www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page  

விளையாட்டு   புதிய செய்திகளுக்கு இங்கே சொடுக்கவும்

வசிம் அக்ரம் சொல்கிறார்......

கூடுதலான ஒரு நாள் போட்டிகளில் வீரர்களை விளையாடச் செய்வதால் அவர்கள் விரைவாகவும்,அதிகமாகவும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாகிஸ்தானின் முன்னாள் சகலதுறை ஆட்டவீரர் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட்டின் தலைமையகம் இந்தியா

சொந்த மண்ணில் கங்குலியை ஜெயிப்பது சாதாரணமல்ல என்று சொல்கிறார் வர்ணனையாளர் டொனி கிரேக்.கங்குலி தலைமையிலான இந்திய அணியை,சொந்த மண்ணில்வைத்து ஜெயிப்பது சாதாரணமான விஷயம் அல்ல.அவுஸ்திரேலிய அணியால்கூட முடியாத விஷயம் அது!என்று நியூசிலாந்து அணியை எச்சரிக்கிறார் டோனிகிரேக்.

வேகப்பந்து வீச்சாளர்களை தேடி அலையும் இந்தியா

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகியுள்ள விதம் குறித்து இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோன் ரைட் கருத்து வெளியிட்டுள்ளார்.குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராகியுள்ளவிதம் குறித்து மகிழ்ச்சிவெளியிட்டுள்ள அவர் அணியில் இடம்பெறுவதற்கான தகுதியுடன் பல வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளமை தன்னை மேலும் மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிரிக்கட்டில் அதிகரிக்கும் சொற்போர்

துடுப்பாட்ட வீரர்களும்,பந்துவீச்சாளர்களும் பரஸ்பரம் கடுமiயான சொற்போரில் ஈடுபடுவது குறித்த விவாதம் சமிபத்தில் சூடுபிடித்துள்ளது.டெனிஸ் லில்லி,கபில்தேவ்,சுனில்கவாஸ்கர் போன்றவர்கள் இது குறித்து தமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தும் இருக்கின்றனர்.அவர்கள் சொல்வது அனைத்திலும் ஏதோ ஒரு உண்மை இருக்கின்றது என்கிறார் ரஷீட் லத்தீப்.இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,...

தமிழீழ வலைப்பந்தாட்ட அணிக்கு பிரிட்டிஷ் சுற்றுலாவில் அபார வெற்றிகள்

முதல் தடவையாக தமிழர் தாயகத்திலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற தமிழீழ வலைப்பந்தாட்ட அணிமாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இவ்வணி லண்டண் வாழ் தமிழர்களைக் கொண்ட 11 அணிகளுடன் மோதி, சகல போட்டிகளிலும் வென்றது. இறுதியில் வெள்ளையர்களைக் கொண்ட பிறிக்ஸ்ரன் பரோ அணியுடன் மோதி 33.27 கோல்கள் விகிதத்தில் தமிழீழ அணி வெற்றிபெற்றது.

ஹெயாருடன் ஸ்-ரீவ் டன்னின் அனுபவங்கள்

முத்தையா முரளிதரனின் பந்துவீச்சுபாணி தவறானது என ஆஸி.நடுவர் டெரல் ஹெயார். முதன்முதலில் தாம் அவ்வாறு செய்யாமல் மௌளனம் காத்தமை குறித்து ஓய்வு பெற்ற நியூஸிலாந்து நடுவரான ஸ்-ரீவ்டன் தனது நூலொன்றில் விளக்கியுள்ளார்.களத்தில் மத்தியில் தனியாக ஒரு நடுவரின் கதை என்பதே இந்நூலின் பெயர். இந்நூலின் ஒருசில பகுதிகள் மாத்திரம் கடந்தவாரம் அவுஸ்திரேலிய பத்திரிகையொன்றில் வெளியாகின.

 

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]