இதுவரை நடந்த பேச்சுக்களும் தோல்விக்கான காரணங்களும்
-Nitharsanam.com-
பேசித்தீர்க்கும் நடைமுறைகள் பல தடவை மேற்கொள்ளப்பட்டாலும் ஒன்றிலாவது தமிழர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. 1920 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரையான காலம்வரை தமிழ் - சிங்களத் தரப்பினர் நடத்திய பேச்சுவார்த்தைகள் பலனளிக்கத் தவறியுள்ளன. அவை முடிவிலாது இழுபட்டபின் இறுதியில் கைவிடப்பட்டன. முறியும் தருவாயை நெருங்கும்போது பேச்சுக்களுக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சி எடுக்காமல் போருக்குச் செல்வதுதான் சிறிலங்காவின் வழமை. நாமே நாடுää நமக்கே எல்லாம் என்ற சிங்களத் தலைமையின் சிந்தனை பேச்சுக்களின் தோல்விக்கு அடிப்படைக் காரணமாக அமைகின்றது.
இலங்கையில் பேச்சுவார்த்தைகள் என்ற தலைப்பில் பத்திரிகைக் கட்டுரை எழுதிய அரசியல் துறைப் பேராசிரியர் ஜெயதேவ உயங்கொடää ஷஇலங்கையில் இனப்பிரச்சினை வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதுதான் மிகவும் வருத்தமான அம்சம். தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் வரலாறு மீண்டும் திரும்பி வருகின்றது| என்று சுட்டிக் காட்டியுள்ளார். இவர் குறிப்பிடும் வரலாறு பல தசாப்பங்களைக் கடந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருக்கின்றது. வரலாறை மேலெழுந்தவாரியாக குறை கூறுவதில் பயனில்லை. வரலாறை இயக்கும் காரணிகளை நோக்கவேண்டும்.
பேராசிரியர் குறிப்பிடும் வரலாற்றுச் சுழற்சி 1920ல் ஆரம்பிக்கின்றது. அந்த நாட்களில் நடந்தவற்றை விரிவாக ஆராய வேண்டிய அவசியம் எழுகின்றது. வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்குதல்ää அப்பட்டமான பொய்யுரைகளைச் சொல்லிச்சொல்லி ஏமாற்றுதல் போன்ற கீழ்த்தரமான அம்சங்களை அங்கு சந்திக்கலாம். அன்றைய சிங்களத் தலைமை அவ்வாறு நடவாதிருந்தால் வரலாறு மீண்டும் மீண்டும் வருவதற்கு சந்தர்ப்பம் ஏற்படாது. 1920 ஆம் ஆண்டிற்குத் திருப்புமுனை முக்கியத்தவம் உண்டு. இலங்கையர்கள் என்ற பரந்த தேசிய அடையாளத்தை தூக்கிப்பிடித்த முத்துக்குமாரசாமிää இராமநாதன்ää அருணாசலம் போன்ற தமிழ்த் தலைவர்களின் சிந்தனை வேறுவிதமாக மாற 1920 நிகழ்வுகள் உதவின.
1920க்குப் பின் இக்காலகட்ட நிகழ்வுகளால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட பொன். அருணாசலம் இதுவரை காலம் கடைப்பிடித்த பரந்துபட்ட தேசியத்தைக் கைவிட்ட இன அடையாளத்தை முதன்மைப்படுத்த ஆரம்பித்தார். இதை புதிய சகாப்பத்தின் பிறப்பாகக் கொள்ளலாம். சிங்கள மக்கள் மத்தியில் நெடிதுயர்ந்த தலைவர்கள் தோன்றாத காலத்தில் முத்துக்குமாரசாமிää இராமநாதன்ää அருணாசலம் போன்றோர் அக்குறையைத் தீர்த்துவைத்தனர்.
