www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இன்பத்தமிழ்

ஒரு நாள் பொழுது

-பொன் சுந்தரராசு (சிங்கப்பூர்) மூலம்:திசைகள்-

1992ஆம் ஆண்டில் ஒரு பிற்பகல் நேரம்.

நியூட்டன் அஞ்சலகச் சேமிப்பு வங்கிக்குள் காலடி வைத்தபோது அவனுக்குத் ஑திக்ஒகென்றது. U வடிவத்தில் வரிசை நுழைவாசல் வரை நீண்டிருந்தது. பணத்தைச் சேமிப்புக் கணக்கில் செலுத்திவிட்டுப் பக்கத்தில் ஑தேக்காஒவிலேயே பகலுணவையும் முடித்துக் கொண்டு அலுவலகத்திற்குக் குறிப்பிட்ட நேரத்திற்குள்ளேயே திரும்பி விடலாம் என்று திட்டமிட்டிருந்தான்.

஑எல்லாம் கோவிந்தாவாகிவிடும் போல இருக்கே!.ஒ என்று அவன் உள்மனம் அழுதது.

஑இன்னும் ஒரு மணி நேரம் இருக்கே. எத்தனை பேரு வரிசையில நிக்கிறாங்க ?..ஒ
தலைகளைக் கணக்கெடுக்க ஆரம்பித்தான்.

஑ஒன்னு, ரெண்டு. மூனு....25. என்னையும் சேர்த்து 26. ஒரு ஆளுக்கு அஞ்சு நிமிசம்னாலும் 75 நிசமாகுமே! அஞ்சு நிசம்கிறது அதிகம்தான். ஑கவுண்டர்லஒ என்ன கதையாப் பேசப் போறாங்க! சீக்கிரம் முடிஞ்சிடும். சாப்பிடத்தான் நேரம் இருக்காது போல இருக்கு. பரவாயில்லே. ஒரு நாளைக்குச் சாப்பிடலேன்னா செத்துப் போயிடுவேனா?..ஒ அவன் தன்னைச் சமாதானப்படுத்தும் போதே வயிறு உறுமியது.

வரிசையில் நிறைய சீனப்பெண்கள், ஆண்கள், சில மலாய்க்காரர்கள், ஒன்றிரண்டு தமிழர்கள். அவனுக்கு முன்னால் ஒரு வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் நின்று கொண்டிருந்தார்கள். ஆளுக்கொரு பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அவர்கள் அலங்கோலமாகக்஢ காட்சியளித்தார்கள்.

஑இவுங்க அழகா இருந்தா என்ன? அவலட்சணமா இருந்தா என்ன? யாராவது குறை சொல்லுவாங்களா! வௌ஢ளைக்காரனாக்கும்!.. இந்தக் கோலத்திலே இந்தியர்கள் மட்டும் நின்னா?..ஒ தொடர்ந்து அவன் அதைப் பற்றிச் சிந்திக்க விரும்பவில்லை.

நிறவேறுபாடுகளை வைத்து மனிதரை எடைபோடும் உலக மாந்தரை மனத்திற்குள் கெட்ட வார்த்தைகளால்஢ திட்டித் தீர்த்தான். ஑இந்தியன்னா இளக்காரமாப் போச்சு!ஒ அவன் உதடுகள் துடித்தன.

஑பரவாயில்லே வரிசையிலே கூட நான்கு இன மக்களும் நிறைந்து பல்லின சமத்துவத்தைப் பறைசாற்றுறாங்க!..ஒ நக்கலாக அவன் மனம் நகைத்துக் கொண்டது.

அவனை ஒட்டி நீண்ட வரிசையில் சொல்லி வைத்தாற்போல மூன்று சீனப்பெண்கள் குட்டை சிலுவார், கையில்லாத டீ சட்டை சகிதம் பேசிக் கொண்டும் உலகத்தில் மிகச் சிறந்த நகைச்சுவையை ரசிப்பது போலச் சிரித்துக் குலுங்கிக் கொண்டும் அங்கே கால் கடுக்க நின்றவர்களின் மனவருத்தத்திற்கு மருந்து தடவிக் கொண்டிருந்தனர்.

