www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இப்படியும்

ஐஸ்வர்யா ராயை காண அலைமோதிய ரசிகர்கள்

பிரபல பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்ட படப்பிடிப்பை காண்பதற்காக துபாயில் ரசிகர்கள் அலைமோதியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

முன்னாள் உலக அழகியான ஐஸ்வர்யா ராய் பாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹாலிவுட் திரைப்படம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில், வர்த்தகம் தொடர்பான ஒரு படப்பிடிப்பில் கலந்து கொள்வதற் காக துபாய் சென்றார்.

அவர் படப் பிடிப்பில் நடிக்கும் செய்தி காட்டுத்தீ போல பரவியது. அவரை பார்க்கும் ஆவலில் ரசிகர்கள் ஏராளமாக திரண்டனர். இதன் காரணமாக துபாய் நகர வீதிகளில் வாகனப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. ஷேக் சயித் ரோட்டிலிருந்து ஜிபெல் அலி என்ற இடம் வரை வாகனங்கள் நத்தை போல இடைவெளிவிட்டு ஊர்ந்து செல்ல வேண்டியதாயிற்று. இதனால் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்க நேர்ந்தது. துபாய் மக்களிடம் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த அளவுக்கு புகழும், செல்வாக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது என்று "கலீஜ் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது.

அனுப்பியவர் Admin

 

0 கருத்துக்கள்:

உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment

முகப்பு

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]