சிங்கள மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்தனர். சிங்கள மொழிக்கும்ää பௌத்த மொழிக்கும்ää பௌத்த மதத்திற்கும் இடையூறு வந்த பொது இவர்கள் இரண்டையும் காத்துநின்றனர். அழிவுற்ற கீழைத்தேயப் பண்பாட்டை புனரமைக்கும் பணியினைத் தொடக்கியவர் கலாயோகி ஆனந்த குமாரசாமியின் தந்தையான முத்துக்குமாரசாமிää சிங்களவர் மத்தியில் கிறிஸ்தவப் பரப்பலைத் தடுத்து நிறுத்தவதற்கு சகோதரர்களான இராமநாதனும்ää அருணாசலம் பெரும் பிராயத்தனம் எடுத்தனர்.
இப்படியாக சிங்களவர்களோடு ஊடும் பாவும் போல்ää நகமும் சதையும் போல செயற்பட்ட தமிழ்த் தலைவர்களின் மனம் மாறுவதற்கு என்ன காரணம்? 1913 இல் நீண்ட கால அரச சேவையில் இருந்து பொன். அருணாச்சலம் ஓய்வுபெற்றார். தனது ஓய்வுகாலத்தை அரசியலுக்கு அர்ப்பணித்த அவர்ää 1917 இல் அரசியல் சீர்திருத்தக் கழகத்தை உருவாக்கி பூரண சுதந்திரத்திற்காக குரல் கொடுத்தார். இதற்கான பிரச்சாரத்தை தீவின் பல பாகங்களில் மேற்கொண்டார். அத்தோடு இனரீதியாகவும் பிரதேச ரீதியாகவும் செயற்பட்ட பல்வேறு பொது அமைப்புகளையும் தானே முன்னின்று ஒன்றிணைத்து 1919 இல் இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கினார்.
1920 வரை சிங்கள அரசியல் தலைவர்களிலும் பார்க்க சிறந்த தேசிய வாதியாகத் திகழ்ந்த அருணாசலத்திற்கு அவர் வளர்த்தெடுத்த சிங்களத் தலைவர்கள் பலமான அடி கொடுத்தனர். அதன் பயனாய் இலங்கைன் என்ற அடையாளத்தைத் தாங்கி நின்ற அவர் தமிழர் என்ற அடையாளத்தை நோக்கி அடிவைத்தார். தேசிய காங்கிரசை உருவாக்கிய அருணாசலம் அந்த அமைப்பின் சாதாரண அங்கத்தவர் என்ற பதவியையும் உதறித்தள்ளிவிட்டு வெளியேறினார். இலங்கை தேசிய காங்கிரசின் முதலாவது தலைவராகப் பதவிவகித்தவர் அருணாசலம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய இலங்கை தேசிய காங்கிரசை உருவாக்கும் காலத்தில் சிங்களவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இலங்கை தேசிய சங்கத்தையும்ää தமிழர்களை மாத்திரம் கொண்ட யாழ் சங்கத்தையும் ஒன்றிணைக்கும் சாதனையை அருணாசலம் நிறைவேற்றினார். இரு அமைப்புகளும் வௌ;வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்த காரணத்தால் அருணாசலத்தின் பணி மிகவும் கடினமானதாக இருந்தது. இலங்கை தேசிய சங்கம் இனவாரிப் பிரதிநிதித்துவத்தைப் புகுத்தும் நோக்கில் செயற்பட்டது. யாழ் சங்கமோ இனவாரிப் பிரதிநிதித்துவம் நீக்கப்படுமாயின் சமபலப் பிரதிநிதித்துவம் பேணப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டில் இறுக்கமாக நின்றது.
இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர்களான ஜேம்ஸ் பீரிஸ்ää ஈ.ஜே. சமரவிக்கிரமசிங்கää எவ்ப். ஆர் சேனாநாயக்கா ஆகியோர் எதுவிதமாகிலும் இனவாரிப் பிரதிநிதித்துவம் அகற்றப்படவேண்டாம் என்பதில் பிடிவாதமாக இருந்தனர். இதனால் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைக் கூட்டவேண்டிய கட்டாயம் தோன்றியது. அருணாசலம் இரு சங்கங்களின் தலைவர்களையும் சந்தித்து சமரசம் செய்ய விளைந்தார். தமிழர்களுக்குத் திருப்திகரமான பிரதிநிதித்துவ ஒழுங்கைச் செய்யும் நோக்குடன் அவர் சிங்களத் தலைவர்களை பலமுறை சந்தித்தார்.
