www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

இன்சமாமின் எழுச்சி

உலகில் வேகப்பந்துவீச்சை நன்கு சமாளிக்கும் திறமையான விரர்களில் இன்சமாமும் ஒருவர் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கானால் பாராட்டப்பட்டவர். களத்தில் இறங்கினால் அது டெஸ்ட்டோ, ஒரு நாள் போட்டியோ அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் அடித்து ஆடுவது இவருக்குக் கைவந்த கலை.

சில ஆண்டுகளுக்கு முன்பே சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட எண்ணினார்.அதற்குக் காரணம், இவரது கால் வலிதான்.மற்ற வீரர்களின் அன்புத் தொல்லையால் தனது ஓய்வு அறிவிப்பை ஒத்திவைத்துவிட்டார்.நடந்துமுடிந்த உலக கிண்ணத்தில் பாகிஸ்தான் அணியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட அவர் மொத்தமாக 16ஓட்டங்களை மட்டுமே எடுத்தார்.இந்த தொடர் முடிந்ததும் நீக்கப்பட்ட சீனியர் வீரர்களில் இவரும் ஒருவர்.

உதவி தலைவர் பதவியும் இவருக்கு பறிபோனது.இந்நிலையில் இளம் வீரர்களோடு களம் இறங்கிய பாகிஸ்தான் முக்கிய போட்டிகளில் தோல்வியை தழுவ மீண்டும் 4மாதத்துக்குப் பிறகு அணியில் சேர்க்கப்பட்டார்.பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கான அணியில் இவர் சேர்க்கப்பட்டாலும்,முதல் 2 போட்டிகளில் இவர் சிறப்பாக ஆடவில்லை.இந்நிலையில் மூன்றாவது போட்டியில் தோல்வியை நெருங்கிக்கொண்டிருந்த தனது அணியை தனி ஆளாக நின்று சிறப்பான சதத்தால் வெற்றிபெற வைத்தார்.சமீப காலமாக இப்படி ஒரு போட்டியை யாருமே பார்த்திருக்கமுடியாது.என்னையா ஒதுக்கிவைத்தீர்கள் என்பதுபோல இருந்தது இவரது ஆட்டம்.இதற்குப் பரிசு அளிக்கத்தானோ என்னமோ பங்களாதேஷ் ஒரு நாள் தொடரில் தலைவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]