www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அறிவியல் பக்கம்

பூமியின் காந்த மண்டலத்தின் விதி......

பூமியின் காந்த மண்டலம் கடந்த 150 வருடங்களில் 10 சதவீதத்தால் பலவீனம் அடைந்துள்ளதாகவும் இந்த பலவீன விகிதத்தில் காந்த மண்டலம் தொடர்ந்து பலவீனமானால் பூமியின் முழுக் காந்த மணடலமும் இன்னும் 1500 தொடக்கம் 2000 வருடங்களுக்குள் முற்றாக பலமிழந்து விடும் என்றும் அமெரிக்க கவாட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்....!

இந்த காந்த மண்டலப்பலவீனம் தென் அத்திலாந்திக் சமுத்திரத்தின் மேல் நன்கு அவதானிக்கப்பட்டுள்ளது...இதனூடாகவே பூமிக்கு மிக அருகில் சுற்றிவரும் செயற்கைக் கோள்கள் தமது மின் காந்த அலைகளை பூமிக்கு அனுப்பி வருகின்றனவாம்....! இந்தக் காந்த மண்டல அழிவு பூமிக்குள் பலமான மின்காந்த அலைகள், மின்னேற்றம் பெற்ற துணிக்கைகள் தடையின்றி உள் வர உதவி அளிக்கும் என்றும் இவை உயிரினங்களுக்கும் பூமிக்கும் அதன் காற்றுமண்டலக் கட்டமைப்புக்கும் ஆபத்தானவை ஆகவும் அமையலாம்....!

அனுப்பியவர் வெப்தமிழன்

உலகின் மக்கள் தொகை 900 கோடிய&

தலைப்பைக் கண்டு பயந்துவிடாதீர்கள். இன்னும் 297 ஆண்டுகளில் தான் உலகின் மக்கள் தொகை 900 கோடியாக உயரும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை பிரிவு கூறியுள்ளது!

தற்பொழுது உலகின் மக்கள் தொகை 630 கோடியாக உள்ளது. தற்பொழுது உலக அளவில் பெண்களுக்குள்ள சராசரி பிள்ளை பெறும் திறனை அடிப்படையாகக் கொண்டு - ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்க்கையில் இரண்டு பிள்ளைகளை பெறுகின்றார் என்கிறது சராசரி - 2300 ஆம் ஆண்டு இறுதியில் உலகின் மக்கள் தொகை மேலும் 270 கோடி உயரும் என்று அந்தப் புள்ளி விவரம் கூறுகிறது.

30 ஆண்டுகளுக்கு முன் இருந்த பிள்ளை பெறும் திறனின் அடிப்படையில் உலகின் மக்கள் தொகை 2075 ஆம் ஆண்டிற்குள் ஆயிரம் கோடியாக உயரும் என்றும், 2200 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1,200 கோடியாக உயரும் என்றும் கணித்து கூறப்பட்டது.

ஆனால், மக்கள் தொகை ஆய்வாளர்களை ஆச்சரியத்தில் தள்ளும் அளவிற்கு பெண்களின் பிள்ளை பெறும் திறன், வெகுவாக குறைந்ததன் காரணமாக அடுத்த 300 ஆண்டுகளில் மேலும் 300 கோடி மக்கள் தொகை உயரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வருடத்திற்கு 13 விழுக்காடு அளவிற்கு உயர்ந்து வரும் ஆப்பிரிக்க கண்டத்தின் மக்கள் தொகை, அடுத்த 300 ஆண்டுகளில் 24 விழுக்காடாக உயரும். ஆனால், தற்பொழுது ஆண்டிற்கு 12 விழுக்காடாக உயர்ந்து வரும் ஐரோப்பாவின் மக்கள் தொகை 7 விழுக்காடாக குறையும்.

இதே காலக்கட்டத்தில் 60 வயதுக்கும் தாண்டியப் பின்னும் உயிர் வாழ்பவர்களின் எண்ணிக்கை தற்பொழுதுள்ள 10 விழுக்காட்டிலிருந்து 38 விழுக்காடாக உயரும். அதே போல, உலக மக்களின் சராசரி வாழ்க்கைக் காலம் 26 வயதிலிருந்து 2300 ஆம் ஆண்டு 50 வயதாக உயரும்.

