www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இன்பத்தமிழ்

ஜெர்மானிய அத்தைகள்

நான் படித்து ரசித்த ஒரு ஜெர்மன் நாவலைப் பற்றிப் பேச ஆசை. இது மொழி பெயர்ப்புடன் சம்பந்தப்பட்டது என்பதால் டபுள் ஓக்கே.

1946- ஜெர்மனி. இரண்டாம் உலக யுத்த அழிவுகள் இன்னும் நேர் செய்யபடவில்லை. எங்கும் இடிபாடுகள். ஜெர்மனி நான்கு நேசப் படை நாடுகளால் நிர்வகிக்கப்பட்டு வந்தது.

அலெக்ஸாண்டர் ஸ்பொரெல் என்ற எழுத்தாளர் எழுதியக் கதைப் பற்றித்தான் நான் இங்குப் பேசப் போகிறேன்.

அதன் கதாநாயகன் அமெரிக்கத் தலைமை அலுவலகத்தில் மொழி பெயர்ப்பாளனாகப் பணி புரிபவன்.

ஒரு நாள் ஒரு ஜெர்மானியன் மிகுந்த ஆவேசத்துடன் அலுவலகத்துக்கு வருகிறான். அவ்னுக்கு ஆங்கிலம் தெரியாது. அமெரிக்கனுக்கோ ஆங்கிலம் தவிர வேறு ஒன்றும் தெரியாது. ஆகவே வந்தான் நம் கதாநாயகன் மொழி பெயர்க்க.

கீழே கொடுக்கப்பட்டுள்ள சம்பாஷணை நடுவில் கதாநாயகன் மொழி பெயர்த்தது தேனீரில் கலந்தச் சர்க்கரையாக இருக்கும்.

ஜெர்மானியன்: "ஐயா என் பக்கத்து வீட்டுக்காரனுடம் இருக்கும் அவன் அத்தைகள் எனக்கு மிகவும் தொல்லைத் தருகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "என்ன செய்வது ஐயா. என் அத்தைகளை நீ பார்த்ததில்லை என நினைக்கிறேன். ஒவ்வொருத்தியும் ஒரு ராட்சசி தெரியுமா?"

ஜெர்மானியன்:" நாள் முழுவதும் கத்திக் கூச்சல் போடுகிறார்கள்."

அமெரிக்க அதிகாரி: "இது கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. அமெரிக்க அத்தைகள் ஜெர்மன் அத்தைகளை விட எவ்வளவோ தேவலை."

ஜெர்மானியன்: "இதை விட மோசம் ஒன்றுண்டு. தினமும் விடியற்காலை என் வீட்டு வாசலில் எச்சம் இட்டுச் செல்கின்றனர்."

அமெரிக்க அதிகாரி (துள்ளிக் குதித்து): "ஜெர்மன் அத்தைகள் கூட அவ்வாறு செய்ய மாட்டார்கள். நான் நம்ப மாட்டேன்.

(கதாநாயகன் பக்கம் திரும்பி): "அத்தை"?

கதாநாயகன் பாவம் மென்று விழுங்குகிறார்.

நடந்தது இதுதான்:

ஜெர்மானியன் புகார் கூறியது பக்கத்து வீட்டுக்காரனின் வாத்துக்களைப் பற்றி. வாத்துக்கு ஜெர்மனில் "என்டெ" என்றுக் குறிப்பிடுவார்கள். கதாநாயகன் அதை ஆன்ட் என்றுக் கூறியதால் வந்த சிறு குழப்பம்தான் அது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-1

தமிழ் தலித் இலக்கியப் படைப்பாளிகளுள் மிக முக்கியமானவர் பாமா. இவரது முதல் படைப்பான கருக்கு மூலமாக பரந்த தமிழ் இலக்கிய உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். தன் வாழ்க்கையையே சாட்சியாய் வைத்து தலித் மக்களின் அவல வாழ்க்கையை பாசாங்கின்றி பதிவு செய்தவர் அதுவரை பேசப்படாதிருந்த சகலவிதமான சமூக மௌனங்களையும் தனது தனித்துவமான தலித்மொழியினால் கலைக்க முயற்சித்தவர்.
--------------------------------------------------------------------------------
புத்தகம் பேசுது என்னும் இதழுக்கு பாமா அளித்த பேட்டியின் ஒரு பகுதி

பாமா (இந்தியா)


நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?

பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.

இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?

நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான் பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.


உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?

இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.


இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?

இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு பொருள் என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.

உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே எந்த மாதிரியான கவனிப்பை பெற்றது?

நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான் இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.


சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?

இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன். அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.


இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?

நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.

கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?

சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கி;ச்சு.

உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?

கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகு;கு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.


தொடரும்...

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

ஒரு தமிழ் திரைப்பட இயக்குனரின் திரையுலக வாழ்க்கை

-சஞ்ஜீத்குமார் :மூலம் திசைகள்-

குமரன் தன்னை ஒரு படைப்பாளியாக மட்டுமே பார்த்து வந்தான். கும்பகோணத்தருகில், சிறு கிராமம் ஒன்றில் அகல்கள் மட்டுமே படைப்பதை தொழிலாகக் கொண்டாலும், எதிர்காலத்தில் அவன் கரங்களும் சிந்தனைகளும் உலகம் போற்றும் மாபெரும் படைப்புகளைத் தோற்றுவிக்கும் என்பதில் அசுர நம்பிக்கை வைத்திருந்தான். ஆனால் அவை என்னவென்றும், எத்துறையில் என்றும் அவனுக்குத் தெரியவும் இல்லை, தெரிந்து கொள்ளவும் முயற்சி எடுக்கவில்லை. "உலகம் என் படைப்புகளுக்காக காத்திருக்கட்டும்" என்ற செருக்கான சொற்களை அவன் அடிக்கடி அவனுக்குள் சொல்லிக் கொள்வான். சிறிது காலமாக சினிமாவில் அவனுக்கு ஒரு ஈடுபாடு வந்திருந்தது. சாப்ளின், குரோஸவா, பெர்கமன், ரே போன்றோர்கள் பற்றிய புத்தகங்களைப் படித்தான். இவர்களது திரைப்படங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற ஒரு கற்பனை திரை உலகுக்குள் வாழ்ந்து வந்தான்.

குமரனின் அகல்கள் கும்பகோணத்தில் மிகப் பிரபலம். கோயில்களில் காணப்பட்ட அனைத்து அகல்களும் குமரன் உருவாக்கியவை. குமரன் தன் அகல்களை செய்ய எந்த அச்சையையும் பயன்படுத்த மாட்டான்; ஆனால் ஒன்றிற்கும் இன்னொன்றிற்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது இயலாத காரியம். தன் அகல்களுக்கு உயிர் இருப்பதாகவே கருதினான், அதுவும் அவன் தந்தது. அவன் வாழ்க்கையின் சோகமான தருணங்களிலும் மகிழ்ச்சியான தருணங்களிலும் அவன் செய்த அகல்களை விரல்களால் வருடுவான்; அது அவனுக்கு இனம் புரியாத உணர்வை அளித்தது - ஒருவித நிம்மதி. அவன் ஒரு நாத்திகன் என்று பரவலாகப் பேசப்பட்டு வந்தது. குமரனுக்கு இது வேடிக்கையாக இருந்தது, ஏனெனில் அவன் நாத்திகனா ஆத்திகனா என்று அவன் ஒரு போதும் சிந்தித்ததில்லை. பூஜைகளுக்கும், விழாக்களுக்கும் பிறகு அவன் அகல்கள் தூக்கி எறியப்படும். அதை பார்க்கும் பொழுதெல்லாம் அவன் மனம் கனமாகிவிடும். அந்த உணர்வு அவனுக்கு பிடித்ததில்லை; கோயில்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டான்.

