'அடுத்த முதல்வர் வைகோ தான்"
-ஆலடி அருணா : குமுதம் -
தனது நடைப்பயணத்தை நெல்லையிலிருந்து தொடங்கிவிட்டார் வைகோ. ஆனால், அதற்கு அனுமதி வாங்குவதற்குள் அவரை பாடாய்ப்படுத்திவிட்டது போலீஸ். முந்தையநாள் இரவுவரை கூட நடைப்பயணம் நடக்குமா நடக்காதா என்கிற சஸ்பென்ஸே நீடித்தது. அனுமதி கிடைக்காவிட்டால் போலீஸ் தடையை மீறி கைதாகவும் தயாராயிருந்தார் வைகோ.
அ.தி.மு.க. ஆட்சியின் அராஜகப் போக்கு மற்றும் ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து, நடைப்பயணம் செல்ல வைகோ முடிவு செய்திருந்தார். 1994_ம் ஆண்டு அவர் இதே குறிக்கோளுடன் கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை 1600 கிலோமீட்டர் து}ரம் நடந்தார். அப்போது கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் அவருடன் சென்றனர். ஆனால், இந்தத் தடவை அப்படியல்ல. ?நிர்வாகிகள் யாரும் வரக்கூடாது? என்று உத்தரவு போட்டுவிட்டார். சீருடை அணிந்த தொண்டர் படையினர் மட்டுமே அவருடன் செல்ல அனுமதியளிக்கப்பட்டது. இதற்காக 3000 தொண்டர் படையினருக்குப் பயிற்சியும் அளிக்கப்பட்டது.
நடைப்பயணத்தையட்டி கடந்த மூன்றாம் தேதி காலையிலேயே நெல்லை வந்துவிட்டார் வைகோ. பின்னர் அவர் செய்த முதல் காரியம், நேராய் கலிங்கப்பட்டிக்குச் சென்று அவரது தாயார் மாரியம்மாளின் காலில் விழுந்து ஆசி பெற்றதுதான். பின்னர் மறுபடியும் நெல்லை வந்த வைகோ, பொதிகை நகரில் உள்ள அவரது மருமகன் வீட்டில் தங்கியிருந்து நடைப்பயணத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் முடுக்கிவிட்டார். எங்கெல்லாம் கொடிகள் கட்டுவது, தோரணம் அமைப்பது, பேனர் அமைப்பது என்பதையெல்லாம் கூட அவரே சொன்னாராம். அன்று இரவு முழுக்க நெல்லை வீதிகளில் காரில் தனியாளாய்ச் சுற்றித் திரிந்தார் வைகோ.
ஆனால், 4_ம் தேதி காலை படுடென்ஷனாய் விடிந்தது வைகோவிற்கு. காரணம், ?நடைப்பயணத்திற்கு போலீஸ் அனுமதி கிடைக்கவில்லை? என்கிற தகவல்தான். இதையடுத்து அன்று காலை பத்து மணிக்கெல்லாம் நெல்லையிலுள்ள தனது கட்சி அலுவலகத்திற்கு வந்துவிட்டார். சென்னையில் இருந்த ம.தி.மு.க. சட்டத்துறை செயலாளர் தேவதாசனைத் தொடர்பு கொண்டு, ?போலீஸ் பெர்மிஷன் என்ன ஆச்சு? என்று கேட்டுக்கொண்டே இருந்தார். இதற்குள் நெல்லை போலீஸ?ம் புதிய புயலைக் கிளப்பியது. மாவட்டச் செயலாளர் சரவணனைத் தொடர்புகொண்ட ஸ்பெஷல் பிரான்ச் போலீஸார், ??சென்னையிலிருந்து எங்களுக்கு நடைப்பயண அனுமதிக்கான உத்தரவு எதுவும் வரவில்லை. பெர்மிஷன் கிடைக்கவில்லை யென்றால் நடைப்பயணம் நடத்துவது சிக்கல்தான். மீறினால் கைதுபண்ண வேண்டி வரும்?? என்பதை நாசு10க்காய்ச் சொல்லியிருக்கிறார்கள். இந்தத் தகவலும் வைகோவை மேலும் காயப்படுத்தியது. ஆனால், எதையும் அவர் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
ம.தி.மு.க.வின் நடைப்பயணம், தமிழ்நாடு முழுக்க பத்தொன்பது மாவட்டங்கள் வழியாகப் போகிறது. எனவே, ஒவ்வொரு மாவட்ட எஸ்.பி.யிடமும் அனுமதி வாங்குவது சிரமம். ஒரேயடியாய் டி.ஜி.பி.யிடம் பெர்மிஷன் வாங்கினாலே போதும் என்று எண்ணித்தான் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பே நடைப்பயணம் பற்றிய முழு விவரங்களையும் விரிவாய் எழுதி, டி.ஜி.பி.யிடம் அனுமதிக்காகக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் போலீஸ் எந்தப் பதிலையும் சொல்லவில்லை. இந்நிலையில், 4_ம் தேதி காலை ஏழுமணிக்கெல்லாம் தேவதாசன் டி.ஜி.பி.யைச் சந்தித்து நிலைமையை அறிய முயற்சித்திருக்கிறார். ஆனால் சுமார் ஒருமணி நேரம் காத்திருந்தும் டி.ஜி.பி. அவரைப் பார்க்கவில்லை. இதனால் கடுப்பான தேவதாசன், ஜூனியர் போலீஸ் அதிகாரிகளைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். அவர்களும் பிடிகொடுக்காமல் பேசியிருக்கிறார்கள். இந்த விவரமும் வைகோவுக்கு தெரிவிக்கப்படவே மேலும் மூட் அவுட்டாகிப் போனார்.
இரவு ஏழுமணிவரை போலீஸிடமிருந்து எந்தத் தகவலும் வராததையடுத்து ஒரு காரியம் செய்தார் வைகோ. போலீஸின் பல்ஸ் எப்படியிருக்கிறது என்று பார்க்கத் தீர்மானித்தார். இதைத் தொடர்ந்து எஸ்.பி. சாரங்கனை தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரே பேசியிருக்கிறார். ஆனால் எஸ்.பி.யோ, ??என்னிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை. டி.ஜி.பி.தான் பொறுப்பு?? எனச் சொல்லி ஜகா வாங்கிவிட்டார்!
அதன் பிறகே, சில ம.தி.மு.க. நிர்வாகிகள் தந்திரமாய் ஒருகாரியம் செய்தனர். நடைப்பயணத்தின்போது அவர்கள் எழுப்பப்போகிற கோஷங்கள் என்னென்ன என்பதை நைஸாய் கசியவிட்டனர். மொத்தம் இருபத்தொன்பது கோஷங்கள், அதில் மூன்று கோஷங்கள் மட்டுமே அரசியல் சார்புடையவை.
மற்றபடி அ.தி.மு.க. அரசையோ முதல்வரையோ விமர்சித்து எந்தக் கோஷமும் இல்லையென்பதை உளவுத்துறைக்குக் கசியவிட்டனர். அவ்வளவுதான், இந்த சமயோசித டெக்னிக் நன்றாகவே ஒர்க் அவுட் ஆனது. இரவு எட்டு மணிக்கெல்லாம் தாயகத்தைத் தேடி போலீஸின் அனுமதி வந்திருக்கிறது. அதன் பிறகே பழைய உற்சாகத்திற்குத் தாவினார் வைகோ.