஑இந்தச் சீனக் குட்டிங்க பரவாயில்லே. குண்டியை மட்டும் மறைக்கிறா மாதிரி ஒரு சிலுவார், அரைகொறை டீ சட்டை..ஒ என்று அவன் கொச்சையாக எண்ணத் தொடங்கியபோது முன் வரிசையில் ஑டைட் ஸ்கேர்ட்டும் கோட்டும்ஒ மிக நேர்த்தியாக அணிந்து ஑கமகமஒவென அவ்விடத்திற்கு நறுமணத்தை இலவசமாக வழங்கிக் கொண்டிருந்த சில சீனப் பெண்களும் அழகிய வங்கி அதிகாரிகளும் அவன் கண்ணில் பட்டனர்.

அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டான்.

஑சீனப்பெண்களின் வனப்பும் வாளிப்பும் திறமையும் தொழில் ஈடுபாடும் சுட்டுப் போட்டாலும் மத்தவங்களுக்கு வராது. வில்லாதி வில்லிங்கப்பா!..ஒ

அவன் மனம் பாராட்டுப் பத்திரம் வழங்கியது.

கூட்டம் அவன் எதிர்பார்த்ததைவிட மெதுவாக நகர்ந்தது. மணி ஒன்றரையை நெருங்கியது. டிசுவர்க் கடிகாரத்திற்குக் கீழே ஒரு பல்லி வாலை மெதுவாக ஆட்டிக் கொண்டு எதிரே பறந்து கொண்டிருந்த ஒரு சிறு பூச்சியையே குறிபார்த்துக் காத்துக் கொண்டிருந்தது.

ஓஎன்னங்க.. சேமிப்பில போதுமான பணம் இருக்கா? இல்லேன்னா டோ ப் ஆப் பண்ணிடுங்க. இன்னிக்கு ஆறாம் தேதி. பியூபி பில், சொத்து வரி, ரேடியோ - தொலைக்காட்சி லைசன்ஸ் கட்டணம் எல்லாம் வெட்டிக்கிற நாளு. ஞாபகம் இருக்குல்லே..ஔ அவன் மனைவி சங்கீதா சங்கீதம் பாடினாள்.

சுடச்சுட காபியை உறிஞ்சிக் கொண்டிருந்தவன் கடுப்பாகிப் போனான்.

ஓநிம்மதியா காபி குடிக்க விடுறியா?. வரி, வரி எல்லாத்துக்கும் வரி. கார் வாங்கினா வரி, அதை ஒட்டுனா வரி, வீடு வாங்கினா வரி.. அதில் வசித்தாலும் வரி வாடகைக்கு விட்டாலும் வரி, செத்தாலும் வரிஸஔ என்று கடுப்போடு சொல்லிக் கொண்டு வந்தபோது சடக்கென அவனுக்குச் சந்தேகம் துளிர்த்தது.

உடலை எரிக்கிறதுக்கும் புதைக்கிறதுக்கும் ஑ஜி.எஸ்.டிஒ வசூலிக்கிறாங்களா இல்லையான்னு தெரியலையே!..

ஓஎதுத்துத்தான் வரி இல்லே!.ஔ குரலைத் தாழ்த்தி விடாமல் முணுமுணுத்தான்.

ஓம்.. ம்.. பணம் சம்பாதிக்கிறோமில்லே. வரி கட்ட வேண்டாமா? எல்லாரும்தான் வரி கட்டுறாங்க.ஔ. சங்கீதா தனக்குப் பாதியும் கணவனுக்கு மீதியுமாகப் பேசினாள்.

ஓஏய்! உன் வாயை மூடு. நீ என்ன காலையிலேயே கலாட்டா பண்றே?..ஔ

ஓஅப்படி இல்லே.. உலக நடப்பைத்தான் சொன்னேன்..ஔ என்று சொல்ல நினைத்தாள். அந்த நேரத்தில் ஑ப்பீ.. ப்பீ..ஒ என்று பள்ளிப் பேருந்து சத்தம் கேட்கவே தயாராக நின்ற தன் பத்து வயது மகளைப் பள்ளிக்கனுப்ப வௌதயே சென்றாள்.
வீட்டு நிர்வாகத்தை ஆண்பிள்ளைதான் கவனிக்க வேண்டுமென்பதில் அவன் எப்போதுமே விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை.

