www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

விளையாட்டு செய்திகள்

உலகக்கிண்ணத்தை இத்தாலி வென்றது!

-தகவல்எலகக்கிண்ணம் வலைப்ப்பூ-
இப்போதைய உலக கிண்னத்தை வடிவமைத்த சிற்பி ஒரு இத்தாலியர். இம்முறை தனது நாட்டுக்கே அது கொண்டுவரப்படவேண்டும் என அவர் விரும்பியதாக ஒரு தகவலை முன்பு கேள்விப்பட்டு இருந்தேன். தகவல் சரியோ தவறோ தெரியாது. அதன்படி நடந்தேறிவிட்டது.
சற்றுமுன் தங்களுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடைபெற்ற போட்டியில் வென்று உலக கிண்ணத்தை இத்தாலிவீரர்கள் கொண்டு செல்கிறார்கள்.

இன்றைய இறுதிப்போட்டி படு விறுவிறுப்பானது. போட்டிதொடங்கி 7ம் நிமிடத்தில் ஒரு தண்டனை உதையை பயன்படுத்தி முதல்கோலை சிடான் அடித்தார். மலூடா விழுத்தப்பட்டதால் அந்த வாய்ப்பு வந்தது. பிரான்சு 1:0 எனமுன்னிலைக்கு வந்தது. ஆனால் அந்நிலைமை நீடிக்கவில்லை. 18ம் நிமிடத்தில் மற்றறாஸி ஒரு கோணர்கிக்கை தலையால் அற்புதமாக இடித்தது ஒரு கோலைப் போட்டார். இருநாடுகளும் கண்ட சமநிலை 100 நிமிடங்களுக்கு மேல் நின்று நீடித்தது.
முதல் 90நிமிட விளையாட்டின் முன் பாதியில் இத்தாலியின் ஆதிக்கமும் பின் பாதியில் பிரான்சின் ஆதிக்கமும் போட்டியில் காணப்பட்டது. ஆயினும் கோல் எதனையும் எவரும் அடிக்காமையால் 30நிமிட நீடிப்பு நேரம் வழங்கப்பட்டது. அதில் முதல் 15 நிமிடங்களில் மாற்றம் வரவில்லை சில வீரர்கள் மாற்றப்பட்டு இருந்தனர்.
பிரான்சின் முன்னணிவீரர் ஹென்றி 107 நிமிடத்திலும் றிபேறி 100 நிமிடத்திலும் திருப்பி அழைக்கப்பட்டு வில்ரோர்ட், றெசெகுற் இறக்கப்பட்டு இருந்தார்கள். இத்தாலி தரப்பிலும் டொட்டி, பெறோற்ற ஆகியோர் 61ம் நிமிடத்திலும் கமரானோசி 86ம் நிமிடத்திலும் மாற்றப்பட்டு இருந்தனர்.
இறுதி 15வது நிமிடத்தில் மிகப்பரபரப்பான எவரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று இடம் பெற்றது. இத்தாலி வீரர் மாற்றறாஸியை நெஞ்சில் தன் தலையால் இடித்து சிடான் விழுத்தினார். அதனால் சிவப்பு அட்டைபெற்று வெளியேறினார். ஓர் ஒப்பற்ற வீரரான சிடானிடம் இவ்விதமான நடத்தையை எவரும் எதிர்பார்க்கவில்லை.
(இந்த உலககிண்ணப்போட்டிகளில் தங்கப்பந்துவிருதினை இவர் வெல்வார் என எதிர்பார்ப்புகள் இருந்தன. கருத்துக்கணிப்பில் சரிபாதியளவுக்கு அவருக்கு வழங்கப்பட்டு இருந்தது. மீதியைத்தான் மற்றைய் 9 வீரர்கள் பெற்றிருந்தனர். )சிடான் இன்னொரு உலககிண்ணம் விளையாடப்போவதில்லை. வயது 34 ஆகிவிட்டது. பொறுமை காக்காமையால் பெரும் விமர்சனங்களுக்காளாகியுள்ளார். ஒரு முக்கியமான விடயம் என்னவெனில்
1)பிரான்சுக்கு தண்டனைஉதை வழங்கப்படக் காரணமாக மலூடாவை விழுத்தியவர்,
2)தலையால் தட்டி கோலடித்து இத்தாலியை 1:1 எனச் சமநிலைப்படுத்தியவர்,
3)சிடானினால் நெஞ்சில் தலையால் இடித்து விழுத்தப்பட்டவர்
எல்லாமே ஒரேநபர்தான். பெயர் மற்றறாஸி.

