பிடிவாதம் யாரிடம் கடிவாளம் யாரிடம்?
புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திட்ட 2002 ம் ஆண்டுக்கு பின் இலங்கைத்தீவின் பக்கம் இதுவரைகாலமும் திரும்பிப்பார்க்காத பல கண்கள் திரும்பிப்பார்த்து விட்டன.தமிழீழ விடுதலைப்பபுலிகளுக்கு போரிடும் வல்லமை மிக மிக உச்சகட்டத்தில் இருக்கின்றது என்பதை ஓயாத அலைகள் நேரடிதாக்குதல் மூலமான படை நகர்த்தல் தெளிவாகக்காட்டியிருந்தது. இதன்போது ஆனையிறவினை மீட்டெடுத்த புலிப் போராளிகள் உக்கிரமான தாக்குதல்களை முன்னெடுத்து யாழ் நகரை அண்மித்துக்கொண்டிருந்தனர். யாழில் குடியிருந்த படையினரின் நிலை கேள்விக்குறியாகியிருந்த தருணம் அனைத்து சிப்பாய்களும் சரணடையவெண்டும் அல்லது போராடி மடியவேண்டும் அல்லது கடல்வழி தப்பியோட போராளிகளிடம் அவகாசம் கோரவேண்டிய நிலையில் சந்திரிகா அம்மையார் அங்கு இங்கு ஓடி ஒருவாறு இந்தியாவின் காலில் விழுந்ததால் அவர்களின் புண்ணியத்தில் படைகள் தப்பிக்கொள்ள பின் தன் ஆற்றாமையினை பல்குழல்(மல்ற்றி பரல்) எறிகணைத்ததக்குதல் மூலம் மக்கள் குடியிருப்புக்கள் மீது காட்டிக்கெண்டனர் அல்லது தீர்த்துக்கொண்டனர்.சிறீலங்காப்படையினரை மீட்டெடுக்க இந்திய கடற்படை விமானப்படையினர் சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்டிருந்த செய்தியும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதன்பின்னரே உலகம் இலங்கைத்தீவில் இரு இராணுவங்கள் இருக்கின்றன என்பதை தெளிவாக தெரிந்துகொண்டன.இதன்பின்னர்நிகழ்ந்த சமாதான முன்னெடுப்புக்கள் நிகழ்வுகள் யாவும் நீங்கள் அறிந்ததே.இந்த சமாதான முன்னெடுப்புக்களின்மூலம் முழு உலகமும் ஒன்றைத்தெரிந்து கொண்டுவிட்டன.அதாவது இலங்கைத்தீவில் இனங்களுக்கிடையில் பிரச்சனைகள் இருக்கின்றன.அதில் போராடும் தமிழர் தரப்பிடம் நியாயமான பல கேரிக்கைகள் உள்ளன.அவை தீர்த்து வைக்கப்படவேண்டும் இல்லையெனில் விளைவு விபரீதமாகிவிடலாம் என்பதெல்லாம் தெளிவாகியது.இதுவரை காலமும் தமிழீழ விடுதலைப்புலிகள் வெறுமனே போராடும் சக்தியாகவே உலகுக்கும் ஏன் எமக்கும் தென்பட்டனர். ஆயினும் இராஜதந்திரத்திலும் பேரம்பேசும் திறத்திலும் அரசியல் நடவடிக்கைகளிலும் தாம் எந்தவகையிலும் சளைத்தவர்களில்லை என்பதை கடந்த 4 வருடங்களிலும் அவர்கள் காட்டிவிட்டனர்.
