|
குளோனிங் குளறுபடிகள்...(மூலம்:குருவிகள்) |
|
May 07, 2004
குளோனிங் மூலம் (பிறப்புரிமையியல்
படியாக்கம்) பிறப்பிக்கப்பட்ட பிறப்புரிமை வழி திறமை
புகுத்தப்பட்ட குதிரைகளைக் கொண்டு குதிரைப் ஓட்டப்
பந்தயங்களில் விளையாடுவது குறித்தும் அவற்றை விசேடித்து இனம்
பெருக்குவது குறித்தும் உள்ள அபாயத்தை சுட்டிக்காட்டி
குதிரைகள் மற்றும் விலங்குகள் நலன்காப்போர் எழுப்பிய குரலால்
குதிரைக் குளோனிங் தொடர்பில் வழங்கப்பட்டிருந்த அனுமதி
பிரிட்டனில் தடை செய்யப்பட்டுள்ளது...இது குதிரைக் குளோனிங்
தொடர்பான பல பிறப்புரிமையியல் கல்விசார் ஆய்வுகளையும்
பாதிக்கலாம் என்று பேராசிரியர்கள் கவலை தெரிவித்துள்ளனர்...!
 |
|
|
நிலவில் உள்ள ஒரு ஏக்கர் நிலம் 16.75 இங்கிலாந்து பவுன்
-சுபாஷிணி
கனகசுந்தரம்(ஜெர்மனி)- மூலம்:சுபாஒன்லைன் |
|
January 16, 2004
நாகரிகம் கண்ட அனைத்து மனித இனமும் அண்டத்தைப் பற்றியும்
கோள்களைப் பற்றியும் தேடுதல் முயற்சிகளில் இறங்கியிருக்கின்றன.
அதில் தற்போதைய விஞ்ஞான வளர்ச்சியில் நடந்துவரும் பல்வேறு
வகையான வியக்க வைக்கும் ஆய்வுகள் புதிய விஷயங்களை நாளுக்கு நாள்
அறிவித்துக் கொண்டிருக்கின்றன. புதிய விஷயங்கள் நமக்குக்
கிடைக்கும் போது அதில் அடிப்படையிலேயே எதிர்பார்ப்பும்
ஆச்சரியங்களும் சேர்ந்தே வருகின்றன என்பதுதான் உண்மை.
 |
|
Mars - Spirit and the Opportunity
-சுபாஷிணி
கனகசுந்தரம்(ஜெர்மனி)-மூலம்:சுபாஒன்லைன் |
|
January 15, 2004
1958ல் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட நாசா பல்வேறு விண்வெளி
ஆராச்சிகளுக்கு இடையில் செவ்வாய் கிரகத்தின் ஆராய்ச்சியில் தனி
கவனத்தை செலுத்தி தனது ஆய்வுகளை மெற்கொண்டு வருகின்றது.
பூமியைப்ப் போலவே இந்த கிரகத்திலும் உயிரினங்கள் இருக்கக்கூடிய
சாத்தியங்கள் இருக்கின்றனவா என்பதைக் கண்டறிய பல முயற்சிகள்
மேற்கொள்ளப்பட்டன. இதில் மிக முக்கியமானதாகக் கருத்தப்படுவது
1997ல் அனுப்பப்பட்ட நாசாவின் Path Finder ரோபோட். மனிதர்கள்
யாருமின்றி தனியாகவே தகவல்களைச் சேகரிக்கும் வகையில் இந்த
நுணுக்கமான ரோபோட் அங்கு சென்றுவந்தது. |
|
அமெரிக்காவின் நாஸா
அமைப்பினது இன்னொரு மைல் கல் சாதனை! |
|
January 07-2004
வெற்றிகரமாக
செவ்வாய்க்கிரகத்தில் தரையிறங்கிய ஸ்பறிற் தானியங்கி
கருவி மிகவும் கூடிய தரமுள்ள படங்களை
அனுப்பிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான படங்கள் இதுவரை
எந்த ஒரு கிரகத்திலும் எடுக்கப்படவில்லை
எனத்தெரிவிக்கப்படுகின்றது. இந்தத்தரையிறக்கம் இடம்பெற்ற
பிரதேசத்துக்கு அண்மையில் விபத்துக்குள்ளான கொலம்பிய
விண்கலத்தின் தலைமை வீரரின் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.<மேலதிக
விபரங்கள்><புகைப்படங்கள்> |
|
|
December25-என்ன நடந்தது
பிரித்தானிய ரோவர்-Beagle 2 க்கு..?! |
|
பிரித்தானியாவுக்குச் சொந்தமானதும் 35 மில்லியன் பவுன்கள்
பெறுமதி மிக்கத்தும்,ஐரோப்பா சார்பில் ஐரோப்பிய விண்வெளி
ஆராய்ச்சி நிறுவனத்தால் செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட Beagle 2,திட்டமிட்டபடி கிறிஸ்மஸ்தினமான இன்று செவ்வாயில் தரையிறக்கப்பட
முயற்சிக்கப்பட்ட போதும் அது தரையிறங்கியதை உறுதிப்படுத்தும்
மின்னலை தகவல்கள் அதனைக் கட்டுப்படுத்தும் பூமியில் உள்ள நிலையம்
பெறத் தவறிவிட்டது.More |
|
|
|
September 30, 2003
உலக வெப்பமுறுதலின் (Global Warming)
பக்க விளைவால் 160,000 பேர் வருடம் தோறும் மரணிப்பதாக விஞ்ஞானிகளால்
அறிவிக்கப்பட்டுள்ளது...மலேரியா,டயறியா மற்றும் போசனைக் குறைபாடுகள்
போன்றவை இதற்கான முக்கிய நேரடிக்காரணிகளாக இருக்கின்றன...இது
ஆபிரிக்க தெற்கு,தென்கிழக்காசிய பிராந்தியத்தையே மிகவும்
பாதிப்பதாகவும்...சிறிய வெப்பநிலை உயர்ச்சி கூட பெரிய அளவில்
நுளம்புப் பெருக்கத்திற்கு வழிவகுப்பதாகவும்... நுளம்புகள் பரந்து
தேசம் விட்டு தேசம் பெருகவும் வகை செய்வதாகவும் கண்டறியப்பட்டுள்ளது...!
அத்துடன் இவ்வெண்ணிக்கை 2020இல் இருமடங்காகும் எனவும் எதிர்வு
கூறப்பட்டுள்ளது..இந்த ஆய்வில் உலக சுகாதார ஸ்தாபனமும் (WHO) ஒரு
பக்காளியாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது...!
|
|
|
|
September 25, 2003
மொத்தம் ஆறு செயற்கைக் கோள்களைச் சுமந்து கொண்டு ஒரு ரஷ்சிய உந்து
வாகனம் விண்ணிற்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது..இதில் இரண்டு
ரஷ்சிய இராணுவச் செயற்கைக் கோள்களும்..நைஜீரிய...பிரித்தானிய ...தென்கொரிய...துருக்கிய
செய்மதிகள் தலா ஒன்று வீதமும் உள்ளடங்குகின்றன...இவை இன்று
ஏவப்பட்டுள்ளன(27-sep-2003).
அதேவேளை ஐரோப்பா சார்பில் சந்திரனுக்கான விண்கலம் (SMART-1 Moon
exploration probe) ஒன்றையும் மேலும் இரண்டு செயற்கைக் கோள்களையும்
சுமந்து கொண்டு European Ariane-5 rocket தென் அமெரிக்காவில் உள்ள
French Guiana இல் இருந்து இன்று விண்ணிற்குச் செலுத்தப்பட்டுள்ளது...!
செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்களில் ஒன்று இந்தியாவுக்கும் மற்றையது
பிரான்ஸிற்கும் உரியது...இந்தியச் செயற்கைக் கோள் INSAT 3-E எனப்
பெயரிடப்பட்டுள்ளது...சந்திரனுக்கான கலம் 370 கிலோ நிறையுடையது...அது
தனது 15 மாதப் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது...அதன் முக்கிய
குறிக்கோள்..சந்திரனில் நீர் மற்றும் பனிப்படலம் பற்றிய ஆய்வு
செய்வதும் சந்திரனின் தோற்றம் பற்றி ஆராய்வதுமே அகும்...!
|
|
September 26, 2003
நமது செல்லப் பிராணிகளில் ஒன்றான நாயின் ஜீன்கள் முழுவதும்
ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள்
அறிவித்துள்ளனர்...இதன்படி நாய் ,மனிதனுடன் நெருங்கிய
பாரம்பரியத் தொடர்பை எலிகளைவிடக் கூடிய அளவில் காட்டுவதாகவும்
தெரிவித்துள்ளனர்....! ஆனாலும் எலிகள் தான் பரினாம வளர்ச்சிப்
பாதையில் எம்மோடு அதிக தூரம்/காலம் சேர்ந்து பயணித்துள்ளனவாம்...!
நாயில் 2.4 பில்லியன் நைதரசன் உப்பு மூலச் சோடிகள் உள்ளன என்றும்
இது மனிதனில் உள்ளதைவிட சுமார் 0.5 பில்லியன் குறைவு என்றும்
அவர்கள் கூறியுள்ளனர்...ஜீன் வரிசைப்படுத்தலில் நுண்ணங்கிகள்
தவிர மனிதன் எலி என்று தற்போது நாயும் இணைந்து கொண்டுள்ளது...!
நாய் பற்றிய இன்னும் ஒரு செய்தி...தந்தது
வெப்புலகம் டொட் கொம்...செய்தியுடன் அருகில் உள்ள படத்தையும்
பார்க்க...!
நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த நாய்தான், உலகிலேயே மிக
நீளமான காதுகளைக் கொண்ட நாய் என்ற பெருமையை பெற்றுள்ளது. கின்னஸ்
புத்தகத்தில் இடம்பெற்றுள்ள இந்த நாயுடைய காதின் நீளம் என்ன
தெரியுமா? 29.2 செ.மீ. இங்கிலாந்தில் வசித்து வரும் இந்த நாயின்
உரிமையாளர் இதன் காதுகளை பல லட்சம் மதிப்பிற்கு காப்பீடு
செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
|
|
|