வடமாகாணத்தில் மூன்றும். கிழக்கு மாகாணத்தில் இரண்டும்ää மேல்மாகாணத்தில் ஒன்றும் வரக்கூடிய தேர்தல் தொகுதிகளை தமிழர்களுக்கு விட்டுக் கொடுப்பதற்கு இலங்கை தேசிய சங்கத் தலைவர்கள் ஒத்துக்கொண்டனர். இதற்கான உறுதிமொழி அடங்கிய கடிதத்தை சிங்களத் தலைவர்கள் சார்பில் ஜேம்ஸ் பீரிஸ்ää ஈ.ஜே. சமரவிக்கிரம ஆகிய இருவரும் தமது கையொப்பத்துடன் அருணாச்சலத்திடம் கொடுத்தனர். இக்கடிதத்தை யாழ் சங்கத் தலைவர் ஏ. சபாபதியிடம் தேர்தல் திட்டத்திற்கு அருணாசலம் ஒப்புதல் வாங்கினார்.
டிசெம்பர் 11ää 1919 இல் இலங்கை தேசிய காங்கரசின் அங்குரார்ப்பணக் கூட்டம் கொழும்பில் நடைபெற்றது. அதன் தலைவராக அருணாசலம் ஏகமனதாகத் தெரிவானார். கடும் பிராயத்தனம் செய்து பலதரப்பட்ட அமைப்புக்களை ஒன்றிணைத்து பல்லினமும் ஐக்கியப்பட தேசிய இயக்கத்தை தோற்றுவித்த அதே அருணாசலம் சில காலத்தின் பின் மனமுறிவுடன் வெளியேறிய வரலாறு இலங்கை இனமுரண்பாட்டின் அடித்தளமாக அமைகின்றது. இலங்கையின் முதலாவது தமிழ்த் தேசிய அமைப்பையும் சிறிது காலத்தின்பின் உருவாக்கினார் என்பது மறுக்கமுடியாத வரலாறு.
பிரிட்டிசாரிடமிருந்து இலங்கையர்களுக்கு படிப்படியாக அதிகாரம் கைமாறிய போது அத்தகைய அதிகாரங்களை சிங்களவர்களுக்கு மாத்திரமே என்று சிங்களத் தலைவர்கள் எண்ணினர். தேசாதிபதி மானிங் அரசியல் சீர்திருந்தம் என்பதின் கீழ் நடந்த தேர்தலில் 13 சிங்களவர்களும்ää வடக்கு கிழக்கு ஆகியவை ஒவ்வொன்றிற்கும் தலா ஒருவர் தெரிவானார். தேசிய காங்கிரஸ் வாக்களித்தபடி வடகிழக்கில் இருந்து 5 பிரதிநிதித்துவமும்ää மேல் மாகாணத்தில் ஒரு பிரதிநிதித்துவமும் கிடைத்திருக்கவேண்டும். இச்சந்தர்ப்பத்தில் இனப்புறக்கணிப்பின் சுயரூபத்தை அருணாசலமும் தமிழர்களும் உணர்ந்தனர். தேசாதிபதி மானிங் மாத்திரம் மனமிரங்கி தனது சீர்திருத்த ஒழுங்கின் கீழ் சிறப்பு உறுப்பினர்களின் ஒருவராக இராமநாதனை நியமித்தார்.