குமரன் தன் இருபத்தி நான்காவது பிறந்த நாளில், சென்னைக்குக் கிளம்பினான். "திரை உலகமே, முக்கிய திருப்புமுனையை நீ நெருங்குகிறாய்" என்று அவனுக்கு சொல்லிக் கொள்ளும் "செருக்கான சொற்கள்" புது வடிவம் பெற்றன. முதல் வருடம் அவன் பல வித்யாசமான வேலைகள் செய்தான், சில சினிமாவுக்கு சம்பந்தமானவை, சில சம்பந்தம் இல்லாதவை - லைட் பாய், ஸ்டுடியோ ஒன்றின் காண்டீனில் சப்ளையர், வெளி வராத திரைப்படம் ஒன்றின் துணை இயக்குனர், ஒரு பெரிய இயக்குனர் நடத்தி வந்த விடுதி ஒன்றின் ரூம் பாய், ஒரு திரை இசைக்குழுவில் தவில் கலைஞன், துணை நடிகன். அந்த நாட்களின் எல்லா இரவுகளையும் சென்னை திரையரங்குகளில் கழித்தான். ஒரு வருடத்திற்கு பிறகு அவனுக்கு இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. எண்பது வயது தயாரிப்பாளர் அவன் கதையை படமாக்க முன் வந்தார், ஒரு நிபந்தனையுடன் - இயக்குனராக அவர் பெயரையும் சேர்க்க வேண்டும். குமரன் முதலில் தயங்கினான். பின்பு, திரைப்படத்தின் இயக்கத்தில் தலையிடாமல் இருந்தால் நிபந்தனைக்கு ஒப்புக் கொள்வதாகக் கூறினான். அவன் சிந்தனைகள் படமாக்கப்படுவதை விட வேறொன்றும் அவனுக்குப் பெரிதாகத் தெரியவில்லை. படப்பிடிப்பு துவங்கியது. ஒவ்வொரு காட்சியையும் அணு அணுவாக ரசித்து எடுத்தான். படத்தின் பெயர் "ஒரு நாள்". உலகம் தோன்றிய முதல் நாளில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏற்பட்ட உணர்வுகளையும், நிகழ்வுகளையும், காதலையும், ஆச்சரியங்களையும் உலகம் அழிவதற்கு முந்தைய நாள் இரு காதலர்கள் இடையே ஏற்படும் அனுபவங்களுடன் ஒப்பிடும் கதை. இதுவரை எவனுக்கும் தோன்றிடாத சிந்தனை என்று இறுமாப்பு கொண்டிருந்தான்.

"ஒரு நாள்" வெளிவந்தது. பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியது. விரசமான திரைப்படம் என்று விமர்சனம் செய்யப் பட்டது. சமுதாயத்தை சீர்குலைக்கும் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என்று நீதி மன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டன். பெருந் திரளாகப் பெண்கள் திரண்டு குமரன் வக்கிர புத்திக்காரன் என முத்திரை குத்தினர். தயாரிப்பாளர் தன்னை இயக்குனர் பதவியில் இருந்து விலக்கிக் கொண்டார். அந்த நாட்களில் கூட்டம் அரங்குகளில் அலைமோதின. சர்ச்சைக்குக் காரணம் காதலர்கள் இணையும் கடைசிக் காட்சி. வார்த்தைகள் இல்லாமல் வெறும் உணர்ச்சிகள் மூலம் காம உருவில், உள்ளுணர்வுகளையும், உறவின் ஆழத்தையும், விரக்தியையும் வெளிப்படுத்தும் காட்சியை, அவன் அவனது படைப்பாற்றலின் சிறந்த வெளிப்பாடாக கருதினான். அந்த காட்சியின் பின்ணணி இசையாக வந்த "அதரங்கள் இணைய ஆன்மா இணைந்தது..." என்ற பாடலையும் அவனே எழுதி இருந்தான். தயாரிப்பாளரின் வற்புறுத்தலால் அந்தக் காட்சியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. குமரனுக்கு அதில் உடன்பாடில்லை. "ஒரு நாள்" இருபது நாட்களைக் காணவில்லை. தவிர்க்க வேண்டிய படம் என்றும், இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம் என்றும் பத்திரிகைகளிலும், இணையத் தளங்களிலும் வெளியாயின. அதில் நடித்த கதாநாயகிக்கு அதுவே கடைசிப் படமாக அமைந்தது. கதாநாயகன் அதற்குப் பின் பல கோடிகள் சம்பளமாக வாங்கும் அளவிற்கு வளர்ந்தார். "ஒரு நாள்" சில உலகத் திரைப்பட விழாக்களில் இடம் பெற்றது. குமரன் அவை எதிலும் பங்கு கொள்ளவில்லை. "மனித உணர்வுகளை குமரனைவிட எவரும் இதுவரை அழகாக படமாக்கவில்லை" என்று ஒரு ஃபிரஞ்சு நாளிதழில் பிரசுரமாகியது. குமரனுக்கு அதைப் படிக்கும் வாய்ப்பு அமையவில்லை.

குமரன் அடுத்த படம் எடுப்பதற்கு தயாராக இருந்தான். "இரண்டு மணி நேரம் அமர்ந்து பார்க்க முடியாத திரைப்படம்" என்று சொன்னவர்களுக்கு சவுக்கடியாக இருக்க வேண்டும் என்று ஒரு கதையை தன் மனதில் உருவாக்கினான். கடத்தப்பட்ட காதலியை மீட்கும் ஒரு காதலனின் கதை - வெறும் சம்பவங்களைக் கொண்டு இரண்டரை மணிநேரம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்தான். ஒரு புது தயாரிப்பாளர் முன் வந்தார். "தேடல்" துவங்கியது. அவன் கையாண்ட திரைக்கதை முறை திரை உலகிற்கு புதிது என்று அவன் குழுவினர் அவனைப் பாராட்டினர். ஆறு மாதங்கள் அயராது உழைத்தான். ஒரு பாடல் காட்சிக்கு அகல் விளக்குகளிடையே ஒரு நடனம் அமைத்திருந்தான். அகல்கள் ஒவ்வொன்றையும் அவனே செய்தான். அப்பொழுதும் அகல்களை வருடுவதில் ஒருவித நிம்மதி கிடைத்தது. "தேடல்" வெளிவந்தது. காதலன் காதலியை ஒரு காட்சியிலும் தீண்டவில்லை; காதலியும் அப்படியே. தன்னை வக்கிர புத்திக்காரன் என்று சொன்னவர்களுக்கு அவன் தரும் தண்டனையாகக் கருதினான். தேடல் ஓரளவிற்கு ஓடியது. எவரும் வீட்டையோ, சேர்த்து வைத்த சொத்துக்களையோ விற்கும் அளவிற்கு வரவில்லை. விமர்சனங்கள் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை. சராசரி திரைப்படம் என்றே அதை மதிப்பிட்டிருந்தனர். ஒரு ஆங்கில பத்திரிக்கையில் மட்டும் தேடலின் திரைக்கதை அமைப்பு "The little girl from WhitesVille" என்ற படத்தின் நகல் என்று எழுதி இருந்தனர். அதன் பின் வந்த விமர்சனங்கள் அனைத்துமே அதனைக் குறிப்பிட்டு சராசரிக்கும் கீழ் என்று மதிப்பிட்டனர். "The little girl from WhitesVille" திரைப்படத்தை சிலர் தேடிப் பார்க்கத் துவங்கினர். தேடல் திரையிடப்பட்ட திரை அரங்குகளில் கூட்டம் குறைந்து கொண்டே இருந்தது. குமரனும் The little girl from WhitesVille பார்த்தான். ஆச்சர்யத்துடன் கோபமும் எழுந்தது. அந்த திரைக்கதை அமைப்பின் சொந்தக்காரன் அவனில்லை என்ற எண்ணம் அவனை மிகவும் வாட்டியது. The little girl from WhitesVille படத்தின் பிரமாண்டமும் அவனை பிரமிக்க வைத்தது.

அவன் மனதில் சில நாட்களுக்கு ஒலித்துக் கொண்டிருந்த சொல் - பிரம்மாண்டம். இம்முறை தயாரிப்பாளரைத் தேடுவது எளிதாகவே இருந்தது. சிலருக்கு தேடல் பிடித்திருந்தது. தமிழ் திரையுலக வரலாற்றிலேயே அதிக செலவில் எடுக்கப்படும் படம் என்று பத்திரிகைகளில் செய்திகள் வரத் துவங்கின. படத்திற்கு பெயர் வைத்திருந்தாலும் அதனை வெளியிடவில்லை. குமரனின் பிரமாண்டமான படம் என்று அனைவரும் குறிப்பிடுவது அவனுக்கு ஒரு போதையை ஏற்படுத்தியது. ஒன்றரை வருட உழைப்பின் பின் "அந்த வண்ணத்துப் பூச்சியின் சிறகடிப்பு" வெளிவந்தது. இரு நாட்டவருக்கிடையே நடக்கும் போரினை பிரம்மாண்டமாக எடுத்திருந்தான். குமரன் விமர்சனங்களுக்காக காத்திருந்தான். தாமதமாகவே வெளிவந்தது. யதார்த்த மீறல் என்றும் எந்தெந்த காட்சிகள் எப்படத்தில் இருந்து நகல் எடுக்கப்பட்டன என்று ஒரு பட்டியலே வெளியிட்டிருந்தனர். குமரனுக்கு புதிதாக இருந்தது. மரத்தினைப் பூமியில் இருந்து பிளந்து அடிக்கும் கதாநாயகனைக் கொண்ட படத்தில் எதற்காக யதார்த்ததை எதிர்பார்க்கிறார்கள் என்று அவனுக்குப் புரியவில்லை. அது பாரதப் போரின் நவீன ஆக்கம் என்று ஒருவர் புரிந்து கொணடாலும் தனக்கு வெற்றி என்று காத்திருந்தான். அதே சமயம் அவனது சிந்தனைகளை வேறொருவர் அவனுக்கு முன்பே யோசித்துவிட்டார் என்பது அவனது படைப்பாற்றலுக்கு இழுக்காக கருதினான். நூறு நாட்கள் ஓடினாலும் எதிர்ப்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. அந்த வருடத்தின் சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் அப்படம் இடம் பெறவில்லை.

