www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அறிவியல் பக்கம்

செவ்வாயில் பனிக்கட்டிக் குளம்..!

செவ்வாய் மீது விண்பொருள் ஒன்று மோதி அமைந்த குழியில் பனிக்கட்டிக் குளம்..!

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்துக்குச் சொந்தமானதும், செவ்வாய் கிரகத்தை அண்மித்து சுற்றி அதனை ஆய்வு செய்து வரும் விண்கலம் ஒன்று, செவ்வாயின் வட அரைக்கோளத்தில் வடமுனைவு நோக்கிய தூரப் பகுதி ஒன்றில் பனிக்கட்டிக் குளம் ஒன்றை படம் பிடித்துள்ளது...!

இந்தப் பனிக்கட்டிக்குளம் விண்பொருள் ஒன்று செவ்வாயின் வட அரைக்கோளத்தில் மோதிய இடத்தில் அமைந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன..!

செவ்வாயில் பனிக்கட்டி நிலையில் நீர் அவதானிக்கப்பட்டிருப்பதானது அங்கு ஏதோ ஒரு வடிவத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருக்கலாம் அல்லது வாழலாம் என்ற சாத்தியக்கூற்றை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது...!

அவதானிக்கப்பட்டது பனிக்கட்டி அல்லாத வேறுபடிவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர்..!மேலும் தகவல்கள்

அனுப்பியவர் வெப்தமிழன்

டிஸ்கவரி விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது..!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக கொலம்பியா விண்கலம் விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து, அமெரிக்காவால் ஏவப்படும் முதலாவது விண்கலமான டிஸ்கவரி, இன்று புளோரிடாவின் கேப் கனவரல் என்னும் இடத்தில் இருந்து விண்ணுக்கு ஏவப்பட்டது.

டிஸ்கவரி விண்ணில் எழுந்து சென்ற போது அதனைப் பல விண் ஆய்வாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்; நாசா விண்வெளி ஆய்வு கூடத்தின் இருந்து அதன் கட்டுப்பாட்டாளர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

அந்த விண்கலத்தில் உள்ள 7 விஞ்ஞானிகளும் தற்போது அதனை விண் சுற்றுப்பாதையை நோக்கிச் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னர் திட்டமிட்டபடி சர்வதேச விண் ஆய்வு கூடத்துடன் இன்னும் இரு நாட்களில் அவர்கள் இணையவுள்ளனர்.

தொழில் நுட்பக் கோளாறு காரணமாக சுமார் இரு வாரங்கள் தாமதமான டிஸ்கவரி நிதானமாக ஏவப்பட்டது குறித்து அங்கு ஒரு ஆறுதல் காணப்பட்டதாக அங்குள்ள ஒரு பிபிசி செய்தியாளர் தெரிவித்தார்.

அனுப்பியவர் வெப்தமிழன்

சுப்பர் கொம்பியூட்டர் மூளை...!

பல ஆயிரக்கணக்கான நரம்புக்கலங்கள் கொண்ட நிரல்களால் ஆக்கப்பட்ட மனித மூளையின் நியோகோட்டெக்ஸ் (neocortex)

சுப்பர் கொம்பியூட்டர்களைப் (Super computer) பயன்படுத்தி மனித மூளையில் உள்ள மொழியாற்றல், கற்றல், ஞாபகம், சிக்கலான எண்ணங்களுக்கு உரிய பகுதியான நியோகோட்டெக்ஸை (neocortex) ஒத்த செயற்பாட்டுத்திறனுடைய முப்பரிமான மாதிரி ஒன்றை சுவிஸ்லாந்து நாட்டு நிறுவனம் ஒன்று தயாரிக்க உள்ளதாக தெரிவிக்கிப்படுகிறது...!

இந்த மூளைப் பகுதியை சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கும் போது பல நூறாயிரம் பராமீற்றர்கள் (parameters) பற்றிக் கவனம் செலுத்த வேண்டி இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது...!

இந்த இரண்டாண்டுத்திட்டம் வெற்றி அளிக்கும் பட்சத்தில் முழு மனித மூளையினதும் முப்பரிமான மாதிரி சுப்பர் கொம்பியூட்டர்கள் கொண்டு உருவாக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கருத்துரைத்துள்ளனர்...!

இந்தத் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படவுள்ள ஐ பி எம் இன் சுப்பர் கொம்பியூட்டரின் திறன்கள் வருமாறு....நான்கு குளிர்சாதனப் பெட்டி அளவு floor space அளவில் நிறுவப்படும் சுப்பர் கொம்பியூட்டரின் செயல் வீச்சு - processing speed of at least 22.8 trillion floating-point operations per second (22.8 teraflops) என்று இருக்குமாம்..!

உயிரியலில் சுப்பர் கொம்பியூட்டர்களின் பாவனை என்பது டி என் ஏ யின் இருந்து பெறப்படும் தகவல்களின் அடிப்படையில் மருந்துகளுக்கான மூலக்கூறுகளை வடிவமைத்தல் வரை என்று பல தேவைகளுக்குப் பாவிக்கப்படுகின்றன...!