அவன் ஑கவுண்டஒரை நெருங்கி வந்துவிட்டான். அவனுக்கு முன்னால் வௌ஢ளைக்கார தம்பதியர் மட்டுமே நின்று கொண்டிருந்தனர். அந்த நேரம் பார்த்து ஒரு பெண் வங்கி அதிகாரி CLOSE என்ற அறிவிப்பை வைத்துவிட்டு எழுந்து ஒயிலாகச் சென்றாள். மணி இரண்டாக இன்னும் பதினைந்து நிமிடமே இருந்தது.

அவனுக்கு இருப்புக் கொள்ளவில்லை. அலுவலகத்திற்குத் தாமதமாகப் போவதை அவன் ஒருபோதும் விரும்புவதில்லை. அது கொடுமையான அனுபவம்! பலரைத் தாண்டி தன்னிடத்திற்குச் செல்வதற்குள் அவமானமே கொன்றுவிடும். ஆயிற்று. அவனுக்கு முன்னால் நின்ற இருவரும் போனார்கள்.

஑அப்பாடா!.ஒ என்று பெருமூச்சு விட்டான். ஐந்து நிமிடம்.. ஏழு நிமிடம் அவன் அங்கேயே நின்று கொண்டிருந்தான். என்ன ஆயிற்று?

வௌ஢ளைக்காரனும் வௌ஢ளைக்காரியும் அசைவதாகத் தெரியவில்லை. அவர்கள் வௌதநாட்டு பண நோட்டுகளைக் கையில் பிடித்துக் கொண்டு ஏதோ பண்ணிப் பண்ணிக் கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

இடப்புறக் கவுண்டரில் ஒருவரை விழுந்து விழுந்து கவனித்துக் கொண்டிருந்தாள் ஒரு சீன இளம்பெண் அதிகாரி. இடையிடையே பேச்சு, சிரிப்பு! இவனுக்கு எரிந்தது.

஑பெரிய தொகை போட்டுக் கணக்கு திறக்கிறான் போல இருக்கு! இல்லேன்னா, அவ ஏன் இந்த இளிப்பு இளிக்கிறா?.ஒ அவனுக்குக் கசந்தது.

வலப்புறக் கவுண்டரில் நீண்ட நேரமாக ஒரு மலாய்க்காரி தன் இரண்டு பிள்ளைகளையும் வங்கியில் மேயவிட்டுவிட்டு அங்கிருந்த ஆண் மலாய் அதிகாரியோடு கதையடித்துக் கொண்டிருந்ததாள்.

஑மலாய்க்காரிங்களுக்கு ஒரு மலாய்க்காரன் கண்ணில படக்கூடாது!.ஒ அவன் பொறுமினான்.

இவனுக்குப் பின்னாலும் வரிசை கொடுக்குப் பிடித்துக் கொண்டுதானிருந்தது. இவன் மகா வெறுப்புடன் தனக்குப் பின்னால் நிற்வரிடம்-

ஓஎன்ன நடக்கிறது? ஏன் தாமதம்?ஔ என்று ஆங்கிலத்தில் கேட்டான்.

அந்தச் சீனர், மலாய்ப் பெண்ணைச் சுட்டிக் காட்டி ஓஅவர் புதுக் கணக்குத் திறக்கிறார்.ஔ என்று ரகசியமாகக் கூறினார்.

அவனால் பொறுமையாக இருக்க முடியவில்லை. மணி இரண்டாக இன்னும் ஐந்து நிமிடமே இருந்தது. ஒரு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க நின்றும் இன்னும் தன் முறை வரவில்லையே என்று நினைத்த மாத்திரத்தில் அவன் கட்டுப்பாட்டை மீறி வார்த்தைகள் ஆங்கிலத்தில் வெடித்துச் சிதறின.

ஓஹலோ! நீங்க என்ன நெனச்சிகிட்டு இருக்கிறீங்க?. ஒரு மணி நேரமா வரிசையில நிக்கிறேன். சிரிச்சி பேசிக்கிட்டு ஜாலியா வேலை பார்க்கிறீங்க. நான் இன்னும் சாப்பிடக் கூட இல்லே தெரியுமா?..ஔ

ஓநாங்க வேலைதான் பார்க்கிறோம். ரெண்டு பேரு புதுசா ஑அக்கவுண்டுஒ திறக்கிறாங்க. கொஞ்சம் பொறுமைங்க ப்பிளீஸ்!.ஒ ஒரு பெண் அதிகாரி அழகாக ஆங்கிலம் பேசினாள்.

ஆனால், அதை ரசிக்கும் மனநிலையிலதான்஢ அவன் இல்லை.

ஓயூ சி.. புது கணக்குத் திறக்கிறதுக்கு ஒரு தனிக் கவுண்டர் இருக்கணும். இந்த மாதிரி எவ்வளவு நேரம் நிக்கிறது? நான் ஆபிசுக்குப் போகணும்மா. இது முட்டாள்தனமா இல்லே!.ஔ

ஆத்திரம் அவன் கண்ணை மறைத்தது. கண்டபடி சத்தம் போட ஆரம்பித்தான்.

உள்ளே இருந்து ஒரு காவலர் அவசரமாக வௌதயே வந்தார்.

ஓமிஸ்டர் கலாட்டா பண்ணாதீங்க. இங்கே எல்லாரையும்தான் கவனிக்கணும். பகல் உணவு நேரத்தில கூட்டமாத்தான் இருக்கும். நெருக்கடியான நேரத்தில வந்தது உங்க தப்பு..ஔ

ஓஎன்னய்யா என் தப்பு? இப்ப வராம, வேலை நேரத்திலேயா வரமுடியும்? எவ்வளவு லேட்டாயிடுத்து.ஔ சுவர்க்கடிகாரத்தைக் காட்டிச் சத்தம் போட்டான்.

கடிகாரத்திற்குக் கீழே வட்டமிட்டுக் கொண்டிருந்த பூச்சியைக் காணவில்லை. பல்லியின் வயிறு புடைத்திருந்தது.

ஓஅது உங்க புராப்ளம். இண்டியன்ஸ் எப்போதும் இப்படித்தான். நேற்றுகூட ஒருத்தன் வேறு ஒரு காரணத்துக்காகச் சத்தம் போட்டான் தெரியுமா?ஔ

ஓஏய்! நீ இண்டியன்ஸ்சைப் பத்திப் பேசாதே. தட்டிக் கேட்க ரோசம் வேணும்..ஔ

ஓகாத்திருக்கப் பிடிக்கலேன்னா நீங்க போகலாம்..ஔ காவலர் குரலில் கடுமை தொனித்தது.

அவனை அவமானம் பிடுங்கித் தின்றது.

"போறேன்.. இங்கே மனுசனா நிப்பான். பிளடி பூல்ஸ்..ஔ என்று சத்தமிட்டவாறே வௌதயேறினான்.

஑எவனாவது எனக்கு ஆதரவா பேசினானா? மடப்பயல்கள். சொரணையே இல்லாத கூட்டம்..ஒ என்று மற்றவர்களையும் விட்டு வைக்காமல் மனத்தில் திட்டுத் தீர்த்தபடியே தன் காரில் ஏறிக் கதவை ஓங்கி அறைந்தான்.

புக்கிட் தீமா சாலையில் திரும்பியபோது அவனுக்குத் தலை சுற்றியது.

டிராபிக் ஜாம்!..

சாலை புதுப்புப் பணி நடந்து கொண்டிருந்தது. வரிசை வரிசையாகக் கார்கள்! சாலை முழுவதும் இடைவௌத இல்லாமல் எங்கும் கார்கள்.

