www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

காற்று வரும் காலம்
இது காற்றுக் காலம்
இரைந்தெம் தலை கலைத்து
சதி செய்யும் காற்று தாராளமாய் மண்ணை
அள்ளி அபிஷேகம் அது செய்யும்
மரங்களிலே
துள்ளி விளையாடும் துடுக்கு இளங்காற்று
கொள்ளை வாசங்கள் கொணரும்
கிளுக்கிண்டும்
மரங்கள் கரகமாடும் வருவோர் போவோர்க்குச்
சொரியும் புதுப் பூவைத் து}வி
ஆசீர்வதித்தேகும்
பட்டங்கள் ஏற்றப் பரவசமாய் வரும் சிறுவர்
இட்டமுடன் ஓடி இளைப்பார்கள்
காற்றாட
சைக்கிளேறி வீதிகளிற் தம்பிமார் படையெடுப்பார்
கைபிரியாக காதலரைக்
காற்று விசாரிக்கும்
வெளியூர்ப் பறவைகள் காற்றில் மிதந்து வந்து
எழில் புதிதாய்ப் பூத்திருக்கும்
எம்கொம்பில் இளைப்பாறும்
விந்தை நெல்லாய் விளைய...விளைத்துச்
சிரித்தவர்கள்
வந்தடிக்கும் காற்றின் வளத்துக்குத
து}ற்றுவரோ!
இது காற்றுக் காலம்
எனது கவிதைகட்கு
இது ஊற்றுக் காலம்.... எழிலை இரசித்த படி
வருடுகிற காற்றில் வசமிழக்கும் என் தேகம்..
என்றாலும் காற்று...
எடுத்து வரும் புழுதி மணல்
கண்ணுள் விழுந்துறுத்தி என்
இரசிப்பை கெடுத்திடலாம்...
என்பதனாலே காற்றின் முன்
எச்சரிக்கை கொள்ளும் உளம்.

-த.ஜெயசீலன்-

 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]