www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

தகவல் தொழில் நுட்பம்

உங்கள் கணியைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி?

-திசைகள்-

உங்கள் கணினியின் இயங்கு தளம் விண்டோ ஸ் 98 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருந்தால், சில எளிய நடவடிக்கைகள் மூலம் அவற்றைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்.இந்த நடவடிக்கைகள் ஒன்று இரண்டு மூன்று என எண்ணுவது போல எளிதானது என்று சொல்லும் மைக்ரோசாஃப்ட், அவற்றைத் தமிழில் தனது தளத்தில் விவரித்திருக்கிறது. ஆம் தமிழில்!

அது மட்டுமல்ல, பல தொழில்நுட்பத் தகவல்கள், தொகுப்பு வரிசை எனப்படும் Colation பற்றிய அறிமுகம், அது தொடர்பான சில மயக்கங்கள் போன்ற பொருட்களில் கட்டுரைகள் காணப்படுகின்றன.

உங்களுக்குத் தொழில்நுட்பம் தேவை இல்லை எனில், வினாடி வினா போன்ற விளையாட்டுக்கள், சில வெற்றிக் கதைகள், துணுக்குகள் இவற்றைப் படிக்கலாம்.

வினாடி வினாக்கள் நடத்துவதற்குப் பெயர் பெற்ற ஓபிராயனுடன் சேர்ந்து வெப்துனியா நடத்தும் வினாடி வினா நடத்தும் போட்டிக்கான இணைப்பையும் இங்கு காணலாம். இந்த வினாடி வினாவில் தமிழிலும் பங்கு கொள்ளலாம். எட்டு வாரங்கள் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் பரிசு பீன்ஸ்டாக் கணினி.

மைக்ரோசாப்ட்டின் பாஷா இந்தியா முயற்ச்சிகளில் ஒன்றான இந்த இணையதளத்தை ஆறாம் திணை இதழின் முன்னாள் ஆசிரியர் திரு.அப்பண்ணசாமி கவனித்துக் கொள்கிறார்.
இணையதள முகவரி:
http://www.bhashaindia.com/Patrons/PatronsHome.htm?lang=ta

அனுப்பியவர் வெப்தமிழன்

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]