அத்துடன் நில்லாது தேசியத்தலைவர் தனது மாவீரர்தின உரையில் கூறியது போன்று அக்காலப்பகுதியினை எமது போராட்டத்தை சர்வதேசமயப்படுத்துவதிலும் ääபேராட்டத்தின் நியாயம்பற்றி விளங்கவைக்க வேண்டிய தரப்புகளுக்கு விளங்க வைப்பதிலும் பெரு வெற்றிகண்டுவிட்டனர்.தென்னிலங்கை சக்திகளுக்கு எப்பொழுதாவது தமிழர்களுக்குரிய உரிமைகளை கொடுப்பதுபற்றியோ அவர்களை தம்பாட்டில் வாழ விடுவது பற்றியோ தோன்றியது கிடையாது. எங்கே அவர்கள் முன்னேறிவிடுவார்கள் தமது ஆட்சிக்கு சவாலாகி விடுவார்கள் என்றபயம்.இப்படியே சில அடிவருடிகளை வைத்துக்கொண்டு ஆட்சியைக் கொண்டுபோவதுääஇனப்பிரச்சனை விடயத்தை வைத்தே ஆட்சியமைப்பது ஆட்சியை கவிழ்ப்பது என காலம் ஓட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.
இன்று இலங்கைத்தீவில் வடக்குக்கிழக்கில் ஒரு தனியான அரச கட்;;;டமைப்பு ஒன்று ääஒருநாட்டுக்குரிய சகல வளங்களையும் நிhவாகக்கட்டமைப்புக்களையும்கொண்டதாக இயங்கிவருவது அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.இதனால்தான் இதற்கெல்லாம் காரணகர்ததாவாக இருக்கின்ற தமிழீழ விடுதலைப்புலிகளையும் அவர்களது நடவடிக்கைகளையும் எப்படியாவது ஒழித்துவிடவேண்டும் என்பதில் குறியாக உள்ளார்கள்.இதற்காக அவர்கள் விடுதலைப்புலிளுடன் நேசங்கொண்டாடவும் தயாராக உள்ளார்கள் மொத்தத்தில் என்ன செய்தாவது இந்த விடுதலைப்போராட்டத்தை ஒழித்துக்கட்டுவதென கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
இதில் பண்டா முதல் மகிந்த வரை யாரும் விதிவிலக்கானவர்கள் இல்லை.அவர்களுடைய போக்குகள் பாதைகள் சிலவேளைகளில் வேறுபடுகின்றன.ஆனால் நோக்கம் ஒன்று தான்.எந்த ஒரு விடுதலைப்போராட்டத்தின்போதும் ஆளும் தரப்பு உண்மையான மனதுடன் புரிந்துணர்வுடன் உரிமைகளை வழங்க முன்வந்தது கிடையாது.தாங்கமுடியாத எதிர்ப்பின் காரணமாகவும் சர்வதேசத்தின் அழுத்தம் காரணமாகவுமே சமாதான தீர்வுகளுக்கு முன்னெடுக்க இணங்குகின்றன.இவ்வாறான சமாதான முன்னெடப்புக்களின்போதே செத்துப்போன பல விடுதலைப்போராட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன.போர் நடவடிக்கைகளின் காரணமாக தடைப்பட்டிருந்த இயல்பவாழ்கைக்கான வசதிகளையும் மூலங்களையும் முழுமையாக இல்லாதவிடத்து பகுதியாகவேனும் வழங்கி மக்களையும் போராளிகளையும் இயல்புவாழ்கையிலும்; அதனோடிணைந்த சுகபோகங்களிலும் வீழ்த்தி காலத்தைக்கடத்தி நாம் எதற்காக போராட வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கிவிடவே அவைகள் முற்படுகின்றன.இதன்மூலம் போராட்டத்தை இல்லாதொழித்து தமது வலைக்குள் வீழத்துவதன்மூலமான தொரு தீர்வை வைத்து தமது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றன.இவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து கிடைக்கின்ற வளங்களையே சாதகமாக்கி தமது குறிக்கோளினின்றும் வழுவாது போராட்டத்தை முன்னெடுத்தவர்களே கடைசியில் விடுதலை பெற்றதாக வரலாறு உண்டு.
