www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

அரசியல் களம்

எலும்புக் கூடாகும் புலனாய்வுத் துறை!

- தினக்குரல்-

உளவாளிகளின் தொடர் இழப்பினால் திகைத்துப் போயிருக்கும் ஒரு பாதுகாப்பு துறை

இராணுவ புலனாய்வுத்துறை தங்களின் சொத்தை இழந்துவிட்டது. புளொட் மோகனின் கொலையுடன் இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கான தமிழ் உளவாளிகளின் பங்களிப்பில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளுக்கிடையிலான பிரச்சினையை, சாதகமாகப் பயன்படுத்தி இயன்றவரை பலனடையும் நோக்கில் செயற்பட்ட இராணுவ புலனாய்வுத் துறை, இன்று கருணாவின் பிரச்சினைக்கு முன்பிருந்த சிறந்த தமிழ் உளவாளிகளையும் இழந்து தவிக்கிறது.

கடந்த இரு வருடங்களுக்குள் இவ்வாறு 55 உளவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் ஓரிருவரைத் தவிர, மிகுதி அனைவரும் தமிழ் உளவாளிகளே. இதில் புளொட் மோகனின் இழப்பால் இராணுவ புலனாய்வுத்துறை இடிந்து போயுள்ளது.

கருணாவின் விவகாரத்தின் பின், கிழக்கில் படை முகாம்களிலிருந்து செயற்பட்ட கருணா குழுவினருக்கு புலனாய்வுத் தகவல்களை புளொட் மோகனே வழங்கி வந்தார். கருணாவுடன் ஈ.பி.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா நெருங்கிச் செயற்பட்டது போன்று, புளொட் மோகனும் நெருங்கிச் செயற்பாட்டார். மட்டக்களப்பிலிருந்து வெளியேற முன்னரே கருணாவை புளொட் மோகன் சந்தித்ததாகக் கூறப்பட்டாலும் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை. ஆனால், கருணா கொழும்பு வந்ததும் அவரை புளொட் மோகன் சந்தித்ததாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அண்மைக் காலமாக கிழக்கில் கருணா குழுவினருக்கு எதிராக தங்கள் செயற்பாட்டை தீவிரப்படுத்திய புலிகள் அவர்களது நடவடிக்கைளை தடுத்து நிறுத்துமளவிற்கு சிறப்பகாச் செயற்பட்டபோது இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கும் கருணா குழுவினருக்கும், புளொட் மோகனே பெரிதும் உதவியிருந்தார். புலிகளின் நடவடிக்கைகள், அவர்களது நடமாட்டங்கள் குறித்த தகவல்களை புளொட் மோகன் எப்படியோ பெற்றுவிடுவார். பணத்தாசையால் சிலரை மடக்கி அவர்கள் மூலம் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் அவர்களது நடமாட்டங்கள், நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்துக்கள் பற்றிய தகவல்களையும் புளொட் மோகன் பெற்று இவர்களுக்கு வழங்கியுள்ளதாகவும் புலிகளின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

1990 முதல் புளொட் மோகன் புலிகளின் முக்கிய எதிரியாக மாறிய போது, அவர் இராணுவத்தினரின் நெருங்கிய சகாவாக மாறினார். கிழக்கை பொறுத்தவரை, தமிழ் அமைப்புக்களிலிருந்து தனித்துச் செயற்பட்ட குழுக்களின் எண்ணிக்கை அதிகம். இதில் ஈ.பி.ஆர்.எல்.எவ்.பைச் சேர்ந்த 'ராசிக்குழு" ரெலோவைச் சேர்ந்த 'வரதன் குழு" புளொட் அமைப்பைச் சேர்ந்த 'புளொட் மோகன்" குழுவும் தற்போது புலிகளிலிருந்து விலக்கப்பட்ட கருணா குழுவும் அடங்கும்.

புளொட் மோகன் குழுவும் ராசிக் குழுவும் மட்டக்களப்பில் செய்த அட்டகாசங்கள் சொல்லும் தரமன்று. இதிலும் புளொட் மோகனின் பெயரைக் கேட்டாலே மக்கள் நடுங்குமளவிற்கு அவனது செயற்பாடிருந்தது. அதேவேளை, தன்னைப் பாதுகாத்துக் கொள்வதிலும் புளொட் மோகன் அதிக அக்கறை காட்டி வந்தான். ராசிக் குழு முற்று முழுதாக மட்டக்களப்பிலேயே செயற்பட்ட அதேநேரம், தனது பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படவே புளொட் மோகன் கொழும்பில் வந்தும் இராணுவப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து தீவிரமாகச் செயற்பட்டான்.