ஓமுன்பெல்லாம் இரவிலதான் சாலை புதுப்பிப்஢புப் பணி செய்வாங்க. இப்ப பகல்லேயே செய்ய ஆரம்பிச்சாட்டாங்க. அநியாயம். இதை எல்லாம் யாரு கேட்கிறது? மடப் ... மவனுங்க!.ஔ அசிங்கமான வார்த்தைகள் தயக்கமின்றி அவன் வாயிலிருந்து கொட்டின.

கதவைத் திறந்து தலையை நீட்டி வௌதயே பார்த்தான். கண்ணுக்கெட்டிய தூரம் பகல் நேரச் சூரியனின் பிரதிபலிப்புகள். கண்கள் கூசின.

அந்த இடைவௌத நேரத்தில் ஒருவன் இவனுக்கு முன்னால் தன் காரைச் செருகினான். ஏமாற்றம் தாங்காமல் இவன் ஹாரணை அழுத்தி அமுக்கினான்.

காது ஜவ்வு அழுதது.

முந்திச் சென்றவன் கதவு வழியாகக் கையை உயர்த்திச் சமாதானக் கொடி காட்டினான்.

஑இதை மட்டும் செஞ்சுடுவாங்க. செங்கப் பயல்கள்!..ஒ

அவன் அலுவலகத்திற்குள் காலடி வைக்கும்போது பிற்பகல் மணி மூன்று. வெட்கத்தாலும் ஏமாற்றத்தாலும் அவன் முகம் தொங்கிப் போய் விட்டது.

அவன் தன் நாற்காலியில் சரிந்து ஒரு நிமிடம்கூட ஆகவில்லை. தொலைபேசி கதறியது.

ஓஹலோ!..ஔ

ஓஎன் ஆபிசுக்குக் கொஞ்ச நேரம் வர்றீங்களா?..ஔ மானேஜரின் குரல் கரகரத்தது.

அடுத்த நிமிடம் அவர் முன் அவன் அமர்ந்திருந்தான்.

ஓம்.. பிரபு! ஒரு ஑புரோஜக்ட்ஒ தயாரிக்கச் சொல்லி இருந்தேனே. மூனு மணிக்கு அனுப்பணும்..ஔ

ஓஇன்னும் அரைமணி நேரத்தில தயார் பண்ணிடுறேன்..ஔ

ஓஇப்ப மணி மூனு..ஔ

மௌனம்!..

ஓநீங்க போங்க..ஔ மானேஜர் மேசைமேல் இருந்த ஃபைலைப் புரட்டத் தொடங்கினார்.

பிரபு அடுத்த அரைமணி நேரம் கணினியோடு போராடினான். அவன் வேகத்துக்குக் கணினி ஒத்துழைக்கவில்லை.

பல முறை ஹேங்!

ஓஷிட்..ஔ ஒரு முறை கணினித் திரையைக் குத்த நெருங்கிவிட்டான்.

அவன் எவ்வளவோ போராடியும் நான்கு மணிக்குத்தான் வேலையை முழுமையாக முடிக்க முடிந்தது. அவசரம் அவசரமாகத் தாள்களை வாரி எடுத்து மானேஜர் மேசைமேல் கொண்டு போய் வைத்தான்.

ஓபுரோஜக்டை நான் மூனு மணிக்கே அனுப்பிட்டேன்..ஔ

ஓஎப்படி?..ஔ என்ற வினாக்குறியோடு புருவத்தை நெரித்தபடி அவரை நோக்கினான்.

ஓபுனிதாவையும் செய்யச் சொல்லி இருந்தேன்..ஔ

ஓஎன் மேல நம்பிக்கை இல்லையா? அதை ஏன் முன்னமே எங்கிட்ட சொல்லலே..ஔ என்று சத்தம் போட்டுக் கேட்க நினைத்தான்.

வாயைத் திறக்க முடியவில்லை. உதடுகள் காய்ந்து ஒட்டிக் கொண்டன.

அவன் முகம் கருத்துவிட்டது. கை, கால் மூட்டுகளெல்லாம் கழன்று விட்டதுபோல் உடல் தளர்ந்து தொங்கி விட்டது. வாயடைத்துப் போய் தன் இடத்தில் போய் ஒடுங்கினான்.