அனுப்பியவர் வெப்தமிழன்

உலகில் எயிட்ஸ் நோயின் தாக்கம் அதிகரித்துவருவதுடன் இவ்வாண்டில் அது இதுவரை காலத்துக்குமான உச்ச நிலையை எட்டியுள்ளது....! உலகில் 40 மில்லியன் மக்கள் எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் இவர்களில் 2.5 மில்லியன் பேர் 15 வயதுக்கும் உட்பட்ட சிறுவர்கள்...இவ்வாண்டில் 2003 மட்டும் சுமார் 5 மில்லியன் பேர் எயிட்ஸ் நோய்த்தொற்றுக்குள்ளாகி உள்ளனர்...மூன்று மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்...!

உலகின் எயிட்ஸ் தாக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட கண்டமாக தொடர்ந்து ஆபிரிக்கா விளங்குகிறது...ஆசியாவில் இந்தியாவும் சீனாவும் எயிட்ஸ் தாக்கத்துக்கு அதிகம் உள்ளாகும் நாடுகளின் பட்டியலில் இணைந்துள்ளன....!

ஆபிரிக்காவில் பொஸ்வானாவிலும் சுவாசிலாந்திலும் சுமார் 40 சதவீதம் வளர்ந்தவர்கள் எயிட்ஸ் உடன் வாழ்கின்றனர்...அது மட்டுமன்றி அப்பிராந்திய சில நாடுகளில் ஐந்து கர்பிணித்தாய்மாருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் எயிட்ஸ் தொற்றிய தாய்மார் வாழ்கின்றனர்.....!

இப்படியே போனால் மனித இனமும் சுவடுகளாக பூமியில் காட்சியளிக்கும் நாள் அதிக தூரமில்லை....!

அனுப்பியவர் வெப்தமிழன்

எயிட்ஸ் நோய் ......

எயிட்ஸ் நோய் வைரசின் பெருக்க வேகத்தை உடலில் கட்டுப்படுத்தி எயிட்ஸ் நோயாளிகளை நீண்ட நாளைக்கு வாழ வைக்கும் திட்டத்தை உலகம் பூராவும் உலக சுகாதார ஸ்தாபனம் ஆரம்பிக்கவுள்ளது...! இத்திட்டத்திற்கு வைரசின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்துகள் பாவிக்கப்படவுள்ளன...இவை முன்னரும் பாவிக்கப்பட்ட போதும் விலை மிக அதிகமாகக் காணப்பட்டன...தற்போது பெருகி வரும் எயிட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மலிவு விலையில் இம்மருந்துகளை தயாரித்து வழங்க பல மருந்து உற்பத்தி செய்யும் உயிரியல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முன்வந்துள்ளன.....!

இது காலத்தின் கட்டாயம் போலும்....!

அனுப்பியவர் வெப்தமிழன்

செவ்வாய் பற்றிய புதிய தகī

ஐரோப்பிய விண்ணியல் ஆய்வு நிறுவனம் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் செய்வாயை நோக்கிய அனுப்பிய கலம் செவ்வாயில் இருந்து சுமார் 3.4 மில்லயன் மைல்களுக்கு அப்பால் இருந்து செவ்வாயைப் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியுள்ளது....!இந்தப்படத்தை ஆய்வு செய்த போது செவ்வாயின் மேற்கு அரைக்கோளம் கூடிய ஒளிர்வுத் தன்மையுடன் காணப்படுவதாகவும் செவ்வாயின் மூன்றில் ஒரு பகுதி இருள் அடைந்த பகுதியாகத் தென்படுவதாகவும் இவற்றில் வடக்குத் தாழ்வுப் பகுதி முன்னர் சமுத்திரங்களால் நிரப்பப்பட்டு இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்...!எப்படியாயினும் இக்கலமும் ரோவர் ஒன்றும் வரும் கிறிஸ்மஸ் காலத்தில் செவ்வாயை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]