சிடான் வெளியேறியபின் 10 பேருடன் பிரான்சு விளையாடியது. இத்தாலி இறுதி நிமிடத்தில் தீவிரம் காட்டியும் கோலடிக்கமுடியவில்லை. எனவே தண்டனை உதைமூலமாக வெற்றியை நிர்ணயிக்கும் நிலை வந்தது. இதில் இரு கோல்காப்பாளர்களும் எந்தக்கோலையும் தடுக்கவில்லை. எனினும் பிரான்சின் வீரர் றேசெகூற் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியமையால் பிரான்சு 5:3 கணக்கில் தோற்றுப்போனது.
2ம் தடவையாக கிண்ணத்தைக் கைப்பற்றும் சந்தர்ப்பத்தை இழந்து பிரான்சு வெளியேற இத்தாலி 4வது தடவையாக உலக கிண்ணத்தைக் கைப்பற்றியது. இப்போது பிரேசில் 5 இத்தாலி 4 ஜேர்மனி 3 என உலககிண்ணத்தை கைப்பற்றிய வரிசைஅமைகின்றது. இனிப் பிரேசிலைப் பிடிப்பது இத்தாலியின் இலட்சியமாகலாம்.
இறுதிப்போட்டியின் நாயகன் இத்தாலியின் பிர்லே.
பந்துக்கட்டுப்பாடு இத்தாலி 55% பிரான்சு 45%

கோல் எத்தனங்கள் இத்தாலி 5 பிரான்சு 13

மஞ்சள் அட்டை இத்தாலி 1 பிரான்சு 3

சிவப்பு அட்டை பிரான்சு 1 (சிடானுக்கு உ.கி.இறுதிப்போட்டியில் சிவப்பு அட்டைபெற்ற 4ம் வீரன் என்கிற தகைமையைப்பெற்றுள்ளார்.)

அனுப்பியவர் வெப்தமிழன்

2006 பிபா கால்ப்பந்தாட்ட உலக்கிண்ணம் இத்தாலியின் கைகளில்.

-Unnmai.com-
ஜெர்மனியில் இடம்பெற்ற 2006 பிபா கால்ப்பந்தாட்ட உலக்கிண்ணப்போட்டிகளில் இத்தாலி அணி வெற்றிபெற்றுää உலகக்கோப்பையினையும்ää உலக சம்பியன் என்ற பட்டத்தையும் தனதாக்கிக்கொண்டுள்ளது.
ஜெர்மனியின் பேர்ளின் நகரில் ஜூலை 9ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக இடம்பெற்ற பிரான்ஸ் மற்றும் இத்தாலி அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டிகளிலேயே இத்தாலி இந்த வெற்றியினைப்பெற்றுள்ளது. இதன்மூலம் உலகக்கிண்ண காற்பந்தாட்டப்போட்டிகளில் நான்காவது தடவையாக உலக சம்பியனாக இத்தாலி அணி பரிணமித்துள்ளது.
1994 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கால்ப்பந்தாட்டபோட்டிகளில் மிகத்திறமையான அணியாக இருந்தும் இறுதிப்போட்டிகளில் வெற்றிக்கோப்பையினை தவறவிட்ட இத்தாலி அணிää அந்த நாள் வேதனைகளை 12 வருடங்கள் கழித்து இன்று கழைந்துகொண்டுள்ளது.
இம்முறை இறுதிப்போட்டிகள் தொடங்கியவுடனனேயே பிரான்ஸ் அணியின் கைகள் ஓங்கியே இருந்தன.
போட்டி அரம்பமாகி 7ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணிக்குக்கிடைத்த ஒரு பனால்ட்டி வாய்ப்பினை பிரான்ஸ் அணியின் தலைவர் சினிடான் ஸிடான் சிறந்த முறையில் பயன்படுத்தி பிரான்ஸ் அணிக்கு முதலாவது கோலினை பெற்றுக்கொடுத்தார்.
தொடர்ந்த போட்டியில் தொடர்ந்தும் பிரான்ஸ்ஸின் கை ஓங்கியிருந்தவேளையிலும்ää 19ஆவது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு கிடைத்த கோணல் கிக் இனை சரியான முறையில் பயன்படுத்திய இத்தாலிய அணிää ; மாத்தேரஸி மார்க்கோ பெற்ற கோல் மூலம் அணிகளின் நிலை சமமாக்கப்பட்டது.
போட்டிநேரம் முடியும் போதும் இரண்டு அணிகளும் சமநிலையிலேயே இருந்தமையினால் மேலதிக ஆட்டநேரமாக 30 நிமிடங்கள் வழங்கப்பட்டது.
ஆனால் துரதிஸ்ரவசமாக போட்டியின் 110ஆவது நிமிடம் இத்தாலி அணியின் தலைவரும்ää நம்பிக்கை நச்சத்திரமுமான ஸிடான்ää இத்தாலி அணிவீரர் உடன் ஏற்பட்ட வாக்குவாத்தின்போது அவரை தனது தலையினால் தாக்கியமைக்காக போட்டி நடுவரால் சென்நிற அட்டை காட்டி வெளியேற்றப்பட்டார்.
அத்துடன் இன்றைய போட்டிகளில் 3 பிரான்ஸ் வீரர்களுக்கும்ää 1 இத்தாலி வீரருக்குமாக 4 மஞ்சள் அட்டைகளும் நடுவரால் காட்டி எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக நேரத்திலும் இரு அணியினரும் எந்த வித கோல்களையும் பெறமுடியாத காரணத்தால் வெற்றியைத்தீர்மானிப்பதற்காக பனால்ட்டி முறை பயன்படுத்தப்பட்டது.
இதில் 5-3 என்ற கணக்கில் இத்தாலி அணி வெற்றியினைத் தனதாக்கிக்கொண்டது.
இந்த முறை பிபா உலகக்கிண்ண போட்டிகள் வேறெந்த உலகக்கிண்ண போட்டிகளையும்விட எவரும் எதிர்பாராத பல மாற்றங்களை கொண்டதாகவே இருந்துள்ளது.
உலகின் பலமான அணிகள் என்று பலராலும் கருதப்பட்டää பிரேஸில்ää ஆஜென்ரீனாää ஜெர்மன் போன்ற அணிகள் தோல்வியடைந்து வெளியேறி பல ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சிகளை கொடுத்திருந்தன. அத்துடன் எந்த உலகக்கிண்ணப்போட்டிகளிலும் பெறப்பட்ட தனிநபர் ஹட்ரிக் கோல்கள் இந்தமுறை உலக்கிண்ணப்போட்டிகளில் எந்தவொரு வீரரும் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எது எப்படியோ இத்தாலி அணியினை வாழ்தியபடி ஜெர்மனியில் இருந்து விடைபெறும் பிபா உலக்கிண்ண 2006 போட்டிகள்ää மீண்டும் 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்காவில் சந்திக்கக்காத்திருக்கின்றது.

