www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page

தேமதுரத்தமிழோசை உலகமெலாம் பரவ வழிசெய்வோம்!

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்...
-சந்திரலேகா ,அவுஸ்ரேலியா-(மூலம்: புத்துயிர்ப்பு)

பல சிறப்புக்களைக் கொண்ட தமிழ் மொழி இன்று தமிழர்களாலேயே பேசப்படாத ஒரு துயரமிகு நிலையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைப் பிறநாடுகளில் வாழும் பல தமிழர் மிகுந்த விசனத்துடன் அவதானித்து வருகின்றனர். அந்த நிலையை மாற்றுவதற்காகத் தாம் வாழும் நாடுகளில் தமிழ்ச் சங்கங்களையும் தமிழ்ப் பாடசாலைகளையும் அமைத்து தம்மால் முடிந்த அளவிற்கு அடுத்த தலைமுறைக்குத் தமிழ் மொழியையும் தமிழ்ப் பண்பாட்டையும் வழங்குவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். இது எந்தளவில் வெற்றி பெறும் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

ஈழத்துத் தமிழ்
-ஈழநாதன்-(மூலம்:கவிதை)

இவ்வார வலைப்பூ சஞ்சிகையின் ஆசிரியர் கண்ணன் அவர்கள் கணணித் தமிழ் பற்றியும் தமிழ் மொழி பேசும் வெளிநாட்டவர்கள் பற்றியும் சுவையான தகவல்களைத் தந்துள்ளார்,தமிழ் மொழி பேசும்வெளிநாட்டவர் எனும் போது முக்கியமாக நினைவுக்கு வருபவர் வீரமாமுனிவர்.

தமிழைக் கற்றுப்புலமையுறத் தேறியதோடு நூல்களையும் எழுதியவர் அவரது பரமார்த்த குருவும் சீடர்களும் என்ற நூல் இன்றளவும் நினைவில் நிற்பது

அத்துடன் பல்வேறு வட்டாரங்களில் வழங்கும் தமிழின் பேச்சு வழக்கு அல்லது மொழிப்பிரயோகம் பற்றி யாழ் இணையத்தில் சுவையானதொரு விவாதம் நடைபெற்றது முக்கியமாக எழுந்த கருத்து ஈழத்துத் தமிழ் தான் சுத்தத் தமிழா? என்பது பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் மத்தியில் அனைவராலும் ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு கருத்து ஈழத்துத் தமிழர்களின் தமிழில் ஆங்கிலக் கலப்பு குறைவு அதே போன்று இன்று தாய்மொழிக்கல்வி இணையவழித் தமிழ் என்பவற்றில் ஈழத்துத் தமிழர்கள் பெரும் பங்காற்றி வருகின்றனர் என்பவையாகும்

உங்கள் பகுதி(எந்த நாடாயினும்)களில் நடைபெரும் நிகழ்வுகள் சம்பந்தமான அறிவித்தல்கள்,கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.புகைபடங்களும் பிரசுரிக்கப்படும்.

பெயரும் முகவரியும்

 
 

மின்னஞ்சல

 
 

தகவல்

 

 
 
   

 

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]