|
கொம்யூட்டர், ஈ-மெயில்,
இன்டநெற், சற்ரூம் போன்ற நவீன இலத்திரனியல்களின் வரவு இளம்
சமுதாயத்தில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.கொம்யூட்டரில்
திடீரென வெளிப்படும் ஆபாசச் செய்திகளும் படங்களும் இள வயதினரைப்
பார்க்கத்தூண்டுவையாக உள்ளன.ஈ-மெயிலில் அனுப்பப்படும் பாலியல்
செய்திகளும் படங்களும் அவற்றைத் திரும்பப் பார்க்கவேண்டும் என்ற
என்ற எண்ணத்தை இளைஞர் மத்தியில் ஏற்படுத்துகின்றன.சற் ரூமில்
பெயர்களை மாற்றி நடைபெறும் உரையாடல்களால் இளைஞர் சமுதாயம்
பொன்னான நேரத்தை மண்ணாக்குகின்றது.அன்பாக ஆரம்பமாகும் சற்
உரையாடல்கள் சில வேளை பாலியல் தவறுகளில் இளைஞர்களை
வீழ்த்திவிடுகின்றன.
கொம்யூட்டர் மூலம்
நடைபெறும் செய்திப் பரிமாற்றங்களைக் கண்டுபிடிக்கவோ,மாற்றவோ
எல்லோராலும் முடிவதில்லை.அதனைக் கண்டுபிடிக்கும் வல்லமை
ஒருசிலரிடம் மட்டும்தான் உள்ளது.முகம் தெரியாமல் ஆரம்பமாகும்
உரையாடல் பின்னர் முகம் தெரிந்தபின்பும் அவரைக் கைவிடமுடியாத
பிணைப்பை ஏற்படுத்திவிடும்.வயது,பால் என்பன சற் உரையாடலுக்குத்
தடைபோடுவது கிடையாது.பொலிஸ் வானில் அழைத்துச்செல்லப்படும்வேளை
பொரி ஸ்டுயா பேக்கர் மிகுந்த குழப்பம் நிறைந்தவராகக்
காணப்பட்டார்.முகத்தை கையால் மறைக்க முயற்சிசெய்தார்.தன்னைப்
படமெடுக்கும் வீடியோ கமராக்களின் எண்ணிக்கையைப் பார்த்து அவர்
மிரண்டிருந்தார்.
அவர் நினைத்ததுபோல் அது நடந்தது.அடுத்த சில
தினங்களில் இன்டநெட் மூலம் அவருக்குக் கிடைத்த 12 வயது லண்டன்
சிறுமியுடன் 31வயதான டொபி மிக்சிகனிலிருந்து மன்செஸ்டருக்கும்
அங்கிருந்து பிராங்போர்ட் சிறைக்கும் பயணித்த கதை உலகம்
முழுவதும் தெரியவந்தது.
செவன் பெனிங்டன் (12)அவரது ஆசிரியைகளை பொறுத்தவரை மிகவும்
துடிப்பான புத்திசாலித்தனமான சிறுமி.பிரிட்டனின் ஆயிரக்கணக்கான
சிறுமிகளைப்போல அவளும் ஒரு இன்டநெட் பைத்தியம்.பல மணிநேரம்
Internetமுன் உட்கார்ந்திருப்பதும் கண்ணிற்குத் தெரியாத பலருடன்
பேசி உறவினை ஏற்படுத்திக்கொள்வது,அவருக்குப் பிடித்தமான
விடயம்.செவன் பெனிங்டன் சில வேளைகளில் 11 மணித்தியாலங்களுக்கும்
மேலாக Internetமுன்னால் அமர்ந்திருப்பார்.(இதனைத்
தடுத்துநிறுத்த அவரது தாயார் மேற்கொண்ட முயற்சிகள் தோற்றுப்போனது
வேறுவிடயம்).
