www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

கிரிக்கெட்டின் தலைமையகம் இந்தியா

சொந்த மண்ணில் கங்குலியை ஜெயிப்பது சாதாரணமல்ல என்று சொல்கிறார் வர்ணனையாளர் டொனி கிரேக்.கங்குலி தலைமையிலான இந்திய அணியை,சொந்த மண்ணில்வைத்து ஜெயிப்பது சாதாரணமான விஷயம் அல்ல.அவுஸ்திரேலிய அணியால்கூட முடியாத விஷயம் அது!என்று நியூசிலாந்து அணியை எச்சரிக்கிறார் டோனிகிரேக்.

கிரிக்கெட் வர்ணனை என்றால்.....டோனி கிரேக் பெயர்தான் முதலில் வரும்.கிரிக்கெட் போலவே அவரது அவர்ணனையும் அதிகம் ரசிக்கப்படும்.டோனி வித்தியாசமான மனிதர்.தென் ஆப்ரிக்காவில் பிறந்தார்.இங்கிலாந்து அணித்தலைவராக இருந்தார்.அவுஸ்திரேலிய நாட்டுக் குடியுரிமை பெற்றார்.இப்போது இந்தியாவுக்கு இடைவிடாது விஜயம் செய்கிறார்.இது பற்றிக் கேட்டால் "நான் உலகிற்கே பொதுவானவன்.குறுகிய வட்டத்துக்குள் என்னை கற்பனை செய்யவேண்டாம்" என்கிறார்.இந்தியாவுக்கு அவர் முதலில் சென்றது 1968 ல்.அதற்குப் பிறகு இன்றுவரை எண்ணற்ற முறை சென்றுகொண்டிருக்கிறார்.காரணம் கேட்டால், இந்தியா எனக்கு ரொம்பர் பிடிக்கிறது.அது மட்டுமல்ல, கிரிக்கெட்டின் தலைமையகம் என்று நான் கருதுவது இந்தியாவைத்தான்! என்கிறார்.

கிரிக்கெட்டின் தலைமையகமாக இந்தியாவைக் குறிப்பிடலாம். இங்குதான் கிரிக்கெட்டை அதிகம் ஆர்வமாக ரசிக்கிறார்கள்.கோல்கட்டா,டன் கார்டன் மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகள் விளையாடியிருக்கிறேன் அவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்துக்கு முன் அதற்குப் பிறகு நான் விளையாடியதே இல்லை.இதெல்லாம் விட,அதிகளவு நிதி இங்கிருந்துதான் கிரிக்கெட்டுக்குக் கிடைக்கிறது.பொருளாதார விஷயத்திலும் இந்தியாதான் கிரிக்கெட்டை வழிநடத்துகிறது.ஆகவேதான் சொல்கிறேன்,கிரிக்கெட்டின் தலைமையகம் இந்தியாதான்!என்று உறுதிசெய்கிறார்.

நியூசிலாந்து அணியின் இந்தியப் பயணம் பற்றிக்கேட்டால்,சவரவ் கங்குலி தலைமையிலான இந்தி அணியை சொந்த மண்ணில்வைத்து ஜெயிப்பது மிகவும் கடினமான விஷயம்.அவுஸ்திரேலிய அணியால்கூட அது முடியவில்லை.சச்சின்,சவுரவ்,ராகுல்,லக்ஷ்மண் ஆகியோர் மிகச்சிறந்த வீரர்கள்.அவர்களை சமாளிப்பது நியூசிலாந்து பந்துவீச்சாளர்களுக்குச் சவாலான காரியம்.அதே சமயம் நியூசிலாந்து அணியை குறைத்து மதிப்பிட்டுவிடக்கூடாது.கடுமையாகப் போராடக்கூடிய அணி அது.அவர்கள் ஒரு திட்டம் வகுத்துக்கொண்டு களமிறங்குவார்கள்.அவர்களது திட்டத்தை முறியடிக்காவிட்டால்,நியூசிலாந்து அணியைக் கட்டுப்படுத்துவது கடினம் என்கிறார் டோனி கிரேக்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]