|
துடுப்பாட்ட
வீரர்களும்,பந்துவீச்சாளர்களும் பரஸ்பரம் கடுமiயான சொற்போரில்
ஈடுபடுவது குறித்த விவாதம் சமிபத்தில் சூடுபிடித்துள்ளது.டெனிஸ் லில்லி,கபில்தேவ்,சுனில்கவாஸ்கர் போன்றவர்கள் இது
குறித்து தமது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்தும்
இருக்கின்றனர்.அவர்கள் சொல்வது அனைத்திலும் ஏதோ ஒரு உண்மை
இருக்கின்றது என்கிறார் ரஷீட் லத்தீப்.இது குறித்து அவர் மேலும்
கருத்துத் தெரிவிக்கையில்,இவ்வாறு தகாத வார்த்தைப்
பிரயோகங்களில் ஈடுபடுவது இன்றைக்கு ஆரம்பித்த விடயமல்ல.தற்போது
இது குறித்து கவனம் அதிகரித்துள்ளமைக்கு காரணம் ஸ்டம்புக்களில்
பொருத்தப்பட்டுள்ள மைக்ரோ போன்கள் மூலம் ரசிகர்களால் இதனை
வெகுவாக கேட்கமுடிகின்றமையே. இது ஒருவகையில்
சில வீரர்கள்
தண்டிக்கப்படுவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.கிளென் மக்ராத்,டரன் லீமன் போன்றவர்கள் தண்டனைக்கு உள்ளானதை சுட்டிக்காட்டலாம்.2003உலகக் கிண்ணப்போட்டிகளின்போது என் மீதும் இந்த
குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.எனினும் இது தவறான குற்றச்சாட்டு.விக்கெட்டுகளுக்குப் பின்னால் நின்றுகொண்டு அதிகம் சத்தமிடுபவன்
அல்ல நான்.கடந்த மார்ச் மாதத்தில் அவுஸ்திரேலியாவின் கழகப் போட்டியொன்றில்
எதிர்பாராத சம்பவமொன்று இடம்பெற்றது.எதிரணியின் வீரர்களின் தகாத வார்த்தைப் பிரயோகங்களுக்கு
எதிர்ப்புத் தெரிவித்து ஒரு துடுப்பாட்ட வீரர் மைதானத்திலிருந்தே
வெளியேறினார். நான் இந்த விடயம்குறித்து மாறுபட்ட கருத்தினை வைத்துள்ளேன்.இவ்வாறு வார்தைகளால் மோதுவது கிரிக்கெட்டுக்கு உகந்த விடயமல்ல
என பலர் சொல்கின்றனர்.நான் இதனை ஏற்கப்போவதில்லை.இதில்
சாதகமான(Positive)எதிர்மறையான(Negative)அம்சங்கள் இரண்டும்
அடங்கியுள்ளன.எதிர்மறையான விடயம் என்பது ஒருவரை வார்த்தைகளால்
வேதனைப்படுத்துவது.கிண்டல் செய்வது.சாதகமான விடயம் என்பது
சவாலை தூண்டுவது. அல்லது வேடிக்கையாக செயற்படுவது. வார்தைகளால் தூஷப்பதும் கிண்டல் செய்வதும் கிரிக்கெட்டினை
பாதிக்கும் விடயம்.இது சாதரணமாக ஒரு வீரர் தனது திறமையை
வெளிப்படுத்தி பந்துவீசிய பின்னரும் எதிரணி துடுப்பாட்டவீரரை
ஆட்டமிழக்கச்செய்ய முடியாத சமயத்தில் நிகழ்வது.அவ்வாறான
சமயத்தில் அவர்கள் பொறுமையிழந்து இவ்வாறான வார்தை பிரயோகங்களில்
ஈடுபடுகின்றனர்.இதனை முதலில் கட்டுப்படுத்தவேண்டியது களத்தடுப்பில் ஈடுபட்டுள்ள
அணியின் தலைவரின் பொறுப்பு.குறிப்பிட்ட வீரர் எல்லை
மீறிவிட்டாரா என்பதை தீர்மானிக்கவேண்டியது ஆட்ட நடுவரின்
பொறுப்பு.வார்தைகளால் சவால் விடுவதையும் வேடிக்கையாக செய்வதையும்
கிரிக்கெட்டின் ஒரு பகுதியாகக் கருதலாம். துடுப்பெடுத்தாடுவதற்காகக் களத்தில் நுழைந்தவுடன்
வேகப்பந்துவீச்சாளர்களை சவால்விடும் வகையில்
முறைத்துப்பார்க்குமாறு தனக்கு மியான்டாட் ஒரு முறை கூறியதாக
பாசிட் அலி என்னிடம் ஒரு முறை தெரிவித்திருந்தார்.முடிந்தால் எனக்குப் பந்து வீசிப்பார்(Let’s see if you can
hit me)என்ற வகையில் வேகப்பந்துவீச்சாளருக்கு சவால்விடும்
பார்வை அமையவேண்டும் என மியன்டாட் கூறினாராம்.குத்துச்சண்டையில் முகமது அலியின் இவ்வாறான சவால் விடும்
பார்வைக்காக பலர் அவரை இரசித்ததுண்டு. 1985 Benson and Hedges அரை இறுதி ஆட்டத்தின்போது மேற்கிந்திய
அணி வீரர்களுக்கு எதிராக ஹாசிம் ஓமர் வேடிக்கையாக வார்த்தைப்
பிரயோகங்களை மேற்கொண்டார்.மேற்கிந்திய அணியின் மல்கம் மார்ஷல், வின்ஸ்டன் டேவிட் போன்ற
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வேடிக்கையாக துடுப்பை
துப்பாக்கிபோல தூக்கிநடித்தார்.1992 உலக கிண்ணப் போட்டிகளின்போது சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று
இடம்பெற்றது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் எதிரான
போட்டியில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாடும்வேளை இந்தியாவின்
விக்கெட் காப்பாளராக கிரன்மொரே தொடர்ச்சியாக
சத்தமிட்டுக்கொடிண்ருந்தார்.இது பொறுக்க முடியாமல் மியன்டாட் வேடிக்கையாக தவளைபோல் பாய்ந்து
காட்டினார்.மேற்கிந்திய அணி வீரர்கள் என்றும் வார்தை பிரயோகங்களில்
ஈடுபட்டதில்லை. கிரிக்கெட் என்று வந்துவிட்டால் மைதானத்தில்
அவர்களைப் போல வேறு எவரையும் பார்க்கமுடியாது என்றாலும் அவர்கள்
வார்த்தை பிரயோகங்களில் ஈடுபட்டதில்லை. |