www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

ஒரு மனிதனின் வாழ்க்கையையே என் இசை மாற்றிவிட்டது!

கண்ணதாசன் விருது, கலைஞர் விருது, தேசிய ஒருமைப்பாட்டு விருது, நாகபூஷணம் விருது, சங்கீத சிகாமணி விருது என பல விருதுகள் பெற்று உலகின் பல பாகங்களிலும் பல விருதுகள் பெற்று உலகின் பல பாகங்களிலும் பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி பலரை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்திய சிறீமதி நித்யசிறீ மகாதேவன் ~~இன்னிசை மாமணி||, ~~யுவகலாபாரதி||, ~~கானாமிர்தவாணி|| ஆகிய பட்டங்களைப் பெற்றவராவார். அண்மையில் வந்திருந்த நித்தியசிறீ அளித்த பிரத்தியேக பேட்டி இது.

கே: பாட்டி டி.கே. பட்டம்மாள், தாத்தா பாலக்காட்டு மணி, அப்பா சிவகுமார், அம்மா லலிதா சிவகுமார் என அனைவரும் இசைத்துறையில் கொடிகட்டிப்பறக்கும் ஓர் இசைக்குடும்பத்தில் பிறந்த நீங்கள் எத்தனை வயதில் இதில் ஆர்வத்துடன் ஈடுபட்டீர்கள்?
ப: எங்கள் குடும்பம் ஒரு சங்கீத குடும்பம் என்றபடியினால் இயற்கையாகவே எனக்கு இசை மீது ஈடுபாடு இருந்தது. ஆனால் 7-8 வயதிலேயே இந்த நிலையை அடைய என் குடும்பத்தினர் எந்தளவு சாதனைகள் புரிந்துள்ளார்கள் என்பதை அறிந்தேன். அப்படியே இதில் ஆர்வமும் வந்தது. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் எனது தாயாராகும். சிறுவயதிலேயே அவர்களுடன் கச்சேரிக்கு போய் இருப்பேன். அவர்களுடன் கூடப்போவதே மிகவும் பெருமையாக இருக்கும்.
கே: நீங்கள் சினிமாவுக்கு வர ஏன் லேட்?
ப: சரியான நேரத்தில்தான் நான் ஈடுபட்டதாக எனக்கு தோன்றுகிறது. ஆனால் சினிமாவில் பாட வேண்டும் என்ற எண்ணத்தில் இசைத்துறையில் ஈடுபவில்லை. இது யதேச்சையாக அமைந்த ஒரு வாய்ப்பாகும்.
கே: நீங்கள் ஒரு கர்நாடகப் பாடகி, சினிமாவில் ஏ.ஆர். ரகுமானுடன் பாடல் பதிவுகளில் ஈடுபடும்போது உங்கள் மனநிலை எப்படி?
ப: ஏ.ஆர். ரகுமான் எந்த கலைஞரிடமிருந்து எப்படி திறமைகளை எடுப்பது என்பது தெரிந்த ஒரு இசையமைப்பாளர். யாரிடம் என்ன திறமை உள்ளதோ அதனை மிகச் சிறப்பாக பிரதிபலிக்கக்கூடிய தன்மையிலேயே பாடல்களை வழங்குவார். அதுபோலவே எனக்குப் பாடல்களை வழங்கினார். அவரும் கர்நாடக இசையில் தேர்ந்தவராதலால் திருப்திகரமாக பாடினேன்.
கே: கடைசியாக பண்ணிய படம் எது?
ப: சாமுராய் படத்தில் ~ஒரு நதி ஒரு பௌர்ணமி| என்ற பாடல் தான கடைசியாக பண்ணிய படம்.
கே: நீங்கள் இசையை யாரிடம் கற்றீர்கள்?
ப: அம்மாவிடமும் பாட்டியிடமுமே கற்றேன்.
கே: கர்நாடக பாடகியான நீங்கள் சினிமாவில் பாடும்போது பாதிப்பு ஏற்படுவது உண்டா?
ப: சிறுவயது முதலே சங்கீதத்தில் ஈடுபடுவதனால் எது எப்படி பண்ண வேண்டும் என்பது புரியும். மெல்லிசைப் பாடல்கள் பாடும்போது டைரக்டர் எந்த மனநிலையில் எந்த சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பாடலை எதிர்பார்க்கிறார் என்ற மனநிலையில் என்னை ஈடுபடுத்துவேன். இந்த மாதிரியான ராக ஆலாபனை, இந்த ராகம், இந்த கீர்த்தனை என புரிந்து அதற்கேற்றாற்போல பாடுவதால் சரியாக பண்ண முடிகிறது.
