|
ஒய்யாரக் கொண்டையாம்
தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேனும் என்பார்கள்.பொதுவாக பேன் தொல்லை இருவருப்பை உண்டாக்கும் பிரச்சனை.பிறர்
முன்னிலையில் நாகரிகம் மறந்து தலையை சொறியவைப்பதும்,யாரும்
பார்க்காத நேரத்தில் ஆடையில் இருந்தும் தலையில் இருந்தும்
எடுத்து நச்...என நசுக்குவதும் பலரிடம் காணப்படும் பழக்கம்.இந்தப் பழக்கத்தை வித்திட்டு வளர்க்கும் பேன் தொல்லையைப் பற்றி
தெரிந்துகொள்ளுங்களேன்.மனிதரை அண்டிப்பிழைக்கும் சிறு பூச்சிதான்
பேன்.இவை மனிதனின் உடற்பாகத்தில் காணப்படும்.இருக்கும்
இடத்திற்கு ஏற்றாற்போல் இவற்றின் பெயர்களும் மாறுபடும்.
பேன் ஒரு சிறகற்ற பட்சி வகையைச் சேர்ந்தது.மேலும் கீழும்
தட்டையான பகுதிகளால் ஆனது.அதனுடைய தலை ஒரு பேரிக்காய் போன்ற
அமைப்பை உடையது.தலையில் ஒரு தும்பிக்கை,இரண்டு உணர்ச்சி
உறுப்புக்கள்,இரண்டு பல கூறுகள் உள்ள கண்கள் முதலியன உள்ளன.ஒவ்வொரு பக்கத்திற்கும் மூன்று கால்கள் வீதம் ஆறு
கால்களைக்கொண்டது.கால்களின் முனையில் வளைந்த நகமிருக்கும்.இதன்
மூலம் முடியை நன்றாகப் பற்றிக்கொள்ள முடியும்.ஆண் பேனைவிட பெண்
பேன்தான் உருவில் பெரியது.ஈர் அல்லது பேனின் முட்டை ஒரு சோளக்கதிர் போன்ற உருவமுடையது.அதன் முனையில் ஒரு மூடி போன்ற அமைப்புள்ளது. இதன்வழியே
முட்டையிலிருந்து வரும் குஞ்சு வெளிப்படும்.
பேன்களின் வகையையும் அவை பரப்பும் நோய்களையும்
தெரிந்துகொள்ளுங்கள்.பேனின் ஆயுள் ஒரு மாதமாகும்.இது
தினந்தோறும் 7முதல் 10முட்டைகள் வரை இடுகிறது.ட்டு
நாட்களுக்குப் பிறகு முட்டையிலிருந்து குஞ்சு வெளிப்படும்.இது
எட்டு நாட்களுக்குப் பிறகு வயது வந்த பேனாக மாறுகிறது.சுத்தமான தலையில் பேன் தங்காது.அதிக காய்ச்சல்,அதிக உழைப்பு
போன்றவற்றினால் ஏற்படும் வெப்பத்தினால் இவை உடலில் தங்காது.உயிரற்ற உடலிலும் பேன்கள் தங்காது.
தலைப்பேன்
தலைப்பேன் வெளுத்த பழுப்பு நிறம் உடையது.பெண் பேன் 3-4மிமீ.நீளமுடையது.இவை இரத்தத்தை உறிஞ்சுவதில் வல்லவை.தங்கள் உடல்
வெடித்துப்போகும் அளவுக்கு ரத்தத்தை உறிஞ்சும்.தோலைத் துளைத்து,
ரத்தத்தை உறிஞ்சும்போது நஞ்சு போன்ற திரவத்தை உற்பத்தி செய்யும்.இது அரிப்பையும் எரிச்சலையும் உண்டாக்கும்.
நோய்
பெண்களைப் பெரிதும் பாதிக்கும்.ஆண்களில் அசுத்தமானவர்களிடையே
காணப்படும்.குழந்தைகளளிடம் பள்ளிப் பருவத்திற்கு முன்பு
காணப்படும்.நாளடைவில் பையன்களிடையே குறைந்து பெண்களிடம்
அதிகமாகும்.தலைப்பேன் தலைமுடியிலும் தாடியிலும் காணப்படும்.ஒரேசீப்பு,ஒரேபிரஷ் பயன்படுத்துவோர்,நீண்ட தலைமுடி,அடிக்கடி
முடியை சுத்தமாக வைத்துக்கொள்ளாதவர்கள் ஆகியோருக்குப் பரவுகிறது.
நோயின் அறிகுறி-அரிப்பு,தலையின் பின்பக்கத்திலம்
பக்கவாட்டிலும் அதிகமாக ஏற்படும்.சொறிவதால் நீர்க்கசிவும் பக்கு
கட்டுதலும் ஏற்பட்டு அவற்றின்மீது மற்ற நோய்க்கிருமிகள் படர்ந்து
தலையின் பின் பகுதியிலும்,கழுத்துப் பகுதியிலும் நெறி
கட்டிக்கொள்ளும்.நோய் அதிகமானால் தலைமுடி ஒன்றோடு ஒன்று
ஒட்டிக்கொள்ளும்.அசுத்தமாகவும் துர்நாற்றத்துடனும் காணப்படும்
காணப்படும்.மார்பிலும் முதுகிலும் சிறுசிறு கொப்புளங்கள்
காணப்படும்.