இதனால் மூன்று தமிழர்கள் பிரதிநிதிகளாயினர். நடுவராக நின்ற அருணாசலம்ää சிங்களத் தலைவர்களின் வாக்குறுதி சம்பந்தமாக நேரில் சென்று பேசினார். அருணாசலத்தை அவர்கள் அவமதித்து அனுப்பினர். தமது உறுதிமொழிகளைத் தாமே உதாசீனம் செய்தனர். இதற்கு இரு காரணங்களையும் அவர்கள் கூறினர். பீரிசும்ää சமரவிக்கிரமவும் தமது சுயவிருப்பில் மாத்திரம் கடித மூலமான உறுதிமொழியை வழங்கினர். அவர்கள் தேசிய காங்கிரஸ் சார்பாக உறுதிமொழி வழங்கிவில்லை. இரண்டாவதாகää உறுதிமொழி இலங்கை தேசிய சங்கம்ää இலங்கை சீர்திருத்த சங்கம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துமே ஒழிய கடிதம் வழங்கப்பட்டபின் உருவாகிய இலங்கை தேசிய காங்கிரசை கட்டுப்படுத்தமாட்டாது.
தீட்டிய தடியில் கூர்பார்க்கும் இந்த விதண்டாவாதப் போக்கு அருணாச்சலத்தை மனமுடையச் செய்தது. தமிழர்கள் ஏமார்ந்தது இதுவே முதல் தடவை. மனம் வெதும்பிய அருணாச்சலம் யாழ் திரும்பினார். பொதுக் கூட்டங்களைக் கூடித் தமிழர்கள் தம்மைத் தாமே ஆளக்கூடிய வகையில் ஷதமிழ் ஈழம்| ஒன்றை அமைப்பதே நன்றெனப் பகிரங்கமாகப் பேசினார். இந்த நோக்கத்தை எட்டுவதற்காக அவர் ஆகஸ்ட் 15ää 1921இல் தமிழர் மகாஜன சபை என்ற அமைப்பை உருவாக்கினார். ஜனவரி 09ää 1924இல் அவர் மதுரை மீனாட்சி அம்மன் தரிசனத்திற்காக சென்ற வேளையில் அங்கு திடீர் மரணமடைந்தார். இதனால் தமிழர் மகாஜன சபையும் வலுவிழந்தது. இறுதிவரை சிங்களவரின் நம்பிக்கைக்குரியவராக இருந்த தமையன் இராமநாதன் 1930 வரை உயிர் வாழ்ந்தார்.
'உடைந்த உடன்படிக்கையின் சிதறல்களை கடந்த ஐம்பது வருடகாலம் பழமை வாய்ந்த இரு இன உணர்வுப் பாதையில் பரவிக்கிடப்பதாக" இலங்கை இனத்தவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். உடன்படிக்கையைச் செய்யும் போது அதை எப்படி உடைக்கலாம் அல்லது சமயோசிதமாக மீறலாம் என்ற முன்யோசனையுடனேயே சிங்களத் தலைவர்கள் கைச்சாத்திடுகின்றனர் என்ற நியாயமான விமர்சனமும் நிலவுகின்றது. சிங்களவர்களின் இந்த வகை நடவடிக்கைகளுக்கு தமிழ்த் தலைவர்களும் உடந்தையாக இருக்கின்றனர். நம்ப நட ஆனால் நம்பாதே என்ற பழமொழியை இவர்கள் அறியவில்லைப் போலும்.
வவுனியாப் பாராளுமன்ற உறுப்பினர் காலஞ்சென்ற சி. சுந்தரலிங்கம்ää முதன்முதலாக தமிழ் ஈழக் கோரிக்கையை முன்வைத்ததாகச் சொல்லப்பட்டாலும் அது உண்மையல்ல. முதற்குரல் எழுப்பியவர் அருணாசலம் என்பதே உண்மை. இருவரும் ஏமாற்றபப்ட்டு மனமுடைந்த நிலையிலேயே இக்கோரிக்கையை விடுத்தனர். 1931இல் டொனமூர் ஆணைக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்ரேற் கவுன்சில் (ளுவயவந ஊழரnஉடை) ஆட்சி முறையின் கீழ் 1936 இல் தனிச் சிங்கள அமைச்சரவையை அமைப்பதற்கு தனது கணித மூளையைப் பயன்படுத்தி ஆலோசனை வளங்கியவர் தான் மேற்கூறிய சுந்தரலிங்கம். இவர்களுடைய ஈழத்திற்கான குரல் கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரத்திற்கு ஒப்பானதாகும்.
