உறுதியானது.
1980ஆம் ஆண்டுவாக்கில் மீண்டும் ஒரு சந்தேகம். அப்போது அண்டர்ட்டிகா பனி பிரதேசத்தில் ஒரு எரிகல்லை கண்டுபிடித்தார்கள். அதை ஆய்வு செய்து பார்த்தபோது செவ்வாய்க்கிரகத்திலிருந்து கோடி ஆண்டுகளுக்கு முன்பு து}க்கி எறியப்பட்டு கிட்டத்தட்ட பதின்மூன்று ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வந்து விழுந்திருக்கிறது அந்தக்கல் என்று கண்டுபிடித்தார்கள்.அந்தக்கல்லில் பாக்டிரியாக்கள் இருந்ததற்கான அடையாளங்கள் தெரிந்தன. செவ்வாயக்கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றன என்கின்ற பேச்சுகள் மீண்டும் பரவ ஆரம்பித்தன.

அந்தக் கல்லை விஞ்ஞானிகள் கொஞ்சம் கொஞ்சமாக உடைத்து சோதித்துப் பார்த்ததில் அது செவ்வாய்க்கிரகத்திலிருந்து வந்த கல்தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது. அப்படியே அது செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்திருந்தாலும் பதின்மூன்றாயிரம் ஆண்டுகள் பூமியில் கிடந்திருக்கிறது.இந்தக்காலகட்டத்தில்தான் அந்தக்கல்லில் பக்டீரியாக்கள் உருவாகியிருக்க முடியும். எனவே செவ்வாயில் எந்த உயிரினமும் இல்லை என்று முடிவு செய்தார்கள்.

ஆனால் இப்போது இரண்டு முக்கியமான சந்தேகங்கள் தோன்றியுள்ளன. செவ்வாயக்கிரகத்தில் மிக மிகக்குறைவான அளவு ஒக்சிஜன் அதாவது பிராணவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பத்தாயிரத்திற்கு பதின்மூன்று என்கிறவிகிதத்தில் இருக்கும் ஒக்ஸிஜனைக் கொண்டு ஏதாவது ஓர் உயிரினம் தோன்றியிருக்க வேண்டும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

இரண்டாவது செவ்வாய்க்கிரகத்தில் உள்ள சில வட்டமான மலைப்பகுதிகளில் தண்ணீர் ஓடியதுபோல காணப்படுகிறது. இதில் ஓடியது தண்ணீரா பனிக்கட்டி துகள்களா அல்லது கரியமில வாயுக்கட்டிகளா என்பதை விஞ்ஞானிகளால் உறுதியாகச்சொல்ல முடியவில்லை. சுவடுகளில் ஓடியது தண்Pராக இருந்தால் நிச்சயமாக உயிர் உற்பத்திக்கு ஆதாரம் உண்டு என்று மீண்டும் விஞ்ஞானிகள் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.~~ஆயிரம் விதங்களில் விஞ்ஞானிகள் சந்தேகத்தைக்கிளப்பினாலும் செவ்வாய்க் கிரகத்தில் உயிரினங்கள் தோன்றுவதற்கு வாய்ப்புகளே இல்லை என்று அடித்துச்சொல்கிறார். சென்னையை சேர்ந்த வானவியல் நிபுணர் பேராசிரியர் பி.தேவதாஸ்.

செவ்வாய்க்கிரகத்தில் வட்டமான மலைச்சிகரங்கள் காணப்படுகின்றன. இதெல்லாம் எரிமலைச்சுவடுகள் என்று நான் கண்டுபிடித்தேன். அதற்கான ஆதாரங்களையும் கண்டுபிடித்தேன். எரிமலை கற்கள் மிக அதிகமாக உஷ்ணத்தில் து}க்கியெறியப்படுபவை.தீக்கங்கு போல கொதித்துக்கொண்டிருக்கும் இந்தக்கல்லில் எந்த உயிரினமும் உற்பத்தியாக முடியாது என்பதுதான் என்கருத்து|| என்கிறார் தேவதாஸ்.1970 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை முப்பது ராக்கெட்டுகள் செவ்வாய்க்கிரகத்திற்கு அனுப்பப்ப்டிருக்கின்றன. இதில் இருபது ராக்கெட்டுக்கள் எங்கே போனது என்றே தெரியவில்லை. பத்து ராக்கெட்டுகள் மட்டுமே செவ்வாய்க்கிரகத்தை அடைந்து தகவல்களை அனுப்பிக்கொண்டிருக்கின்றன.

இவ் ஆண்டு அனுப்ப்படுகின்ற ராக்கெட் செவ்வாயக்கிரகத்தில் தரையிறங்காமல் மேலே பறந்தபடியே ஆராய்ச்சி செய்து முடித்துவிட்டு வந்துவிடும். 2011ஆம் ஆண்டில் அனுப்பப்படும் ராக்கெட்தான் செவ்வாயில் இறங்கி மண்ணையும் பாறையையும்அள்ளிக்கொண்டு பூமிக்கு வரும்.அதுவரை செவ்வாய்க்கிரத்தில் மனிதன் உண்டு, பூதங்கள்உண்டு, அரசியல்வாதிகள் உளர் என்று சொல்லிக்கொண்டிருப்பதை நாமும் கேட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

எஸ்.பாலா

All rights Reserved for Webtamilan.com© (2002)