புலிகளின் வரலாற்றில் தமிழ் குழுத் தலைவன் ஒருவனை அழிக்க முதல் முறையாக தற்கொலைக் குண்டு தாரியை பயன்படுத்தியதென்றால், அது ராசிக்கின் மீதான தாக்குதலின் போதே. ராசிக்கின் கொலையுடன் அந்தக் குழுவின் செயற்பாடு முடங்கியது. அது போல் கடந்த வருட முற்பகுதியில் வரதன் குழுவின் தலைவர் வரதனும் கொல்லப்பட்டார். இந்த நிலையில் புளொட் மோகன் தீவிரமாக இலக்கு வைக்கப்பட்ட போதிலும் கொழும்பிலிருந்து செயற்பட்டதால் அவரை நெருங்குவதில் பல சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

ஆனாலும், கருணாவின் கிளர்ச்சியை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி கிழக்கில் புலிகளைப் பலவீனப்படுத்த இராணுவப் புலனாய்வுப் பிரிவு எடுத்த முயற்சி, இன்று கொழும்பிலேயே, இராணுவத்தின் சொத்தாக கருதப்பட்ட புளொட் மோகனை இழக்கும் நிலையை ஏற்படுத்தியது. அத்துடன், தொடர்ச்சியாக தமிழ் உளவாளிகளை இழந்து இன்று இராணுவப் புலனாய்வுப் பிரிவு எலும்புக் கூடாகி விட்டதாகவும் படைத்தரப்பு ஆழ்ந்த கவலையடையும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

கிழக்கில் புலிகள் மீதான தொடர்ச்சியான தாக்குதல்கள் அவர்களை அங்கு பெரிதும் பலவீனப்படுத்தி விட்டதாக பெருமெடுப்பில் பிரசாரங்கள் செய்யப்பட்டன. அடுத்தடுத்து புலிகள் மீதும் பொது மக்கள் மீதும் நடத்தப்பட்ட தாக்குதல்களால் மட்டக்களப்பு மாவட்டமே அதிர்ந்து போயிருந்தது. எங்கும் பயமும் பீதியுமே நிலவியது. ஆனாலும், புலிகள் மட்டக்களப்பில் வைத்து கடுமையான பதிலடி கொடுக்கவில்லை. தங்களது கடுமையான பதில் நடவடிக்கை அங்கு இயல்பு நிலையை மேலும் குழப்பி மக்களை மேலும் அச்சப்படுத்தி விடுமென்பதை உணர்ந்த புலிகள், தங்கள் புலனாய்வு நடவடிக்கையைத் தீவிரப்படுத்தியபோது கருணா குழுவினரும், இராணுவ புலனாய்வாளர்களும் தமிழ் குழுவினரும் நன்கு அடையாளம் காணப்பட்டனர்.

புலிகளின் இந்த நடவடிக்கை தொடர்ந்த அதேநேரம். கொழும்பிலும், அதன் சுற்றுப் புறங்களிலும் அவர்களது நடவடிக்கை தீவிரமடைந்தது. இதன் முதல் இலக்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தற்கொலைக் குண்டுதாரி நெருங்கிய போதும் அது தவறிப் போனது அதையடுத்து டக்ளஸ{டன் அமைதியாகி விட்டார். அதேநேரம் கருணா குழுவினரின் செயற்பாடுகள் துல்லியமாக அறியப்பட்டு தினமும் அவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்பட்டன. இதன் விளைவே கொட்டாவவில் கருணா குழுவைச் சேர்ந்த ஏழு பேரும் இராணுவ புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்தவரெனக் கூறப்படும் நீல் தம்மிக்கவினதும் கொலைகளாகும்.

இங்கு கொல்லப்பட்டவர்களின் தேவைகளுக்காக நிறுத்தப்பட்டிருந்த நவீனரக காரை இவர்களுக்கு புளொட் மோகனும் அவரது நெருங்கிய சகாவும் அத்துருகிரிய மிலேனியம் சிற்றி இராணுவ பாதுகாப்பு வீட்டிற்கு பொறுப்பாக விருந்த கப்டன் சாகுல் ஹமீட் நிலாமும் தெகிவளையிலுள்ள முஸ்லிம் ஒருவரிடமிருந்து வாடகைக்கு பெற்றுக் கொடுத்திருந்தனர். முன்னர் இந்தக் காரை புளொட் மோகன் பயன்படுத்தி வந்துள்ளார்.