மேலதிக தகவல் இங்கு

அனுப்பியவர் வெப்தமிழன்

ஜீன்களும் பெண்களில் பாலியல் உச்சமும்

பெண்களில் உடலுறவின் போது பாலியல் உச்ச இனபம் ( Orgasm) பெறுதல் என்பது அவளின் சமூக, உளவியல் மற்றும் ஆண் துணையின் சக்தி பலம் பலவீனம் நம்பகத்தை என்பவற்றுக்கு அப்பால் அவள் காவும் பரம்பரை அலகுகள் சார்ந்தும் இருப்பதாக பிரித்தானிய உயிரியல் ஆய்வாளர்கள் செய்த ஆய்வு முடிவொன்று தெரிவிக்கிறது...!

இவ் ஆய்விற்கு 19 - 83 வயது வரையான 4000 பெண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்..! இவர்களில் பாதிப்பேர் ஒத்த இரட்டையர்களாவர்....!

பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தாங்கள் பாலியல் உச்ச இன்ப நிலையையே அடைந்ததில்லை என்று கூறியுள்ளதுடன் பத்தில் ஒன்றுக்கும் அதிகமான பெண் உடலுறவின் (intercourse) போது மட்டும் பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் சுமார் 34% பெண்கள் சுய இன்பச் செயற்பாட்டின் (masturbation) போது பாலியல் உச்ச இன்ப நிலையை அடைவதாகவும் தெரிவித்துள்ளனர்...!

ஆண்களில் உடலுறவின் (intercourse) போது வெறும் 2% பேரே பாலியல் உச்ச இன்பத்தைப் பெற முடியாதவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்...!

இதில் ஒத்த இரட்டைப் பெண்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பாலியல் உச்ச இன்ப நிலை அவதானிக்கப்பட்டதானது இவ்வியல்பு சார்பில் அப்பெண்கள் காவும் பரம்பரை அலகுகளுக்கும் (ஜீன்கள் - genes) தொடர்பு உண்டு என்பதை இனங்காட்டுவதாகவும்...அப் பரம்பரை அலகுகள் எவை என்று தீர்மானிப்பது பெண்களில் காணப்படும் பாலியல் உச்ச இன்பம் பெறுதல் குறைபாட்டைத் தீர்க்க வகை செய்யும் மருந்துகளைக் கண்டுபிடிக்க உதவும் என்றும் இவ்வாய்வு முடிவு பரிந்துரைக்கிறது...!

பெண்கள் பாலியல் உச்ச இன்பம் பெறுவதின் மீது வெறும் மேலாண்மையும் அவள் சார்ந்த மதம் மற்றும் இனமும் மட்டும் செல்வாக்குச் செலுத்த முடியாத வகையில் உயிரியல் காரணிகளும் செல்வாக்கைச் செலுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது...!

Professor Spector, director of the Twin Research Unit at St Thomas' Hospital in London, said: "We found that between 34 and 45% of the variation in ability to orgasm can be explained by underlying genetic variation.

"There is a biological underlying influence that can't be attributed purely to upbringing, religion or race.

"The fact that it's heritable suggests that evolution has a role."

மேலதிக தகவல் இங்கு

அனுப்பியவர் வெப்தமிழன்

மீண்டும் விண் ஏகும் டிஸ்கவரி...!

கிட்டத்தட்ட 2 1/2 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த அமெரிக்க கொலம்பிய விண்ணோட விபத்திற்குப் பின்னர் சர்வதேச விண் நிலையம் நோக்கி அமெரிக்க டிஸ்கவரி விண்ணோடம் மூலம் எதிர்வரும் புதன்கிழமை (13 - 07 - 2005) விண்ணுக்கு பயணிக்க இருக்கும் 7 பேர் கொண்ட விண்வெளிவீரர்கள் குலாத்தைப் படத்தில் காணலாம்...! இவர்களுக்கு Eileen Collins எனும் பெண் வீராங்கனை தலைமை தாங்குகிறார்...!

இவர்கள் சர்வதேச விண் நிலையத்தின் கட்டமைப்புத் தொடர்பான இறுதிப் பணிகளை நிறைவு செய்வதுடன்.... விண்வெளியில் மனிதர்களை அதிக காலம் தங்க வைக்கக் கூடிய சூழ்நிலைகள் குறித்தும் மீண்டும் சந்திரனுக்குப் போவது குறித்தும் ஆய்வுகள் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது...!



விண்ணோக்கிய பயணத்துக்காக காத்திருக்கும் டிஸ்கவரி (Discovery) விண்ணோடம்...!


Commander Eileen Collins
Pilot James Kelly
Mission Specialist Andy Thomas
MS Charles Camarda
MS Wendy Lawrence
MS Soichi Noguchi
MS Steve Robinson

டிஸ்கவரியில் பறப்புக்குத் தயாராக இருக்கும் விண்வெளி வீரர்களும் அவர்களின் விபரங்களும்..!

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளு&#