www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

யாரோ இவர் யாரோ?

- ஈழமுரசிற்காக பேராசிரியர் சிவசண்முகம் :மூலம் சங்கதி.கொம்-

காலஞ்சென்ற லக்ஸ்மன் கதிர்காமர் ஒரு தமிழர் என்று சொல்கிறார்கள்ää ஆனால் அவர் தமிழில் ஒரு சொல்லைக்கூட அறியாதவர். அவர் தமிழ் மொழியில் அக்கறை இல்லாதவர். அதுபோக அவர் தனது வாழ்நாளில் தமிழர் வாழும் பகுதிகளுக்குச் சென்றது கிடையாது. இந்தியாவுக்கு வரும்போது தமிழ் நாட்டுத் தலைவி ஜெயலலிதாவை இரகசியமாகச் சந்திப்பதுண்டு. இந்து பத்திரிகை ஆசிரியர் ராம் ஐய்யன்கார் அவருடைய விசேட நண்பர். எல்லோரும் கூடி அழகான ஆங்கிலத்தில் பேசிக்கொள்வார்கள். என்னத்தைப் பற்றிப் பேசுவார்கள் தெரியுமா? தமிழீழ விடுதலைப் புலிகளை எப்படி அழிக்கலாம்ää ஈழத் தமிழர்களை எப்படி சிங்கள - இந்திய கூட்டு ஏகாதிபத்தியத்தின் அடிமைகளாகப் பிடித்துக் கொடுக்கலாம் என்பதுதான் பேச்சு. சர்வதேச மேடைகளில் தன்னையொரு இலங்கைத் தமிழர் என்று சொல்லிக் கொள்வார். இலங்கையிலோ தன்னை சாதிää மதää இன வித்தியாசங்களுக்கு அப்பால்பட்ட சிறிலங்கா பிரசை என்று கதிர்காமர் கூறிக்கொள்வார்.

பிரதமருக்கு அடுத்த வெளியுறவு அமைச்சர் பதவியை நான் வகிக்கிறேன். எனக்கு பதினைந்து சொகுசு வாகனங்கள் தரப்பட்டுள்ளன. என்னுடைய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் எண்ணிக்கை நூற்றி ஐம்பது. நான் செலவு செய்யும் அரச பணத்திற்குக் கணக்குக் கேட்கப்படுவதில்லை. அதுபோல் என்னுடைய சிங்கள மனைவி சுகந்தி செய்யும் செலவுகளுக்கும் கணக்கு வழக்கு இல்லை. நான் தமிழனாக இருந்தும் எனக்கு இத்தனை சலுகைகள். சிங்களவர்கள் என்னைத் தங்களில் ஒருவராக ஏற்றுக்கொண்டுள்ளனர். எனக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டபோது ஒரு புத்தபிக்கு தனது சிறுநீரகத்தில் ஒன்றை எனக்குத் தானமாகத் தந்தார். இலங்கையில் இனங்கள் யாவும் எவ்வளவு ஒற்றுமையாக வாழ்கிறார்கள்ää பார்த்தீர்களா? இங்கே இனப்பிரச்சனை என்று ஒன்றுமே கிடையாதுää எல்லாம் ஈழத் தமிழர்களின் கட்டுக்கதை.



எனது மூன்றாவது மனைவி சுகந்தி எவ்வளவு நல்லவள். இராணுவக் குடும்பத்தைச் சேர்ந்தவள். நிறையப் பணம் சேகரித்துப் படையினர் நலனுக்காகக் கொடுத்துள்ளாள். நானும் ஆயுதமென்றும்ää நிதிஉதவி என்றும் பல்வேறு நன்மைகளை இராணுவத்திற்குச் செய்து கொடுத்துள்ளேன். சிங்கள இராணுவம் எவ்வளவு நல்ல இராணுவம் தெரியுமா? ஈழத் தமிழர்களின் பொய்களை நம்பாதீர்கள். யாழ்ப்பாணத்தை மீட்கச் சென்ற ரிவிரெச இராணுவத்தை அந்த மக்கள் என்ன மாதிரி வரவேற்றார்கள் என்று இன்று முழுக்கச் சொல்லலாம் பாருங்கோ. மாலை மரியாதைää பூரணகும்பம்ää ஆடல் பாடல் எல்லாம் இராணுவத்திற்குக் கொடுத்தார்களாம். ஒருசில பைத்தியக்காரர்கள் கிளாலிக் கடலைக் கடந்து வன்னிக்கு ஓடினார்களாம். ஐந்து இலட்சம் யாழ்.குடாத் தமிழர்கள் இடம்பெயர்ந்து ஓடியதாகச் சொல்கிறார்கள். பச்சைப் புழுகுää நம்பாதீர்கள்ää ஐந்துபேர் ஓடியதை ஐந்து இலட்சம் என்று சொல்கிறார்கள்.

ரிவிரெச காலத்தில் ஐநா செயலாளர் நாயகம் பதவியில் ப10ட்ரொஸ் ப10ட்ரொல் காலி என்பவர் இருந்தவர். வன்னியில் ஒரு பாரிய உணவு மற்றும் மருந்துப் பிரச்சனைää உலக நாடுகளே உதவுங்கள் என்று அவர் குரல் கொடுத்தார். எனக்கு வந்ததே கோவம். ப10ட்டு உன்வாயை தமிழர்களுக்கு ஏன் உணவும் மருந்தும். புல்லையோää கல்லையோ தின்று சமாளிப்பார்கள். உங்களிடம் மேலதிகமாக இருக்கும் உணவையும் மருந்தையும் இராணுவத்திற்குக் கொடுங்கள் என்று நான் சொன்னேன். நான் உடனடியாக அமெரிக்கா சென்று காண வேண்டியவர்களைக் கண்டு அழுத்தம் கொடுத்து ப10ட்ரொஸ் காலியைப் பதவிநீக்கம் செய்வித்தேன். எனக்குப் பிடிக்காதவர்கள் பதவியில் இருப்பது கடினம். புதுக்குடியிருப்புச் சந்தையில் நின்ற சனத்தின்மீது கிபீர் விமானங்கள் குண்டுவீச்சு நடத்தியபோது ஐநா அதைக் கண்டித்தது. நான் ஐநாவுக்குச் சுடச்சுட 'நுளம்பு மருந்தை அடிப்பதோடு நிறுத்துங்கள். எங்கள் பிரச்சனையில் தலையிடாதீர்கள்" என்று சொன்னேன். வாயை மூடி விட்டான்கள்ää ஆனால் நான் பொதுநலவாய நாடுகளின் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டபோது எனக்கு ஒருவரும் ஆதரவு தரவில்லை. கெட்ட பயல்கள்.

நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம்ää நாகர்கோயில் பள்ளிக்கூடம் போன்றவற்றின்மீது சிறிலங்கா விமானப்படை குண்டுவீச்சு நடத்திப் புகலிடம் தேடிய அப்பாவிகளையும் பள்ளிச் சிறுவர்களையும் வகைதொகையாகக் கொன்றதாகக் கதை அடிபட்டது தெரியும்தானே! நான் உடனடியாக ஆட்சேபம் தெரிவித்தேன். விசமிகளின் கட்டுக்கதை அப்படி ஒன்றுமே நடக்கவில்லை. சிங்கள நாட்டின் முப்படையும் புத்த மதத்தைக் கடைப்பிடிக்கின்றன. ஒரு எறும்பைக்கூட அவர்கள் கொல்ல மாட்டார்கள். தமிழர்கள்தான் கொலைகாரர்கள்ää சந்தர்ப்பம் கிடைத்தால் என்னையும் கொன்றுவிடுவார்கள். உண்மை பேசுபவனுக்கும் நன்மை செய்பவனுக்கும் காலஞ்சரியில்லைப் பாருங்கோ. என்ன யோசிக்கிறீhகள் நான்தான் தமிழ்ப் பெயர் ப10ண்ட சிங்களப் பேரினவாதி கதிர்காமர். ஒரு வரலாற்றுச் செய்தி தெரியுமா? வன்னி மறவன் பண்டார வன்னியனைக் காட்டிக் கொடுத்தவன் பெயரும் கதிர்காம நாயக முதலியாம். நான் ஒருவேளை அவருடைய மறுபிறப்பாக இருக்கலாம்.

நன்றி: ஈழமுரசு

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]