இவ்வாறான ஒரு
சந்தர்ப்பத்திலேயே செவனிற்கு டொபியுடன் நட்பு கிடைத்தது.டொபி
ஸ்டுடாபேக்கா முன்னாள் கடற்படைவீரர்.மனைவியை இழந்தவர்.2000ஆம்
ஆண்டு கடற்படையில் சேர்ந்த அவர் 4th Marine expeditionary
brigade இல் சேர்ந்து பயங்கரவாத
எதிர்ப்பு பயிற்சியைப் பெற்றார்.மிக நவீன ஆயுதங்களைப்
பயன்படுத்துவதில் தேர்ச்சிபெற்றார்.செப்டெம்பர் 11 தாக்குதல்கள்
திடீரென அவரை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவராக மாற்றின.2001டிசம்பரில் கந்தஹார் டொடி தலிபான் யுத்தக் கைதிகளுடன் பல
ஊடகங்கள் வெளியிட்டிருந்தன.(அவரிற்கு விருதுகளும் கிடைத்தன.)அவருக்கும் செவன் பெனிங்டனிற்கும் இடையிலான உறவு இன்டநெட் சட்
ரூம்களில்(Internet Chatroom)ஆரம்பமானது.
சட் ரூம்களில் உறவை
ஏற்படுத்திக்கொள்ளும் பலர் தங்களுடைய நிஜ முகத்தை
மறைத்துக்கொள்வது போல இருவரும் தங்களை
மறைத்துக்கொண்டனர்.மாதங்கள் சில கடந்ததும் இருவருக்கும்
இடையிலான உறவு பலப்பட்டது.இருவருக்கும் இடையில் பல விடயங்களில்
பொருத்தப்பாடு காணப்பட்டது.இருவருக்கும் ஒரே இசை பிடித்திருந்தது.
இருவரும் உலகம் முழுக்க சுற்றிப்பார்க்க விருப்பம்
கொண்டிருந்தார்கள்.இன்டநெட்டில் ஆரம்பித்த நட்பு பின்னர்
தொலைபேசி,கடிதங்கள் மூலம் பலப்பட்டது.சில மாதங்களுக்கு முன்னர்
கடற்படையிலிருந்து திடீர் ஓய்வில் வந்த டொபி சிறிய விபத்து
காரணமாக தனது தோளில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தான் தன்னுடைய
பெண் நண்பியைக் காண ஐரோப்பாவிற்கு செல்வதாகவும் கூறியுள்ளார்.
அதேவேளை தன்னுடைய
வயதினை நிரூபிப்பதற்கு கடவுச் சீட்டு தேவைப்படுவதாகக் கூறி செவன்
தனது தாயிடமிருந்து கடவுச் சீட்டைப் பெற்றிருக்கிறாள். பின்னர்
தனது நண்பிகளுடன் Shopping செல்வதாகக்; கூறிவிட்டு
வீட்டிலிருந்து கிளம்பியிருக்கிறாள்.பின்னர் அங்கிருந்து
மான்செஸ்டரிற்கு பேருந்தில் பயணம்செய்த அவள் முதல் தடவையாக
தன்னுடைய இன்டர்நெட் நண்பனைக் கண்டிருக்கிறாள்.பின்னர் இருவரும்
ஹீத்ரு விமான நிலையத்திற்கு சென்று அங்கிருந்து பிரான்ஸ் தலைநகர்
பாரிஸிற்கு சென்றிருக்கின்றனர்.நேரம் செல்லச்செல்ல செவனின்
பெற்றோரை அச்சமும் சந்தேகமும் சூழத் தொடங்கியுள்ளது.
அவளுடைய அறையினை சோதனையிட்ட அவர்கள் செவனுக்கு பிடித்தமான
உடைகளும் கடவுச் சீட்டும் காணாமல் போயுள்ளதைக்
கண்டுபிடித்துள்ளனர்.எனினும் அவர்களால் என்ன நடந்தது என்பதை
ஊகிக்க முடியவில்லை.செவன் பல மணிநேரத்திற்குப் பின்னரும்
திரும்பிவராததை தொடர்ந்து மான்செஸ்டர் பொலிஸார் அவளுடைய படத்தினை
இன்டபோலிற்கு கொடுத்து இன்டபோலின் உதவியை நாடியுள்ளனர்.இதற்கிடையில் செவனின் பெற்றோர் ஊடகங்களின் உதவியை நாடியுள்ளனர்.செவனின் தாயார் தனக்கு மகள்மீது கோபம்இல்லை என கூறியுள்ளார்.மகளை வீட்டிற்கு வருமாறு அழைத்திருக்கிறார்.Please we just want
you back, we are not angry with you, we love very much and
just can you to come home என்ற
வேண்டுகோளை விடுத்துள்ளார்.