நடைப்பயணத்தையட்டி அன்று காலையில் முதலில் தாமிரபரணி ஆற்றில் குளித்துவிட்டு அதன் பிறகே பயணத்தைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தார் வைகோ. இதை அவர் மிகவும் ரகசியமாய் வைத்திருந்தார். பத்திரிகையாளரிடம் சொன்னால் நடைப்பயணத்தை விட தாமிரபரணி குளியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துவிடுவார்கள் என்று கருதியோ என்னவோ, அவர் இதைப்பற்றி ?மூச்சு? விடவில்லை. ஆனால் போலீஸ் பெர்மிஷனுக்கு தாமதமாகிக் கொண்டே போகவே... தாமிரபரணி குளியல்பற்றி பத்திரிகைகளுக்குத் தகவல் கொடுக்கச் சொல்லிவிட்டார். ?குளித்து முடித்து தயாராக இருந்தார் வைகோ. ஆனால் தடுத்துவிட்டார்கள்? என்று மக்களுக்குத் தெரியட்டுமே என்றுதான் அவர் அப்படிச் சொன்னார். ஆனால் அதற்கு அவசியமில்லாமல் போய்விட்டது.
அந்த சந்தோஷத்தில் து}ங்கியவரை காலையில் எழுப்பியது சாட்சாத் கலைஞர்தான். ??என்னய்யா, இன்னும் கிளம்பலையா??? என்று கலைஞர் கேட்க, ??இன்னும் கொஞ்சநேரத்தில் கிளம்பிடுவேன் அண்ணே?? என்று பதில் சொல்லியிருக்கிறார் வைகோ. ??சரிசரி, கவனமாகப் போ. நடைப்பயணம் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்!?? என்று கலைஞர் சொல்ல, புல்லரித்துப் போயிருக்கிறார் வைகோ. அதே போனில் தயாளு அம்மாளும் வைகோவை வாழ்த்தினாராம்.
அதன்பின்னர் வீட்டிலிருந்து நண்பர் குட்டி என்ற சண்முக சிதம்பரத்துடன் காரில் புறப்பட்டவர், நேராய் தாமிரபரணி ஆற்றுக்கு வந்தார். குறுக்குத்துறை முருகன் கோயில் பக்கமுள்ள படித்துறைக்கு அவர் சென்றபோது காலை 6.30 மணி. வெள்ளை வேட்டி ஜிப்பாவில் வந்தவர் அதைக் கழற்றிவிட்டு கறுப்பு ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு தாமிரபரணியில் மூழ்கி எழுந்தார். அவர் வரப்போவது யாருக்கும் தெரியாது என்பதால் கூட்டம் அதிகம் இல்லை. குளித்துக்கொண்டிருந்த ஒருசிலரும் அவரைக் கண்டுகொள்ளவில்லை. ஆனால் முருகன் கோயில் பூசாரி இசக்கிக்கு வைகோ வந்த விஷயம் தெரிந்துவிட்டது. அவர் சட்டென பிரசாதம் தயார்செய்து ரெடியாக நின்றார். வைகோ குளித்துவிட்டு வரவும், பூசாரி அவருக்கு ஒரு தட்டில் பிரசாதம் வழங்கினார். அதைப் பெற்றுக்கொண்டார் வைகோ. ஆனால் அதேசமயம் பூசாரி வைகோவின் நெற்றியில் திருநீறு பூச முயற்சிக்க... சட்டென வைகோ தலையைப் பின்னுக்கு இழுத்துக்கொண்டார். குளித்து முடித்துவிட்டு காரில் கிளம்பியவருக்குத் தொடர்ந்து போன் கால்கள்... காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், டாக்டர் ராமதாஸ், நல்லக்கண்ணு, வரதராஜன், வீரமணி என்று சர்வ கட்சித் தலைவர்களும் வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்கள்.