இந்தநிலையில் தான் ரணில் விக்கிரமசிங்க எமது கண்முன் தெரிவார்.ஆம் ரணில் விக்கிரமசிங்க சிறீலங்காவின் அரச தலைவராக தெரிவு செய்யப்பட்டிருப்பார் எனில் இன்றுள்ள நிலை ஏற்பட்டிராது என்பது இங்கு ஒருசாராரின் கருத்து.ஆனால் அது முற்றிலும் தவறு.கடந்த காலத்தில் நிலவியது ஒரு மயக்க நிலை.நான்கு ஆண்டுகால சமாதானம் என்பது எட்டு ஆண்டுகால பின்னடைவையே தன்னகத்தே சாதித்திருக்கின்றது.எமது விடுதலைப்போராட்ட அமைப்பிலேயே பிளவென்றினை ஏற்படுத்திய சாதனை இந்த சமாதான நடவடிக்கைக்கு உண்டு.இதற்கு முன்நிகழ்ந்த சமாதான முன்னெடுப்புக்கள் இவ்வளவு காலம் நீடித்ததும் இல்லை அதேபோல் இவ்வளவு மாற்றங்களை ஏற்படுத்தியதும் இல்லை.போதை ஏறும்போது எதுவும் தெரியாது அது தெளிந்து வரம்போதுதான் நாம் எங்கே நிற்கிறோம் ஏன் இப்படிஆனோம் என்று நினைப்போம்.அப்போது காலங்கடந்த ஞானம் வரும்.ஆனால் அதுவந்து பிரயோசனமில்லை மானம் போனபின்பு ஞானம் வந்தால் என்ன வராவிட்டால் என்ன
ரணில் விக்கிரமசிங்காவின் அரசியல் இவ்வாறிருக்க அவர்சார்ந்த பெரும்பான்மை சிங்கள இனத்திள் படிப்பறிவுகுறைந்த சிறீலங்காவின் கூடிய வாக்hகளப்பெருமக்களுக்கு இதுபற்றி விளக்கம் போதாதிருந்தமை நியாயமானதே.படித்த நடுத்தர வர்க்கத்தினருக்கு தெரியும் நாம் இப்படியே காலத்தை ஓட்டும் அதேகணத்தில் தமிழர்களின்போராட்ட உணர்வும் அடங்கிவிடும் அதற்காக அதாவது நிரந்தர சமாதானத்துக்கு (சிறீலங்காவின்) ரணில் வேண்டும்.ஆனால் தமிழீத்துக்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கை போன்று வெளிப்பார்வைக்கு மட்டும் தெரிகின்ற சமாதான முன்னெடுப்புக்களுக்கு கிராமத்து சிங்கள பெரும்பான்மையினருக்கு விருப்பமிலலைதான்.அவர்களுக்கு பொலித்தீன் பைகளில் தமது உறவுகள் வந்தகாலமும் மறந்து போனதும் தூரதிஷ்டவசமானதே.அதனால்தான் என்னவோ ஒற்றையாட்சி பற்றிப்பேசும் மகிந்தவுக்கு கரம் கொடுத்தார்கள்.ரணில் விக்கரமசிங்க சாதுவாக தனது மற்ற முகத்தை கடைசிநேரத்தில் காமினியின் மகன் மூலமும் மிலிந்த மொறகொட மூலமும் காட்ட முயற்சித்த போதுääஅது புத்திசாலிகளான தமிழ் மக்களுக்கே சாதகமாகிப்போனது.பெரும்பான்மை வாக்காளப்பெருமக்களுக்கு செவிடன்காதில் ஊதியசங்காக போய்விட்டது.
இவ்வாறான குள்ள நரி அரசியல்பற்றியும் சிறீலங்கா அரசியலின் தேவையின்மையினையும் அவர்களுக்கு தமிழர்களின் போர்ப்பலத்தை மட்டுமல்லாது அரசியல்பலத்தையும் மீண்டுமொருமுறை காட்டவேண்டும் என்ற நோக்கிலும் விடுதலைப்புலிகள் குறிப்புணர்த்தியதன் பிரகாரம் ஒட்டுமொத்த தமிழ் சமூகமும் சிறீலங்கா அரச தேர்தலை புறக்கணித்து தாம் யார் என்பதையும் ஒற்றை ஆட்சியில் சிறீலங்காவின் அரசியல் தம்கையில்தான் என்பதையும் நிரூபித்தனர்.எமக்கொன்றொரு தலைமை இருக்கையில் எம்மை அடக்கி ஒடுக்கும் அரசியல் தலைமையினை நாமே தெரிவு செய்வதா என மக்கள் நினைத்ததில் தவறென்ன இருக்கமுடியும்?.பதவிக்காக சிறீலங்காவின் பேரிவாதிகளின் முட்டாள்தனமான நிபந்தனைகளுக்கு அடிபணிந்து அவர்களுடன் கூட்டுச்சேர்ந்து தமிழர்களுக்கு என ஒரு பூர்வீகதாயகம் இலங்கையிலில்லைääஒற்றையாட்சியின்கீழ தான் தீர்வு என்று சர்வதேசமே நகைத்த கொள்கைகளை முன்னெடுத்த வேட்பாளரான மகிந்த ராஜபக்ச அவர்களை கைதட்டி ஆதரித்த அடிவருடிகளை இதுவரைகாலமும் ஆதரித்த சிலர் கூட தமிழ்த்தேசியத்தின் வழி கொண்டுவந்த தும் இந்த அரசதேர்தல் தான் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இவை எல்லாம் போன ஆண்டு டிசம்பர் வரை நடந்துமுடிந்தவைகள்.நவம்பர் 27 மாவீரர் தினத்தில் தேசியத்தலைவரின் காரசாரமான உரை தான் உண்மையில் இறுதிக்கட்ட ஈழப்போருக்கான அத்திவாரக்கல்.இதிலே போர்நிறுத்த உடன்படிக்கையினை சரிவரநடைமுறைப்படுத்தாமைääவடக்குக்கிழக்கில் இணைஆயுதக்குழுக்களின் நடவடிக்கைகள்ääதமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான நிழல் யுத்தம்ääஒரு சிறு நிறைவேற்று அதிகாரந்தானும் இல்லாத சுனாமி அனர்த்த மீள்புனருத்தான பொதுக்கட்டமைப்பபைக்கூட நிறுவாமைääபேச்சுவார்தைக்கான இழுத்தடிப்புääமக்கள் குடியிருப்புக்களில் தொடர்ந்தும் பாதுகாப்புப்படையினரின் இருப்பு போன்ற முக்கிய விடயங்களில் விசனம் தெரிவிக்கப்பட்டிருந்தது.அத்துடன் சுனாமிப்பேரனாத்ததம் நிகழ்திராத பட்சத்தில் புலிகள் தாயக மீட்புப்போரை ஆரம்பித்திருப்பர் என்ற புதிய தகவல் கூட தெரியவந்திருந்ததுடன் அடுத்த ஆண்டில்(அதாவது இந்த ஆண்டில்) போரை தீவிரப்படுத்தப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.இதன்பின்னர்தான் பதட்டம் ஆரம்பித்தது.இன்னும் ஒருமாதத்தில் சண்டை என பரவலாகப்பேசப்பட்ட அதேவேளை பொதுமக்கள் தற்காப்புப்பயிற்சி மற்றும் போர்ப்பயிற்சி பெற்று வெளியேறிக்கொண்டிருந்தனர்.தென்னிலங்கைப்பத்திரிகைகளும் புலனாய்வுப்பிரிவினரும் இதுபற்றி எச்சரிகை விடத்தொடங்கியிருந்தன.ஆனால் மகிந்தவின் போக்கும்; செயல்களும் வேறுவிதமாகவே இருந்தன.விளைவு இன்றைய நிலை!. (தொடரும்..............)







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு