வெளிப்படுத்தப்படாத உண்மை.
-Nitharsanam.com-
"ஒரு நாட்டின் இறைமைக்குச் சவால் விடுக்கும் இயக் கங்களுக்கு எதிராகச் சக உலக நாடுகள் தடைவிதிக்க வேண்டும்'' இவ்வாறு ஐக்கிய நாடுகள் சபையின் அறுபதாவது பொதுச் சபைக் கூட்டத்தில் வைத்து அறைகூவல் விடுத்திருக்கின்றார் இலங்கை ஜனாதிபதி சந்திரிகா. சிங்களää பௌத்த பேரினவாத அரச ஒடுக்குமுறைக்கு எதிராக ஈழத்தமிழர்கள் புரியும் விடுதலைப் போராட்டத்தை "பயங்கரவாதமாக' சித்திரித்துää அந்தப் பயங்கரவாதத்துக்கு எதிராகச் சர்வதேசத்தை அணிதிரட்டும் தனது பங்குää பணியைää ஆட்சி அதிகாரத்திலிருந்து தாம் விலகிச்செல்லவிருக்கும் இந்த இறுதிக் கட்டத்திலும் வெகு செம்மையாக நிறைவு செய்வதில் அவர் முனைப்பாகவே இருக்கின்றார் என்பதை அவரது இந்த உரை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது. ஒடுக்கப்படுகின்ற ஒரு தேசிய இனம் அந்த ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து போராட்டத்தைத் தொடங்கும்போது அல்லது தனது சுயநிர்ணய உரிமையை வலியுறுத்திää நிலைநிறுத்த முற்படும்போது ஒடுக்கும் தேசியத்தின் மத்தியில் இருந்தும் பெரும் தேசியவாதம் வெறித்தனமாகப் பீறிட்டுக் கிளம்பும். தேசிய ஒடுக்குமுறை மேலும் மூர்க்கமாகும். இதுதான் வரலாற்று நியதி. தென்னிலங்கையில் பௌத்த சிங்கள தேசியவாதம் இப்போது பேயுருக்கொண்டிருப்பதன் பின்னணியும் இதுதான். ஆனால்ää இவ்வாறு உலகெங்கிலும் ஒடுக்கப்படும்ää அடக் கப்படும் தேசியங்களுக்கு நியாயம் வழங்கக்கூடிய திட்டவட்டமான ஏற்பாடு அமைப்பு ஏதும் சர்வதேச அரங்கில் இது வரை கிடையாது. எனினும்ää மறுபுறத்தில் மற்றைய இனங்களை அடக்கிää ஒடுக்கும் பெரிய தேசியங்களின் குரலைச் சர்வதேச மயப்படுத்தும் நிறுவன அமைப்புகள் சர்வதேச மட்டத்தில் கட்டுக்கோப்புடன் உள்ளன. அத்தகைய வழியில் முதன்மையானதும் முக்கியத்துவம் பெற்றதும் ஐக்கிய நாடுகள் சபையாகும். சாராம்சத்தில் ஐ.நா. என்பது அரசுகளையே பிரதிநிதித்து வப்படுத்துகின்றது. ஒவ்வொரு நாட்டிலும் எந்தெந்தத் தேசியம் மேலாதிக்கம் செலுத்துகின்றதோ அந்தத் தேசியங்களின் கருத்தே ஐ.நாவிலும் எதிரொலிக்கின்றது. அதைத்தான் இலங்கை ஜனாதிபதி சந்திரிகாவின் ஐ.நா.உரையும் எடுத்துக்காட்டுகின்றது.
பௌத்த சிங்கள தேசியத் தின் குரலைத்தான் அது பிரதிபலித்து நிற்கின்றது. அந்த உரையில் ஜனாதிபதி குமாரதுங்க காட்டிய இரண்டு விடயங்களை நாம் கவனிக்கவேண்டும். தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை வெறும் பயங்கரவாதம் என்று சித்திரிக்கும் ஜனாதிபதிää ""இவற்றிற்கெல்லாம் இராணுவ நடவடிக்கைகள் மூலம் பதிலளிக்கலாம். இருந்தபோதிலும்ää நாங்கள் அதை நிராகரித்துவிட்டோம். பேச்சுமூலம் தீர்வுகாணும் துணிகரக் கொள்கையை எனது அரசு முன்வைத்தது'' என்றும் கூறுகின்றார். இந்தக் கூற்றுக்குள் எவ்வளவு விடயங்களை அவர் கூறாமல் மறைத்து விட்டார் என்பது இலங்கை மக்களுக்கு நன்குதெரியும்.
ஏதோää தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை இராணுவ ரீதியில் தம்மால் அடக்கமுடியும் என்றும் ஆனாலும் தாராள மனப்பான்மையுடன் அந்த வழியைத் துறந்து அமைதி வழியில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் நல்லெண்ணம் கொண்டவராகச் செயற்படவே தாம் விரும்புகின்றார் என்றும் தம்மை இந்த உரை மூலம் உலகுக்கு வெளிப்படுத்த முயல்கின்றார் ஜனாதிபதி குமாரதுங்க. அமைதி வழியில் பேச்சு மூலம் இனப்பிரச்சினைக்கு இணக்கத் தீர்வுகாண்பேன் என்று 1994 தேர்தல் காலத்தில் துணிகரமாகப் பரப்புரை செய்தவர் ஜனாதிபதி சந்திரிகாதான் என்பதை மறுக்கமுடியாது.
அன்று சமாதானத் தேவதையாகத் தன்னை அவர் காட்டிக்கொண்டதால்தான் முன்னெப்போதும் இல்லாத வகையில் 62 வீத வாக்குகளை அவருக்கு அளித்துää அவரை ஜனாதிபதியாக்கினார்கள் இலங்கை மக்கள். ஆனால்ää சமாதான தேவதையாய் தன்னை வெளிப்படுத்தியவர் ஆட்சிக்கு வந்ததும் அதிகாரத்தைப் பிடித்தும் தன்னைப் போர் வெறியராய் மாற்றிக்கொண்டு முழுமூச்சுடன் அந்த வழியில் செயற்பட்டார் என்பதை அவர் இப்போது மறந்து விட்டார் அல்லது அதனை மறைக்கப்பார்க்கிறார். "சமாதானத்துக்கான யுத்தம்' என்ற பெயரில் ஈழத்தமிழ் மக்கள் மீது அவரும் அவரது அரசும் தொடுத்த கொடூரப் போரின் பேரவலத்திலும் அழிவுகளிலும் இருந்தும் இன்னும்கூட தமிழினம் மீளவில்லை என்பதுதான் உண்மை. இவ்வாறு இராணுவத் தீர்வில் முழுமுனைப்புடனும் தீவிரத்துடனும் "ஆழம் தெரியாமல் காலைவிட்டு' இறங்கிää வாங்கிக்கட்டிää பட்டுத்தெளிந்த பின்னர்தான் அமைதி வழியில் சமாதான முறையில் தீர்வுகாணும் வழிக்கு அவர் வேறு மார்க்கமின்றி தள்ளப்பட்டார் என்பது உலகறிந்த விடயம்.
இராணுவத் தீர்வு முயற்சி "பூமராங்' போன்று திருப்பித் தாக்கிய நிலையில்தான் அதைக் கைவிட்டுää "எட்டாப் பழம் புளிக்கும்' என்ற மாதிரி இராணுவத் தீர்வை ஒதுக்குபவர் போலவும்ää அமைதி வழித்தீர்வே தனது ஒரே மார்க்கம் என்ற மாதிரியும் சர்வதேசத்தின் முன்னாள் போய் நின்று இப்போது உப தேசம் செய்கிறார் சந்திரிகா.""இராணுவத் தீர்வையும் நாடினோம். சமாதானத்திற்கான யுத்தம் என்ற பெயரில் பெரும் எடுப்புடன் போர் ஒன்றைத் தீவிரப்படுத்தி வாங்கிக் கட்டிக்கொண்டோம். அதன்பின்னர் தான் அமைதிப் பேச்சு மார்க்கத்துக்கு வந்தோம்'' என்று ஐ.நாவில் அவர் உண்மை கூறியிருப்பாரேயானால்ää தமது ஆட்சிக் காலத்தின் அந்தத்திலாவது அவர் உண்மையை உரைத்தவராயிருப்பார்; யதார்த்தத்தை வெளிப்படுத்தியவராகியிருப்பார்.
இலங்கை இனப்பிரச்சினைக்கு அமைதி வழியில் சமாதான முறையில் இணக்கத் தீர்வு ஒன்றைக்காண்பதற்குத் தமிழர்கள் தயாராக இருக்கின்றபோதிலும்ää சிங்கள தேசம் அதற்குத் தயராக இல்லை. யுத்த சன்னதம் கொண்டுää போர் முனைப்போடு தமிழரை அடக்கத் தயாராகிறது. அதற்குக்காத் திருக்கிறது. இதுதான் தென்னிலங்கையின் இன்றைய நிலை. அதை மூடிமறைத்துவிட்டுää ஐ.நாவில் போயிருந்து வேறு மாதிரி நியாயம் பிளக்கிறார் ஜனாதிபதி குமாரதுங்க.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு