|
முதல் தடவையாக தமிழர் தாயகத்திலிருந்து பிரிட்டனுக்குச் சென்ற
தமிழீழ வலைப்பந்தாட்ட அணிமாபெரும் வெற்றிகளைப் பெற்றுள்ளது. இவ்வணி
லண்டண் வாழ் தமிழர்களைக் கொண்ட 11 அணிகளுடன் மோதி, சகல
போட்டிகளிலும் வென்றது. இறுதியில் வெள்ளையர்களைக் கொண்ட
பிறிக்ஸ்ரன் பரோ அணியுடன் மோதி 33.27 கோல்கள் விகிதத்தில் தமிழீழ
அணி வெற்றிபெற்றது.
தமிழீழ வலைப்பந்தாட்ட அணி, முதன்முறையாக வெள்ளையர் அணியுடன்மோதி
வெற்றிபெற்றுள்ளது. ஆங்கிலேயர்களை சொந்த மண்ணிலேயே தமிழீழ அணி
தோற்கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.தமிழீழ வலைப்பந்தாட்ட அணி தனது பிரிட்டிஷ் சுற்றுலாவில் முதன்
முதலில் ஸ்ரான்லி கல்லு}ரி பழைய மாணவிகள் அணியுடன் சிநேகபூர்வ
போட்டியில் மோதி 61-01 விகிதத்தில் வென்றது. பின்னர் இந்து
மகளிர்கல்லு}ரிபழைய மாணவிகள் அணியை 56-11 விகிதத்திலும், வேம்படி
மகளிர் அணியை 57-17 விகிதத்திலும் வென்றது. அதன்பின் ஜுலை 27ஆம்
திகதி புறோம்லி நகரில் நடைபெற்ற 8ஆவது விளையாட்டு விழாவில் தமிழீழ
அணி பங்குபற்றியது.
இத்தொடரில் தனது முதல் போட்டியில் யாழ்.இந்து மகளிர் கல்லூரி
அணியை 12-3 விகிதத்திலும் வேம்படி மகளிர் கல்லு}ரி அணியை 14-08
விகிதத்திலும் சுண்டுக்குளி மகளிர் கல்லு}ரி அணியை 15-06
விகிதத்திலும் வல்வை அணியை 15-2 விகிதத்திலும் தமிழீழ அணி வென்றது.
இறுதிப்போட்டியில் சுண்டுக்குளி மகளிர் அணியும் தமிழீழ அணியும்
மோதின. இப்போட்டியில் தமிழீழ அணி 12-03 விகிதத்தில் வென்றது.பின்னர் இவ்வணி, லண்டன் வாழ் தமிழர்தெரிவு அணியுடனான
கண்காட்சிப்போட்டியில் 25-09 விகிதத்தில் வென்றது. வெம்பிளி நகரில்
நடைபெற்றது. மேலும் இருபோட்டிகளில் வேம்படி மகளிர் அணியை 35-09
விகிதத்திலும் வல்வை அணியை 42-09 விகிதத்திலும் வென்றது.
இறுதியாக வெள்ளையர்களைக்கொண்ட பிறிக்ஸ்ரன் அணியுடன் தமிழீழ
அணிமோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் முதல் சுற்றில்
8-7 விகிதத்தில் தமிழீழ அணிவென்றது. இரண்டாவது சுற்று 6-6
விகிதத்தில் சமநிலையில் முடிவுற்றது.மூன்றாவது சுற்றில் 10-7 விகிதத்தில் பிறிக்ஸ்ரன் அணி வென்றது.
எனினும், 4ஆவது சுற்றில் ஆக்ரோஷமாகவிளையாடிய தமிழீழ அணி 12-4
விகிதத்தில் வென்றது. இதனால் முடிவில் 33-27 விகிதத்தில் தமிழீழ
அணி வெற்றி பெற்றது.தமிழீழ வலைப்பந்தாட்ட அணிக்கு ரதிகலாதேவி ஆனந்த வடிவேல் பயிற்சிகளை
வழங்கினார். இவ்வணியின் முகாமையாளராக றொஹான் இராஜசிங்கம்
கடமையாற்றினார்.
நிஷாந்தி இராஜரட்ணம் (அணித்தலைவி) தயாளினி செல்வராசா, சங்கீதா
திருச்செல்வம், சந்திரமதி தவராஜா, பூமகள் கந்தசாமி, மாலினி
மகாலிங்கம், நித்தியா இராஜரட்ணம், பிரிந்தா சோமசுந்தரம், கமீலா
குணரட்ணம், நிர்மலா காத்தமுத்து, ராதா ஆனந்தக்கிளி ஆகியோர்
இவ்வணியில் இடம்பெற்றிருந்த வீராங்கனைகளாவர்.
இதேவேளை, புறோம்லி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற 8ஆவது தமிழர்
விளையாட்டுவிழாவில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கலந்து
சிறப்பித்தனர். கிரிக்கெட், வலைப்பந்தாட்டம், மெய்வன்மைபோட்டி,
நீச்சல் போட்டி என்பன இவ்வாவில் நடைபெற்றன.
பல்வேறு கல்லூரிகளின் பழைய மாணவர்கள் பங்குபற்றிய கிரிக்கெட்தொடரில்
இறுதிப்போட்டியில் யாழ்.இந்துக்கல்லூரியை யாழ்.மத்திய கல்லூரி
வெற்றியீட்டி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கிக் கொண்டது.இப்போட்டிக்கு முன்னர் சினேகபூர்வ போட்டியொன்று நடைபெற்றது.
அப்போட்டியில் பாகிஸ்தான், மேற்கிந்தியத்தீவு, இங்கிலாந்து ஆகிய
நாடுகளின் 7 வீரர்களைக்கொண்ட அணியும், கனடாவின் தேசிய அணியில்
விளையாடிக்கொண்டிருக்கும் தமிழீழத்தைச் சேர்ந்த துஷ்யந்தன்,
சஞ்சீவ் ஆகியோரடங்கிய தமிழீழ அணியும் இப்போட்டியில் பங்குபற்றின.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சர்வதேச அணி 4 விக்கெட்
இழப்புக்கு 76 ஓட்டங்களை எடுத்திருந்தது. தொடர்ந்து
துடுப்பெடுத்தாடிய தமிழீழ அணி, 75 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஒரு
ஓட்டத்தினால் தோல்வியுற்றது. இப்போட்டிக்கு சிறப்பு விருந்தினராக
பாகிஸ்தான் அணியின் முன்னாள் அணித்தலைவர் ரமீஸ் ராஜா கலந்து
சிறப்பித்திருந்தார்.வெற்றிபெற்ற அணிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் தமிழீழ
விளையாட்டுத் துறைப்பொறுப்பாளர் இன்பன், பரிசுகளை
வழங்கிகௌளரவித்தார். |