ஒருவழியாக நெல்லை டவுன் வாகையடி முனையில் மறுமலர்ச்சி நடைப்பயணத் தொடக்க விழா ஆரம்பமானது. காலையிலிருந்தே அங்கு தொண்டர்கள் திரள ஆரம்பித்துவிட்டனர். தி.மு.க. மாநகரச் செயலாளர் மாலைராஜா, அவைத்தலைவர் சுபசீதாராமன், சி.பி.எம்.மாவட்டத் தலைவர் பழநி, அப்பாத்துரை எம்.பி, மூவேந்தர் முன்னேற்ற முன்னணி டாக்டர் சேதுராமன், இவர்களுடன் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணாவும் தி.மு.க. கரைவேட்டி கட்டி வந்திருந்தார். அவரது வருகை சிறிய சலசலப்பை ஏற்படுத்தியது. ஒருகாலத்தில் வைகோவை தீவிரமாய் எதிர்த்து அரசியல் செய்த ஆலடி அருணா, அவரைப்பற்றி கலைஞரிடம் போட்டுக்கொடுத்ததால்தான் கலைஞரின் கோபத்துக்கு ஆளாகி தனி இயக்கம் காண வேண்டியதாயிற்று என்பார்கள். காலை ஒன்பது மணிக்கே நடைப்பயணம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் பத்தேமுக்கால் மணிக்குத்தான் வைகோ மேடைக்கு வந்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர்கள் கண்ணப்பன், செஞ்சி ராமச்சந்திரன் மற்றும் எல்.கணேசன் ஆகியோரும் வந்து சேர்ந்தனர்.
ஆரம்பமே சர்வசமய ஒற்றுமையை வலியுறுத்தும் வண்ணம் அமர்க்களமாய் இருந்தது. இந்து, கிறிஸ்தவ பாதிரியார், முஸ்லிம் பிரமுகர் ஆகிய மூன்று பேரும் வைகோவை வாழ்த்திப் பேசினார்கள். இந்துக்கள் சார்பில் சுந்தரம் பிள்ளை என்பவர் பேசினார்.
??அன்று வைகோ புயல் குமரியில் மையம் கொண்டது. அது சென்னைக்குச் சென்றபோது சு10றாவளியாய் மாறி ஜெயலலிதாவின் ஆட்சியைத் து}க்கியெறிந்தது. இப்போது அந்தப்புயல் நெல்லையில் மையம் கொண்டிருக்கிறது. அது சென்னைக்கு சு10றாவளியாய்ச் செல்லும்போது அந்த கொடுங்கோல் ஆட்சி து}க்கியெறியப்படும்?? என்று விளாசினார் மதுரை டாக்டர் சேதுராமன். அவரே தொடர்ந்து பேசுகையில் தன்னை வருத்திக்கொண்ட தலைவர்களில் காந்திக்குப் பிறகு வைகோதான் என்று புகழ்ந்தார். தொடர்ந்து நடைப்பயணத்தின் களைப்பைப் போக்க ஊழல் ஒழிப்பு என்கிற பெயரில் அவர் வெளியிட்ட ஒலி நாடாவை வைகோவுக்குக் கொடுத்தார். ??நடைப்பயணத்தின்போது, தொண்டர்கள் யாருக்காவது உடல் நிலை பாதிக்கப்பட்டால் மருந்து, மாத்திரைகள் கொடுப்பது எனது பொறுப்பு?? என்று டாக்டர் சேதுராமன் சொன்னபோது வைகோவின் முகத்தில் பூரிப்பு.
சுட்டெரிக்கும் வெயிலில் எல்லோரும் அமர்ந்திருக்க, காங்கிரஸ் பிரமுகர் வேணுகோபால் என்பவர் மட்டும் அவர்பாட்டுக்கு இங்கிதம் தெரியாமல் பேசிக்கொண்டே போக... தொண்டர்கள் கை தட்டி அவரை அமரவைத்தனர். முன்னாள் அமைச்சர் ஆலடிஅருணாவின் பேச்சு தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. ??இந்த விழாவிற்கு நான் வர மூணேமூணு காரணம். இன்னைக்கு பதவி ஆசை இல்லாதவன் யாரும் இல்லை, இந்த ஆலடிஅருணா உட்பட. இந்த ஆசை பஞ்சமாபாதகமும் அல்ல. வைகோவிற்கு மிகப்பெரிய பதவிகள் தேடி வந்தன. அவரோ தன்னை நம்பி வந்த செஞ்சியார், கண்ணப்பன் ஆகியோருக்கு மந்திரி பதவி கொடுத்து அழகு பார்த்தார். வைகோ மத்திய மந்திரி ஆகியிருந்தால் இந்தியாவையே குலுக்கியிருப்பார். ஆனால் தமிழ், தமிழருக்காக வாழவே அவர் பதவி ஏற்கவில்லை. இன்னொன்று, தமிழர்களுக்காக அதிக நாட்கள் சிறையில் இருந்ததும் அவரே. நான் சொல்கிறேன்... வருங்கால அரசியல் அவருக்குத்தான் சொந்தம். வருங்காலம் மட்டுமல்ல் அடுத்த முதல்வர் வைகோதான்?? என்றும் அடித்துச்சொல்ல வைகோ தலையைக் கவிழ்ந்து கொண்டார்.
