www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

'கணனியின் விஸ்தரிப்பும் தமிழை இற்றைப்படுத்தலும'
-
பேராசிரியர் கா.சிவத்தம்பி-(06-06-2004)
 
(கருத்தரங்கு நிழல் பட  தொகுப்பு  1   )

நண்பர்களே! தமிழின் இன்றைப்படுத்தல் - Updating Tamil என்பது நமது மொழியின் வரலாற்றுத் தொடர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். சூழலியல் வாழ்வை தனது வாழ்க்கை முறைமையாகக் கொண்டிருந்த திணைமரபின் மேல் ஒருபுறம் மேற்குலகத் தொடர்புகளும் மறுபுறம் இந்திய வடபுல செல்வாக்குகளும் வரத்தொடங்கிய பொழுது நாம் அந்தக்காலத்திற்கு ஏற்றவகையில் தமிழை இற்றைநிலைப்படுத்தினோம். தினம்,திதி, என்ற எண்ணக்கருக்கள் வருவதன் முன்னம் நாளினுள் ஓரையை (Hours) க்கொண்டு வருவதற்கு கிரேக்க மூலத்தை நாடினோம். 'ஒரா' ஓரையாகும்.

வணிகவழியாக பல எண்ணக்கருக்களை உள்வாங்கிக்கொண்டோம். நாளையமுறைமையைக் கையேற்றோம். யவனர் தந்த வினைமான் நன்காலங்களை நமது வாழ்வியலுக்கான பொருட்களாக ஏற்றுக்கொண்டோம்.

உலகை நோக்கும் மரபிலும் நாங்கள் திணைகளுக்கு அப்பாற்சென்று மதங்களை, சமயங்களை உள்நோக்கினோம். நிறுவகமதம் நமது தொடக்ககாலப் பண்பாட்டிற்குப் புறம்பானது. ஆயினும், சமணமும் பௌத்தமும், ஆசிவகமும் வந்தபோது அவற்றை நமது சிந்தனை மரபோடு இணைத்துக் கொண்டோம்.

அந்த இணைப்பின் மொழிவடிவம்தான் திருக்குறள். இவ்வாறாக சிந்தனைகளும் தொழில்நுட்பங்களுக்கும் நம்மிடத்தே வந்தபோது நாம் அவற்றை தமிழ் நிலைப்படுத்தினோம். அவ்வாறு செய்ததினால் தமிழ்காலம் பிந்தாத முன்னேற்றத்தைப் பெற்றது. Up-date பண்ணப்பட்டது. அதேவேளையில் நாம் நமது பண்பாட்டுடன் இயைபுறுத்திய அப்பொருளின் அல்லது அவ்விடயத்தின் பரிமாணத்திலும் பல வளர்ச்சிகைளப் பெற்றது. வணிகத்துறைக்காக சார்த்து (Guild) மரபும் நாவாய் மரபும் வந்தபோது நாம் தமிழ்நிலைப்படுத்தினோம். அத்தகைய ஒரு தொழில்நுட்ப இற்றைப்படுத்தலாகத்தான் தமிழ்நாட்டின் கப்பல்களை நாவாய்களை, தோணிகளை நீங்கள் பார்த்தல் வேண்டும்.தமிழ்நாட்டின் இந்த இற்றைநிலைப்படுத்தல் மத்தியகாலத்தில் கி.பி.600-1300 வரையுள்ள காலத்தில் சிற்பக்கலை கட்டடக்கலைப் பொங்கி வழங்கலாயிற்று.

திராவிடக் கட்டடிடக்கலை ஆந்திராவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பொதுவானதொன்றாலும் உலோகவார்ப்புச்சிலை நமக்குச் சிறப்பானது.

இந்த இற்றைப்படுத்தல் பின் மத்தியகாலத்தில் தெலுங்குப் பாரம்பரியத்தை இசைவிக்க வழிவகுத்தது மாத்திரமல்லாமல் பிரதானமாக மிகமிக முக்கியமாக இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தமிழ்நிலைப்படுத்தியது. இந்த சிந்தனை மரபுகளின் இணைவுதான் குணங்குமல்தான் சாகியு, கிருஷ்ணபிள்ளை ஆகியோர் ஆவார்.