சிகிச்சை
தலை முடியை ஒட்ட வெட்டவேண்டும்.மொட்டை அடிப்பது நலம்.சல்போனமைடு மாத்திரைகளை வயதுக்கு ஏற்றவாறு மருத்துவர்
பரிந்துரையின்பேரில் கொடுக்கவேண்டும்.பென்ஜயில் பென்ஜயேட் 25மருந்து டி.டி.டீ.5தினந்தோறும் ஐந்து நாட்கள் வரை தடவி முடியை
கழுவவேண்டும்.
சீலைப்பேன்
தோலில் வாழாமல் மடித்துப் புதைக்கப்பட்ட உடை ஓரங்களில்
வாழ்கின்றன.ரத்தம் உறிஞ்ச மட்டுமே உடைகளை விட்டு தோல்மீது வந்து
ரத்தத்தை உறிஞ்சி உண்டுவிட்டு திரும்பவும் உடைக்குத் திரும்பும்.உடல் வெப்பத்தினால் ஈர்கள் பொரிக்கும்.
டம்பில் அதிகமுடி
உள்ளவர்களிடம் இப்பேன்களைக் காணலாம்.
நோய் அறிகுறி
பேன் கடித்த இடத்தில் தோல் சிவந்து காணப்படும்.ரத்தப்
புள்ளியுடன் கூடிய பரு காணப்படும்.தாளமுடியாத அரிப்பு உண்டாகும்.இப்பேன் கடிக்க ஏற்ற இடம் தோள்பட்டை,உடல்பாகம்,பிட்டம்
முதலியன.அரிப்பினால் சொறியப்பட்டு நகக் காயற்களும்,ரத்தக்
கசிவும்,பக்குகளும் இருக்கும்.கவனிக்கப்படாத நிலையில்
பற்றீரியாக்கள் தொற்றி தொற்றுநோய்களை உண்டாக்கும்.சிகிச்சை பெறாத நோயாளியின் தோல்கறுத்து,உலர்ந்து செதில்செதிலாக
ஆங்காங்கே பக்குகளுடன்,சொறிந்த புண் மற்றும் வடுவுடன் கரப்பான்
நோயுடன் காணப்படும்.
சிகிச்சை
சிகிச்சை முறை எளிதானது.துணி மணிகளைச் சுத்தமாக துவைத்து
சூடான சலவைப் பெட்டியினால் தோய்த்தாலே பேன்களும் ஈர்களும்
அழிந்துவிடும்.
அடி வயிற்றுப் பேன்
இந்தப் பேன் உருவத்தில் நண்டுபோன்ற அமைப்பு உடையதாகவும்,அளவில்
சிறியதாகவும் இருக்கும்.முன்னங்கால்கள் மெலிந்தும்,பின்னங்கால்கள் தடித்தும் நண்டின் கொடுக்குபோன்ற அமைப்பையும்
இப்பேன் கொண்டுள்ளது.இதனால் அடிவயிற்றுச் சுருண்ட முடிகளை இவை
நன்றாகப் பற்றிக்கொள்ள ஏதுவாகிறது.இது தவிர மற்ற எல்லா
அம்சங்களிலும் மற்ற பேன்களைப்போல ஒத்துள்ளது.இப்பேன் அடிவயிற்றில்
இருக்கும் சுருண்ட முடிகளிடையே காணப்படும்.சில சமயங்களில் கண்
இமைகளிலும், அக்குள் மயிர்க் கால்களிலும்,நெஞ்சு முடிகளிலும்
காணப்படும்.இவை இரு முடிகளைத் தம்முடைய கால்களால்
இறுகப்பற்றிக்கொண்டு அதன் நடுவில் தலையை தோலில் புதைத்துக்கொண்டு
இருக்கும்.
நோய் அறிகுறிகள்
நோய் அறிகுறிகள் சுலபத்தில் வெளியில் தெரியாது.இப்பேன் நோய்
இருப்பவர்களிடத்தில் மேக்குலே செருலே என்ற சிறிய கருமையான
சாம்பல் நிறத்திட்டுக்கள் ஒரு செ.மீ.அளவில் நெஞ்சு மற்றும்
வயிறு,தொடைகள்,கரங்கள் ஆகிய இடங்களில் காணப்படும்.
சிகிச்சை
அடிவயிற்று முடியை அகற்றுவது.பென்ஜயில் பென்ஜயேட் களிம்பை தடவி
வைப்பது.பேன் தொல்லையும் தவிர்க்க முடியாத பிரச்சனைதான்.கூச்சப்படாமல் மருத்துவ உதவியை நாடுவதுதான் பேன் தொல்லையால்
வருத்தப்படுவோருக்கு உள்ள நல்ல வழி. |