஑என் இப்படி இருக்கிறாங்க! இந்தப் பயல்களுக்கு இதயமே கிடையாதா? பதவி வந்தா அதைக் கழற்றிக் ஑கபட்ஒடிலே வச்சுடுவாங்களா? இவன்களுக்குப் பதவிதான் பெரிசு! நாற்காலிப் பைத்தியங்கள்!! மனித உணர்வுகளை மதிக்கத் தெரியாத மரங்கள்..! ஒ

நெட்டை மரங்களென பாரதி வசை பாடியது நினைவுக்கு வந்து அவனது ஆத்திரத்தைக் கிளறிவிட்டது.

஑புனிதா அடிக்கொரு தரம் கைக்குள்ளே கண்ணாடியை வச்சிகிட்டு உதட்டுக்குச் சாயம் அடிப்பா. மானேஜர்கிட்ட போயி இளிக்கணும்லே!.ஒ

஑மாலினி, வேலை செய்யிற மாதிரி போக்குக் காட்டிகிட்டுக் காதலனுக்கு ஈமெயில் அனுப்பிகிட்டிருப்பா!.ஒ

஑ராபர்ட் ஷேர் மார்க்கெட் நிலவரத்தைச் செக் பண்றதிலேயே பொழுதைப் போக்குவான்!.ஒ

஑சேகர், ஒரு பொம்பள பொறுக்கி! அவனுக்கு எப்படித்தான் ஒரு குணவதி மனைவியா கெடைச்சாளோ!.ஒ

஑இந்த ஆபிசிலேயே நான் ஒருத்தன்தான் யோக்கியன். எவனுக்குத் தெரியுது!.ஒ

பிரபு தன் காரில் மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்தான். அவனைத் தாண்டி பல கார்கள் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தன. சில கார் ஓட்டுநர்கள் ஑ஹாரனைஒ அழுக்கி வழிவிடச் சமிக்கை செய்தனர்.

஑ஏன் இப்படி அவசரப்படுறானுங்க.! ஆக்ஜிடண்ட் ஆகிச் சாகவா?..ஒ

போலிஸ் அகாடமிச் சந்திப்பில் காரை நிறுத்திப் பச்சை விளக்கிற்காகக் காத்திருந்தான். இடது பக்கம் திரும்பியவனுக்குத் ஑திக்஢ஒ கென்றது. அங்கு வேலியோரத்தில் பல கிளைகள் விரித்துத் தழைத்திருந்த ஆலமரத்தைக் காணவில்லை. நீண்ட காலத்து மரம். இவன் பேருந்தில் பள்ளிக்குப் போனதிலிருந்து கவனித்து வருகிறான்.

சாலை விரிவாக்கப் பணி அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்ததால் ஒரு மாதம் பிரபு இந்த வழியில் வராமல் இருந்திருக்கலாம்.

஑ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! எத்தனையோ பறவைகளுக்கு அடைக்கலம் கொடுத்த ஆயிரம் கைகளுடைய ஆலமரத்தை வெட்டி விட்டார்களே! அடடா, மாலையில் இந்தப் பக்கம் வரும்போது மரம் நிறையப் பறவைகள் அமர்ந்து ஑கீச் கீச்ஒ என்று கூச்சலிடுவது பார்ப்பதற்கும் கேட்பதற்கும் எவ்வளவு ரம்மியமாக இருக்கும். அந்த அற்புத மரத்தை அழித்துப் பறவைகளை அநாதைகளாக்கி விட்டார்களே!.

அவன் மனம் கனத்தது.

தன் அடுக்குமாடிக் கட்டடத்தை அடைந்ததும் காரை நிறுத்திவிட்டு மின்தூக்கியருகே சென்றான். அங்கே நான்கைந்து பேர் நின்று கொண்டிருந்தாணர்கள். கதவு திறந்ததும் எல்லாரும் உள்ளே நுழைந்தார்கள் இவன் உட்பட. இவன் செல்ல வேண்டிய 10வது மாடி பட்டனை யாரோ அழுத்தி இருந்தார்கள். அவன் அங்கு நின்றவர்களை நோட்டமிட்டான். இரண்டு பெண்கள்கூட இருந்தனர். எல்லாரும் மாடிகளைக் காட்டும் சிவப்புநிற அறிவிப்பு விளக்குகளையே பார்த்துக் கொண்டிருந்தனர்.

஑இவனுங்க மனுஷங்க தானா? இல்ல ரோபார்ட்டா? ஏன் மேல் நோக்கியே பார்த்துக்கிட்டு நிக்கிறானுங்க! இதுக்கு முன்னால அதைப் பார்த்ததே இல்லையா? வாயைத் திறந்து பேசுங்கடா! வாய் கொட்டிக்கிறத்துக்கு மட்டும்தானா?ஒ அவன் அங்கு நின்றவர்களைக் கரித்துக் கொண்டிருந்தான்.

பத்தாவது மாடி! பிரபு மின்தூக்கியிலிருந்து வௌதயேறினான். வீட்டையடைந்து தன் அறைக்குள் சென்று ஆடைகளைக் களைந்து வேட்டியைக் கட்டிக் கொண்டு சன்னல்களைத் திறந்து விட்டான். வெகு தாராளமாகக் காற்று உள்ளே வந்தது. வௌதயே நோக்கினான்.

வடக்குச் சிங்கப்பூரின் பகுதிகள் கண் சிமிட்டின. எங்கும் ஔத ஜாலம். இரவு மணி எட்டரையை நெருங்கிக் கொண்டிருந்தது. கண்ணுக்கெட்டிய தூரம் வரை அடுக்கு மாடிக் கட்டடங்கள்.

ஓதண்ணி சாப்பிடுறீங்களா?. இல்லே சாப்பாடேஸஔ கேட்டுக் கொண்டே சங்கீதா அறைக்குள் நுழைந்தாள்.

ஓதண்ணியா?.. நான் எத்தனை தடவை சொல்லி இருக்கிறேன். காபி போடவா, டீ போடவான்னு கேளு. நான் தண்ணி போடுறதில்லே!..ஔ இடைமறித்துப் பிரபுவின் குரல் அலறியது.

சங்கீதா சுதாகரித்துக் கொண்டாள். அவள்஢ பதில் பேசவில்லை.

ஓசங்கீதா, இங்கே பார்த்தியா?.ஔ

ஓஎங்கே?.ஔ

ஓவௌதயேதான். என்ன தெரியுது?..ஔ

ஓநிறைய வௌ஢ளை வௌ஢ளையா அடுக்கு மாடிக் கட்டடங்கதான் தெரியுது. ராத்திரியா இருக்கிறதுனால நெறைய விளக்கு எரியுது.ஔ

ஓஇந்தக் கட்டங்களை எல்லாம் பார்த்தா உனக்கு என்ன தோணுது?.ஔ

ஓநம்ப அரசாங்கத்தைப் பாராட்டத் தோணுது..ஔ

ஓநல்லா பாரு சங்கீதா. நீ சொன்ன மாதிரி நமக்கு முன்னால வௌ஢ளை வௌ஢ளையா தெரியுதே, அது எல்லாம் பூமியிலே இருந்து முளைச்ச கல்லறைகளா உனக்குத் தெரியலை. கல்லறைகள்ல பிணத்தை வச்சு மத்தவங்க மூடுறாங்க. கட்டடத்துக்குள்ளே நம்மை வச்சு நாமே மூடிக்கிறோம். வேடிக்கையா இல்லே! முன்னால பாரு, ஒரு வீடாவது திறந்து இருக்கா. சங்க காலத்திலே எந்த வீட்டுக்கும் கதவே இருந்ததில்லை. ஏன் தெரியுமா?. ஔ

