www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

திரைக்குப் பின்னால்(நகைச்சுவை உரையாடல்)(18/11/2002)

இடம்: கோலாலம்பூர்
நேரம்: ரஜினியும் கமலும் சந்தித்தநேரமாகையால் மலேசியா ரசிகர்களுக்கு நல்ல நேரம் உண்மையிலேயே அவர்களை வாழவைக்கும் மற்ற நாட்டு தமிழ் ரசிகர்களுக்கு இப்படி ஒரு வாய்ப்பு நேரவே இல்லை என்பதால் அவர்களுக்காக இந்த நேரடி வர்ணனை.
ரசிகர்களின் ஒருங்கிணைந்த கரகோஷங்களுகிடையே ரஜினியும் கமலும் நினைத்தாலே இனிக்கும் படத்தின் எங்கேயும் எப்போதும் பாடலைப்பாடி விட்டு இல்லையில்லை ஆடிவிட்டு கிரீன் ரூமில் வந்து அமர்கின்றனர்.ரஜினி ஸ்டைலாக சிகரெட் புகைத்தபடி ஏதோ நினைவுகளில் கமலிடம்,
ரஜினி: நினைத்தாலே இனிக்கத்தான் செய்யுதுல்ல கமல்?
கமல்: வழக்கம் போல தொண்டையைச் செருமி நீங்க எதைப்பற்றி சொல்றீங்க ரஜினி?
ரஜினி: புரியல? இருபத்தைஞ்சு வருஷம்... டுவென்டிபைவ் இயர்சுக்கு முன்னாடி இப்படி எங்கேயும் எப்போதும் சந்தோஷம் ....னு இருந்தோமே! அதான்!
கமல்: யா....யா
வெல் செட் இதே சிங்கப்பூர், மலேசியாவில் ஷ_ட்டிங் வந்தப்ப நாம ஒண்ணாவே சுத்தினோம். இல்லையா? ஆனா ரஜினி அப்ப எதிர் பார்த்தோமா நமக்கு இவ்வளவு ரெஸ் பான்ஸ் வரும்னு?
ரஜினி: நாம எப்படி எதிர்பார்க்க முடியும்? நம்ம கையில என்ன இருக்கு?
கமல்: சிகரெட் இருக்கு. உங்க கையில! (என்று கடிக்க)
ரஜினி: ஹா..ஹா...ஹா... குட்ஜோக் இப்பல்லாம் தொடர்ந்து கொமெடி படம் பண்ணிப் பண்ணி உங்களுக்கு ஹியூமர் நல்லா வருது!
கமல்: நானாவது படத்தில் தான் ஹியூமர் பண்றேன்? ஆனா நீங்க? அரசியலுக்கு வருவேன். வரமாட்டேன். ஆண்டவன் கட்டளையிட்டா வருவேன்னுரியல்லைப்லேயே ஹியூமரை அடிச்சு விடுறீங்களே.
ரஜினி: இட்ஸ் நொட் ஏ ஜோக். இட் இஸ் ரியல். நாளைக்கு என்ன நடக்கும்னு யாருக்குத் தெரியும்? நேத்து நான பஸ் கண்டக்டர் இன்னைக்கு நான் ஹீரோ. நாளைக்கு யாரோ? ஆனால் இதெல்லாம் நடத்தி வைக்கிற ஆண்டவன்தான் ரியல் ஊழnனுரஉவடர் புரியுதா?
கமல்: தமிழ்நாட்டில் யார் பேசறதுதான் புரியுது? அதுவும் அரசியல்னு வந்துட்டா சுத்தமா புரியவே மாட்டேங்கிது. எனக்கு அரசியல் தெரியாது. புரியாது! எனக்கு சினிமா தான் எல்லாமே. நேத்து ஆளவந்தான் இன்று அன்பே சிவம் நாளைக்கு மருதநாயகம்.
ரஜினிp: அதான் சொன்னேன் நாளைக்கு நடக்கிறத யார் சொல்ல முடியும்? நாளைக்கு என்ன நடக்கும்னு தெரியாதுன்னு. நான் சொன்னேன். நீங்க மருதநாயகம்ங்கிறீங்க இரண்டும் ஒன்னுதான்.
கமல்: நோ.. நோ.. மருதநாயகம் என் லைப்டைம் அச்சீவ்மெண்ட் கண்டிப்பா நடக்கும்.
ரஜினிp: லைப் டைம் அச்சீவ்மெண்ட்னா லைப்புல்லா எடுத்துக்கிட்டே இருப்பீங்க அதுதானே?
கமல்: ஆ... பெரிசா பேசறீங்களா? நீங்க மூணு வருஷம் என்ன பண்ணீங்க? இப்பதானே பாபா செய்தீங்க?
ரஜினி: லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டேன் இல்லை?
கமல்: நேத்து எப்ப வருவேன்னு தெரியாது. ஆனா வர வேண்டிய நேரத்துக்கு கரெக்டா வருவேன்னீங்க. இப்ப லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்ங்கறீங்க அதாவது நேத்து கரெக்டர் வந்துடுவேன்னு சொல்லிட்டு இன்னிக்கு லேட்டா வர்றேங்கிறீங்க. நாளைக்கு வந்தாலும் வருவேன் வராட்டி இல்லே பீங்களா?
ரஜினி: நானாவது அன்னைக்கு தெளிவா சொல்லிடறேனே? ஆனால் மருதநாயகம்? எப்ப வரும்னு உங்களால் சொல்ல முடியுமா?
கமல்: வரும்...வரும்...வரும்...வரும்...வரும்...வரும்...
ரஜினி: இப்படி குணா மாதிரி பேசி பிரயோஜனம் இல்லை. ஆமா வெள்ளைக்காரனை எதிர்த்த மருதநாயகத்தோட கதையை வெள்ளைக்காரனுக்கு அல்வா குடுக்கிற மாதிரி எலிசபெத் ராணி முன்னாடி ஆரம்பிச்சீங்க இப்ப அவங்கக்கேட்டா என்ன சொல்வீங்க?
கமல்: அவங்க ஷ_ட்டிங் பார்க்க வர்றாங்கன்னா அதற்கு ஒரு தகுதி வேணுமில்;ல? அது எல்லோருக்கும் கிடைக்குமா?
ரஜினி: என்ன பெரிய தகுதி? நான் நினைச்சா அவங்களை ஹ_ரோயினா போட்டு படம் எடுப்பேன்.
கமல்: என்ன எடுப்பீங்கன்னு தெரியாது? ஒரு நாள் இங்கிலாந்து போன தங்களை ராணி கேவலமாக பேசிடுவாங்க. ஒரு பொம்பளைக்கு இவ்வளவு திமிர் கூடாதுன்னு சத்தம் போட்டு அடக்குவீங்கள். அப்புறம் நான் வெள்ளைக்காரன் கறுப்பா பொறந்த வெள்ளைக்காரன்னு ஒரு பாட்டு வேற.
ரஜினி: நீங்க மட்டுமு; என்னவாம் கடவுள் இல்லைன்னு சொல்லிட்டு கடவுள் பாதி.. மிருகம் பாதின்னு பாடறீங்க. முழு கடவுளே இல்லைங்கறபோது பாதி முக்கால் கடவுள் எல்லாம் எப்படி?
கடவுளை ஆஸ்ரமத்திலேயோ இமயமலையிலேயோ தேடி பிரயோஜனமில்லைங்கிறேன்.
ரஜினிp: இமயமலையிலதான் எனக்கு பாபா கிடைச்சார். பாபா பண்ணுன்னு ஆண்டவன் சொல்றான் அதை நான் செய்றேன்.
கமல்: இங்கேயே ஏகப்பட்ட பாபாங்க இதிலே இமயமலையிலிருந்து ஒரு பாபாவா? மருதநாயகத்துல உங்களுக்கு நல்ல கேரக்டர் வச்சிருக்கேன்.
ரஜினி : ஏற்கனவே எனக்கு வயசு ஆகிடுச்சு இதுல இத வேறயா? பணம் புகழ்ன்னு எல்லாம் கிடைச்சிட்டு எட்டு மாடி வீடு கொண்ட சொத்து சுகம் வேண்டாம். தமிழ் தாய்நாடு தந்த அன்பு போதுமே.
கமல்: ஆ! இதான் எனக்கு வேணாம் பாபா பெரிய பிஸினாஸாமே அந்த பணத்தை மருதநாயகம் படத்துக்கு பைனான்ஸ் பண்ணீங்கன்னா? ரஜினி காணாமல் போக கமல் விழிக்கிறார்.

 

சிரிக்க... சிரிக்க...(4/11/2002)


முதல் பயணி: அடிக்கடி பெட்டி மாறிக்கிட்டே இருக்கீங்களே எதையாவது காணலையா?
இரண்டாவது பயணி: டிக்கெட்டைத்தான் காணலை.

இவர்: முளைச்சு மூணு இலை விடலை. அதுக்குள்ள அவள் செஞ்ச காரியத்தை பார்த்தீங்களா?
இவர்: செடியைப் பிடுங்கிப்போட்டுட்டான்.

தந்தை: ஏன்டா எல்லா பாடத்திலேயும் முட்டை வாங்கி இருக்கே?
மகன்: முட்டையில் ஏ விட்டமின் அதிகமாக இருக்குதுன்னு எங்க சார்தான் சொன்னாருப்பா.

நகரவாசி: உங்க பையனுக்கு ஏதாவது உருப்படியா சேவ் பண்ணியிருக்கீங்களா?
கிராமவாசி: ஒரு வயசுப்பையனுக்கு எங்க போயிசேவ் பண்றது. நான் தான் கோயிலுக்கு போய் மொட்டை அடிச்சிட்டு வந்தேன்.

எமன்: என்ன இது? நரகமே காலியா கிடக்கிது. எல்லோரும் எங்கே போயிட்டாங்க?
சித்திரகுப்தன்: பூலோகத்துல எலெக்ஷன் ஓட்டுப்போட கிளம்பிட்டாங்க.

மனைவி: அந்த பிச்சைக்காரனுக்கு திமிரு அதிகமாயிருக்சு.
கணவன்: எப்படி சொல்றே?
மனைவி: சமைப்பது எப்படி?ங்கிற புத்தகத்தை கொடுத்துட்டு இனியாவது ருசியா சமைங்கன்னு சொல்லிட்டுப் போறான்.

ஒருவர்: சைக்கிள் கடைக்காரர் படம் எடுக்கிறாராமே? படத்துக்கு என்ன பேரு வெச்சிருக்கார்?
மற்றொருவர்:காத்தடிக்க நேரமில்லை.

ஆசிரியர்: மாதா, பிதா, குரு இவர்களில் யார் பெரியவர்?
மாணவன்: குருதான்.. அம்மா தாலாட்டுபாடினால் ஒரு குழந்தைதான் தூங்கமுடியும். ஆனால் நீங்க தாலாட்டு பாடினா 40 பேர் து}ங்கிறாங்களே!

ஒருவர்: நேத்து முடிஞ்ச போட்டிக்கு இன்னிக்கு அந்த ஓட்டப்பந்தய வீரர் பிராக்டீஸ் பண்றாரு?
மற்றொருவர்: நேத்துபோட்டியில கலந்துகிட்டவர்தான் ஞாபகமறதியில இன்னும் ஓடிக்கிட்டிருக்கார்.

ராஜா: பேக்கரிக்காரர் படம் எடுத்தால் என்ன பெயர் வைப்பார்..?
சேகர்: உன்னிடத்தில் பன் னைக்கொடுத்தேன் னு பெயர்வைப்பார்.

ஆசிரியர்: கவிஞர்கள் வர்ணிப்பது போல் நம் நாட்டில் தேனும் பாலும் பெருகி ஓடினால் எப்படி இருக்கும்?
மாணவன்: எறும்புக்கடி தாங்கமுடியாது?

நடிகர்: சே... அரசியல்வாதி டைரக்டரா இருக்கிற படத்தில நடிக்கப்போனது தப்பா போச்சு..
மனைவி: ஏன்?
நடிகர்: ஒவ்வொரு சீனையும் மேடைபோட்டு சொல்றாரு.

ராஜா: ஏண்டா...! பாவி தலையில் இவ்வளவு பெரிய கட்டு?
சேகர்: ஆபிசில் குட்டி தூக்கம் போட்டேன்னு சொல்றதுக்கு பதிலா வாய் உளறி ஒரு குட்டிகூடது}க்கம் போட்டேன்னு சொல்லி தொலைச்சிட்டேன்.
ராஜா..???

நேர்ஸ்1: ஆனாலும் டாக்டருக்கு இவ்வளவு, அவநம்பிக்கை கூடாது?
நேர்ஸ்2: என்னாச்சு?
நேர்ஸ்1: ஒவ்வொரு முறையும் ஆபரேசன் பண்ணும்போது காசு சுண்டிப்போட்டுப் பார்த்துட்டுத்தான் ஆபரேசனை பண்றாரு.

ஒருவன்: கல்யாண பந்தியில நான் பாதில எழுந்தும் நாலைந்து பேர் என்னை தொடர்ந்து வந்துவிட்டார்கள்.
மற்றவன்: ஏன்?
ஒருவன்: அவங்க எல்லாம் புதுச்செருப்பு போட்டுக்கொண்டு வந்தவர்களாம்.

நிருபர்: நீங்க இசை அமைச்சு அத்தனை பாட்டும் ஹிட்டாகிட்டே வருது. இதுக்கு என்ன காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?
இசையமைப்பாளர்: இன்னும் நான் சொந்தமா ட்யூன் போடாததுதான் பெரிய காரணம்.

பாபு: என்னது!... மனைவியை காணலைன்னு தெரிஞ்சவுடன் பேப்பரில விளம்பரம் கொடுத்திட்டதா சொல்றியே. அவ்வளவு பாசமா...!
கோபு: நீ வேற! நான்கொடுத்தது மணமகள் தேவை விளம்பரம்.

ராமு: மாப்பிள்ளை பாக்யராஜ் ரசிகர்னு எப்படி சொல்றே...?
சோமு: மணமேடையில் வேட்டியை மடிச்சி கட்டி கிட்டு தாலி கட்டுறாரே..?
ராமு..?...?...?

அவள்: அவர் ஒரு போலி டாக்டர்னு தெரிந்தும் நீ ஏன் அவரை கல்யாணம் செய்தே?
இவள்: நானும் ஒரு போலி டீச்சர்தானே அதான்...!

 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]