www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

ஆற்று நீருக்கான சிறிலங்காவின் போர்ப் பிரகடனம்...

- பண்டார வன்னியன் :Sankathi.com-

திருகோணமலை மாவட்டத்தினதும் மட்டக்களப்பு மாவட்டத்தினதும் எல்லையோரத்தில் மகாவலியாற்றின் கிளையாக வெருகல் பகுதியினுடாக சேருவெல நோக்கிச் செல்லும் மாவிலியாறு தமிழ் மக்களால் 20-07-2006 அன்று மறிக்கப்பட்டது. தமிழ் மக்கள் காலம் காலமாக வாழ்ந்து வந்த பூர்வீக நிலங்களை சிறிலங்கா இராணுவம் ஆக்கிரமித்து அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்வியலை தனது இராணுவ இயந்திரம் மூலம் வேரோடு பிடுங்கி எறிந்துää

வெளியேற்றிய நிகழ்வுகள் காலம் காலமாக நிகழ்ந்து வருவதொன்று. அதில் ஒரு பகுதியாக திருமலையில் சேருவில்லு எனும் கிராமத்தில் வாழ்ந்த தமிழ் மக்களும் 1965 களில் விரட்டியடிக்கப்பட்டனர் அங்கே பொளத்த விகாரை அமைக்கப்பட்டு அது சிங்களப் புனித நகரமாக மாற்றப்பட்டு சேருவெல என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

இக்கிராமத்திற்குச் செல்லும் நீரை தமிழ் மக்கள் சில நிபந்தனைகளை முன்வைத்து மறித்தனர்.

அவையாவன

மாவிலாற்று நீரிலிருந்து ஈச்சிலம்பற்று பிரதேசம் உட்பட பல தமிழ்க் கிராமங்களிற்கான குடிநீர் விநியேகத்திற்கான நடவடிக்கையை ஆசிய அபிவிருத்தி வங்கி மேற் கொண்ட போது அவை விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் இருப்பதாக் கூறி இடைநிறுத்திய அரசு மீண்டும் குடிநீர்ப் பிரச்சனையை தீர்க்க வேண்டும்.


இராணுவக்கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்லும் மக்கள் கடத்தப்படுவதும் கொல்லப்படுவதும் வழமையாகி விட்டதால் அவர்களின் பாதுகாப்பான பயணங்களிற்கு அரசு உத்தரவாதம் வழங்கவேண்டும். தமிழ் மக்கள் மீதான பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும்.

சமாதான காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கைகளால் இடம்பெயர்ந்து காடுகளுக்குள்ளும் முகாம்களுக்குள்ளும் வாழுகின்ற ஆயிரக்கணக்கான மக்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.


மேலே கூறப்பட்ட நியாயமான கோரிக்கைகளை நிராகரித்த அரசு பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் குடி நீர்ப் பிரச்சனை பற்றி எந்தவிதமான அக்கறையும் எடுக்காமல் மாறாக ஆசிய அபிவிருத்தி வங்கியால் மேற்கொள்ளப் படவிருந்த நீர் வழங்கல் நடவடிக்கையையும் தடுத்து நிறுத்தியது இந்த நிலையில் தான் தமிழர் தமது நியாங்களுக்காக ஆற்றை மறிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நீர் திறப்பு நடவடிக்கைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காணாமல் இராணுவ இயந்திரம் மூலம் தீர்வை முன்வைக்க முனைந்ததன் விளைவாக ஈச்சிலம்பற்று உட்பட தமிழ்க்கிராமங்கள் மீது யூலை 26ம் திகதி தொடக்கம் கிபீர் விமானங்கள் எறிகணை வீச்சுத் தாக்குதல்களை அரம்பித்து. மக்களின் குடியிருப்புக்கள் பாடசாலைகள்ää அரச அரசசார்பற்ற நிறுவனங்கள் என பரவலான குண்டு வீச்சுத் தாக்குதல்களால் மக்கள் கொல்லப்பட்டும் படுகாயப்படுத்தப்பட்டும் பெரும் இன்னல்களுக்கு மத்தியில் தமது சொந்த இடங்களை விட்டு ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம் பெயரவேண்டிய நிலை ஏற்பட்டது.


ஆனல் விமானப்படைகளின் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் வன்னியையும் விட்டு வைக்கவில்லை! தொடர்ந்த விமான மற்றும் எறிகணைத் தாக்குதல்களால் மட்டக்களப்பு கதிரவெளிப் பகுதியில் ஆறு விடுதலைப்புலிப் போராளிகள் கொல்லப்பட்டனர்.

சிறிலங்காப் படைகளின் போர்நிறுத்த மீறலை உணர்ந்த போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழுத் தலைவர் உல்வ் ஹென்றிக்சன் அவர்கள் 28 யூலை மக்கள் பிரதிநிதிகளையும் திருமலைமாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் அவர்களையும் சந்ததித்து மாவிலாறு நீர் அணை திறப்பது தொடர்பாக கலந்துரையாடிக் கொண்டிருந்த போது அவர்களிற்கு அருகிலேயே சிறிலங்கா விமானப்படையின் கிபீர் விமானங்கள் குண்டு வீச்சுத் தாக்குதல்கள் நடத்தின.

இதனால் இடைநடுவிலே அணைதிறப்புச் தொடர்பான பேச்சுவார்த்தை நிறுத்தப்பட்டது. இக்குண்டு வீச்சின் போது வெருகல் முகத்துவாரப்பகுதியில் இரண்டு பாடசாலைகள் முற்றாகச் சேதமடைந்தது. மீனவர்கள் இருவர் படுகாமடைந்தனர்.

ஓட்டு மொத்தமான இராணுவத்தின் பலத்தைப் பிரயோகித்தே தீர்வுப் பிரகடனத்தை முன்வைககும் சிறிலங்காவின் அரசுக்கு துணைபோகும் நடவடிக்கையில் மாவிலாறு நீரணை திறப்பதற்காக ஜாதிக ஹெல உறுமய புறப்பட்டது. இவ்விகாரத்தை இப்படி விளக்குகிறார் சேருவில பௌத்த விகாரையின் பிரதமபிக்கு சரணகீர்த்தி தேரர்.

எமது அரசியல் வாதிகள் பலரும் பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து தமிழர்களை ஏமாற்றியது உண்மை. அந்த வகையில் ஹெல உறுமயவினர் இவ்விவகாரத்தில் தலையிட்டதன் காரணமாக பிரச்சனை சிக்கலாகியது இல்லாவிட்டால் இதை பேச்சுக்கள் மூலம் முடித்துக்கொள்ளக்கூடிய சூழல் காணப்பட்டது. அதே நேரம் இப்பிரச்சனைகுறி;த்து விடுதலைப்புலிகளின் தலைவர்களுடன் நான் பேச்சுக்கள் நடத்த முற்பட்டது பயனளிக்கவில்லை என்றார் சரணகீர்த்தி தேரர்.

இதனைத் தொடர்ந்து மாவிலாறு பிரதேசத்தை அண்டிய இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் கனரக ஆயுத தளபாடங்களுடன் படையினர் குவிக்கப்பட்டு பாரிய இராணுவ நடவடிக்கைக்கு தயாராகினர். 28.யூலை அதிகாலை பொலநறுவை மாவட்டத்திலிருந்தும் கல்லாறு முகாமிலிருந்தும் “வோட்டர்செற்” இராணுவ நடவடிக்கை ஆரம்பமானது. இதே வேளை ஈச்சிலம்பற்று பகுதியை நோக்கி தொடர் செல்வீச்சுக்களால் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர்.

போர்நிறுத்த ஒப்பந்தம் அமுலில் இருக்கும் நேரத்தில் ஏற்படுகின்ற முரண்பாடான பிரச்சனைகளிற்கு சம்பந்தப்பட்டவர்கள் சமரசமாகப் பேசி தீர்வுகாண வேண்டிய நிலையில் அரசதரப்பு இராணுவ அணுமுறைகளை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இதனால் அப்பாவித் தமிழ் மக்களும் போராளிகளும் பலியாகினர்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் தரைவழியாக இராணுவம் முன்னேறித் தாக்கினால் அதனைப் போர்ப் பிரகடனமாகவே கருதுவோமென விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் ஐ.இளந்திரையன் அவர்கள் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனை கருத்தில் கொள்ளாத சிறிலங்கா அரசு முப்படைகளின் பலத்தைப் பிரயோகித்து மாவிலாறு நோக்கிய நகர்வையும் மக்கள் குடியிருப்புக்கள் மீதான விமானம் மற்றும் எறிகணைவீச்சுத் தாக்குதல்களையும் கண்மூடித்தனமாகத் நிகழ்த்தியது.

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியிலுள்ள கிராமங்கள் மீது சிறிலங்காவின் கண்மூடித்தனமான தாக்குதல்களை தடுப்பதற்காக மட்டுப்படுத்தப்பட்ட ஒரு யுத்த நடவடிக்கையொன்றை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு சிறிலங்கா அரசால் நாம் போருக்கு வலிந்திழுக்கப்பட்டோம். அதற்கமைய திருமலைக் கடற்படைத்தளத்தின் மீது ஆட்டிலெறி தாக்குதலும் புல்மோட்டை கடல் தாக்குதலும் மூதூரிலிருந்து மாவிலாறு வரையான ஏ15வீதியிலுள்ள இராணுவமுகாம்கள் மீது விடுதலைப்புலிக்ள தாக்குதல் நடத்த நேரிட்டது. இதன் காரணமாக மூதூரிலிருந்த சில இராணுவ முகாம்கள் அழித்தொழிக்கப்பட்டன என விடுதலைப்புலிகள் தெரிவித்திருந்தனர்.

மேற்படி புலிகளின் மட்டுப்படுத்தப்பட்ட யுத்த நடவடிக்கையினால் சிறிலங்கா இராணுவ முகாம்களை அண்டியிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி செல்ல வேண்டியிருந்தது

ஆனால் இராணுவத்தின் எறிகணைகள் இடம்பெயர்ந்து பாதுகாப்புத் தேடிச் சென்ற மக்களை நோக்கி வீசப்பட்டது அதில் மூதூர் அரபுக் கல்லூரி மீதும் தோப்பூர் அல்நுறையா பாடசாலையிலும் பாதுகாப்புக்காக தங்கியிருந்த மக்களில் 22பேர் பலியாகியும் 62ற்கும் மேற்பட்டோர் படுகாயப்படுத்தப்பட்டனர்.

இதனை விடுதலைப்புலிகள் மீது பழி சுமத்தமுற்பட்ட சிறிலங்கா அரசின் கூற்றை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் கக்கீம் அவர்கள் அரபுக் கல்லூரி மீதும் பாடசாலை மீதும் செல்வீசி மக்களைப் படுகொலை செய்தது சிறிலங்கா இராணுவமே என ஜனாதிபதியிடம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சிங்களப் பேரினவாத கட்சிகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியவைதான் சிறிலங்கா அரசாங்கத்தை யுத்தத்திற்க்கு தள்ளியுள்ளன என்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம் சாட்டியுள்ளர்.

இது குறித்து ரவூப் ஹக்கீம் கூறியுள்ளதாவது:

தமிழீழ விடுதலைப்புலிகளின் இலக்குகளை தாக்குவதாகக் கூறிக் கொண்டு அரச படையினர் மேற்கொண்ட ஆட்லெறித்தாக்குதலிலேயே அப்பாவி முஸ்லீம் மக்கள் பலியாகினர் தமிழ் மக்கள் பலர் உயிரிழந்தனர் பெருமளவானோர் காயமடைந்தனர் இவர்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினூடாக மருத்துவர்களை அந்தப்பகுதிக்கு அனுப்பிவைத்துள்ள போதும் படையினரின் எறிகணைத் தாக்குதலால் அப்பகுதிக்கு செல்லமுடியாமல் உள்ளது. எனவே படையினர் ஆட்லெறித் தாக்குதலை நிறுத்தாத நிலையில் அங்கு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அழிக்க முடியாத நிலையுள்ளது அத்துடன் அவர்களுக்கான அவசர மனிதாபிமான உதவிகளையும் செய்யமுடியாது என்றார்.

மூதூரில் நிகழ்ந்த எறிகணை வீச்சுக்களால் காயமடைந்த மக்களை திருகோணமலை வைத்திய சாலைக்கு எடுத்துச் செல்வதில் ஈடுபட்டிருந்த அம்புலன்ஸ் வண்டி மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சாரதியும் நோயாளர்களும் படுகாயமடைந்தனர் மேலும் காயமடைந்த மக்களை படகு மூலம் கொண்டு செல்லும் போது கடலில் வைத்;து தமது கலங்களில் ஏற்றிய கடற்படையினர் தமிழர்களை “நீ தமிழன் எனக் கூறி படகிலையே விட்டுவிட்டு சென்ற பரிதாபமான நிகழ்வும் இங்கு நிகழ்ந்துள்ளது”

அது மட்டுமின்றி மூதூர் மருத்துவனை மீது கிபீர் விமானங்கள் நடத்திய குண்டு வீச்சுக்களால் 30நோயாளர்கள் படுகாமடைந்ததோடு விடுதிகளும் சேதமடைந்தன.

ஓகஸ்ட் 4ம் திகதி நள்ளிரவுடன் தமது மட்டுப்படத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையை நிறுத்திக்கொண்டதாக விடுதலைப்புலிகள் அறிவித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து ஒகஸ்ட் 6ம் திகதி நோர்வேயின் சமாதாத் தூதுவர் ஹன்சன் பௌயர் விடுதலைப்புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வன் அவர்களைச் சந்தித்த பின்னர் தமிழர்களின் கோரிக்கைகளை சர்வதேச சமூகம் சிறிலங்கா அரசினுடாக நிவர்த்தி செய்யும் என வழங்கப்பட்ட ஒப்புதலின் அடிப்படையில் மாவிலாற்று நீர் திறப்பதற்கான சம்மதம் ஏற்படுத்தப்பட்டது.

ஆனால் அதனை திறக்கச் சென்ற போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு தலைவர் உல்வ் ஹென்றிக்சன் அவர்களும் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் நோக்கி இராணுவத்தின் அகோரமான செல்வீச்சுகாரணத்தால் அணைதிறக்கும் நடவடிக்கை உடன் நிறுத்தப்பட்டது.

இக்காலப்பகுதியில் மூதூர் பிரதேசத்திற்குள் நுழைந்த இராணுவத்தினர் சர்வதேச அரசசார்பற்ற தொண்டர் நிறுவனமான அக்சன் பாம் பணியாளர்கள் 17பேரை கோரமாக சுட்டுப் படுகொலை செய்தனர். யுத்தகாலத்தில் சர்வதேசத்தின் தொண்டர் நிறுவனத்தின் பணியாளர்களின் உயிருக்கே உத்தரவாதமற்ற நிலையில் சாதாரன தமிழ் மக்களின் உயிருக்கு உத்தரவாதம் எப்படி கிடைக்கும். படுகொலை செய்யப்பட்டோரின் பெயர் விபரம். கவிதாää கோவிர்த்தினிää றெமீலாää கோகுலவர்த்தனிää கேதீஸ்வரன்ää கோடிஸ்வரன்ää ஸ்ரீதரன்ää ஆனந்தராஜ்ää ஜெயசீலன்ää நர்மதன்ää கணேஸ்ää முரளிதரன்ää பிரதீபன்ää அருள்ராஜ்ää ரிசிகேசன்ää அப்துல்லற்றீப்.


சிறிலங்கா இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்ட அக்சன் பாம்

தொடர்ந்தும் சிறிலங்கா இராணுவம் நல்லூர்ää உப்பூறல் மீது நடத்திய செல்தாக்குதலில் 20தமிழ்மக்கள் பலியாகியும் 20பேர் படுகாயமடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.


இந்நிiலியில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற சமரச முயற்சிகள் அனைத்தும் இராணுவ வல்லாதிக்கத்தால் பலிகொள்ளப்படுவது சர்வதேசம் அறிந்த விடயமே இருப்பினும் மனிதாபிமான நோக்கம் கருதி யூலை 8ம்திகதி மாவிலாற்று நீரணை விடுதலைப்புலிகளாலும் மக்கள் பிரதிநிதிகளாலும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஆற்று நீருக்கான சிறிலங்கா அரசின் போர்ப் பிரகடனத்திற்கு 100ற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 80மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். சமாதான காலத்தில் ஆற்று நீரின் பிரச்சனையை பயன்படுத்தி தமிழர்கள் மீது ஓர் யுத்தத்தை சிறிலங்கா அரசு திணித்துள்ளது. இந்நிலையில் தமிழருக்கான நியாயமான அரசியல் அபிலாசைகளை வழங்குவதற்கு சிறிலங்கா அரசு எப்போதும் தயாரில்லை என்பதும் தமிழருக்கான வாழ்வியல் உரிமையை தமிழீழம் என்ற தனியரசே பெற்றுத் தரும் என்பதை கடந்தகாலங்களில் நிகழ்ந்த சம்பவங்களோடு மாவிலாற்றுப் பிரச்சனைகளும் கோடிட்டுக் காட்டியுள்ளது.

அனுப்பியவர் Admin

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]