www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இப்படியும்

அமெரிக்காவை ஆட்டிவைக்கும் கிரிக்கெட் மோகம்

பொதுவாகவே ஆங்கிலேயர்கள் ஆண்ட நாடுகளில் கிரிக்கெட் விளையாட்டு பிரபலமாக இருக்கும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகள். அமெரிக்காவும் ஆங்கிலேயர் ஆட்சி செய்த நாடுதான். அங்கும் முதலில் கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். ஆனால் பின்னர் ஆங்கிலேயரை எதிர்த்து ஜார்ஜ் வாஷிங்டன் போர் செய்ததால் கிரிக்கெட் விளையாடுவது அடிமைத்தனத்தைக் குறிக்கும் என்று நினைத்து அமெரிக்கர்கள் கிரிக்கெட் விளையாடுவதை தவிர்த்துள்ளனர்



இதனால் கிரிக்கெட் அமெரிக்காவில் தன் முக்கியத்துவத்தை இழந்துள்ளது. ஆனால் கிரிக்கெட் போலவே விளையடப்படும் பேஸ்பால் பிரபலமடைந்துள்ளது. கிரிக்கெட் போலவே இருப்பதாலும், கிரிக்கெட்டை விட எளிதாக இருப்பதாலும், பேஸ்பால் விளையாடுவதற்கு கிரிக்கெட்டை விட உபகரணங்கள் குறைவு என்பதாலும் பேஸ்பால் கிரிக்கெட்டின் இடத்தைப் பிடித்துக் கொண்டது



சமீப காலங்களில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளில் இருந்தும் மேற்கு இந்திய தீவுகள் போன்ற கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் இருந்தும் பலர் அமெரிக்காவில் அதிகம் குடியேறுவதால் அமெரிக்காவில் கிரிக்கெட் இழந்த தன் முக்கியத்துவத்தை மீண்டும் பெறத்தொடங்கி இருக்கிறது

அனுப்பியவர் Admin

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]