அனுப்பியவர் வெப்தமிழன்

இதுவரை வெல்லப்பட்ட பதக்க விபரம்(New)

ஏதென்ஸ் நகரில் இம்பெற்றுவரும் ஒலிம்பிக் விளையாட்டுப்போட்டிகளில் இதுவரை வெற்றி கொள்ளப்பட்ட பதக்கவிபரம் வருமாறு

அமெரிக்கா தங்கம்-34 வெள்ளி-38 வெங்கலம்-28
சீனா தங்கம்-31 வெள்ளி-17 வெங்கலம்-14
ரஸ்யா தங்கம்-25 வெள்ளி-26 வெங்கலம்-36
அவுஸ்ரேலியா தங்கம்-17 வெள்ளி-16 வெங்கலம்-16
யப்பான் தங்கம்-15 வெள்ளி-10 வெங்கலம்-12

மேலும் விபரங்களிற்கு,உத்தியோக பூர்வ இணையத்தளம்

அனுப்பியவர் வெப்தமிழன்

வெண்கலப் பதக்க வாய்ப்பையும் இழந்த பயஸ் - பூபதி!

ஏதேன்ஸ் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் 3வது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் குரோஷிய இணையிடம் தோற்றதன் மூலம் வெண்கலப் பதக்கம் பெறும் வாய்ப்பையும் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - மகேஷ் பூபதி இணை இழந்து விட்டது.

சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற ஆட்டத்தின்போது குரேஷியாவின் மரியோ அன்கிக் - இவான் லுபிசிக் இணையிடம் 6-7 (5-7), 6-4, 14-16 என்ற செட்களில் இந்திய இணை தோற்றது. இதன் மூலம் வெண்கலப் பதக்கம் கிடைக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பும் தகர்ந்தது.ற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் லியாண்டர் பயஸ்- மகேஷ் பூபதி இணை அரையிறுதியில் தோற்று வெளியேறியது. என்றாலும் 3வது இடத்தையாவது வென்று வெண்கலப் பதக்கம் பெறுவர் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் குரேஷியாவின் இளம் வீரர்கள் அந்தக் கனவை தகர்த்தனர்.இறுதி செட் மட்டும் சுமார் 2 மணி நேரம் நீடித்தது குறிப்பிடத்தக்கது

அனுப்பியவர் வெப்தமிழன்

மூன்று நாடுகள் கிரிக்கெட் : இந்தியா - பாக். மோதல்!

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்ட்ரேலியா ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு கிரிக்கெட் போட்டியின் முதல் லீக் ஆட்டத்தில் நாளை இந்தியா, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது!ஹாலந்து நாட்டின் ஆம்ஸ்டெல்வின் நகரில் நடைபெறும் நாளைய போட்டியில் இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் புதுமுகமாக சேர்க்கப்பட்டுள்ளார். என்றாலும், அவர் களமிறக்கப்படுவாரா என்பது நாளைதான் தெரியவரும்.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்திய அணி, பாகிஸ்தான் சென்று டெஸ்ட் மற்றும் ஒரு நாள் தொடரை கைப்பற்றி வந்த பின்னர் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியாவை எதிர்கொண்டது. இலங்கையில் நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டியின் போது இந்தியா, பாகிஸ்தானிடம் தோல்வியைத் தழுவியது.அதனையடுத்து நாளை நடைபெறும் போட்டியில் இரு அணிகளுமே வெற்றி முனைப்புடன் களமிறங்க தயாராகவுள்ளன. இதற்காக இரு நாட்டு அணிகளும் ஏற்கனவே போய்ச் சேர்ந்துள்ளன.

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]