|
தகவல் தொழில்நுட்ப
பரிசையில் புதிதாக அறிமுகமாகியுள்ளது இ-சினிமா(E-Cinema).டிஜிட்டல்
முறையில் திரையிடப்படக்கூடியது.இ-சினிமா திரைப்படம்,முற்றிலுமாக டிஜிட்டல் முறையிலேயே பதிவு
செய்யப்பட்டிருக்கும்.தற்போது நாம் திரையரங்குகளில் காணும்
படங்கள்,திரைப்படச்சுருளில்தான் பதிவுசெய்யப்பட்டிருக்கும்.ஆனால்,இந்த டிஜிட்டல் திரைப்படங்களானது ஹார்டு டிஸ்க்கில்(HardDisk)பதிவுசெய்யப்பட்டிருக்கும்.இவற்றை,திரையரங்கங்களுக்கு
டி.வி.டி.ராம்(DVDROM)மூலமாகவோ,பிராட் பேண்ட் கேபிள்(BroadBandCable)மூலமாகவோ,செயற்கைக் கோள் மூலமாகவோ குறிப்பிட்ட திரையரங்கத்திற்கு
அனுப்பலாம். சாதாரண படச்சுருளை(35mm)டிஜிட்டல் முறைக்கு மாற்ற ரூ.15இலட்சம் வரை செலவுசெய்யவேண்டிவரும்.சாதாரண படச்சுருளை ப்ரிண்ட்
செய்ய ரூ.80,000வரை செலவாகும்.ஆனால் டிஜிட்டல் முறைக்கு
மாற்றப்பட்ட படத்தை ப்ரிண்ட் எடுக்கும் வெறும் ரூ.2,000தான்
செலவாகும்.(இந்திய ரூபாய்களில்)
இ-சினிமாவை திரையிட என்ன தேவை?
திரையரங்குகளில் டிஜிட்டல் ப்ரொஜெக்டர்களை(DigitalProjector)வாங்கினால்தான் இ-சினிமாவை
திரையிட முடியும்.திரையரங்கின் ஒலியமைப்பு மற்றும் தொழில்நுட்பக் கருவிகள்வாங்க
ரூ.30இலட்சம்வரை செலவாகும்.
திரையரங்கு ஊழியர்களுக்கு டிஜிட்டல்(Digital)கருவிகளை இயக்க பயிற்சி
அளிக்கவேண்டியிருக்கும்.
இ-சினிமாவின் பயன்கள்.
அதிக செலவுசெய்து படத்தை பிரிண்ட் எடுத்து விநியோகிக்கவேண்டிய
அவசியம் இல்லை.டிஜிட்டல் பிரின்ட் (DigitalPrint)எடுப்பதற்கு செலவு குறைவு.டி.டி.எஸ(DDS)்.மற்றும் டால்பி ஸ்டீரியோ எஃபெக்ட்களுடன்(DolphySterioEffect) படத்தைக்
கண்டுகளிக்கலாம்.துல்லியமாக பார்த்துரசிக்கக்கூடியவகையில் இருக்கும்.இ-சினிமா
படங்கள் ஹை கான்ராஸ்ட்(HighContrast)தன்மை கொண்டவை.டிஜிட்டல் முறை பதிவு என்பதால் எளிதில் சேதம் அடையாது.இந்தப் படங்கள் குறியீட்டுமுறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளதால்
அவ்வளவு எளிதாக நகல்Piracy)செய்ய இயலாது.முகவர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் அரசாங்கத்திற்கு
நல்லதொரு வருவாயை அளிக்கும்.ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் திரையிடலாம்.திரையரங்கை மாற்றி அமைக்கும் செலவைக்கூட விரைவில் எடுத்துவிடலாம்.படத்தை மறு பிரதி (Reprint)செய்யவேண்டிய அவசியமும் இல்லை. இந்தியாவில் இம்முறையில் முதன்முதலாக ஸ்டார்வார்ஸ் திரைப்படம்
எடுக்கப்பட்டுள்ளது.மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள எட்டு திரையரங்குகளில் இம்முறை
அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழகத்தில் 100திரையரங்குகளில்
அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.நாஸ்காம் ஆய்வுகள் இந்தியாவில் மல்டிமீடியா தொழில்நுட்ப வளர்ச்சி
அபாரமாக இருக்கும் என்று அறுதியிட்டுள்ளது.இந்திய
திரைப்படங்களிலும் அதன் சான்றுகளை இப்போது காணமுடிகிறது.அண்மைய இந்தி திரைப்படமான ஹம் தில் சுக்கி ஹைசனம்(HumSilDeChukkeHaiSanam)சல்மான்கான் மற்றும் ஐஸ்வர்யா ராய்
நடித்தது.இந்தப்படத்தில் சுமார் நூறுபேர்வரை கூடி பட்டம்
பறக்கவிடுவதுபோல் ஒரு காட்சி வரும்
இக்காட்சியை படம்பிடிப்பதில் உள்ள மிகப்பெரிய சிக்கல்
என்னவென்றால்,அனைவரின் பட்டத்தையும் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில்
பறக்கவைக்கமடியாது என்பதுதான். அவர்களுக்கு மல்டிமீடியா
கைகொடுத்தது.முதலில்,அனைவரும் பட்டம் பறக்கவிடுவதுபோல் நடித்தகாட்சி
படமாக்கப்பட்டது.ஐந்து நிமிடம்வரை இருக்கும் இக்காட்சி ஸ்கேன்
செய்யப்பட்டு RGB/tga Format இல் பதிவுசெய்யப்பட்டது.அதன்பின் பட்டங்கள் பறப்பதுபோன்ற காட்சியை
3D ஸ்டுடியோ மேக்ஸ்(3DStudioMAX) மற்றும் லைட் வேவ்(LightWave)மென்பொருள்களைக்கொண்டு உருவாக்கினர்.இறுதியாக 3Dவியூபோர்ட்(Viewboard)கொண்டு இரு காட்சிகளும் ஒரே
நேர்க்கோட்டில் இணைக்கப்பட்டன.
மல்ட்டிமீடியா(Multimedia)-விளக்கம்
மல்ட்டிமீடியாவின் ஆக்கம் திரையில் காணமுடிகிறது.மல்டிமீடியாவின் ஆதிக்கம் ஒலி,தகவல்,தொடர்பு ஆகியவற்றில்
விரிந்துள்ள எல்லைகள் அளவிடமுடியாத அளவுக்கு உள்ளது.மல்ட்டி மீடியா என்றால் என்ன?மல்ட்டிமீடியா என்பது எழுத்து ஒலி,அனிமேஷன்,கிராஃபிக்ஸ்,ஒளி ஆகியவற்றின் தொகுப்பாக திகழ்கிறது.எழுத்தாக செய்தித் தாள்களிலும்,ஒலியாக வானொலியிலும்,தொலைக்காட்சியின் பிரதானமான ஒளியாகத் திகழ்வது
ஒன்றுக்குமேற்பட்ட உறுப்புகளாய் சேரும்போது மல்ட்டிமீடியாவாக
உருவெடுக்கிறது. படம் திரையிடுவதில் மல்ட்டிமீடியா
இன்று ஃபிலிம் ரோல்கள்(FilmRoll)கொண்டு படம்திரையரங்கங்களில்
திரையிடப்படுகிறது.அவ்வாறு ஒரு ஃபிலிம் பிரதி எடுக்க ரூ.60,000செலவு பிடிக்கும்.அதே படத்தை டிஜிட்டல் மற்றும் சர்வர் கொண்டு
திரையிடும்போது ரூ.7,200செலவுசெய்தால் போதும்.
ஒலி அமைப்பில் டிஜிட்டல் தொழில்நுட்பம்
திரைங்கில் நம் கேட்கும் டிஜிட்டல் சவுண்ட் நிகழ்ச்சி நடக்கும்
இடத்தில் நாம் இருப்பதுபோன்ற ஒலிச்சூழலை உருவாக்குகிறது.சினிமா சான்றுகள் கொண்டே இதை விளக்கமுடியும்.காதலர்தினம்
படத்தில் மின்சார ரயில் வந்துபோகும் காட்சிகள் நிறைய உண்டு.வலப்புறம் ரயில் செல்லும்போது வலப்புறமாக ஒலி ஊர்வதை காணலாம்.இடப்புறம் செல்லும்போது இடப்புறமாக ஒலி ஊர்தல் இருக்கும்.அண்மைய காக்க காக்க திரைப்படத்திலும் ஆட்டோ ஒன்று வருவது போன்ற
காட்சி வரும்.ஆட்டோ வருவதற்கு முன்பே,வலதுபுற ஸ்பீக்கர்களில்
நாம் ஆட்டோ வருவதுபோன்ற ஒலியை கேட்கமுடியும்.சில நொடி இடைவெளியில் ஆட்டோ வலதுபுறமிருந்த ப்ரேமிற்குள்
நுழையும்.இது திரையரங்கில் வலது புறமோ இடதுபுறமோ இருக்கும்
ஸ்பீக்கர்களை மாற்றி மாற்றிப் போடுவதன்மூலம் சாத்தியமாகிறது.
மல்ட்டீமீடியா கம்யூனிகேஷன் சிஸ்டம்(Multimedia
Communication System)
படம்பிடித்தல் படம் திரையிடுதல் மட்டுமல்லாது,ஒரு திரைப்படத்தை
அதன் படப்பிடிப்பு நேரத்திலேயே மெருகேற்ற மல்ட்டிமீடியா
உதவுகிறது.அண்மைய ஜேம்ஸ்பாண்ட் படமான டை அனதர் டே(Die
Another Day) இதற்கு மிகச்சிறந்த சான்றாகும்.இப்படம் இலண்டனில் படமாக்கப்பட்டபோது,இப்படத்தை
மெருகேற்றக்கூடிய தொழில்நுட்பவல்லுனர்கள் லாஸ் ஏஞ்சல்சில்
இருந்தார்கள்.இவர்களுக்கிடையே ஏ.டி.எம்.தகவல் தொடர்பு(ATM
Data link)ஏற்படுத்தப்பட்டு பகிர்ந்துகொள்ளப்பட்டன.அவர்களுக்கிடையே வீடியோ காஃன்பரன்சிங்(Video
Conferencing)வசதியும்
ஏற்படுத்தப்பட்டிருந்தது.படப்பிடிப்புக் குழுவும்,விமர்சனக்
குழுவும் இதன்மூலம் தங்கள் கருத்துக்களைப்
பகிர்ந்துகொள்ளமுடிந்தது.படப்பிடிப்பு நடைபெறும் நேரத்திலேயே
இவ்வாறு சரி செய்யப்படுவதால் படத்தின் தரம் உயர்வதோடு,பின்பு
ஒருநாள் அக்காட்சியை படமாக்க நாயகன்,நாயகியைத் தேடி அலைவதும்
தவிர்க்கப்படுகிறது.
சில மல்ட்டிமீடியா தொழில்நுட்பத் துளிகள்
திரைப்படத்திற்கு எஸ்.எப்.எக்ஸ்.(SFX) என்பதும் ஸ்பெஷல் எஃபெட்களுக்கு(effect) உதவும் சில மல்டீமீடியா தொழில்நுட்பங்கள்.
மார்ஃபிங்(Morphing)
திரையில் ஒரு பொருள் மற்றொன்றாக படிப்படியாக உருப்பெயர்வதே
மார்ஃபிங் ஆகும்.டெர்மினேட்டர்2(Terminator2)படத்தில் தி மம்மி(The
Mummy),படத்திலும்
இந்த உருப்பெயர்தலை நாம் ரசித்திருக்கிறோம்.
ஆல்ஃபாசேனல்(AlphaChannel)
சில திரைப்படக் காட்சிகளை பச்சை நீல நிற பின்னணியில்
படம்பிடித்து,பின்பு அந்நிற பின்னணியை நீக்கி, அதற்கு தகுந்த
பின்னணிக் காட்சிகொண்டு இணைக்கலாம்.புதிதாக திரைக்கு
வரவிருக்கும் ஒரு தமிழ்ப்படத்தில்,கதாநாயகன் வேகமாக ரயிலைக்
கடப்பது போன்ற காட்சி.இதற்காக நாயகனை பச்சை நிற பின்னணியில்
வைத்து பிளாட்பாரங்களுக்கிடையே கடப்பது முதலில் பிடிக்கப்பட்டது.ரயில் வேகமாக வருவதை பின்பு தனியாக படம் பிடிக்கப்பட்டது.இப்பொழுது பச்சை நிற பின்னணி அகற்றப்பட்டு,அவ்விடத்தில் ரயில்
காட்சியை இணைக்கமுடியும்.இதுதான் ஆல்ஃபாசேனல் என்னும்
தொழில்நுட்பமாகும்.
கம்போசிட்டிங்(Composting)
படம்பிடிக்க அரிய காட்சிகளை இரு காட்சிகளாகப் பிரித்து,படமாக்கி,பின்பு இணைப்பதே கம்போசிட்டிங்
(Composting)ஆகும்.சான்றாக,ஸ்பைடர் மேன்(SpiderMan)படம். அதில்வரும் வில்லன் கதாபாத்திரம் கீரின் காப்ளின்
மக்கள்கூடும் இடங்களில் பறந்துவந்து சண்டை செய்வதுபோல் இருக்கும்
மக்கள்கூட்டம் வில்லன் பறப்பதுபோல் இருகாட்சிகள் தனித்தனியாக
படமாக்கப்பட்டு பின்பு மாய(Maya)மென்பொருள்கொண்டு டிஜிட்டல் முறையில்
கம்போசிட் செய்யப்பட்டது.
மோஷன் கேப்சரிங்(Motion Capturing)
கணனியில் நாம் உருவாக்கிய டிஜிட்டல் உருவங்களுக்கு
மிகத்துல்லியமாக உடலசைவுகளைக்கொடுக்க முடியும். அதற்கு
உதவுவதுதான் மோஷன் கேப்சரிங் ஒரு ஆளின் உடலசைவுகளை கேமரா(Camera) மூலம்
படம்பிடிக்கப்பட்டு சிறப்பு மென்பொருள் மூலம் பதிவுசெய்யப்படும்.இந்த உடலசைவுகளை பின்புநாம் அனிமேஷனுக்க(Animation)பயன்படுத்தும்
உருவங்களுக்கு பயன்படுத்தலாம். |