மதநிலைச் செல்வாக்கிலும் பார்க்க ஆட்சிக் செல்வாக்கு கொண்டுவந்த ஆளுகைமாற்றங்கள், தொழில்நுட்ப மாற்றங்கள், ஆட்சியுறவு மாற்றங்கள் தமிழை பாரம்பாரிய இந்திய மொழி என்றநிலையிலிருந்து விடுவித்து நவீனமயப்பாட்டுப் பாதையில் நடக்க வைத்தது. புதிய தொழில் நுட்பங்கள் வரவர அவை ஒவ்வொன்றையும் தமிழுக்குள் கொண்டுவந்தோம். Press ஜ அச்சு ஆக்கினோம். Paper ஜ தாள் ஆக்கினோம். ஓலையை நூல் ஆக்கினோம். நூலைப் புத்தகமாக்கினோம். தமிழின் இன்றைப்படுத்துவதில் அன்றுமுதல் இன்றுவரை பார்ப்பது கருவிவருகைகளை தமிழ் கொண்டு உள்வாங்குவது புதியனவற்றை மரபினூடாக இணைப்புப்படுத்திக் கொள்வது. வாங்கிய கடன்களைக்கூட தமிழ்நிலைப்படுத்திக்கூறுவது, எழுதுகோல் பேனை ஆகும். இவ்வாறு பல இந்தப் பின்புலத்திலேயே நாம் இன்று கணனியை எதிர் கொண்டுள்ளோம். கம்பிய10ட்டராக உள்ளதை கணனி என உள்வாங்கினோம்.

இதுகாலவரை நடந்த அறிவுநிலை தொழில்நுட்பநிலை உள்வாங்கல்களின் பொழுது தமிழ்நிலையில் அவற்றோடு ஊடாடுவதற்கான கலைச்சொற்களை உருவாக்கினோம். அறிவியற் துறைகள் எல்லாமே அவ்வாறு கொண்டுவரப் பெற்றன.

தமிழ் பேசப்படும், பயிலப்படும் நிலையில் நாட்டுநிலை வேறுபாடுகளிடையேயும் சில ஊடகப் பொதுமைகள் காணப்படுவதானால் ஏறத்தாழ ஒரு கலைச்சொற்பொதுமைக்கு அண்மித்தே நிற்கிறோம். இதிலுள்ள சுவாரசியம் என்னவெனில் தகவல் தொழில்நுட்பத்துக்கான கலைச்சொல்லாக்கத்திலேதான் தமிழக,இலங்கை ஒருமிப்பினை பிரக்ஞை பூர்வமாக மேற்கொண்டோம்.

இதில் மேலும் ஒரு பிரச்சினை உள்ளது. கணனிக்கான சொற்களை பிரதேச வழக்குகளாகவோ வட்டார வழக்குகளாகவோ வைத்திருக்க முடியாது. கணனி உலகளக்கும் பெருமாள். அதற்கான தமிழும் அப்படியே இருக்கும்.

இங்குதான் கணனி தமிழ்மீது ஒரு மிகப்பெரிய மிகப்புதுமையான செல்நெறியை தொடக்கிவிடுகிறது. தமிழக நிலையில், இலங்கை நிலையில், மலேசிய நிலையில் செய்யப்பட்ட கலைச்சொல்லாக்க முயற்சிகளுக்கு மேலாக இப்பொழுது Microsoft நிறுவனமே அந்தப்பணியை மேற்கொண்டுள்ளது. பூகோளமயவாக்கம்,

பூகோளமயவாக்கம் என நாம் கூவிப்பேசிக் கொண்டது இதுதான். Microsoft நிறுவனம் உலகப்பொதுவான கணனி தமிழ்ச்சொல் கலையாக்கத்தை நம்முன் வைத்திருக்கிறது. இந்தச் சவாலை நாம் ஏற்றல்வேண்டும்.

தமிழக கலைச்சொற்களும் ஈழத்துக்கலைச் சொற்களும் சாதிக்காத ஒன்றை Microsoft நிறுவன வழியாக வருகின்ற இந்தக்கலைச் சொல் முறையை நம்மீது திணிக்கிறது.

நண்பர்களே தரப்படுத்தல் ரிஷி மூலத்திலேயே, நதிமூலத்திலேயே ஆரம்பிக்கின்றது. இந்த வேளையில் நான் மிகுந்த பணிவுடமையுடன் ஒரு

வேண்டுகோகளை முன்வைக்கின்றேன். கணனித் தொழில்நுட்ப உள் வாங்கல்களை நாம் தமிழகத்து பயன்பாட்டு முறைகளிலிருந்து வித்தியாசப்பட்ட முறையிலே எதையும் செய்ய தயவு செய்து முனையாதீர்கள்.

இலங்கையின் இன்றைய நிலையில் வடகிழக்கு வள வலுப்பெற இன்னும் குறைந்தது கால்நூற்றாண்டு எடுக்கும் அந்தக் கால எல்லைக்குள் வட கிழக்குக்கு வெளியேயுள்ள தமிழ் வழிக் கல்வியை இல்லாமற்செய்ய அரசிலும்பார்க்க அரச இயந்திரம் மிக முனைப்பாக வேலை செய்கிறது. இந்த வேளையில் நாம் ஏதோ தமிழின் சிறப்புக்கான மேலும் தொழில்படலாம் என்று கருதி கலைச்சொற்கள் நிலையில் வேறுசொற்களைப் பயன்படுத்த தீர்மாணித்தது போல கணனி விடயத்தில் தயவுசெய்து உள்ளுர் உற்பத்திக்கான தேவையை ஏற்படுத்தி விடாதீர்கள் தமிழ்நாட்டிலுள்ள 5 கோடிமக்கள் பயன்படுத்துவதை நாமும் பயன்படுத்துவோம்.

இதனை நான் சொல்கின்ற போது உள்ளுர ஒரு வருத்த உணர்வு உள்ளது. எங்கள் தமிழச்சொற்களின் முக்கியத்துவம் பற்றி நாம் தமிழகத்திலேயே பேசியுள்ளோம்.

ஊடகம், செல்நெறி வகிபாகம் சமூக உருவாக்கம் போன்ற சொற் பயன்படுகளை அவர்கள் ஏற்று கொண்டுள்ளன. ஆனால் இங்கோ தமிழின் பயன்பாடு குறைக்கப்படுகிறது. ஒரு சிங்களமயப்பாடு அதிகரித்துள்ளது. மும்மொழி அகராதியில் ஏற்படைத்தான உணவு என்பதற்கும் அதன் எதிர்நிலைக்கும் சிங்களப் பயன்பாட்டை மனங்கொண்டு போக்கிய உணவு, அயோக்கிய உணவு என்று துணிவுடன் எடுத்துக் கூற சில தமிழ்மொழி பெயர்ப்பாளர்களை வைத்துக் கொண்டுள்ளனர். தமிழ் கணனிப்பயன்படுத்தலிலும் அத்தகைய குளறுபடிகள் வரவேண்டாம். இது மிகமிக நிதானமாக இருத்தல் வேண்டும்.

ஆனால் இந்தப் புதிய நிலைப்பாடு அதாவது பூகோள மயப்பயன்பாட்டுக்கான தமிழ்ற் கணனி கலைச்சொல்லாக்கத்துக்கு மிகுந்த நிதானம் இருத்தல் வேண்டும். Microsoft நிறுவனத்தினர் தமிழகத்தைச் சார்ந்த சில முக்கியஸ்தர்களிடம் இப்புதுக் கலைச் சொல்லாக்கப் பணியினை கையளித்திருப்பதாக அறிகிறேன்.

அவர்களுக்கும் மின்னஞ்சல்முறைவழிமூலம் இத்துறை ஆர்வலர்களின் பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டு சொற்களுக்கான மொழிபெயர்ப்புக்களை நிச்சயப்படுத்துவர். இப்பணியினை மேற்கொண்டுள்ளவர்களுக்கு ஒருவிடயத்திற்கான எடுத்துக் கூறுவதற்கு அவர்கள் என்னை கோபிக்கக்கூடாது.

தமிழ் மொழிபெயர்ப்பு சம்பந்தமாக பல சிந்தனைச் செல்நெறிகள் உள்ளன. தனித்தமிழ்ச் சொற்கள் வேண்டுமென்றும், பாரம்பாரிய சொற்பயன்பாடு வேண்டுமென்றும் புதியன தோற்றுவிக்கப்படவேண்டும் என்றும் உள்ளனவற்றை அப்படியே கடன் வாங்கவேண்டுமென பல சிந்தனைப் போக்குகள் உள்ளன.