செவனின் தந்தையார் தானும் தனது மனைவியும் Online chat room களின்
ஏற்படக் கூடிய ஆபத்துக் குறித்து பலமுறை எச்சரித்துள்ளதாக
தெரிவித்துள்ளார்.எனது மகளிடம் யாருக்கும் பெயரையோ
முகவரியையோ கொடுக்கவேண்டாம் எனக் கூறினோம்.நாங்கள் அவருடைய
வயதினையொத்தவர்களுடனேயே Chat
செய்கிறார்கள் என கருதிக்கொண்டிருந்தோம் எனக் கூறினர்.ஊடகங்கள்
மூலம் அவர்கள் விடுத்த வேண்டுகோள்களைத் தொடர்ந்து அந்தப்
பெற்றோரிற்கான அனுதாபம் குவியத் தொடங்கியது.
செவன் காணாமல்போன விவகாரம் அரசியல் தலைவர்களின் கவனத்தையும்
ஈர்த்தது.பிரிட்டிஸ் உளவுத்துறை அமைச்சர்,பிரான்ஸ் அமைச்சருடன்
தொடர்புகொண்டு பிரான்ஸ் தொலைக்காட்சிகளில் பெற்றோரின் உருக்காமன
வேண்டுகோளை ஒளிபரப்புமாறு கேட்டார்.அவையும் ஒளிபரப்ப
தொடங்கின.இதற்கிடையில் எதிர்பாராதவிதமாக டொபி அவரது
உறவினர்களுடன் தொடர்புகொண்டு அந்த வேண்டுகோளை கேட்டதாகவும் மனம்
நெகிழ்ந்துபோனதாகவும் செவன் தன்னுடைய வயதினைக் குறைத்து சொல்லி
ஏமாற்றிவிட்டதாகவும் கூறியுள்ளார்.தான் இருக்கும் இடத்தை கூறிய
அவர் சிறுமியை பத்திரமாக அனுப்பிவைப்பதாக கூறியுள்ளார்.(எனினும்
சிறுமிக்கு இதில் விருப்பமில்லாதது வேறு விடயம்).
பின்னர் அவர் செவனை மான்செஸ்டரிற்கு செல்லும் விமானத்தில் ஏற்றி
அனுப்பிவிட்டு, பிரங்போர்ட்டிற்கு தப்பிச்செல்ல
முயன்றிருக்கிறார்.எனினும் எம்.பி.ஐ.யினரும் ஜேர்மன் பொலிஸாரும்
இணைந்து அவரை கைதுசெய்துள்ளனர்.பலத்த மனப்போராட்டத்திற்கும்
கண்ணீருக்கும் பின்னர் செவன் தற்போது தனது குடும்பத்தினருடன்
இணைந்துள்ளார்.டொபிக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.அவர்
சிறுமி தன்னை பிழையான வயதினைக் கூறி ஏமாற்றிவிட்டதாகவும் தான்
சிறுமியுடன் எதனையும் வைத்துக்கொள்ளவில்லை எனவும்
குறிப்பிட்டுள்ளார்.
பெனிங்டன்
குடும்பத்தைப் பொறுத்தவரை இந்த விடயம் இத்துடன்
முடிந்துள்ளபோதிலும் வேறு பல குடும்பங்கள் இத்தகைய ஆபத்தொன்றினை
சந்திக்கும் அபாயம் உள்ளது.முன்பின் அறியாதவர்களுடன் சிறுமிகள் இவ்வாறு இணையம் மூலம்
தொடர்பினை ஏற்படுத்திக்கொள்வது பரவலாக விடயமாகிவிட்டதை பல
ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.இவ்வாறு சட் ரூம்கள் மூலம்
ஏற்படுத்திக்கொண்ட உறவுகளை இணையத்திற்கு அப்பால் அவர்கள் பரவலாக
விரிவுபடுத்துவது தெரியவந்துள்ளது. பலரிற்கு இதனால்
ஏற்படக்கூடிய அபாயம் குறித்தும் சரியாக தெரியாமல் உள்ளது.
-ரணா. |