www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

இரத்ததானம்

இன்றைய நவீன உலகத்தில் எத்தனையோ விதமான தானங்கள் இருப்பினும், அவை எல்லாவற்றிலும் மேம்பட்டதாக உயிர்களைக் காக்ககூடியதும், தானம் செய்பவருக்கு நன்மை அளிப்பதாக இருப்பதும் இரத்ததானமேயாகும்.விஞ்ஞான உச்சவளர்ச்சியிலிருக்கும் இக்காலத்தில், இரத்ததானம் சம்பந்தமாக சில மூடநம்பிக்கைகளும் காலங்காலமாக இருந்து வரவே செய்கின்றன.

நமது உடலிலுள்ள - கொண்டுசெல்லும் தொகுதியாக குருதியானது, ஒரு சீர்த்திட நிலையைப்பேணுதல் அடங்கலாக, பல முக்கிய தொழில்களை மேற்கொள்கின்றன. சராசரியான, ஆரோக்கியமான மனிதனில் 5-6 லீற்றர் குருதியானது சுற்றி ஒடுகின்றது.குருதியானது குருதிக்கலங்களாலும் 45% குருதித்திரவ இழையத்தாலும் 55% ஆக்கப்பட்டுள்ளது. குருதிக்கலங்களாவன - செங்குழியங்கள், வெண்குழியங்கள். அத்துடன் குருதிச்சிறுதட்டுக்களும் ஆகும். குருதித்திரவ இழையமானது,

பெரும்பான்மையாக நீரையும், குருதிப்புரதங்கள், கனியுப்புக்கள், குளுக்கோஸ், யூரியா என்பவற்றையும் கொண்டுள்ளது. எனவே, குருதியின் கனவளவும், அதன் கூறுகளும் குறிப்பிட்டளவில் காணப்படவேண்டியமை இன்றியமையாததாகும். குருதிக்குழியங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட ஆயுட்காலம் கொண்டவை. ஒவ்வொரு கணப்பொழுதும் ஆயுள்முடிந்த கலங்கள் அழிக்கப்படுவதும், புதிய கலங்கள் என்பு மச்சையிலிருந்து உருவாகுவதும் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

ஒருவரது உடலிலிருந்து அதிகளவு குருதி மகவிரைவாக வெளியேறுமாயின், அவருக்கு இறப்பு ஏற்படக்கூடிய சாத்தியமுள்ளது. இவ்வகை இழப்பானது சத்திரசிகிச்சைகளின்போதும், திடீர் விபத்துக்களின்போதும் ஏற்படுகின்றது. குருதிச்சோகை, குருதிப்புற்றுநோய், குருதி உறையாநோய் போன்ற நோய்களை உடையவர்களுக்கும் குருதி மாற்றீடு அவசியமாகின்றது.
குருதி ஏற்றப்படும் பொருத்தமான கூட்ட ஒழுங்குகள்

  

குருதி வழங்கும் கூட்டம் (Donor) குருதியைப்பெறக்கூடிய கூட்டங்கள்(Recipient)

A+

A+

B+

B-

O+

O-

AB+

AB-

A+, AB+

A+, A-,AB+,AB-

B+,AB+

B+, B-,AB+, AB-

A+, A-, B+, B-, AB+, AB-, O+, O-

A+, A-, B+, B-, AB+, AB-, O+, O-

AB+

AB+, AB-

இது தவிரவும் தற்போது வளர்ந்துவிட்ட தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி, குருதியின் கூறுகளை வெவ்வேறாகப்பிரித்து, தேவைக்கேற்ப தேவையான அளவுகளில் பயன்படுத்த முடிகின்றது. இதனால், ஒருவரிலிருந்து பெற்ற குருதியை, ஒன்றிற்கு மேற்பட்ட நோயாளிகளிற்குப் பயன்படுத்தக்கூடியதாகவம் இது தவிரவும் தற்போது வளர்ந்துவிட்ட தொழில்நுட்பவியலைப் பயன்படுத்தி, குருதியின் கூறுகளை வெ-வ்வேறாகப்பிரித்து, தேவைக்கேற்ப தேவையான அளவுகளில் பயன்படுத்த முடிகின்றது. இதனால், ஒருவரிலிருந்து பெற்ற குருதியை, ஒன்றிற்கு மேற்பட்ட நோயாளிகளிற்குப் பயன்படுத்தக்கூடியதாகவும் உள்ளது.