இதேநேரம், கொட்டாவவில் எண்மரைக் கொலை செய்தபின் அங்கிருந்து தப்பிச் சென்ற கருணா குழுவைச் சேர்ந்த இருவர் புலிகளிடம் சரணடைந்திருந்தனர். இவர்கள் புலிகளுக்கு பெருமளவு தகவல்களை வழங்கியதுடன் கருணா குழுவுடன் நெருங்கிச் செயற்படுபவர்கள் பற்றிய தகவல்களையும் தெரிவித்திருந்தனர். இதன் போதே புளொட் மோகனுக்கும் கருணாவுக்குமிடையிலான தொடர்பும் புளொட் மோகனின் நடவடிக்கைகள் பற்றியும் தெரிய வந்தது.

கொழும்பு பம்பலப்பிட்டி?ளிகேசன் வீதியில் வைத்து கடந்த சனிக்கிழமை புளொட் மோகன் சுட்டுக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்படுவதற்கு இரண்டு மூ?hட்களுக்கு முன்னர், புளொட் முன்னாள் தளபதி ஒருவரின் சகோதரனின் (இந்தோனேர்pயாவில் இருக்கின்றார்) நண்பனென புளொட் மோகனிடம் தன்னை அறிமுகப்படுத்திய ஒருவர், பியர் அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு மோகனின் உதவியை நாடி?ர். மோகனும் ஏதோவொரு விதத்தில் உதவுவதாகக் கூ?டுத்தடுத்த நாட்களும் வந்து மோகனை அவரது நுகேகொடை வீட்டி?;தித்துள்ளார்.

இதேவேளை, சம்பவ தினம் காலை 10.30 மணியளவில் மோகன் நுகேகொடையிலிருந்து பம்பலப்பிட்டி?ள ஹவுஸ் ஒவ் பர்ன்க்கு ஆடைகள் வாங்க ஆட்டோ ஒன்றில் வந்துள்ளார். அந்த ஆட்டோ சாரதி மோகனின் நம்பிக்கைக்குரியவர். இவர்கள் வரும் போது இவர்களுடன் வந்த அந்த நபர் இடைவழியில் இறங்கிவிட்டார். அதேநேரம், ஹவுஸ் ஒப் பர்ன்க்கு வந்த போது, ப10ரணைதினம் என்பதால் அது மூ?;டி?வ திரும்பிச் செல்வதற்காக ஆட்டோவில் ஏறியுள்ளார். இவ்வேளையில் அவரது கைத் தொலைபேசிக்கு அழைப்பொன்று வரவே ஆட்டோவிலிருந்து கீழிறங்கி அந்த அழைப்புக்கு சிறிது நேரம் பதிலளித்துள்ளார்.

இதன் போதே, அவ்விடத்திற்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் மோகனை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். என்ன நடக்கிறதென்பதை உணரு முன்பே எல்லாமே முடி?pட்டது. முதலில் இவர் பாதாள உலகைச் சேர்ந்தவரென்றே பொலிஸார் கருதினர். ஆனால், அருகிலுள்ள லேயாட்ஸ் வீதியிலுள்ள ஈ.பி.டி?அலுவலகத்திலிருந்து வந்தவர்களே, இறந்தவர் புளொட் மோகன் என்பதை உறுதிப்படுத்தினர். செய்தி தெரிய வரவே இராணுவ புலனாய்வுப் துறை அதிர்ந்து விட்டது.

எப்படி?hல்லப்பட்டார், எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டார் என்ற கேள்விகளுக்கு விடைகாண முடி?ராணுவ புலனாய்வுத் துறை தடுமாறுகிறது.

ஆனாலும், புளொட் மோனிடம் பியர் அனுமதிப் பத்திரத்திற்காக வந்தவர் புலிகளின் உளவாளியாக இருக்கலாமென புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். மோகனின் நடமாட்டங்களை அறிந்த இவர், புலிகளுக்கு தகவல் தெரிவித்திருக்கலாமெனவும் சம்பவம் நடைபெற்ற தினம் மோகன் எங்கு செல்கிறார் என்பதை அறிவதற்காகவே வீட்டி?ந்து, அவருடன் ஆட்டோவில் சென்று, அவர் செல்லும் இடத்தை அறிந்த பின், அது பற்றி புலிகளுக்கு தகவல் கொடுத்து அவ்விடத்திற்கு அவர்களை வரவழைத்திருக்கலாமென்றும் புலனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

ஹவுஸ் ஒவ் பர்ன் ப10ட்டி?ததால், மோகன் உடனே திரும்பி வரவே தாக்குதல் திட்டம் தவறிப் போயிருக்கும். இந்த நிiயிலேயே புலிகளின் உளவாளி மோகனுடன் கைத்தொலைபேசியில் கதைத்து அவரை சற்று தாமதப்படுத்த, அங்கு மோட்டார் சைக்களில் வந்தவர்கள் மோகனைச் சுட்டுக் கொன்று விட்டு தப்பிச் சென்று விட்டதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இதே நேரம் மோகனிடம் பியர் அனுமதிப் பத்திரம் கேட்டு வந்தவரும் தலைமறைவாகி விட்டதாக பொலிஸார் கூ?றனர்.

மோகனின் இழப்பு வடக்கு- கிழக்கில் மட்டுமல்லாது கொழும்பிலும் புலிகளுக்கெதிரான நடவடி?ளுக்கு பேரிழப்பாகி விட்டதாக இராணுவ புலனாய்வு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். வடக்கு- கிழக்கில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளினுள் ஊடுருவி புலிகளின் முக்கியஸ்தர்களை இலக்கு வைக்கும் நடவடி?;கும் இது பேரிடி?விட்டதாக படையினர் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

கிழக்கில் புலிகளை பலவீனப்படுத்தப் புறப்பட்ட புலனாய்வுத் துறையினர் இன்று தலைநகரிலேயே தங்கள் உளவாளிகளை இழந்து தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. இதேநேரம், மோகனின் கொலையும் கொட்டாவவில் கருணா குழுவினரின் கொலையும் ஏனைய தமிழ் உளவாளிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புலிகளின் துல்லியமான புலனாய்வும், திட்டமிடலும் தாக்குதல் திறனும் தங்களையும் அழித்தொழித்து விடுமென தமிழ் உளவாளிகள் அஞ்சுகின்றனர். இது இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு பேரிடி?ள்ளது. ஏற்கனவே, தமிழ் உளவாளிகள் விடயத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்குமிடையே நிலவி வந்த முரண்பாடு இதன் மூ?Pவிரமடைந்துள்ளது. தமிழ் உளவாளிகள் பலர் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்ட போதும், இராணுவப் புலனாய்வுப் பிரிவினருடன் இணைந்து சில நடவடி?ளுக்காகத் தயாராயிருந்த போது கைது செய்யப்பட்ட போதும், இவர்களை விடுதலை செய்ய பொலிஸார் மறுத்து விட்டனர். கிழக்கில் தமிழ் உளவாளிகளை இழந்து வரும் புலனாய்வாளர்கள் தென் பகுதியில் இவர்களைத் தங்க வைத்திருக்கும் விடயங்களை பொலிஸ் உயரதிகாரிகளுக்குக் கூ?தரியப்படுத்தாததே இன்றைய நிலைமைக்கு காரணமெனவும் பாதுகாப்பு வட்டாரங்கள் கூ?றன.

2001 டி?; 5 ஆம் திகதி தேர்தல் தினத்தன்று கண்டி?வின்ன பகுதியில் பத்து முஸ்லிம் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்தக் கொலைகளுடன் அப்போதைய பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் அனுருத்த ரத்வத்தையின் மகன் லொகானுக்கு நேரடி?hடர்பிருப்பதாக குற்றஞ் சாட்டப்பட்ட போது லொகான் ரத்வத்தை தலைமறைவானார். ஆனால், அவருக்கு புளொட் மோகனுடன் நெருங்கிய தொடர்பிருந்ததால் புளொட் மோகனின் உதவியுடன் அத்துருகிரிய மிலேனியம் சிற்றியில் இராணுவ பாதுகாப்பு வீட்டி?லமறைவாகியிருந்தார்.

அப்போது லொகானை கண்டி?pஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல தீவிரமாகத் தேடி?hர். அப்போது அவருக்கு கிடைத்த தகவலொன்றின் பேரிலேயே அத்துருகிரிய மிலேனியம் சிற்றியிலுள்ள மேற்படி?வ பாதுகாப்பு வீடு சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடத்தப்பட்ட போது, தடை செய்யப்பட்ட மோசமான ஆயுதங்கள், கண்ணி வெடி?வ் கிளைமோர் குண்டுகள், உட்பட பெருமளவு ஆயுதங்களும் வெடி?ட்களும் கைப்பற்றப்பட்டதுடன் பல இராணுவ புலனாய்வாளர்களும் கைது செய்யப்பட்டனர். எனினும் அப்போது புளொட் மோகனும் லொகான் ரத்வத்தையும் நழுவி விட்டனர்.

பின்னர் இந்த மிலேனியம் சிற்றி விவகாரம் பெரிய கதையானது ஒரு வரலாறாகும். அப்போது இது பற்றி இராணுவ தரப்பு எவ்வளவோ கூ?, அதனை பொலிஸார் ஏற்றுக் கொள்ளாததால் மிலேனியம் சிற்றி விவகாரம் முழு உலகிற்கும் தெரிய வந்தது. எனினும் அது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து, இந்த வீட்டை சோதனையிடக் காரணமான பலரை வீட்டுக்கு அனுப்பியதும் பெரிய கதை.

இவ்வாறு இராணுவத்தினரும் பொலிஸாரும் அடி? முரண்பட்டுக் கொண்டதால் தமிழ் உளவாளிகளின் முழு விபரங்களும் வெளியாக அவர்களில் முக்கால்வாசிப் பேர் கொல்லப்பட்டு விட்டதாக இராணுவ தரப்பில் கடும் விசனம் தெரிவிக்கப்படுகிறது. பாதுகாப்பு ஒருங்கிணைப்பில் ஏற்பட்ட கோளாறே இவ்வாறான பின்னடைவுகளுக்கு காரணமெனவும் தற்போது உடலை இழந்து எழும்புக் கூ?pருக்கும் புலனாய்வுத் துறைக்கு உயிர் கொடுக்க வேண்டி?pயம் ஏற்பட்டுள்ளதாகவும் புலனாய்வுத் துறை அரசிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் புலிகள் பெருமளவு தாக்குதல்களை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். அந்தத் தாக்குதல்களுக்கெல்லாம் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் பங்களிப்பை எவரும் குறைத்து மதிப்பிட முடி?அதேபோல், அவர்கள் தோல்விகளையும் சந்தித்துள்ளனர். அந்தத் தோல்விகளின் போது தமிழ் உளவாளிகளாகச் செயற்படும் தமிழ் குழுக்களின் பங்களிப்பை இராணுவ தரப்பும் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனாலும், தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தில் தியாகங்களுக்கு இணையாக இன்று துரோகங்களும் வளர்ந்து விட்டன. இல்லையேல் தன்னை வளர்த்த தலைவனையே காட்டி?hடுக்க ஒருவன் முயன்றான் என்றால், அது துரோகம் எந்தளவு தூரம் தியாகங்களை மறைக்கப் பார்க்கின்றது என்பதற்கு சிறந்த உதாரணம்.


--------------------------------------------------------------------------------

மோகன் நடந்து வந்த பாதை.....

கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்ட புளொட் மோகன் ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் மக்களை படுகொலை செய்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

1988 இல் இருந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் கண்கள் தோண்டப்பட்டு தீயில் போட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்களுடன், புளொட் மோகன் நேரடியாகத் தொடர்பு பட்டுள்ளார்.

1988, 1989 ஆம் ஆண்டுகளில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலப்பகுதியில் மட்டக்களப்பு புதூர் விபுலானந்தா வீதியில் நான்காம் குறுக்குத் தெருவில் குடியிருந்தபோது அவ்வீட்டில் வைத்தே மோகனால் பெரும்பாலான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

இதேபோன்று, 1989 ஆம் ஆண்டு மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கத்தோலிக்க மதகுரு அருட்திரு சந்திரா பெர்னாண்டோ கொலை செய்யப்பட்டார்.

இதேபோன்று, பேராசிரியர் நுஃகுமானின் சகோதரியும் அவரது கணவனும் சிற்றூர்தி ஒன்றில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர்.

இப்படுகொலைச் சம்பவங்களில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவரான கப்டன் முனாஸ், கேணல் ஸக்கி ஆகியோர் ஈடுபட்டுள்ள போதிலும் மொத்தம் அறுநூற்று இரண்டு பேரை மோகன் நேரடியாகவே படுகொலை செய்துள்ளார். இதன் காரணமாகவே மோகனுக்கு இராணுவக் கப்டன் தரப் பதவியும் வழங்கி மெய்ப் பாதுகாவலர்களையும் வழங்கியிருந்தது.

1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பற்பொடிக் கம்பனி, சிறைச்சாலை முகாம்களிலே இராணுவப் புலனாய்வுத் துறையின் முனாஸ், ஸக்கி ஆகியோருடன் இணைந்து வந்தாறுமூலை, சத்துருக்கொண்டான், சித்தாண்டி, கொக்கட்டிச்சோலை ஆகிய பகுதிகளில் தமிழ் மக்களின் படுகொலைகள் மோகனால் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

இதன் பின்னர், 1991 ஆம் ஆண்டு புளொட் அமைப்பில் இருந்து, புளொட் மோகன் விலக்கப்பட்டிருந்தார்.

நாவற்குடாப் பகுதியில் கிராம சேவகர் திருமதி செபமாலை, அவரது சகோதரி, கர்ப்பிணித் தாயான திருமதி குமாரயோகரத்தினம் ஆகியோரை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றதுடன், மட்டக்களப்பு இலங்கை வங்கியின் பாதுகாப்பு உத்தியோகத்தர் இலட்சுமிகாந்தனை சுட்டுக் கொலை செய்துள்ளார்.

இவற்றை விடவும் எம்.சீ.எம்.விற்பனை நிலைய உரிமையாளரும், அவரது மகனும் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

கொக்கட்டிச்சோலை படுகொலைச் சம்பவத்தில் தனக்கு எதிராக சாட்சி சொன்ன கிராம சேவையாளர் கே.விஜயரத்தினம் மோகனதாஸ் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

இதேபோன்று விளாவெட்டுவானில் இரண்டு அப்பாவித் தமிழ் இளைஞர்களை விடுதலைப் புலி உறுப்பினர்கள் என்று குற்றம்சாட்டி அவர்களுடைய தலைகளைத் துண்டித்து மற்றொரு இளைஞனின் தோளில் வைத்துக் கொண்டு செல்ல வைத்துள்ளார்.

இவற்றைவிட புளொட் மோகன், கப்டன் முனாஸ் ஆகியோர் இணைந்து மட்டக்களப்பு ப10ம்புகார் மாடிக்கும்முனை, வயிரவன் கோயிலடியில் பெருமளவான தமிழ் மக்களை இரவுவேளைகளில் ரயர்கள் போட்டு எரித்துள்ளனர். அவ்வாறு இறந்த மக்களின் எண்ணிக்கை இதுவரை தெரியவரவில்லை.

1990 ஆம் ஆண்டு 9 ஆம் மாதம் 5 ஆம் நாள் மட்டக்களப்பு வந்தாறுமூலைப் பல்கலைக்கழகத்தில் கைது செய்யப்பட்ட 158 பொது மக்களும் இவர்களாலேயே வாழைச்சேனை, கொழும்பு வீதியில் உள்ள நாவலடி நாலாம் கட்டைப் பகுதியில் வைத்து வெட்டிக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, கொக்குவில், பனிச்சையடிப் பகுதிகளில் பிடிக்கப்பட்ட 184 பொது மக்களில் பெண்கள் சத்துருக்கொண்டான் முகாமுக்குப் பின்னால் வைத்துப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியும், கண்கள் தோண்டப்பட்டும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர். இச்செயற்பாடுகளிலும் முன்னின்று செயற்பட்டவர் புளொட் மோகன்.

இதே காலப்பகுதியில் தான் வெள்ளை வான் அச்சுறுத்தலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்திருந்தது. மட்டக்களப்பு கரையாக்கன் தீவில் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்று பெண் ஒருவர் குற்றம் சாட்டப்பட்டு மோகனால் சுட்டுக் கொல்லப்பட்டு அப்பெண் வீதியில் கட்டி இழுக்கப்பட்டார்.

இவற்றை விடவும் மோகனால் பெருமளவு பெண்கள் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டும், படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

எல்லாவற்றையும் விட பெருமளவான தமிழ் இளைஞர்கள் பணப்பறிப்புக்காக பிடிக்கப்பட்டு அவர்கள் பணம் செலுத்தத் தவறினால் அவர்களை விடுதலைப் புலிப் போராளிகள் என்று குற்றம் சாட்டிப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்து அவ்விளைஞர்கள் சிறைகளில் வாடவும், உயிர்களை இழக்கவும் புளொட் மோகன் காரணமாக இருந்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

குறிப்பாக, மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஓரிரு சம்பவங்களுக்காக அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் விசாரணைக் குழுக்கள் என்பன புளொட் மோகனை மேற்படி படுகொலைச் சம்பவங்களுக்கான பொறுப்பாளராக சுட்டிக் காட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]