ஆறு மாதங்களில், யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் குமரனின் அடுத்த திரைப்படம் வெளிவந்தது -"தேசிய நெடுஞ்சாலை - 47". குமரனே அதைத் தயாரித்தும் இருந்தான்.ஒரு நெடுஞ்சாலை ஓரத்தில் ஆட்டிசமினால் பாதிக்கப்பட்டோ ருக்கான பள்ளி ஒன்றிருக்கிறது.அந்த நெடுஞ்சாலையில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் மூன்று விபத்துகளை ஒரு சிறுமி காண்கிறாள். அந்த விபத்துகளில் சிக்கி இறந்தவர்கள் யார் என்றும், அவர்களது வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அறிய வேண்டும் என்று ஒரு ஆர்வம் அந்தச் சிறுமிக்கு எழ, அதற்கான விடைகளைத் தேடிச் செல்கிறாள். அந்த மூன்றுமே ஒன்றிற்கொன்று தொடர்புடைய கொலைகள் என்பதை அறிந்து எவ்வாறு கொலையாளியை கண்டுபிடிக்கிறாள் என்பதுதான் கதை. பத்திரிகைகளாலும் மக்களாலும் பெரிதும் ஆதரிக்கப்பட்டது. புதிய கதை, புதிய அணுகுமுறை என்று போற்றப்பட்டது. குமரன் தன் படைப்பாற்றலுக்கு கிடைத்த பெரிய வெற்றியாக கருதியிருந்த நேரத்தில், அவன் சற்றும் எதிர்பாராத விதத்தில் அவன் மீது ஒரு வழக்கு தொடரப்பட்டது.

"தேசிய நெடுஞ்சாலை - 47" திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்ட மனநிலை பாதிக்கப் பட்டோ ருக்கான பள்ளியில் இருப்பவர்களில் பெரும்பாலானோர் ஒரு குறிப்பிட்ட ஜாதியை சேர்ந்தவராகக் காட்டி இருக்கின்றனர். இது அந்த ஜாதியை சேர்ந்தோரை இழிவு படுத்துவது போல் உள்ளது. மேலும், இதை அறிவியல் ரீதியாக பார்த்தால், அந்த ஜாதியில் பிறக்கும் குழந்தைகள் இது போல் மன நிலை பாதிக்கப் படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம் என்பது போல் மறைமுகமாக சொல்லி உள்ளனர். இது நாளடைவில் அவர்களது சமூகத்தையே சுவடுகளின்றி அழித்துவிடுவதற்கான பயங்கர முயற்சி".

திரைப்படத்திற்கு தடை விதிக்கப் பட்டது. குமரன் முதல் முறையாக வலி என்பதை உணர்ந்தான். படைப்பாளி என்ற அவன் கர்வத்தை உடைத்தது போல் இருந்தது. பித்துப் பிடித்தவன் போல் திரிந்தான். அந்த ஆட்டிசப் பள்ளி சித்தரிக்கப்பட்டதல்ல, உண்மையென்று சொல்லக் கூட அவன் சுயநினைவில் இல்லை. கடன் கொடுத்தவர்கள் மிரட்டினார்கள், அந்த ஜாதிக்காரர்கள் மிரட்டினார்கள்.

என்ன செய்வது என்று திகைத்துக் கொண்டிருந்த பொழுது, அகல்கள் அவன் நினைவுக்கு வந்தன. அன்று மாலையே அவன் கிராமத்திற்குக் கிளம்பினான்.அவன் படைக்கும் அகல்கள் எதற்காகப் படைக்கப் படுகின்றனவோ அதற்காக மட்டும் பார்க்கப்படும், வருணிக்கப்படும், ரசிக்கப்படும் என்ற எண்ணம் ஒரு பெரிய ஆறுதலை அளித்தது. அவனது வீட்டை அடைந்தவுடனே அவன் படைக்கும் தொழிலை துவங்கிவிட்டான். நூற்றுக்கணக்கில் அகல்கள் செய்து அடுக்கினான். விரல்கள் சோர்வடைந்த பொழுது மெதுவாக அகல்களை வருடினான், இம்முறை கிடைத்த நிம்மதிக்கு அளவே இல்லை."நான் படைப்பாளி" என்று ஒருமுறை சொல்லிக் கொண்டான்.

*

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

என் சாளரத்தின் வெளியில் .. நீ

-ஆ. மணவழகன் : திண்ணை-
----

நான் உன்னைப் பார்க்கிறேன்..
நீ அழகாக இருக்கிறாய்!
மீண்டும் உன்னைப் பார்க்கிறேன்
நீ அழகாகவே இருக்கிறாய்!

மேகம் மூடிய நீ - வாழ்வின்
சோகம் சூடிய சுவடு என்றான்
ஒருவன்!

நீ தேய்வது ..
நிச்சயித்து நிரந்தரப்படுத்துவது - இப்புவியில்
ஏதுமில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ வளர்வது..
வந்த துன்பம் வாழ்வில் என்றும்
நிலைப்பதில்லை என்பதால் என்றான்
ஒருவன்!

நீ தேய்வதும் தேய்ந்தும் வளர்வதும்
இன்ப துன்பத்தின் சமநிலை என்றான்
வாழ்ந்து பார்த்த
ஒருவன்!

தன்னுள் களங்கம் வைத்து - அது
உன்னுள்ளும் உள்ளதென்றான்..
வாழத்தெரிந்த
ஒருவன்!

இல்லாமல் போவது
உனக்கும் இருக்கிறதாம்
தேற்றிக்கொண்டான் - தன் தேவையுணர்ந்த
ஒருவன்!

உன்னை,
விட்டெறிந்த இட்லி என்றான்...
வெட்டிப் போட்ட நகம் என்றான்..
சுட்டெறிந்த அப்பளம் என்றான்..
வானிற்குத் தோன்றிய கொப்புளம் என்றான்..
தோழியர் சூழ வரும் மங்கை என்றான்..
தோழர் சூழ வரும் மன்னன் என்றான்..
---- ---- ---- என்றான்..
---- ---- ---- என்றான்..

எப்போதும் போல என் சாளரத்தின் வெளியில் நீ!
எல்லோரும் உன்னைப் பார்க்க - நீ
மட்டும் என்னைப் பார்க்கிறாய்!

நான் நிலவைப் பார்க்கிறேன் - அது
அழகாக இருக்கிறது - அது
அதுவாக இருக்கிறது!

***
ஆ. மணவழகன்
manavazhahan_arumugam@yahoo.com

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

ஒரு நாள் பொழுது

-பொன் சுந்தரராசு (சிங்கப்பூர்) மூலம்:திசைகள்-

1992ஆம் ஆண்டில் ஒரு பிற்பகல் நேரம்.

நியூட்டன் அஞ்சலகச் சேமிப்பு வங்கிக்குள் காலடி வைத்தபோது அவனுக்குத் ஑திக்ஒகென்றது. U வடிவத்தில் வரிசை நுழைவாசல் வரை நீண்டிருந்தது. பணத்தைச் சேமிப்புக் கணக்கில் செலுத்திவிட்டுப் பக்கத்தில் ஑தேக்காஒவிலேயே பகலுணவையும் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே திரும்பி விடலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

஑எல்லாம் கோவிந்தாவாகிவிடும் போல இருக்கே!.ஒ என்று அவன் உள்மனம் அழுதது.

஑இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே. எத்தனை பேரு வரிசையில நிக்கிறாங்க ?..ஒ
தலைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான்.

஑ஒன்னு, ரெண்டு. மூனு....25. என்னையும் சேர்த்து 26. ஒரு ஆளுக்கு அஞ்சு நிமிசம்னாலும் 75 நிசமாகுமே! அஞ்சு நிசம்கிறது அதிகம்தான். ஑கவுண்டர்லஒ என்ன கதையாப் பேசப் போறாங்க! சீக்கிரம் முடிஞ்சிடும். சாப்பிடத்தான் நேரம் இருக்காது போல இருக்கு. பரவாயில்லே. ஒரு நாளைக்குச் சாப்பிடலேன்னா செத்துப் போயிடுவேனா?..ஒ அவன் தன்னைச் சமாதானப்படுத்தும் போதே வயிறு உறுமியது.

வரிசையில் நிறைய சீனப்பெண்கள், ஆண்கள், சில மலாய்க்காரர்கள், ஒன்றிரண்டு தமிழர்கள். அவனுக்கு முன்னால் ஒரு வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் நின்று கொண்டிருந்தார்கள். ஆளுக்கொரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அவர்கள் அலங்கோலமாகக்஢ காட்சியளித்தார்கள்.

஑இவுங்க அழகா இருந்தா என்ன? அவலட்சணமா இருந்தா என்ன? யாராவது குறை சொல்லுவாங்களா! வௌ஢ளைக்காரனாக்கும்!.. இந்தக் கோலத்திலே இந்தியர்கள் மட்டும் நின்னா?..ஒ தொடர்ந்து அவன் அதைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை.

நிறவேறுபாடுகளை வைத்து மனிதரை எடைபோடும் உலக மாந்தரை மனத்திற்குள் கெட்ட வார்த்தைகளால்஢ திட்டித் தீர்த்தான். ஑இந்தியன்னா இளக்காரமாப் போச்சு!ஒ அவன் உதடுகள் துடித்தன.

஑பரவாயில்லே வரிசையிலே கூட நான்கு இன மக்களும் நிறைந்து பல்லின சமத்துவத்தைப் பறைசாற்றுறாங்க!..ஒ நக்கலாக அவன் மனம் நகைத்துக் கொண்டது.

அவனை ஒட்டி நீண்ட வரிசையில் சொல்லி வைத்தாற்போல மூன்று சீனப்பெண்கள் குட்டை சிலுவார், கையில்லாத டீ சட்டை சகிதம் பேசிக் கொண்டும் உலகத்தில் மிகச் சிறந்த நகைச்சுவையை ரசிப்பது போலச் சிரித்துக் குலுங்கிக் கொண்டும் அங்கே கால் கடுக்க நின்றவர்களின் மனவருத்தத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தனர்.

஑இந்தச் சீனக் குட்டிங்க பரவாயில்லே. குண்டியை மட்டும் மறைக்கிறா மாதிரி ஒரு சிலுவார், அரைகொறை டீ சட்டை..ஒ என்று அவன் கொச்சையாக எண்ணத் தொடங்கியபோது முன் வரிசையில் ஑டைட் ஸ்கேர்ட்டும் கோட்டும்ஒ மிக நேர்த்தியாக அணிந்து ஑கமகமஒவென அவ்விடத்திற்கு நறுமணத்தை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த சில சீனப் பெண்களும் அழகிய வங்கி அதிகாரிகளும் அவன் கண்ணில் பட்டனர்.

அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

஑சீனப்பெண்களின் வனப்பும் வாளிப்பும் திறமையும் தொழில் ஈடுபாடும் சுட்டுப் போட்டாலும் மத்தவங்களுக்கு வராது. வில்லாதி வில்லிங்கப்பா!..ஒ

அவன் மனம் பாராட்டுப் பத்திரம் வழங்கியது.

கூட்டம் அவன் எதிர்பார்த்ததைவிட மெதுவாக நகர்ந்தது. மணி ஒன்றரையை நெருங்கியது. டிசுவர்க் கடிகாரத்திற்குக் கீழே ஒரு பல்லி வாலை மெதுவாக ஆட்டிக் கொண்டு எதிரே பறந்து கொண்டிருந்த ஒரு சிறு பூச்சியையே குறிபார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

ஓஎன்னங்க.. சேமிப்பில போதுமான பணம் இருக்கா? இல்லேன்னா டோ ப் ஆப் பண்ணிடுங்க. இன்னிக்கு ஆறாம் தேதி. பியூபி பில், சொத்து வரி, ரேடியோ - தொலைக்காட்சி லைசன்ஸ் கட்டணம் எல்லாம் வெட்டிக்கிற நாளு. ஞாபகம் இருக்குல்லே..ஔ அவன் மனைவி சங்கீதா சங்கீதம் பாடினாள்.

சுடச்சுட காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தவன் கடுப்பாகிப் போனான்.

ஓநிம்மதியா காபி குடிக்க விடுறியா?. வரி, வரி எல்லாத்துக்கும் வரி. கார் வாங்கினா வரி, அதை ஒட்டுனா வரி, வீடு வாங்கினா வரி.. அதில் வசித்தாலும் வரி வாடகைக்கு விட்டாலும் வரி, செத்தாலும் வரிஸஔ என்று கடுப்போடு சொல்லிக் கொண்டு வந்தபோது சடக்கென அவனுக்குச் சந்தேகம் துளிர்த்தது.

உடலை எரிக்கிறதுக்கும் புதைக்கிறதுக்கும் ஑ஜி.எஸ்.டிஒ வசூலிக்கிறாங்களா இல்லையான்னு தெரியலையே!..

ஓஎதுத்துத்தான் வரி இல்லே!.ஔ குரலைத் தாழ்த்தி விடாமல் முணுமுணுத்தான்.

ஓம்.. ம்.. பணம் சம்பாதிக்கிறோமில்லே. வரி கட்ட வேண்டாமா? எல்லாரும்தான் வரி கட்டுறாங்க.ஔ. சங்கீதா தனக்குப் பாதியும் கணவனுக்கு மீதியுமாகப் பேசினாள்.

ஓஏய்! உன் வாயை மூடு. நீ என்ன காலையிலேயே கலாட்டா பண்றே?..ஔ

ஓஅப்படி இல்லே.. உலக நடப்பைத்தான் சொன்னேன்..ஔ என்று சொல்ல நினைத்தாள். அந்த நேரத்தில் ஑ப்பீ.. ப்பீ..ஒ என்று பள்ளிப் பேருந்து சத்தம் கேட்கவே தயாராக நின்ற தன் பத்து வயது மகளைப் பள்ளிக்கனுப்ப வௌதயே சென்றாள்.
வீட்டு நிர்வாகத்தை ஆண்பிள்ளைதான் கவனிக்க வேண்டுமென்பதில் அவன் எப்போதுமே விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

அவன் ஑கவுண்டஒரை நெருங்கி வந்துவிட்டான். அவனுக்கு முன்னால் வௌ஢ளைக்கார தம்பதியர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒரு பெண் வங்கி அதிகாரி CLOSE என்ற அறிவிப்பை வைத்துவிட்டு எழுந்து ஒயிலாகச் சென்றாள். மணி இரண்டாக இன்னும் பதினைந்து நிமிடமே இருந்தது.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அலுவலகத்திற்குத் தாமதமாகப் போவதை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை. அது கொடுமையான அனுபவம்! பலரைத் தாண்டி தன்னிடத்திற்குச் செல்வதற்குள் அவமானமே கொன்றுவிடும். ஆயிற்று. அவனுக்கு முன்னால் நின்ற இருவரும் போனார்கள்.

஑அப்பாடா!.ஒ என்று பெருமூச்சு விட்டான். ஐந்து நிமிடம்.. ஏழு நிமிடம் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்ன ஆயிற்று?

வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் அசைவதாகத் தெரியவில்லை. அவர்கள் வௌதநாட்டு பண நோட்டுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஏதோ பண்ணிப் பண்ணிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இடப்புறக் கவுண்டரில் ஒருவரை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஒரு சீன இளம்பெண் அதிகாரி. இடையிடையே பேச்சு, சிரிப்பு! இவனுக்கு எரிந்தது.

஑பெரிய தொகை போட்டுக் கணக்கு திறக்கிறான் போல இருக்கு! இல்லேன்னா, அவ ஏன் இந்த இளிப்பு இளிக்கிறா?.ஒ அவனுக்குக் கசந்தது.

வலப்புறக் கவுண்டரில் நீண்ட நேரமாக ஒரு மலாய்க்காரி தன் இரண்டு பிள்ளைகளையும் வங்கியில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த ஆண் மலாய் அதிகாரியோடு கதையடித்துக் கொண்டிருந்ததாள்.

஑மலாய்க்காரிங்களுக்கு ஒரு மலாய்க்காரன் கண்ணில படக்கூடாது!.ஒ அவன் பொறுமினான்.

இவனுக்குப் பின்னாலும் வரிசை கொடுக்குப் பிடித்துக் கொண்டுதானிருந்தது. இவன் மகா வெறுப்புடன் தனக்குப் பின்னால் நிற்வரிடம்-

ஓஎன்ன நடக்கிறது? ஏன் தாமதம்?ஔ என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்தச் சீனர், மலாய்ப் பெண்ணைச் சுட்டிக் காட்டி ஓஅவர் புதுக் கணக்குத் திறக்கிறார்.ஔ என்று ரகசியமாகக் கூறினார்.

அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மணி இரண்டாக இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஒரு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க நின்றும் இன்னும் தன் முறை வரவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் அவன் கட்டுப்பாட்டை மீறி வார்த்தைகள் ஆங்கிலத்தில் வெடித்துச் சிதறின.

ஓஹலோ! நீங்க என்ன நெனச்சிகிட்டு இருக்கிறீங்க?. ஒரு மணி நேரமா வரிசையில நிக்கிறேன். சிரிச்சி பேசிக்கிட்டு ஜாலியா வேலை பார்க்கிறீங்க. நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லே தெரியுமா?..ஔ

ஓநாங்க வேலைதான் பார்க்கிறோம். ரெண்டு பேரு புதுசா ஑அக்கவுண்டுஒ திறக்கிறாங்க. கொஞ்சம் பொறுமைங்க ப்பிளீஸ்!.ஒ ஒரு பெண் அதிகாரி அழகாக ஆங்கிலம் பேசினாள்.

ஆனால், அதை ரசிக்கும் மனநிலையிலதான்஢ அவன் இல்லை.

ஓயூ சி.. புது கணக்குத் திறக்கிறதுக்கு ஒரு தனிக் கவுண்டர் இருக்கணும். இந்த மாதிரி எவ்வளவு நேரம் நிக்கிறது? நான் ஆபிசுக்குப் போகணும்மா. இது முட்டாள்தனமா இல்லே!.ஔ

ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது. கண்டபடி சத்தம் போட ஆரம்பித்தான்.

உள்ளே இருந்து ஒரு காவலர் அவசரமாக வௌதயே வந்தார்.

ஓமிஸ்டர் கலாட்டா பண்ணாதீங்க. இங்கே எல்லாரையும்தான் கவனிக்கணும். பகல் உணவு நேரத்தில கூட்டமாத்தான் இருக்கும். நெருக்கடியான நேரத்தில வந்தது உங்க தப்பு..ஔ

ஓஎன்னய்யா என் தப்பு? இப்ப வராம, வேலை நேரத்திலேயா வரமுடியும்? எவ்வளவு லேட்டாயிடுத்து.ஔ சுவர்க்கடிகாரத்தைக் காட்டிச் சத்தம் போட்டான்.

கடிகாரத்திற்குக் கீழே வட்டமிட்டுக் கொண்டிருந்த பூச்சியைக் காணவில்லை. பல்லியின் வயிறு புடைத்திருந்தது.

ஓஅது உங்க புராப்ளம். இண்டியன்ஸ் எப்போதும் இப்படித்தான். நேற்றுகூட ஒருத்தன் வேறு ஒரு காரணத்துக்காகச் சத்தம் போட்டான் தெரியுமா?ஔ

ஓஏய்! நீ இண்டியன்ஸ்சைப் பத்திப் பேசாதே. தட்டிக் கேட்க ரோசம் வேணும்..ஔ

ஓகாத்திருக்கப் பிடிக்கலேன்னா நீங்க போகலாம்..ஔ காவலர் குரலில் கடுமை தொனித்தது.

அவனை அவமானம் பிடுங்கித் தின்றது.

"போறேன்.. இங்கே மனுசனா நிப்பான். பிளடி பூல்ஸ்..ஔ என்று சத்தமிட்டவாறே வௌதயேறினான்.

஑எவனாவது எனக்கு ஆதரவா பேசினானா? மடப்பயல்கள். சொரணையே இல்லாத கூட்டம்..ஒ என்று மற்றவர்களையும் விட்டு வைக்காமல் மனத்தில் திட்டுத் தீர்த்தபடியே தன் காரில் ஏறிக் கதவை ஓங்கி அறைந்தான்.

புக்கிட் தீமா சாலையில் திரும்பியபோது அவனுக்குத் தலை சுற்றியது.

டிராபிக் ஜாம்!..

சாலை புதுப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. வரிசை வரிசையாகக் கார்கள்! சாலை முழுவதும் இடைவௌத இல்லாமல் எங்கும் கார்கள்.

ஓமுன்பெல்லாம் இரவிலதான் சாலை புதுப்பிப்஢புப் பணி செய்வாங்க. இப்ப பகல்லேயே செய்ய ஆரம்பிச்சாட்டாங்க. அநியாயம். இதை எல்லாம் யாரு கேட்கிறது? மடப் ... மவனுங்க!.ஔ அசிங்கமான வார்த்தைகள் தயக்கமின்றி அவன் வாயிலிருந்து கொட்டின.

கதவைத் திறந்து தலையை நீட்டி வௌதயே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் பகல் நேரச் சூரியனின் பிரதிபலிப்புகள். கண்கள் கூசின.

அந்த இடைவௌத நேரத்தில் ஒருவன் இவனுக்கு முன்னால் தன் காரைச் செருகினான். ஏமாற்றம் தாங்காமல் இவன் ஹாரணை அழுத்தி அமுக்கினான்.

காது ஜவ்வு அழுதது.

முந்திச் சென்றவன் கதவு வழியாகக் கையை உயர்த்திச் சமாதானக் கொடி காட்டினான்.

஑இதை மட்டும் செஞ்சுடுவாங்க. செங்கப் பயல்கள்!..ஒ

அவன் அலுவலகத்திற்குள் காலடி வைக்கும்போது பிற்பகல் மணி மூன்று. வெட்கத்தாலும் ஏமாற்றத்தாலும் அவன் முகம் தொங்கிப் போய் விட்டது.

அவன் தன் நாற்காலியில் சரிந்து ஒரு நிமிடம்கூட ஆகவில்லை. தொலைபேசி கதறியது.

ஓஹலோ!..ஔ

ஓஎன் ஆபிசுக்குக் கொஞ்ச நேரம் வர்றீங்களா?..ஔ மானேஜரின் குரல் கரகரத்தது.

அடுத்த நிமிடம் அவர் முன் அவன் அமர்ந்திருந்தான்.

ஓம்.. பிரபு! ஒரு ஑புரோஜக்ட்ஒ தயாரிக்கச் சொல்லி இருந்தேனே. மூனு மணிக்கு அனுப்பணும்..ஔ

ஓஇன்னும் அரைமணி நேரத்தில தயார் பண்ணிடுறேன்..ஔ

ஓஇப்ப மணி மூனு..ஔ

மௌனம்!..

ஓநீங்க போங்க..ஔ மானேஜர் மேசைமேல் இருந்த ஃபைலைப் புரட்டத் தொடங்கினார்.

பிரபு அடுத்த அரைமணி நேரம் கணினியோடு போராடினான். அவன் வேகத்துக்குக் கணினி ஒத்துழைக்கவில்லை.

பல முறை ஹேங்!

ஓஷிட்..ஔ ஒரு முறை கணினித் திரையைக் குத்த நெருங்கிவிட்டான்.

அவன் எவ்வளவோ போராடியும் நான்கு மணிக்குத்தான் வேலையை முழுமையாக முடிக்க முடிந்தது. அவசரம் அவசரமாகத் தாள்களை வாரி எடுத்து மானேஜர் மேசைமேல் கொண்டு போய் வைத்தான்.

ஓபுரோஜக்டை நான் மூனு மணிக்கே அனுப்பிட்டேன்..ஔ

ஓஎப்படி?..ஔ என்ற வினாக்குறியோடு புருவத்தை நெரித்தபடி அவரை நோக்கினான்.

ஓபுனிதாவையும் செய்யச் சொல்லி இருந்தேன்..ஔ

ஓஎன் மேல நம்பிக்கை இல்லையா? அதை ஏன் முன்னமே எங்கிட்ட சொல்லலே..ஔ என்று சத்தம் போட்டுக் கேட்க நினைத்தான்.

வாயைத் திறக்க முடியவில்லை. உதடுகள் காய்ந்து ஒட்டிக் கொண்டன.

அவன் முகம் கருத்துவிட்டது. கை, கால் மூட்டுகளெல்லாம் கழன்று விட்டதுபோல் உடல் தளர்ந்து தொங்கி விட்டது. வாயடைத்துப் போய் தன் இடத்தில் போய் ஒடுங்கினான்.

஑என் இப்படி இருக்கிறாங்க! இந்தப் பயல்களுக்கு இதயமே கிடையாதா? பதவி வந்தா அதைக் கழற்றிக் ஑கபட்ஒடிலே வச்சுடுவாங்களா? இவன்களுக்குப் பதவிதான் பெரிசு! நாற்காலிப் பைத்தியங்கள்!! மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத மரங்கள்..! ஒ

நெட்டை மரங்களென பாரதி வசை பாடியது நினைவுக்கு வந்து அவனது ஆத்திரத்தைக் கிளறிவிட்டது.

஑புனிதா அடிக்கொரு தரம் கைக்குள்ளே கண்ணாடியை வச்சிகிட்டு உதட்டுக்குச் சாயம் அடிப்பா. மானேஜர்கிட்ட போயி இளிக்கணும்லே!.ஒ

஑மாலினி, வேலை செய்யிற மாதிரி போக்குக் காட்டிகிட்டுக் காதலனுக்கு ஈமெயில் அனுப்பிகிட்டிருப்பா!.ஒ

஑ராபர்ட் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைச் செக் பண்றதிலேயே பொழுதைப் போக்குவான்!.ஒ

஑சேகர், ஒரு பொம்பள பொறுக்கி! அவனுக்கு எப்படித்தான் ஒரு குணவதி மனைவியா கெடைச்சாளோ!.ஒ

஑இந்த ஆபிசிலேயே நான் ஒருத்தன்தான் யோக்கியன். எவனுக்குத் தெரியுது!.ஒ

பிரபு தன் காரில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தன. சில கார் ஓட்டுநர்கள் ஑ஹாரனைஒ அழுக்கி வழிவிடச் சமிக்கை செய்தனர்.

஑ஏன் இப்படி அவசரப்படுறானுங்க.! ஆக்ஜிடண்ட் ஆகிச் சாகவா?..ஒ

போலிஸ் அகாடமிச் சந்திப்பில் காரை நிறுத்திப் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்தான். இடது பக்கம் திரும்பியவனுக்குத் ஑திக்஢ஒ கென்றது. அங்கு வேலியோரத்தில் பல கிளைகள் விரித்துத் தழைத்திருந்த ஆலமரத்தைக் காணவில்லை. நீண்ட காலத்து மரம். இவன் பேருந்தில் பள்ளிக்குப் போனதிலிருந்து கவனித்து வருகிறான்.

சாலை விரிவாக்கப் பணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஒரு மாதம் பிரபு இந்த வழியில் வராமல் இருந்திருக்கலாம்.

஑ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆயிரம் கைகளுடைய ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! அடடா, மாலையில் இந்தப் பக்கம் வரும்போது மரம் நிறையப் பறவைகள் அமர்ந்து ஑கீச் கீச்ஒ என்று கூச்சலிடுவது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு ரம்மியமாக இருக்கும். அந்த அற்புத மரத்தை அழித்துப் பறவைகளை அநாதைகளாக்கி விட்டார்களே!.

அவன் மனம் கனத்தது.

தன் அடுக்குமாடிக் கட்டடத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு மின்தூக்கியருகே சென்றான். அங்கே நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தாணர்கள். கதவு திறந்ததும் எல்லாரும் உள்ளே நுழைந்தார்கள் இவன் உட்பட. இவன் செல்ல வேண்டிய 10வது மாடி பட்டனை யாரோ அழுத்தி இருந்தார்கள். அவன் அங்கு நின்றவர்களை நோட்டமிட்டான். இரண்டு பெண்கள்கூட இருந்தனர். எல்லாரும் மாடிகளைக் காட்டும் சிவப்புநிற அறிவிப்பு விளக்குகளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

஑இவனுங்க மனுஷங்க தானா? இல்ல ரோபார்ட்டா? ஏன் மேல் நோக்கியே பார்த்துக்கிட்டு நிக்கிறானுங்க! இதுக்கு முன்னால அதைப் பார்த்ததே இல்லையா? வாயைத் திறந்து பேசுங்கடா! வாய் கொட்டிக்கிறத்துக்கு மட்டும்தானா?ஒ அவன் அங்கு நின்றவர்களைக் கரித்துக் கொண்டிருந்தான்.

பத்தாவது மாடி! பிரபு மின்தூக்கியிலிருந்து வௌதயேறினான். வீட்டையடைந்து தன் அறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு சன்னல்களைத் திறந்து விட்டான். வெகு தாராளமாகக் காற்று உள்ளே வந்தது. வௌதயே நோக்கினான்.

வடக்குச் சிங்கப்பூரின் பகுதிகள் கண் சிமிட்டின. எங்கும் ஔத ஜாலம். இரவு மணி எட்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டடங்கள்.

ஓதண்ணி சாப்பிடுறீங்களா?. இல்லே சாப்பாடேஸஔ கேட்டுக் கொண்டே சங்கீதா அறைக்குள் நுழைந்தாள்.

ஓதண்ணியா?.. நான் எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். காபி போடவா, டீ போடவான்னு கேளு. நான் தண்ணி போடுறதில்லே!..ஔ இடைமறித்துப் பிரபுவின் குரல் அலறியது.

சங்கீதா சுதாகரித்துக் கொண்டாள். அவள்஢ பதில் பேசவில்லை.

ஓசங்கீதா, இங்கே பார்த்தியா?.ஔ

ஓஎங்கே?.ஔ

ஓவௌதயேதான். என்ன தெரியுது?..ஔ

ஓநிறைய வௌ஢ளை வௌ஢ளையா அடுக்கு மாடிக் கட்டடங்கதான் தெரியுது. ராத்திரியா இருக்கிறதுனால நெறைய விளக்கு எரியுது.ஔ

ஓஇந்தக் கட்டங்களை எல்லாம் பார்த்தா உனக்கு என்ன தோணுது?.ஔ

ஓநம்ப அரசாங்கத்தைப் பாராட்டத் தோணுது..ஔ

ஓநல்லா பாரு சங்கீதா. நீ சொன்ன மாதிரி நமக்கு முன்னால வௌ஢ளை வௌ஢ளையா தெரியுதே, அது எல்லாம் பூமியிலே இருந்து முளைச்ச கல்லறைகளா உனக்குத் தெரியலை. கல்லறைகள்ல பிணத்தை வச்சு மத்தவங்க மூடுறாங்க. கட்டடத்துக்குள்ளே நம்மை வச்சு நாமே மூடிக்கிறோம். வேடிக்கையா இல்லே! முன்னால பாரு, ஒரு வீடாவது திறந்து இருக்கா. சங்க காலத்திலே எந்த வீட்டுக்கும் கதவே இருந்ததில்லை. ஏன் தெரியுமா?. ஔ

ஓநீங்களே சொல்லுங்க..ஔ

ஓஅப்ப எல்லாம் உதவி கேட்டு யாரும் எந்த நேரத்திலேயும் எங்கேயும் வரலாமாம். இப்ப ஹா..ஹா சுயநலவாதிகள்! தன் தவறுகளை மூடி மறைக்கிறதிலேயே முனைப்புக் காட்டுற கபட வேடதாரிங்க..அவனுங்க ஔதஞ்சுகிறதுக்கு இந்த ஏற்பாடு! எல்லாரும் போலிகள்! எல்லாரும் நடிகர்கள்!!.ஔ

ஓ எல்லாத்தையும் ஏன் தப்பா புரிஞ்சிக்கிறீங்க?.ஔ

ஓநானா? தப்பைத் தப்புன்னு சொல்றேன். அது தப்பா? காரியம் ஆகணும்கிறதுக்காக என்னால ஊமையா இருக்க முடியாது. வேண்டியவனுங்஢கிறதுக்காக என்னால ஒரு கண்ணை முடிக்க முடியாது. ஏமாத்துறாங்கண்ணு தெரிஞ்சும் என்னால ஊமையா இருக்க முடியாது. நான் கொள்ளைக்காரனில்லே, தீவிரவாதி இல்லே, துரோகி இல்லை. வாழ்க்கையைப் பேரம் பேசும் வியாபாரி இல்லே. அநியாயம் நடக்கும்போது தலையைக் கவிழ்த்துக் கொள்ள நான் நோயாளி இல்லே. மனுசன். மனுசனா வாழ விரும்புற மனுசன்..ஔ

பிரபு உணர்ச்சி வயப்பட்டுக் கத்தினான். அவன் போட்ட சத்தம் பல வீடுகளுக்குக் கேட்டிருக்கலாம். சங்கீதா ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் அறையிலிருந்து வௌதயேறினாள். அப்போதாவது அவன் கூச்சல் குறையலாம் என்று அவள் எதிர்பார்த்தாள்.

பிரபு சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியருகே சென்றான். அதில் அவனது முகம் பிரதிபலிக்கவில்லை. அடுக்குமாடி வீடுகளும் மனிதர்களும் ஏனைய காட்டிகளுமே தோன்றின.

விடுவிடுவென ஹாலைத் தாண்டிக் கொண்டிருந்த சங்கீதாவிடம் ஖

ஓஅப்பா ஏன்மா உங்கிட்ட சண்டை போடுறாங்க?..ஔ

கூடத்தில் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த வளர்மதி கேட்டாள். சற்று முன்னர் தன் தந்தை தன்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தன்னறைக்குள் போய்விட்டாரே என்ற ஏகப்பட்ட வருத்தத்தில் குழந்தை இருந்தாள்.

ஓஎன்கிட்டே இல்லேம்மா..ஔ

ஓபின்னே?.ஔ

ஓஉலகத்துகூட சண்டை போடுறாரும்மா!..ஔ

ஓபுரியலேம்மா..ஔ

ஓஉனக்கு இப்ப புரியாதும்மா!..ஔ

சங்கீதா விடைகாண முடியாத பல கேள்விகளோடு சமையலறைக்குள் புகுந்தாள்.

஑கிரீங்ங்ங்ஸஒ அலாரம் அழுதது.

அதிகாலை மணி ஐந்து.

பிரபு துயில் எழுந்தான். மனைவியை எழுப்பிவிட்டான்.

மகளை எழுப்பி உச்சி முகர்ந்து காலை வணக்கம் கூறினான். வளர்மதியின் தலையணையருகே ஓர் இயந்திர மனிதப் பொம்மை கிடந்தது. ஆனால், அது சிறியதாக இருந்தது.

வீட்டில் வழக்கம் போல எல்லாம் சரியாக நடைபெற்றன. பிரபு வீட்டைவிட்டுப் புறப்பட்டுக் காரில் நுழைந்து சிங்கப்பூர் மக்கள் நெரிசலில் கலந்தான்.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

எத்தனை முறை காதல் கொண்டேன்?

-நிர்மலா -
கவிதை வரிகளால்
காதல் விதைத்தவனிடம்

இறகாய் குரலால்
தீண்டிச் சென்றவனிடம்

தனித்த வேளையில்
துணையாய் நின்றவனிடம்

தவித்த பொழுதில்
தூணாய் சுமந்தவனிடம்

சிறகை விரித்துப்
பறக்கச் செய்தவனிடம்

சிந்தனைச் சிதறலில்
சிலிர்க்க வைத்தவனிடம்

அழுத கணங்களில்
அமைதி காத்தவனிடம்

அத்தனையும் மெல்ல
மறந்திட செய்தவனிடம்....

துளிகளாய் நனைத்ததெல்லாம்
தேடலைத்தான் தூண்டியது!

மொத்தமாய் நனைய வேண்டும்
அருவியாய் ஒருவன் வேண்டும்.

இந்தக் கவிதை 'புத்தகப் புழு'வில் பாரா வைத்த காதல் கவிதைப் போட்டியில் எழுதியது. செல்வராகவன் 'காதல் கொண்டேன்' படத் தலைப்பை இந்த கவிதையில் இன்ஸ்பயர் ஆகித்தான் வைத்திருப்பாரோ என்று எனக்கு ஒரு சந்தேகம்! (நெனைப்புத்தான்).

ஆனா இந்தக் கவிதைக்கு இன்ஸ்பிரேஷன் யார் தெரியுமா?

'... ஓட்டைச் செம்புல குளிக்கிற மாதிரி இவரோட குடித்தனம் பண்றேன். தடேர்னு விழற அருவி மாதிரி நீ கிடைச்சப்போ அருவியை விட்டுட்டு வெளியே வர முடியலை....'

யார் சொன்னது? கண்டு புடிங்க பாக்கலாம். க்ளு தேவையிருக்குமா என்ன?

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

-நிர்மலா -
அவர் எனக்கு அதிகம் பழக்கம் இல்லாத, நெருங்கின உறவினர். அந்த முறை ஊருக்குப் போயிருந்த போது உடல்நலம் சரியில்லாத அவரைப் பார்க்கப் போயிருந்தோம். ஆஸ்பத்திரி அறையைத் தேடிப் போன போது கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அசப்பில் 'மணல்கயிறு' கிட்டுமணியின் மாமனாரைப் போல இருப்பார். நல்ல உயரம். வயசு காலத்தில் நல்ல சிவப்பாயிருந்திருக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சோகையாயிருந்தார். அவரை இதற்கு முன் பார்த்த சந்தர்ப்பங்களில் 'வணக்கம், சௌக்கியமா இருக்கீங்களா?' விற்கு மேல் போனதில்லை. அப்போதும் அதையே அசட்டுத்தனமாகக் கேட்டு, அதற்கு அவர் உடம்பிற்கு என்ன என்று விபரமாகச் சொல்லிக் கொண்டிருந்தார். மெல்லிய குரலில் சினேகமாக சொல்லிக் கொண்டு போக, கேட்க ஆசையாயிருந்தது.

அப்போது உள்ளே நுழைந்த அவர் மகள் 'இவளுக்கு புஸ்தகம் வாசிக்கறதுல ரொம்ப ஆர்வம்' என்று அவரிடம் சொல்லி விட்டு, என் பக்கம் திரும்பி 'அய்யா கூட நிறைய வாசிச்சிருக்கார்' என்று சொன்ன பிறகு பேச்சில் ஸ்ருதி சேர ஆரம்பித்தது.

நான், கணவர், அவர், அம்மா (அவர் மனைவி), அவர் மகள் எல்லோரும் சேர, பொன்னியின் செல்வனில் ஆரம்பித்தது. பொன்னியின் செல்வனில் இருந்து அலையோசைக்குப் போன போது கணவரும், அம்மாவும் கழண்டிருந்தனர். அலையோசை நாயகி கடைசியில் ஏரியில் படகு சவாரி போகும் போது அவளுக்குக் கேட்பதாக வரும் அலை சத்தத்தைக் குறிப்பிட்டு 'வாசிக்கும் போது காதுல அலை சத்தம் கேட்டுதுப்பா' என்று அவர் சொன்ன போது 'அட! இப்படி வாசிப்பவரா நீங்க!' என்றிருந்தது.

கல்கியிலிருந்து கொஞ்சம் அங்கே இங்கே என்று அலைந்து பாலகுமாரனுக்கு வரும் போது அவர் மகளும் ஜகா வாங்கி விட்டார். மகளுக்கு அந்தக் கால பாலகுமாரன் பிடிக்காது. சமீபத்திய பாலகுமாரன் எழுத்துகளோடு எனக்கு நெருக்கமில்லை. பெரியவருக்கும் பழைய பாலகுமாரன் எழுத்துகள் மேல் ஒரு மோகம் இருந்தது. நான் நினைவு கூர்ந்ததும் அவர் நினைவு கூர்ந்ததுமாய்... ஒரு நீண்ட சுற்றுக்குப் பிறகு தி.ஜா. முதல் முதலாய் எனக்கு தி.ஜா அறிமுகமானதை நான் சொல்ல, மலர்மஞ்சம், மோக முள், அம்மா வந்தாள்... போதும் என்று நர்ஸ் விரட்டாமல் இருந்திருந்தால் இன்னும் ஓடியிருக்கும்.

இரண்டு மணி நேரத்துக்கு மேல் பேசியிருக்கிறோம். இன்னும் பேச வேண்டியது பாக்கியிருப்பது போல இருந்தது. பேசிய வரையில் திருப்தியாகவும் இருந்தது. விடை பெறும் நேரம், அவரைச் சந்தித்ததில் எவ்வளவு சந்தோஷம் என்பதை உணர்த்த ஸ்வாதீனமாகத் தோண்றியது அழுத்தமான ஒரு கை குலுக்கல் தான். நான் கை நீட்ட, அவர் கண்களில் ஒரு தயக்கம் காட்டி, வணக்கம் சொல்லி அனுப்பிய போது... ஆச்சர்யமாயிருந்தது.

அவரை விட்டு விடலாம். வயதானவர். அந்தக் கால மனிதர். ஆனால் அந்த சந்திப்பு சில கேள்விகளைத் தந்தது. ஒரு ஆண் இன்னொரு ஆணை சந்திக்கும் முதல் சந்திப்பே பெரும்பாலும் கை குலுக்கலில் தான் தொடங்குகிறது. ஆனால் ஒரு பெண் இன்னொரு பெண்ணைச் சந்திக்கும் போது கூட ஒரு தலையசைப்பு... ஒரு ஹலோ அல்லது வணக்கம் மட்டும் ஏன்? முதல் சந்திப்பிலேயே இயல்பாக பெண்களோடு கை குலுக்கும் ஆண்கள் இல்லையென்றும் சொல்ல முடியாது. ஒருவரைப் பார்க்கும் போது இயல்பாக அப்படி எக்ஸ்பிரஸ் செய்யச் செய்வது எது? அவர்கள் உருவமா? உடை தரும் அனுமானமா? இல்லை வைப்ரேஷன்ஸா? சில நேரங்களில் எவ்வளவு பழகினாலும் விலகியே நிற்கச் செய்வது எது? மரியாதை? கலாச்சாரம்? என்னன்னாலும் நீ பெண்(ஆண்), நான் ஆண்(பெண்)?

ஒருவேளை இப்படி மறுக்கப் படலாம் என்பது தான் முக்கியமான காரணமாயிருக்க வேண்டும். ஆனால் இதெல்லாம் அதிகம் 30+ களுக்குத்தான். 30+ களோடுதான். அதற்குக் குறைந்த வயதுக்காரர்கள் இவ்வளவு இறுக்கமில்லை என்று தோண்றுகிறது.

இறுக்கமாகவேதான் இருக்கப் போகிறோமா?

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

புதுக்கவிதையின் வழித்தடங்கள்

புதுக்கவிதையின் வழித்தடங்கள் -பொன்னீலன்-

சி. கனகசபாபதி அவர்களின் கட்டுரைத் தொகுப்பின் மீதான விமரிசனம்
"தமிழ் கவிதைகள்-மரபும்-புதுசும்"
காவ்யா வெளியீடு
விலை 140

(12.1.04. அன்று சிவகாசி பாரதி இலக்கியச் சங்கக் கருத்தரங்கில் படிக்கப் பட்டது)

19ம் ம் நூற்றாண்டில் மரபு வழிப்பட்ட இலக்கியங்கள் புதிய சமூக உள்ளடக்கத்தின். சேர்மானத்தால் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தயார் கின்றன. தெற்கே அரிகோபாலன் (அகிலத் திரட்டு- கவிதை நூலின் சிரியர்) வடக்கே ராமலிங்க வள்ளல் வேதநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் தமிழ்க்கவிதையை வடிவத்தில் எளிமைப்படுத்தினார்கள் சித்தர்கள் பிற்கால அவ்வையார். இவர்களின்மரபில் தமிழ்க்கவிதையை மக்கள் வாழ்வின் மையப்பகுதிக்கு இவர்கள்நகர்த்த முயன்றார்கள். சாமான்ய மக்கள் வாழ்வின் எழுச்சிக்காகக் கவிதையை உழைக்கச் சொன்னார்கள். இப்புதிய சூழலால் இவர்கள் கவிதைகளில் மரபை யொட்டிய வடிவப் புதுமை உண்டாயிற்று . கவிதை மக்களுக்கான தாய் மக்களுடன் உரையாடுவதாய் எளிமையும், தெளிவும், வேகமும் பெற்றது. இசை என்னும் சிறுகசைத்து எழுத்தறியாத மக்களின் தெருக்களில் எல்லாம் கூடப் பறந்து திரிந்தது. புதிய ஜனநாயக மனித நேய உருவாக்கத்திற்கு இது பெரும் பங்களிப்பு செய்தது.
இக்காலத்தில் இன்னும் இரண்டு காரியங்கள் நிகழ்ந்தன. சைவத் திருமடங்களிலும் சமூகத் தலைவர்கள்களின் இல்லங்களிலும் சிறைப்பட்டுக் கிடந்த தமிழ்ச்செவ்விலக்கியங்கள் உ.வே.சா மற்றும்பெரியோர்களின் அயராத உழைப்பால் சிறைக்கதவுகளைத் திறந்து வெளியே வரத் தொடங்கின. மேல் நாட்டு நாகரீகம் திக்கம் செய்யாத அன்றைய சூழலில் தமிழ் நாட்டு வீட்டோரங்களில் எல்லாம் நாட்டுப் புறப்பாடல்கள் இசை எழுப்பிக் கொண்டிருந்தன.

இந்த நேரம் வெள்ளைக்காரன் திறந்து வைத்த மேற்குக் கதவு வழியாக மேற்கு இலக்கியங்கள் நாட்டில் நுழைந்து கலாசாலைகளின் வழியாகப் படித்தவர்களைப் பற்றின. இந்த நாற்சந்தியின் ஒற்றைத் திரட்சியாக பாரதியின் கவிதை உதயமாயிற்று. அதன் ஒளி எல்லா திசையிலும் பரவிற்று சங்க இலக்கியத்தின் செவ்வியல் தாக்கமும், சித்தர் மரபின் திக்க எதிர்ப்புக் குணமும், பாரதியில் சங்கமித்தன. நாட்டு பாடலின் நளினமும் மேற்றிசைக் கவிஞர்களின் புதுமையும் அவனில் ஒன்றிணைந்தன. இதன் விளைவாக, தேசத்தை தேசத்து மக்களை மக்களின் விடுதலையைப் பாடச் சொல்லிக் கவிதா தேவியை அவன் பணித்தான். எழுத்தறிவு இன்றி இருந்த பெருவாரியான மக்களுடன் உரையாடச் சொல்லி அவளுக்கு பாரதி மக்கள் மொழியைக் கற்றுக் கொடுத்தான். இசை இறகுகளையும் வழங்கினான்
நாற்றிசைக் கலவையால் பாரதியின் கவிதை யிரம் ரூபங்களில் புதிது புதிதான செய்திகளோடு வெளிப்பட்டது. பழைய யாப்பு முறையிலும் வந்தன. நாட்டர் மரபிலும் வந்தன . அன்றைய மேற்கத்தியப் புது மரபிலும் உதித்தன. சித்தர் மரபிலும் வந்தன

மரபார்ந்த விழுமியங்களையும் எழுதினார் பாரதி. புதிதாக உதித்தெழும் தேசியத்தையும் எழுதினார். நூற்றுக் கனக்கான ண்டு ஒதுக்கப் பட்டு கிடக்கும் மக்கள் விடுதலையும் எழுதினார்.ஷெல்லியை உள்வாங்கி எழுதினார். விட்மனை உள்வாங்கி யும் எழுதினார்..வேத வடிவிலும் எழுதினார். நவீன வேத வடிவிலும் எழுதினார். அவர் காலத்தின் தமிழ் இலக்கியத்தில் அவர் சொல்ல முயலாமல் விட்டு விட்டது பெரிதாக எதுவும் இல்லை என்று துணிந்து கூற முடியும்

பாரதிக்கு பின் பாரதி தாசனாக வீரியமாக உருவான பாரதி தாசன் பாரதியின் சமூகப் பார்வையை ழப்படுத்தி வளர்த்தார். பாரதி தாசனிடம் தமிழ் தேசிய உணர்வும் சம தர்மச் சிந்தனையும் ஒன்று கலந்துசமூகத்தின் எல்லா முடிச்சுகளுக்குள்ளும் புகுந்து வெடித்தன
பாரதியின் இசை மரபை அவர் தொடர்ந்தார்.பாவேந்தரின் வாரிசுகளாகக் கம்பதாசன் கண்ணதாசன் வாணீ தாசன் என ஒரு தொடர்ச்சி இன்றைய வைர முத்து வரை வளர்ந்து வருகிறது.பாரதியின் இன்னொரு கிளையாக நாமக்கல்லாரும் சவுந்தராகைலாசமும் அவர்கள் வாரிசுகளும் வருகிறார்கள்.
இதனோடு இணைந்து சில வேளைகளில் முரண்டும் ரகுநாதன் தமிழொளி பட்டுக் கோட்டையார் , கே.சி.எஸ் அருணாசல