இதே ஸ்ரேற் கவுன்ஸில் அரசமைப்பில் சபாநாயகர் பதவி வகித்த வயித்திலிங்கம் துரைசாமி என்பவரும் தமிழர்களின் உரிமைகளை வென்றேடுப்பதற்கு சிங்களத் தலைவர்களுடன் பேச்சுக்களை நடத்தினார். இவருடைய வேலணை வீட்டில் வைத்து சிங்கள - தமிழ் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இது ஓசைப்படாமல் சிங்களத் தலைவர்களால் கைவிடப்பட்டது. ஆனால் பதவியே கதியென்று வயித்திலிங்கம் துரைசாமி வாளாவிருந்தார்.
1948 இல் சிங்களவர்கள் சுதந்திரம் பெற்றபின் தமிழர்களை ஏமாற்றும் நடைமுறை தொடர்ந்தது. 1956இல் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் பின்வருமாறு கூறினார். 'சிறுபான்மையினரின் உரிமைகளை மறுக்கமாட்டார்கள் என்ற அடிப்படையில் சிங்களத் தலைவர்களின் நம்பகத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு பிரிட்டிசார் அரசுரிமையை சிங்களவர் வசம் ஒப்படைத்தனர். தங்களுடைய பெரும்பான்மையை பயன்படுத்தும் சிங்களத் தலைமை தங்களுடைய உரிமைகளை மறுக்கின்றது". தமிழர்களின் சுயநிர்ணயக் கோரிக்கையின் சாராம்சத்தை இவ்வுரை கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
இதைத் தொடர்ந்து 1957 இன் நடுப்பகுதியில் இலங்கைப் பிரதமருக்கு 'தமிழர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர் என்பதை நான் இப்போது நம்புகிறேன். சிங்களக் குடியேற்றம் மூலமான அழிவிலிருந்து தமிழர்கள் தமது எதிர்காலச் சந்ததியினரைக் காத்துக்கொள்ள வேண்டும். தன்னாட்சி பெற்ற தமிழ் இலங்கை ஒன்றுதான் எமக்குள்ள ஒரே வழி" என்ற வாசகங்கள் அடங்கிய பகிரங்கக் கடிதத்தை வவுனியா சுந்தரலிங்கம் பிரதமர் பண்டாரநாயக்காவுக்கு எழுதினார்.
ஜுன் 1956 இல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தனிச் சிங்களச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இனத்துவ வரலாற்றில் ஒரு மைல் கல்லாகவும்ää இரு இனங்களையும் சட்டபூர்வமாக மொழி அடிப்படையில் பிளவு படுத்திய விதிமுறையாகவும் இது கருதப்படுகின்றது. இச்சட்டம் நிறைவேறிய மூன்று மாதங்களின் பின் ஆகஸ்ட் 1956 இல் சம~;டிக் கட்சி செல்வநாயகம் தலைமையில் திருகோணமலை மகாநாட்டைக் கூட்டியது. இந்த மாநாடு நான்கு முக்கிய கோரிக்கைகளை விடுத்தது. சம~;டி அரசமைப்பு அடிப்படையில் வடக்கு கிழக்கிற்குச் சுயாட்சிää வடக்குக் கிழக்கில் சிங்களக் குடியேற்ற நிறுத்தம்ää தமிழ் - சிங்கள மொழிகளுக்கு உத்தியோகபூர்வ சமத்துவம்ää மலையகத் தமிழர்களுக்கு இலங்கைக் குடியுரிமை.
