www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

வேகப்பந்து வீச்சாளர்களை தேடி அலையும் இந்தியா

நியூசிலாந்துடனான டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி தயாராகியுள்ள விதம் குறித்து இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ஜோன் ரைட் கருத்து வெளியிட்டுள்ளார்.குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் தயாராகியுள்ளவிதம் குறித்து மகிழ்ச்சிவெளியிட்டுள்ள அவர் அணியில் இடம்பெறுவதற்கான தகுதியுடன் பல வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளமை தன்னை மேலும் மகிழ்ச்சில் ஆழ்த்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இந்திய அணியில் முன்னர் இடம்பெற்றிருந்த வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் தற்போதைய வேகப்பந்துவீச்சாளர்களுக்கும் இடையில் குறிப்பிடத்தக்க வித்தியாசமாக அமைவது அவர்களது உடலமைப்பாகும்.தற்போதுள்ளவர்கள் முன்னர் அணியில் இடம்பெற்றிருந்தவர்களைவிட வலுவான உடலமைப்பைக் கொண்டுள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.பாலாஜி,ஜாஹீர்கான் இர் பதானி,அவிஸ்கார் சால்வி,அஜித் அகார்கர் அமித் பண்டரி,சித்தார்த் திரிவேதி,போன்ற வேகப்பந்துவீச்சாளர்கள் பெங்களுரில் இடம்பெற்ற பயிற்சிமுகாமிற்காகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.இது தவிர வேறு பல வேகப்பந்துவீச்சாளர்களையும் பயிற்சி முகாமிற்கு இந்தியத் தெரிவுக்குழுவினர் அழைத்திருந்தனர்.துடுப்பாட்ட வீரர்களை சகல வகை பந்துகளையும் எதிர்கொள்ளக்கூடயதாக மாற்றுவதே இதன் நோக்கம்.இவர்களில் ஜாஹீர்கான் மாத்திரமே நியூசிலாந்துடனான போட்டிகளில் விளையாடவுள்ள இந்திய அணியில் இடம்பெறவுள்ளன.

அஸிஸ் நெஃரா காயம் காரணமாக விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.சிறீநாத் குறித்து எதுவும் தெரியாத நிலை காணப்படுகிறது.ஜோன் ரைட் இவர்களில் எவர் குறித்தும் பெயர்சொல்லி கருத்து வெளியிடாத போதிலும் ஐந்து அல்லது ஆறு வேகப்பந்துவீச்சாளர்கள் தன்னை கவர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.முனாவ் பட்டேல் குறித்து நிருபர்களின் கேள்விக்கு ஜோன் ரைட் பதிலளிக்கையில் முனாவ் பட்டேல் போன்ற இளம் பல வீரர்கள் உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.எனினும் முதல்தரப் போட்டிகளில் அவர்கள் எவ்வாறு விளையாடுகின்றார்கள் எனப் பார்க்கவேண்டியது அவசியம் என ஜோன் ரைடட் குறிப்பிட்டுள்ளார்.இவர்களைவிட தெரிவுக் குழுவினரால் தவறவிடப்பட்ட ஒருசிலர் இருக்கலாம் எனவும் ஜோன்ரைட் தெரிவித்துள்ளார்.

பல வேகப்பந்துவீச்சாளர்கள் உள்ளதால் திறமையான சிலரை தெரிவு செய்வதில் கவனம் சிதறியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.தற்போது வேகப் பந்துவீச்சாளர்கள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டுவருவதையும் அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.இந்தியாவைப் பொறுத்தவரை திறமையான சுழல் பந்துவீச்சாளர்கள் பலர் இருப்பதால் திறமையான வேகப்பந்துவீச்சாளாகளே தேவையாக இருப்பதாக ஜோன்ரைட் குறிப்பிட்டுள்ளார்.உலகின் சகல சிறந்த கிரிக்கெட் அணிகளிலும் இரண்டு அல்லது மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் இடம்பெற்றிருப்பது வழமை என்பதையும் ஜோன் ரைட் சுட்டிக்காட்டியுள்ளார்.இந்திய அணியில் முன்னர் இந்தநிலை காணப்படவில்லை எனவும் ரைட் குறிப்பிட்டுள்ளதுடன் வெளி நாடுகளில் சுழல்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளங்களை எவரும் தயாரிக்கப்போவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.வெளிநாடுகளில் வெல்வதற்கு மூன்று அதி திறமைவாய்ந்த வேகப்பந்துவீச்சாளர்கள் அல்லது ஒரு தலைசிறந்த சுழல்பந்துவீச்சாளர் தேவை எனவும் ரைட் குறிப்பிட்டுள்ளார்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]