வெப்ப வலயத்தைச் சேர்ந்த சிறிய இன வளர்ப்பு மீன் ஒன்றிற்கு கடல் வாழ் ஜெலி மீன்களில் இருந்து பெறப்பட்ட ஒளிவீசும் புரதங்களை உற்பத்தி செய்யக் கூடிய பரம்பரை அலகுகளை புகுத்தி அவற்றில் ஒளிவீசும் இயல்பை ஏற்படுத்தி உள்ளனர்...இப்போ அவை பிறப்புரிமையியல் ரீதியில் மீள வடிவமைக்கப்பட்ட உலகின் முதல் வளர்ப்புப் பிராணிகளாக விற்கப்படவுள்ளன....!
உண்மையில் இவை மாசுக்களை அடையாளம் காண உற்பத்தி செய்யப்பட்ட போதும் விற்பனை உரிமம் பெறப்பட்டு வளர்ப்பு மீன்களாகவும் விற்கப்படவுள்ளன...!
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..
---------------------------------------------------------------------
எமது பூமிக்கு வயது கிட்டத்தட்ட 4.5 பில்லியன் வருடங்கள்....பூமியில் உயிரினங்கள் தோன்றியது சுமார் 3.5 பில்லியன் வருடங்களுக்கு முன்னர்... யுராசிக் பாக் டைனோசோரர்கள் வாழ்ந்தது சுமார் 66 மில்லியன் வருடங்களுக்கு முன்னர்....எனி விடயத்துக்கு வருவோமா...சமீபத்தில் அன்டாட்டிக்கா பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் இருந்து சுமார் 251 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் எமது பூமியோடு சுமார் 4.6 பில்லியன் வயதுடைய மிகப்பெரிய விண்பாறை மோதி பூமியில் வாழ்ந்த உயிரினங்களில் கிட்டத்தட்ட 90சதவீதம் அழிந்திருக்கலாம் என்றும் அதன் பின் இன்னுமொரு விண் பாறை மோதலிலேயே டைனோசோரர்கள் அழிந்துள்ளன என்றும் தகவல் வெளியிட்டுள்ளனர்...இதற்கான ஆதாரங்கள் அன்டாட்டிக்காப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட விண் பாறைத்துகளை இரசாயன பகுப்பாய்வுக்கு உட்படுத்திய போது அறியப்பட்டுள்ளது....!
இவ்வாய்வை the University of Rochester சேர்ந்த புவியியற்துறைப் பேராசிரியர் Asish R. Basu செய்துள்ளார்.....!
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்..சூரிய மின்காந்தப்புயல்... 
மிகப் பெரிய மின்காந்தப் புயல் தாக்கிய போது பின்லாந்தில் அவதானிக்கப்பட்ட வானத்து அதிசயம்.. 