அருணாவைத் தொடர்ந்து ம.தி.மு.க. தலைவர்கள் பேசினார்கள். ஆனால் யாரும் ஆளும்கட்சியை விமர்சித்து ஒரு வார்த்தைகூட பேசவில்லை. செஞ்சியார் உட்பட. ஆனால் கண்ணப்பன் மட்டும், இந்த அராஜக ஆட்சியால் 11,200 கோடி வருமான இழப்பு ஏற்பட்டிருக்கு. இந்த காட்டாட்சி தேவையா??? என்றார். எல்.கணேசன் புத்தர் சிலையை பரிசாய்க் கொடுத்து வாழ்த்தினார். அதற்கு அவர் கூறிய காரணம் இதுதான்: ??வர்ணாசிரமத்தை அடித்து நொறுக்கியவர் புத்தர். பெரியாரின் சிந்தனைக்கு ஊற்றுக்கண்ணாய் இருந்தவர் புத்தர். பதவி மோகமற்றவர் புத்தர். எனவேதான் புத்தர் சிலையைப் பரிசாய்க் கொடுக்கிறேன்?? என்றார்.
கடைசியில் பேசவந்தார் வைகோ. ??சுதந்திர தேவி சிலைக்கு அடிக்கல் நாட்டியது, நிலவில் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் காலடி வைத்தது, நெல்சன்மண்டேலா சிறையில் அடைக்கப்பட்டது எல்லாமே ஆகஸ்ட் 5_ம் தேதிதான்?? என்று நடைப்பயணத் தொடக்க நாளின் முக்கியத்துவத்தை விளக்கியவர், தொண்டர் படையினருக்கு வகுப்பு எடுக்கத் தொடங்கினார். ??ரோட்டில் செல்லும்போது எல்லோரும் கை காட்டுவாங்க. பதிலுக்கு நீங்க கை காட்டக்கூடாது?? என பல கட்டளைகளையிட்டவர், கடைசியில் எல்லோர் மனதிலும் எழுந்த கேள்விக்கு விளக்கம் அளித்தார். ??இந்த ஆட்சியின் அவலங்களை மக்களுக்குச் சொல்வதை ஏன் பிரதானமா வைக்கலைன்னு இப்ப சொல்றேன். அது ஒரு சின்ன காரியம். மக்களே து}க்கி அடிச்சுருவாங்க. ஆனா மக்கள் பிரச்னை அதிகம் இருக்கு. சட்டசபை நடக்கலை. ஊழல் மலிந்து இருக்கு. இந்த அரசு மீது மக்கள் வெறுப்பில் இருக்காங்க. இது ஒரு இருண்ட காலம், நிச்சயம் இருள் விலகும். தலைவர் கலைஞர் தலைமையில் இந்தக் கூட்டணி தொடரும். அதில் எந்த ஐயப்பாடும் இல்லை?? என்றார் அவர். வழக்கமாக ஜெயலலிதாவைக் கடுமையாகச் சாடும் வைகோ இந்தத் தடவை எதுவுமே பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.







0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு