|
வின்டோஸ் இயக்கியைப்
பாவிக்கும் கணினியை உபயோகிக்கும் அனைவருக்கும், குறிப்பாக
ஒன்றிற்கு மேற்பட்ட கணினிகளை, நெட்வேர்க் அமைப்பில் இயக்கும்
நிறுவனங்களுக்கு, மைக்ரோசொவ்ட் நிறுவனம் விடுத்துள்ள அவசர
அறிவித்தலில், புதிதாக பரவிவரும் மிக மோசமான இந்த வைரஸ் குறித்து
எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
W32.Sasser.A
என்றழைக்கப்படும் இந்த வைரஸ், மற்றும் இதே பெயரைக்கொண்ட இதர
பைல்களையும், உடனடியாக கணினியிலிருந்து அகற்றுவதன் மூலம் மட்டுமே,
இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து கணினியைப் பாதுகாக்க முடியும்.
'Firewall'
என்றழைக்கப்படும், கணினிகளைப் பாதிப்பிலிருந்து பாதுகாக்கும்
இயக்கிகள் கொண்ட கணினிகளில், இந்த 'Firewall'
களை தொழிற்பட வைத்து, அது தொழிற்படும் சமயத்தில், மைக்ரோசொவ்ட்
நிறுவனம், தனது இணையத் தளத்தில் அறிமுகம் செய்துள்ள 'தானியங்கி
வைரஸ் நீக்கி" யை (அன்ரி-வைரஸ்) தரவிறக்கம் செய்வதன் மூலம்,
இந்த வைரசின் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
இதுவரை குறைந்தது ஒரு மில்லியனுக்கும் அதிகமான கணினிகளை
செயலற்றதாக்கி, பல சர்வதேச நாடுகளிலும் பாரிய நிறுவனங்கள்
சிலவற்றை செயலிழக்க வைத்துள்ள இந்த வகை வைரஸ் வின்டோஸ் எக்ஸ்.பி.,
வின்டோஸ் 2000, இவற்றுடன் வெளியான ‘சேவிஸ் பாக்’
என்றழைக்கப்படும் மேலதிக அம்சங்கள் அடங்கிய வழங்கிகளைப்
பாவிக்கும் கணினிகளைக் குறிப்பாகத் தாக்கி வருகின்றன.
இவ்வார இறுதியில் வெளியானதாகக் கருதப்படும் 'சாசர்"
என்றழைக்கப்படும் இந்த வைரசை, மைக்ரோசொப்ற் நிறுவனம் உடனடியாகவே
கண்டுபிடித்து விட்டதால், விரைவாக இதைத் தடை செய்ய முடிந்தாலும்,
இந்த வகையைக் சேர்ந்த
j
A, B, C, D
என நான்கு வெவ்வேறு வைரஸ்கள்
இதே பெயரில் பரவியதால், ஐரோப்பாவிலும், ஆசியா, அவுஸ்திரேலியா
போன்ற நாடுகளிலும் இந்த வைரஸ் தன் கைவரிசையைக் காட்டியிருக்கிறது.
வட அமெரிக்காவிலும் பல நிறுவனங்கள் இந்தவகை வைரசால்
பாதிப்பிற்குள்ளாகியுள்ளன.
இதனோடு ஒத்த இன்னும் பல வைரஸ்களும் பரவலாம் என்று
எதிர்பார்க்கப்படுவதால், வீடுகளிலும் வியாபார நிறுவனங்களிலும்
தொழில் இடங்களிலும் கணனிகளை வைத்திருப்பவர்கள், மைக்ரோசொப்ஃற்
நிறுவனம் அறிமுகம் செய்துள்ள 'தானியங்கி வைரஸ் நீக்கி" யை
உடனடியாக அவர்களது இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து,
கணினிகளைப் பாதுகாப்பது அவசியம் என்று பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களையும், உதவிகளையும் பெற, கீழ்வரும்
இணையத்தளத்திற்கு விஐயம் செய்யுங்கள்:
http://www.microsoft.com/security/incident/sasser.asp
ஐரோப்பிய வாழ் தமிழர்களின் நன்மை கருதி, பிற மொழிகளில்
இதுகுறித்த தகவல்களை அறிந்து கொள்ள, பின்வரும் தொடலிகளைத்
தருகிறோம்:
ஜேர்மன் டொச் மொழி: :
http://www.microsoft.com/germany/ms/security/sasser.mspx
நெதர்லாந்து டச்சு மொழி:
:
http://www.microsoft.com/netherlands/Security/sasser.asp
|