ஓநீங்களே சொல்லுங்க..ஔ

ஓஅப்ப எல்லாம் உதவி கேட்டு யாரும் எந்த நேரத்திலேயும் எங்கேயும் வரலாமாம். இப்ப ஹா..ஹா சுயநலவாதிகள்! தன் தவறுகளை மூடி மறைக்கிறதிலேயே முனைப்புக் காட்டுற கபட வேடதாரிங்க..அவனுங்க ஔதஞ்சுகிறதுக்கு இந்த ஏற்பாடு! எல்லாரும் போலிகள்! எல்லாரும் நடிகர்கள்!!.ஔ

ஓ எல்லாத்தையும் ஏன் தப்பா புரிஞ்சிக்கிறீங்க?.ஔ

ஓநானா? தப்பைத் தப்புன்னு சொல்றேன். அது தப்பா? காரியம் ஆகணும்கிறதுக்காக என்னால ஊமையா இருக்க முடியாது. வேண்டியவனுங்஢கிறதுக்காக என்னால ஒரு கண்ணை முடிக்க முடியாது. ஏமாத்துறாங்கண்ணு தெரிஞ்சும் என்னால ஊமையா இருக்க முடியாது. நான் கொள்ளைக்காரனில்லே, தீவிரவாதி இல்லே, துரோகி இல்லை. வாழ்க்கையைப் பேரம் பேசும் வியாபாரி இல்லே. அநியாயம் நடக்கும்போது தலையைக் கவிழ்த்துக் கொள்ள நான் நோயாளி இல்லே. மனுசன். மனுசனா வாழ விரும்புற மனுசன்..ஔ

பிரபு உணர்ச்சி வயப்பட்டுக் கத்தினான். அவன் போட்ட சத்தம் பல வீடுகளுக்குக் கேட்டிருக்கலாம். சங்கீதா ஒரு நிமிடம்கூடத் தாமதிக்காமல் அறையிலிருந்து வௌதயேறினாள். அப்போதாவது அவன் கூச்சல் குறையலாம் என்று அவள் எதிர்பார்த்தாள்.

பிரபு சுவரில் பொருத்தப்பட்டிருந்த ஆளுயர நிலைக்கண்ணாடியருகே சென்றான். அதில் அவனது முகம் பிரதிபலிக்கவில்லை. அடுக்குமாடி வீடுகளும் மனிதர்களும் ஏனைய காட்டிகளுமே தோன்றின.

விடுவிடுவென ஹாலைத் தாண்டிக் கொண்டிருந்த சங்கீதாவிடம் ஖

ஓஅப்பா ஏன்மா உங்கிட்ட சண்டை போடுறாங்க?..ஔ

கூடத்தில் அமர்ந்து வீட்டுப் பாடம் செய்து கொண்டிருந்த வளர்மதி கேட்டாள். சற்று முன்னர் தன் தந்தை தன்னை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் தன்னறைக்குள் போய்விட்டாரே என்ற ஏகப்பட்ட வருத்தத்தில் குழந்தை இருந்தாள்.

ஓஎன்கிட்டே இல்லேம்மா..ஔ

ஓபின்னே?.ஔ

ஓஉலகத்துகூட சண்டை போடுறாரும்மா!..ஔ

ஓபுரியலேம்மா..ஔ

ஓஉனக்கு இப்ப புரியாதும்மா!..ஔ

சங்கீதா விடைகாண முடியாத பல கேள்விகளோடு சமையலறைக்குள் புகுந்தாள்.

஑கிரீங்ங்ங்ஸஒ அலாரம் அழுதது.

அதிகாலை மணி ஐந்து.

பிரபு துயில் எழுந்தான். மனைவியை எழுப்பிவிட்டான்.

மகளை எழுப்பி உச்சி முகர்ந்து காலை வணக்கம் கூறினான். வளர்மதியின் தலையணையருகே ஓர் இயந்திர மனிதப் பொம்மை கிடந்தது. ஆனால், அது சிறியதாக இருந்தது.

வீட்டில் வழக்கம் போல எல்லாம் சரியாக நடைபெற்றன. பிரபு வீட்டைவிட்டுப் புறப்பட்டுக் காரில் நுழைந்து சிங்கப்பூர் மக்கள் நெரிசலில் கலந்தான்.

அனுப்பியவர் வெப்தமிழன்

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளு&#