|
கூடுதலான ஒரு நாள்
போட்டிகளில் வீரர்களை விளையாடச் செய்வதால் அவர்கள் விரைவாகவும்,அதிகமாகவும் உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர் என பாகிஸ்தானின்
முன்னாள் சகலதுறை ஆட்டவீரர் வசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். ஒரு
நாள் சர்வதேச போட்டிகளில் முதன் முதலில் 500விக்கெட்டுகளை
வீழ்த்தி சாதனை புரிந்தவர் வசிம் அக்ரம் இந்த 500விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு தான் எடுத்துக்கொண்ட
முயற்சிகளையும்தான் சந்தித்த அனுபவங்களையும் விபரித்துள்ள அக்ரம்
வீரர்கள் உடல் உபாதைக்குள்ளாக்கும் சந்தர்ப்பங்களில் அவர்கள்
விளையாடியுள்ள போட்டிகளைப் பற்றி சிந்திக்கமாட்டார்கள் எனவும்
குறிப்பிட்டுள்ளார். ஒரு நாள் போட்டிகளுக்கான அட்டவணையை தயார்ப்படுத்தும் போதும் பல
அணி வீரர்கள் இவ்வாறான சிரமங்களுக்கு முகங்கொடுக்கின்றனர் எனவும்
அவர் தெரிவிக்கின்றார்.ஒரு வருடத்தில் ஒரு வீரர் 10தொடக்கம் 12டெஸ்ட் போட்டிகளுக்கும்,பல ஒரு நாள் போட்டிகளுக்கும் முகங்கொடுக்கும்போது தொடர்ச்சியான
களைப்பு நிலை அவர்களுக்கு ஏற்படுகிறது.அடுத்தடுத்த
போட்டிகளுக்கு அவர்கள் தயாராவேண்டியுள்ளதால் பயிற்சியிலும்
ஈடுபடுகின்றனர். சிலர் பயிற்சியின்போதே உடல் உபாதைகளுக்கு உள்ளாகின்றனர்.அதிலும்
ஒருநாள் போட்டிகளுக்கு வீரர்கள் தங்களை கடுமையான பயிற்சிகளுக்கு
உட்படுத்தவேண்டி ஏற்படுகிறது.எனது பார்வையில் டெஸ்ட் போட்டிகளைவிட ஒருநாள் போட்டிகளிலேயே
வீரர்கள் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவஸ்கர் மற்றும்,இங்கிலாந்து அணியின் முன்னாள் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெப்ரி
போய்கொட் ஆகியோர் கடந்த மாதத்தில் சர்வதேச கிரிக்கெட்
கவுன்சிலுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தனர். அதில் சிறந்த அணிகளுக்கான ஒரு நாள் போட்டிகளில் எண்ணிக்கையை
குறைக்கவேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.2002ஆம் ஆண்டு ஒரு வருடத்தில் அதிகப்படியான ஒரு நாள்
போட்டிகளில் விளையாடிய பெருமையை தென்னாபிரிக்கா பெறுகிறது.அவ்வாண்டில்,அது 38ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.
அதற்கடுத்து இந்திய அணி 35போட்டிகளிலும்,இலங்கை 32போட்டிகளிலும்,நியூசிலாந்து 31போட்டிகளிலும்,அவுஸ்திரேலியா
29போட்டிகளிலும் விளையாடியுள்ளன.வசிம் அக்ரம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடைலான
போட்டிகள் பற்றியும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.இரண்டு அணிகளுக்கும் இடையில் போட்டிகள் இடம்பெறாததற்கு அரசியல்
காரணங்கள்தான் அதிக செல்வாக்குச் செலுத்துகின்றன என்றார். இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான போட்டிகளை
இரசிகர்கள் விரும்பிப் பார்க்கின்றனர். நான் சொல்வது
என்னவென்றால் கிரிக்கெட் விளையாட்டில் இருந்து அரசியலை
அகற்றவேண்டும் என்பதாகும்.1999ஆம் ஆண்டு இடம்பெற்ற டெஸ்ட் தொடருக்கு பின்னர் இரண்டு
அணிகளும் இதுவரை ஒரு போட்டிகளில் தானும்
கலந்துகொள்ளவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.அந்தப் போட்டியானது 1-1என்ற கணக்கில் சமநிலையில் முடிந்ததும்
குறிப்பித்தக்கது. |