இதைத் தொடர்ந்து 1957 இல் பண்டா - செல்வா ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இதற்கான சட்டவரைபு மே. 17 1957 இல் பிரசுரிக்கப்பட்டது. இது பின்வரும் விடயங்களை ஏற்றுக்கொண்டது:- இலங்கையின் உத்தியோகபூர்வ மொழியாகச் சிங்களம் தொடரும்ää வடக்குக் கிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் இடம் பெறும். நாடு பூராகவும் பிராந்திய நிர்வாக அமைப்பு அறிமுகப்படுத்தப்படும். குடியேற்றத்தை நிறுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்படும். இவை யாவும் இதன் பின் நடந்த நிகழ்ச்சிகள் காரணமாக பிரமதர் பண்டாரநாயக்காவினால் ஒரு தலைப்பட்சமாக கைவிடப்பட்டதோடு உடன்படிக்கையும் அவரால் கிழித்தெறியப்பட்டது.
ஏப்ரல் 09ää 1958 இல் பண்டாரநாயக்கா வீட்டின் முற்றத்தில் சில பிக்குகள் பண்டா - செல்வா உடன்படிக்கையை எதிர்த்து சத்தியாக்கிரகம் செய்தனர். இதைவிட ஜெயவர்த்தனா தலைமையில் யூ.என்.பி. கட்சியினர் இதற்கு முன்பே 1957 ஒக்டோபர்ää 2-3 இல் கண்டிக்குப் பாதையாத்திரை சென்றார்கள். இந்த எதிர்ப்புடன் பண்டாவின் கட்சியில் சிலரும் உடன்படிக்கைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள். சத்தியாக்கிரகம் செய்த பிக்குகளின் கோரிக்கைக்கு அமைவாக உடன்படிக்கை ஒரு தலைப்பட்சமாக பண்டா நிராகரித்தார். 1956இல் மீண்டுமொரு உடன்படிக்கையை அப்போது பிரதமர் பதவி வகித்த டட்லி சேனாநாயக்காவுடன் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் செய்துகொண்டார். இது டட்லி - செல்வா உடன்படிக்கை என்று அறியப்படுகின்றது. இந்த உடன்படிக்கை பின்வருவனவற்றை உள்ளடக்கியது. வடக்குக் கிழக்கில் நிர்வாக மொழியாகத் தமிழ் இடம்பெறும். வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களில் தமிழ்மொழி பயன்படுத்தப்படும். மாவட்ட சபைகள் மூலம் அதிகாரப்பங்கீடு செய்யப்படும். தமிழர் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் நியாயமானளவுக்கு சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படும். மகா சங்கத்தினர் மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் எதிர்ப்புக் காரணமாக இதுவும் கைவிடப்பட்டது. 'கடவுள் தான் இனி தமிழர்களைக் காப்பாற்ற வேண்டும்" என்ற பிரகடனத்துடன் எஸ்.ஜே.வி. கையை விரிக்கிறார்.
1970 களில் தமிழர்களுக்காகப் பேசும் ஏகபோக உரிமையைத் தமிழ் அரசியல்வாதிகள் இழக்கின்றார்கள். பொறுமை இழந்த ஆயுதம் தரித்த தமிழ் இளைஞர்கள் உரிமைப் போரைத் தொடக்குகின்றனர். இவர்கள் முதன்முறையாகத் தமிழர் பிரதிநிதிகளாகப் பேச்சுக்களில் ஈடுபடுகின்றனர். பூட்டான் தலைநகர் திம்புவில் 1985 இன் திம்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. தமிழர் தரப்பில் சுயநிர்ணய உரிமைக் கோரிக்கை உட்பட நான்கு முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. சிறிலங்காவின் இறைமைக்கும் தளப்பரப்பு ஒருமைக்கும் அவை முரணானவை என்று காரணம் காட்டி அவற்றை அரச தரப்பினர் நிராகரிக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து தமிழர் கூட்டணி (வுருடுகு) தலைமையிலான சர்வ கட்சி மாநாடு கொழும்பில் 1986 இல் நடைபெறுகின்றது. பலதரப்பட்ட கோரிக்கைகள் கூட்டணியினரால் முன்வைக்கப்பட்டன. ஆனால் ஒரு தீர்மானமும் எட்டப்படாமல் இழுபறி தொடர்ந்தது. தாம் ஒரு செல்லாத காசு என்பதைக் கூட்டணியினர் இதன்மூலம் நிரூபித்துள்ளனர்.
