|
இன்று(11-12-2004) தமிழ் லினக்ஸ் குழுவில் வந்த நண்பர் முகுந்தராஜின் கடிதம்.
இந்த விஷயத்தில் நான் ஏற்கனவே திரு சுஜாதா அவர்களுக்கு எழுதினேன்.
அதன் விபரங்களை விரைவில் அறியத் தரலாமென்று இருக்கிறேன்.
அன்புடையீர்,
கடந்த நவம்பர் மாதம், ஆனந்தவிகடன் இதழில், கற்றதும் பெற்றதும்
என்ற தொடரில் திருவாளர் (பாய்ஸ் புகழ்) சுசாதா அவர்கள் ஓப்பன்
சோர்ஸ் செயலிகளை தாங்கள் தமிழில் குடுக்கபோவதாக தங்கள் திருவாய்
மொழிந்துள்ளார். இதை தற்போது தான் பார்க்கும் வாய்ப்பு எனக்கு
கிடைத்தது. {http://www.vikatan.com/av/2003/nov/30112003/av0907.shtml}
{மேற்கோள் ஆரம்பம்}
அதேபோல் தமிழ்க் கணினி. 'ஓப்பன் சோர்ஸ்' என்னும் திறந்த இயக்கம்
மூலம் லினக்ஸ் செயலாக்க மென்பொருள் சார்ந்த தமிழ்க் கணினி ஒன்று
சில ஆர்வலர்கள் சேர்ந்து வடிவமைத்துக் கொண்டிருக்கிறோம்.
ஓப்பன் ஆபீஸ் மோஸில்லா கே.டி.ஈ. போன்ற மேல்மேஜை மென்பொருள்களை
அப்படியே தமிழில் தர முற்பட்டிருக்கிறோம்.
செந்தொப்பி 'ரெட்§?ட்'... லினக்ஸ் நிறுவனம் கணிசமான
ஆதரவளிக்கிறது. தமிழக அரசின் இணையம் சார்ந்த பல்கலைக்கழகமும்
இதற்கு ஆதரவளிக்கி.....
{மேற்கோள் முடிவு}
அதாவது அவர்கள் ** ஓப்பன் ஆபீஸ் மோஸில்லா கே.டி.ஈ. போன்ற
மேல்மேஜை மென்பொருள்களை அப்படியே தமிழில் தர
முற்பட்டிருக்கிறார்களாம் ***
ஆனால் உண்மை நிலை என்ன?
1. ஓப்பன் ஓ·பீஸ் (இதை முதன் முதலில் தமிழ்படுத்தியவர்கள்
பாரதீய ஓப்பன் ஓ·பீஸ் குழுவினர்[http://trinetra.ncb.ernet.in/bharateeyaoo/index.html].
தற்போது அவர்களுடன் சேர்ந்து மேலும் சில ஆர்வலர்களை சேர்த்து
அதிகாரபூர்வமாக தமிழ் ஓப்பன் ஓ·பீஸ் அமைத்து
செயல்பட்டுகொண்டிருக்கிறோம் [http://ta.openoffice.org] - இந்த
வலைதளம் தற்போது கட்டப்பட்டுகொண்டிருக்கிறது...]. ஆனால் திரு
சுசாதா அவர்கள், உண்மையாக இதில் உழைத்துக்கொண்டிருக்கும்
தன்னார்வ குழுக்களை மறந்துவிட்டு [selective amnesia என்று
இதைதான் சொல்கிறார்களோ] தனக்கு பெயரை தேடிகொள்கிறார்... பெரிய
எழுத்தாளர் அல்லவா :)
சரி அடுத்தது மொசில்லாவிற்கு வருவோம்.
2. மொசில்லா தமிழா குழுவினரால் (mozilla.org தளத்தில்
அதிகாரப்பூர்வமாக) தமிழ் படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதும்
உங்கள் அனைவருக்கும் தெரியும்...அப்படியே இந்த சுட்டியையும்
தட்டிப்பார்க்கவும்[http://website-beta.mozilla.org/projects/l10n/mlp_status.html]
இங்கேயேயும் original contributors பெயர்களை எழுத்தாளர் சுசாதா
சொல்லவில்லை,,,,இதையும் இவர்கள்தான் தமிழில் தரப் போகிறார்கள்
என்று சொல்கிறார்... இது எப்படி இருக்கு :))
3. கே.டி.ஈ என்ற லினக்ஸ் சாளர செயலியை தமிழ் படுத்தி முதன்
முதலில் லினக்ஸ்க்கு தமிழ் முகப்பை கொடுத்த பெருமை நன்பர்
வசீகரனை சாரும். இந்த சுட்டியை தட்டுங்கள்:
[http://i18n.kde.org/teams/index.php?a=i&t=ta] இவர் பெயரையும்
(original contributor என்ற முறையில்) குறிப்பிடவில்லை.
அதாவது உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கனக்கான தன்னார்வலரகளும் , சில
தமிழ் தன்னார்வலர்களும் சேர்ந்து உருவாக்கி சமுதாயத்திற்கு
வழங்கப்பட்ட சொத்து இந்த திறவூற்றுச் செயலிகள்.
இவற்றை எதோ இந்த சுசாதா போன்றோர் தனியாக செய்து வெளியிடுவது
போன்ற ஒரு தவறான கருத்தை சாதாரண வாசகரிடம் சுசாதாவின் கட்டுரை
ஏற்படுத்துகிறது என்று நான் கருதுகிறேன்.
இது திறவூற்று தர்மத்திற்கே எதிரானது என்பதை தமிழர்கள்
புரிந்துகொள்ளவேண்டும்.
இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
அன்புடன்,
முகுந்தராஜ் |