இவை பெறும் கருத்து வேறுபாடுகள் அல்ல இவற்றுக்குள் அரசியல் வேறுபாடுகள் உண்டு. கருத்துநிலை வேறுபாடுண்டு இந்தப் பொது
கலைச்சொல்லாக்கப் பணியிலுள்ளவர்கள் ஒருபக்கச் சார்பில்லாமல் நேர்மையுடனும் நீதியுடனும் நடந்து கொள்ளல் வேண்டும். தங்கள் விருப்பு வெறுப்புகளைத் திணித்தல் கூடாது. கலைச்சொல்லாக்க முயற்சிகளின்போது எப்போதும் இரண்டு விடயங்கள் மனத்திருத்தல்படவேண்டும்.

01. தீர்மானிக்கப்படும் சொல் தமிழின் புலப்படாச் சாத்தியப்பாடுகளை வளங்களை வெளிக் கொணர்வனவாக இருத்தல் வேண்டும். அதாவது தமிழின் அசைவியக்கத்தைப் பற்றிய தெளிவுடன் செய்யப்படல் வேண்டும்

02. இதுவும் சம முக்கியமானது. தமிழ்க் கலைச் சொல் வழியாக வரும் தமிழ் மாணவருக்கு ஆங்கிலத்தில் அவ் எண்ணக்கரு, அறிக்கை சுட்டும் கருத்து மயக்கமின்மையினை, கருத்துத் தெளிவின் சொற்கள் ஏற்படுத்த வேண்டும். உதாரணமாக ஊடகங்கள் பலவற்றில் கையாளப்படுவது போன்று Theory, Doctrine , Policy என வருவனவற்றுக்கு பொதுவாக கொள்கை என்றோ கோட்பாடு என்றோ தீர்மானித்துவிடக்கூடாது. உண்மையில் தமிழின் வளச்சாத்தியப்பாட்டினை எடுத்துக்காட்டும் பல சொற்கள் உள்ளன. இவ்விடயத்தில் நான் கலைச்சொல்லாக்கம் பற்றி ஆய்வு செய்ய விரும்பவில்லை, நான் சொல்ல விரும்புவதெல்லாம் தயவு செய்து இதுபற்றி ஏற்கனவே நடந்துள்ள சகல முயற்சிகளையும் நன்றாகப் பார்க்கவும். அரசநிலையில் செய்யப்பட்டது போக ஆய்வு நிறுவகங்களில் செய்யப்பட்டவை போக தனிப்பட்ட அறிஞர்கள் பலர் இத்துறையில் வெளியீடுகளை கொணர்ந்துள்ளனர். அவையாவற்றையும் பார்க்கவும் பார்த்தபின் கணனி நுகர்வோர் மட்டத்தில் மாத்திரம் சொற்பொருத்தத் தேர்வினை விட்டுவிடாது இந்தக் கணனிப் பண்பாட்டுக்குள் இன்னும் வராதிருக்கின்ற நிறுவனங்களையும் அறிஞர்களையும் பயன்படுத்துங்கள். மீள்பார்வைக்காக ஒரு குழுவினை நியமித்து அவர்களது அங்கீகாரத்தையும் பெற்றுக் கொள்ளவும், உங்கள் முயற்சி தமிழின் திறமைகளை ஒருங்கு சேரவைத்துப்பார்ப்பதற்கான வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும்.
இதுமிக முக்கியம்.

தயவுசெய்து இதில் அரசியல் வேண்டாம். இப்படிச் சொல்வதற்கு குறைவிளங்க மாட்டீர்கள் என்றே கருதுகின்றேன்.

இது சம்பந்தமான இன்னுமொரு விடயம் இற்றைவரை தமிழ் எந்த ஒரு நாட்டினதும் தனி அரச மொழியாகவில்லை. இதனால் அரச வலுவைப்பயன்படுத்தி வேண்டியனவற்றைச் செய்வதற்கான வாய்ப்புக்கள் இல்லை. இத்துறையில் தமிழர்களான அறிவியத் புத்திஜீவிகள் பலர ஈடுபட்டிருப்பதற்கு காரணம் தமிழுக்கு இது காரணமாக பின்னடைவு வந்து விடக்கூடாது என்பதினாலேதான். அந்த விடாமுயற்சிகளின் காரணமாக இன்று Microsoft கலைச் சொல் ஒருமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்த விடயத்தில் இந்த நிறுவனத்திற்கு மிகப்பெரிய பணியுண்டு.

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]