கே: நீங்கள் படித்த பாடல்களில் உங்களுக்கு மனத்திருப்தியளித்த பாடல் எது?
ப: என்னைப் பொறுத்தவரை நான் எல்லா பாடலையுமே ரசித்து அனுபவித்துதான் பாடுவேன். அதனால் இதுதான் பிடிக்கும் இது பிடிக்காது என்று கூற முடியவில்லை. ஆனால் சில பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவிடும். குறிப்பாக என் முதல் பாடலான ~~கண்ணோடு காண்பதெல்லாம்|| பாடலை சொல்லலாம்.
கே: கர்நாடக கச்சேரி செய்வதா? சினிமா பாடல்கள் பாடுவதா? கூடுதலான திருப்தியை உங்களுக்கு வழங்குகின்றது?
ப: எனக்கு எல்லாமே ஒன்றுதான். இரண்டுமே இலகுவானது என்று கூற முடியாது. சினிமா பாடல்களுக்கு இரண்டு மணி நேரத்தில் தயாராக முடியும். கர்நாடக பாடலுக்கு வருடக்கணக்கில் கூட எடுக்கும். கர்நாடக சங்கீதத்தில் எனக்கு பிடித்தது எதுவோ அதை செய்ய முடியும். ஆனால் சினிமா பாடலில் இசையமைப்பாளரை திருப்தி செய்ய வேண்டும்.
கே: பிடித்த பாடகஃபாடகி யார்?
ப: கர்நாடக சங்கீதத்தில் ஆ.ளு. சுப்புலட்சுமி, ஆ.டு. வசந்தகுமாரி, ஹரியக்குடி ராமானுஜம், மதுரை மணி, சேஷகோபாலன், சினிமாவில் க. சுசீலா, கு. ஜானகி, சித்ரா, வாணிஜெயராம், வ.அ. சௌந்தரராஜன், கு.க. பாலசுப்பிரமணியம், மு.து.யேசுதாஸ் போன்றோரை பிடிக்கும். இவர்களுடன் பாடவும் சந்தர்ப்பங்கள் அமைந்தது சந்தோஷம்.
கே: நீங்கள் உலகம் முழுதும் நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளீர்கள். உங்களின் மனதைக் கவர்ந்த ரசிகர்கள்?
ப: உலகமுழுதும் எனக்கு ரசிகர்கள் உள்ளனர். அதுக்கும் மேல் வெளிநாட்டவர்களும் இந்த இசையை ரசிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. மெக்சிகோவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் வெளிநாட்டவர்கள் மிகவும் ரசித்து கேட்டார்கள்.
கே: மறக்க முடியாத அனுபவம் ஏதேனும் உண்டா?
ப: ஒரு அம்மன் கோயில் கச்சேரியில் பாடிக்கொண்டிருந்தேன். 8 மணி கழித்துத்தான் கச்சேரி ஆரம்பமானது. சரியான கூட்டம் ஒரு வயதான நபர் ஒருவர் வந்து அமர்ந்தார். அவரின் தலை பரட்டையாக, கலைந்து, பார்க்கவே பயமாக இருந்தது. சிறிது நேரம் கழித்து அருகிலிருந்த து}ணில் சாய்ந்து அப்படியே உறங்கிப்போனார். கச்சேரி முடிந்து அவரை சிலர் எழுப்பினார்கள். எழுப்பினவர் என்னிடம வந்து அழுதார். பின் எனக்கு வாழ்க்கையே வெறுத்து சாகலாம் என்ற முடிவுக்கு வந்த போது பாட்டு சத்தம் கேட்டது. கோயிலுக்கு வரணும் என்று தோன்றியது. பாடலைக் கேட்டவுடன் கவலைகள் மறந்து அப்படியே து}ங்கிவிட்டேன். இப்போது நிம்மதியாக உள்ளது. இனிமேல் தற்கொலை பண்ணும் எண்ணமில்லை என சத்தியம் பண்ணிவிட்டு சென்றார். ஒருமனிதன் வாழ்க்கையையே என் சங்கீதம் மாற்றியது என்பது எனக்கு மறக்க முடியாத அனுபவமாகும்.
கே: இந்த இசை வாழ்க்கை உங்கள் குடும்ப வாழ்வை பாதிக்கவில்லையா?
ப: ஒன்று கொடுத்துதான் ஒன்று பெற வேண்டும். சில வேளைகளில் ஒரு மாதமளவில் கூட வீட்டில் இருக்க முடிவதில்லை. ஆனாலும் புகுந்த வீட்டிலுள்ளவர்கள் கூட என்னை ஊக்கப்படுத்தி உற்சாகப்படுத்துவதனால் பாதிப்பு இல்லை என்றே கூற வேண்டும்.

 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]