www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page நாஸாஅதிகாரிகளின் மமதை தான் விண்கல அனர்த்தத்திற்குக் காரணம்!

புறப்படும்போதே அதில் ஒட்டை! விசாரணையின் முடிவில் தகவல்!
அமெரிக்காவின் கொலம்பியா விண்கலம் பூமிக்குத் திரும்பும்போது தரையிறங்குவதற்கு 16 செக்கன்கள் இருந்தநிலையில் வெடித்துச்சிதறி துகள்களானது. இந்த அனர்த்தம் குறித்து விசாரணை நடத்த அமைக்கப்பட்ட குழு விசாரணை முடிவுகளை வெளியிட்டிருக்கிறது. அதில், நாஸா அதிகரிகள் மீது கடுமையான கண்டனங்களும், விமர்சனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.ஏழு விண்வெளி வீரர்களுடன் கடந்த பெப்ரவரியில் வெடித்துச்சிதறி துகள்களான கொலம்பிய விண்கலம் குறித்தஅதிகாரபூர்வ விசாரணையின் முடிவு  வெளியிடப்பட்டிருக்கிறது.


நாஸா வின் நிர்வாகக் கலாசாரத்திலே ஓட்டைகள் இருக்கின்றன என்று அந்த விசாரணை முடிவு கூறுகிறது.கடந்த பெப்ரவரியில் கல்பனா சால்வா உட்பட ஏழு விண்வெளி வீரர்களுடன் பூமிக்குத் திரும்பிக்கொண்டிருந்த கொலம்பிய விண்கலம், வெடித்துச்சிதறியதில் அவர்கள் ஏழு பேருமே கொல்லப்பட்டனர்.அதற்குக் காரணம், அந்த விண்கலம் பூமியில் இருந்து புறப்பட்ட சமயத்திலே, அதன் வெளி எண்ணெய் தாங்கிப்பகுதியில் இருந்து விழுந்திருந்த ஒரு சிறியதுண்டு,விண்ணில் வலம்வரும் விண்கலத்தின் இறக்கையிலேயே அடித்துக் காயமேற்படுத்தியிருந்ததுதான்.

அந்தக் காயத்தினால், ஆறு அங்குல ஓட்டை விண்கலத்தில் ஏற்பட்டிருந்தது. இரண்டு வாரங்கள் கழித்து அந்த விண்கலம் பூமிக்கு திரும்ப ஆரம்பித்த சமயத்திலே, அதியுயர்வெப்ப நிலiயில் இருக்கின்ற வாயுக்கள் அந்த ஓட்டையைத் துழைத்துக்கொண்டுபோய் வணிகலத்தைப் பிவடையச் செய்திருக்கின்றன.இந்தச் சம்பவம்தான் விண்கலம் வெடித்துச் சிதறியதற்குக் காரணம் என்று விசாரணை அறிக்கையின் முடிவில் கூறப்பட்டுள்ளது.இப்படி வெளி எண்ணெய் தாங்கிப்பகுதியில் இருந்து சிறுதுண்டுகள் கழன்று விடுவது ஒன்றும் இது முதல்முறையல்ல. பல ஆண்டுகளாக இப்படி நடந்து வந்திருக்கிறது.

நாஸா நிர்வாகிகள் இது போன்ற பாதுகாப்புத்தொடர்பான விடயங்களுக்கு திறமையான அளவு முக்கியத்துவங்களை வழங்கவில்லை என நேற்றுமுன்தினம் வெளியான அறிக்கை அவர்களைக் கண்டித்திருக்கிறது.கொலம்பியா விண்கலம் புறப்பட்ட சமயத்திலே அதற்கு ஏற்பட்ட பாதிப்பின் அளவை ஆராயவேண்டும் என்றும் அது விண்ணில் இருந்தசமயமே அது அடிபட்ட இடத்தை படம்பிடித்துப் பார்த்திருக்கவேண்டும் என்றும் இது குறித்து மூன்று தடவைகள் பொறியியலாளர்கள் அதிகாரிகளைக்கேட்டிருந்தார்கள் என்றும், அதனை நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டாகள் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.

இப்படிப்பட்ட நாஸாவின் கலாசாரம் பற்றி நாஸா வரலாற்று அறிஞரான டாக்டர் ரோஜர் லோனியஸ் கூறும்போது நாஸாவில் இருப்பவர்களுக்கு தங்களுக்கு எல்லாமே தெரியும் என்ற எண்ணம் இருக்கிறது. யாரும் வந்து தமக்கு எதுவுமே சொல்லித்தரத்தேவையில்லை என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கிறது. எல்லாத்தகவல்களும் எல்லாத்திறமைகளும் எங்களிடம் இருக்கின்றனவே. எனவே, வெளியில் இருந்து மேலதிக ஆலோசனைகள் ஒன்றும் எமக்கு அவசியமில்லை என்று கூறும் மமதை நாஸாவில் நிலவியது என்றார்.

அதைமாற்றுவதற்கு நாங்கள் பல பரிந்துரைகளை இந்த விசாரணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்ற விடயங்களுள் ஒன்று எதிர்காலத்தில் நாஸா விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்பும்போது அதை மேற்பார்வை செய்வதற்கு முற்றிலும் தனிப்பட்ட ஒரு குழு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய வேண்டும்.மற்றது - விண்வெளி வீரர்கள் இனிமேல் விண்கலத்தை, அது விண்வெளியில் வலம் வந்துகொண்டிருக்கும் சமயத்திலே பழுதுபார்த்துக்கொள்வதற்கும், அதனுடைய பாதுகாப்பு நிலைமைகளை அவ்வப்போது பரிசீலனை செய்துகொள்வதற்கும் வசதிகளும் வாய்ப்புகளும் ஏற்பாடு செய்து கொடுக்கப்படவேண்டும்.

இந்த இரண்டு விடயங்களும் முக்கியம் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று இந்த அறிக்கையில் கண்டனங்களும், பரிந்துரைகளும், விமர்சனங்களும் கூறப்பட்டிருக்கின்றன.நாஸா இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்ட அனைத்து பரிந்துரைகளையும் தான் ஏற்றுக்கொள்வதாகவும் அவற்றை நடைமுறைப்படுத்த தயாராக இருப்பதாகவும் கூறியிருக்கிறது.அடுத்த வருடம் மார்ச் மாதம் அளவில், மீண்டும் தன்னுடைய விண்வெளிப் பயணங்கள் ஆரம்பமாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் நாஸா கூறியிருக்கிறது.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]