இரத்ததானம் செய்யத்தகுதியுடையோர்
18 வயதிற்கும் 60 வயதிற்கும் இடைப்பட்ட 45 கிலோவிற்கு மேற்பட்ட உடல் நிறையையும் 11.5g/100mr இற்கு மேற்பட்ட குருதி நிறப்பொருளும், குருதி அமுக்கமானது சுருக்க அமுக்கம் 100-160 mm Hg உம், தளர்வு அமுக்கம் 70-100mm Hg ஐயும் கொண்டதாகவும் அண்மைக்காலங்களில் பாரிய நோய்த்தாக்கங்களுக்கு உட்படாத ஆண், பெண் இருபாலாரும் தாராளமாக இரத்ததானம் செய்யலாம்.ஒருவர் தன் உடல் நிறையில் 1Kg இற்கு 8ml என்ற விதத்தில் அதாவது, 55Kg உடைய ஒருவர் 459 ml குருதியை எதுவித பிரச்சினைகளுமின்றித்தானம் செய்யமுடியும். ஒருமுறை குருதியை வழங்கியவர்களில் ஆண்கள் 4 மாதத்திற்கொருதடவையும், பெண்கள் ஆறுமாத்திற்கொருதடவையும் இரத்ததானம் செய்யலாம்.

இரத்ததானம் செய்வதானல் ஒருவர் நன்மைகளையே பெற்றுக்கொள்கின்றனர். தானம் செய்யும் ஒவ்வொருதடவையும் தன்னுடைய நாடித்துடிப்பு, நிறை, குருதியமுக்கம், குருதிக்கூட்டவகை, குருதி நிறப்பொருளின் அளவு சில நோய் நிலைமைகள் என்பன பற்றி அறிந்துகொள்கின்றார். அத்துடன், நுண்ணிய குருதிச்சுற்றோட்டம் (Micro Cixculation) விருத்தியடைகின்றது. புதிய செங்குருதிக் கலங்களின் உற்பத்தி என்பு மச்சையில் து}ண்டப்படும். குருதியில் கொலஸ்ரோலின் அளவு குறையும். இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயிரைக் காப்பாற்றிய மனநிறைவு, ஆத்மதிருப்தி அடையலாம்.

இத்ததானம் செய்யும் ஒருவர் அதனால் மயக்கமடைவார். வேலைகள் எதுவும் செய்யலாகாது. நோய்த் தொற்றுக்களாவார். உடலில் நிறைஅதிகரிக்கும் அல்லது குறையும் என்ற தவறான கருத்துக்களும், நம்பிக்கைகளும் மக்கள் மனதிலிருந்து வருகின்றது. இவை தவறானவையும் களையப்படவேண்டியவையும் ஆகும். பாரஊர்தி, விமான ஓட்டுநர்கள்தவிர ஏனையோர் வழமையான வேலைகளை அன்றே மேற்கொள்ளமுடியும். குருதி நிறப்பொருளின் உற்பத்திக்குத்தேவையான இரும்பு (fe) மற்றும் விற்றமின்கள் ஏற்கனவே போதியளவு சேமிப்பில் இருப்பதுடன், மலிவான உணவு வகைகளில் செறிவாக உள்ளது.

 எனவே, விலையுயர்ந்த உணவுகளை உள்ளெடுத்தலும் அவசியமற்றது. இதுதவிர, பரிசோதனைகள்மூலம் உறுதிப்படுத்தப்பட்ட ஈரல் அழற்சி டீ (செங்கணமாரி) இனால் பாதிக்கப்பட்டவர்களும், எச்.ஐ.வி (HIVஎயிட்ஸ்) உடையவர்களும் சிபிலிசு நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், ஊசிமூலம் போதைமருந்து எற்றுபவர்களும், குருதி வழங்கத்தகுதியற்றோராவார்.எனவே, அரிய மானிடப்பிறவியை எடுத்தவர்கள், நோயற்ற ஆரோக்கியமான சாரீரத்தைக்கொண்ட அனைவரும், தம் மனப்பயத்தினை நீக்கி, உறவுகளின் உயிர்காக்கும் இரத்ததானம் செய்ய முன்வரவேண்டும்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]