இதற்கு அடுத்த கட்டமாக சிறிலங்கா - இந்தியா உடன்படிக்கையில் (வுhந ளுசi டுயமெய - ஐனெயை யுஉஉழசன ழக 1987) ராஜீவ்ää ஜெயவர்த்தனா ஆகியோர் தமது நாடுகளின் சார்பில் கையொப்பமிட்டனர். பெயரளவில் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வாக இவ்வுடன்படிக்கை பிரகடனப்படுத்தப்பட்டாலும் அது இந்திய நலனைக் குறிவைத்தே செய்யப்பட்டது. நடுவராக நுழைந்த இந்தியாää சிங்கள அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டதோடு தமிழர்களுக்கு எதிராக இராணு ரீதியாகச் செயற்படத் தொடங்கியது. இந்திய இராணுவம் தன்னை அமைதிப்படை என்று கூறிக்கொண்டாலும் தமிழர்கள் அதனை ஆக்கிரமிப்பப் படையாகவே பார்த்தனர். இந்தியத் தலையீடு ஒரு பாரியளவு தோல்வியாக முடிந்தது. கிடப்பில் போடப்பட்டதாக முன்பு சொல்லப்பட்டாலும் இந்த உடன்படிக்கை மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் ஜனாதிபதி பிரேமதாசா தலைமையிலான சிறிலங்கா அரசுக்குமிடையிலான பேச்சுக்கள் இந்திய இராணுவத்தின் வெளியேற்றத்துடன் ஆரம்பமாகின. இவை ஹில்ரன் (ர்டைவழn வுயடமள) என்று அழைக்கப்படுகின்றன. சிறிலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைக்கு என்று அழைத்துச் செல்லப்பட்ட விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தை அணியினர் ஹில்ரன் நட்சத்திர விடுதியில் தங்கவைக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு அழைக்கப்படுகின்றது. 1989 தொடக்கம் 1990 வரை இப்பேச்சுக்கள் நீடித்தன. விடுதலைப் புலிகள் இப்பேச்சின் போது அரசின் இழுத்தடிப்பு உபாயத்தை நேரடியாகச் சந்தித்தனர்.
வடக்கு கிழக்கு நிரந்தர இணைப்பையும் கூடுதல் அதிகாரப்பகிர்வையும் புலிகள் இப்பேச்சின் போது கேட்டனர். இராணுவம் முகாமிற்குள் முடங்கியிருக்க வேண்டுமென்றும் சில இடங்களிலிருந்து இராணுவம் முற்றாக வெளியேறவேண்டும் என்றும் புலிகள் கோரினர். தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் தமிழீழக் காவல்துறை சட்டம் ஒழுங்கிற்குப் பொறுப்பாக இருத்தல் வேண்டும் என்றும் பிறிதோர் கோரிக்கையை புலிகள் முன்வைத்தனர். அரசு இழுத்தடிப்பில் குறியாக இருந்தது. இதனால்ää புலிகள் வெறுப்படைந்தனர். இதற்கிடையில் புலிகள் தம்மைப் பலப்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா இராணுவம் எழுப்பியது. பேச்சுக்கள் தோல்வியுற மீண்டும் போர் தொடங்கியது.
அடுத்தாகää யாழ்ப்பாணப் பேச்சுக்கள் 1994 இல் தொடங்கி 1995 வரை இடம் பெற்றன. இப்பேச்சுகள் யாழ்நகரில் நடந்த காரணத்தால் இப்பெயர்வரக் காரணமாகியது. ஹில்ரன் பேச்சுக்களை யூ.என்.பி. அரசும்ää யாழ்ப்பாணப் பேச்சுக்களை சந்திரிகா தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணி அரசும் நடத்தின. இப்பேச்சுவார்த்தைக்காக உலங்கு வானூர்தி மூலமாக கொழும்பிலிருந்து யாழ் வந்த அரசு தரப்பு பிரதிநிதிகளுக்குப் போதுமானளவு அதிகாரங்கள் வழங்கப்படவில்லை. அவர்கள் உயர் மட்டத்தினரும் அல்ல. புலிகள் தரப்பில் அதியுயர் உறுப்பினர்கள் பேச்சில் பங்கு பற்றினர். எல்லாவற்றிற்கும் மேலாக பேச்சுகள் நடந்துகொண்டிருக்கும் போதே பெருமளவு இராணுவத்தினர் தாக்குதலுக்குத் தருணம் பார்த்து பலாலியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தனர். பேச்சுக்கள் மீண்டும் ஒரு ஏமாற்று வித்தையாக அமைந்தது.
யாழ். பேச்சுக்களில் புலிகள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர். வடக்கு மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடை நீக்கப்படவேண்டும். பூநகரி படைமுகாம் அகற்றப்படவேண்டும். கிழக்கில் ஆயுதம் தரித்து நடமாடுவதற்குப் புலிகள் அனுமதிக்கப்படவேண்டும். இவற்றை ஏற்றுக்கொள்ள அரசு சம்மதிக்காத காரணத்தால் பேச்சுக்கள் தோல்வியடைந்தன. தடைவிதிக்கப்ட்ட சில பொருட்கள் மீது தடைநீக்கம் செய்வதாக அரசு கூறியது. ஆனால்ää வவுனியா போன்ற இராணுவ முகாம்கள் தடையை அமுலாக்கின. பேச்சுவார்த்தை முறிந்த பின் கடும் போர் மூண்டது.
அடுத்த பேச்சுக்கள் வெப்ரவரி 22ää 200 இல் செய்யப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையயோடு இன்று நிறுத்தப்பட்டிருந்தாலும்ää தொடரும் வாய்ப்புக்கள் தென்படுகின்றன. நோர்வே ஒழுங்குசெய்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் போர் நிறுத்த உடன்படிக்கையும் உள்ளடங்குகின்றன. வெப்ரவரி 24ää 2002 தொடக்கம் போர்நிறுத்தம் அமுலில் இருக்கின்றது. சிறிலங்கா - இந்தியா உடன்படிக்கையின் கீழ் அமுலாக்கப்பட்ட போர்நிறுத்தம் யாழ் பேச்சுக்களின் போது தேசியத் தலைவர் அவர்களும் சந்திரிகாவும் செய்துகொண்ட ஜனவரி 08ää 1995 போர்நிறுத்த உடன்படிக்கை (ஊநளளயவழைn ழுக ர்ழளவடைவநைள) ஆகியவற்றிற்கும் இப்போதைய போர் நிறுத்தத்திற்கும் இடையில் பாரிய வித்தியாசமொன்று உண்டு.
முதல் கூறியவை இரண்டும் இரு பகுதியினர் இணைந்து செய்துகொண்ட உடன்படிக்கைகள். இறுதியானது முன்றாம் தரப்பு அனுசரணையுடன் செய்யப்பட்டது. 1920 இல் இருந்து 2002 வரை செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் பற்றிய மேலோட்டமான விவரங்களை மாத்திரம் இங்கு தரக்கூடியதாக இருக்கின்றது. விரிவாக இவ்விடயத்தை ஆராய முற்படின் அது பெருமளவு பக்கங்களைக் கொண்ட ஆய்வு நூலாக இடம்பெறும். இப்போதைய பேச்சுக்களைப் பொறுத்தளவில் வரலாறு திரும்பினாலும் வியப்படைய தேவையில்லை.
'இலங்கையில் இனப்பிரச்சினை வரலாறு மீண்டும் மீண்டும் திரும்பி வருவதுதான் மிகவும் வருத்தமான அம்சம். தீர்வுக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் போதெல்லாம் வரலாறு மீண்டும் திரும்பி வருகின்றது"







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு