ஜப்பான் இளவரசிக்கு ஆண் குழந்தை
டோக்கியோ, செப்.6:
ஜப்பானிய இளவரசிக்கு இன்று காலை ஆண் குழந்தை பிறந்தது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டு அரச பரம்பரைக்கு வாரிசு கிடைத் துள்ளது.
உலகில் மன்னராட்சி நடைபெறும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. தற்போது பேரரசர் அகிடோ அந்நாட்டின் மன்னராக இருக்கிறார். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூத்த இளவரசர் பெயர் நருஹிடோ. அவரது சகோதரர் பெயர் அகிஷினோ. இந்த இருவருக்குமே ஆண் வாரிசு இதுவரை கிடையாது. மூத்த இளவரசருக்கு ஒரேயொரு பெண் குழந்தை பிறந்தது. அகிஷினோவின் மனைவியான இளவரசி கிகோ இதுவரை இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயாகி இருக்கிறார். அவருக்கும் ஆண் குழந்தை பிறக்கவில்லை.
ஜப்பானில் ஆண் வாரிசே பட்டத்திற்கு வர வேண்டுமென்பதே வழக்கமாக இருக்கிறது. இந் நிலையில் ஆண் வாரிசு பிறக்காதது அந்நாட்டு மக்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியது. அடுத்த இளவரசராக பட்டமேற்க யாரும் இல்லாத நிலையில், பெண் களுக்கு வாரிசுரிமை தந்து இளவரசியை பட்டத்தில் அமர்த்த வேண்டுமென்பது தொடர்பாக பரவலான விவாதம் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இளவரசி கிகோ மீண்டும் கருவுற்றார்.
இந்த முறை யாவது அவருக்கு ஆண் குழந்தை பிறக்குமா என பலத்த எதிர்பார்ப்பு இருந்தது. இந்நிலையில் இன்று காலை அவர் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இது ஜப்பானிய மக்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 40 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டு அரச பரம் பரைக்கு ஆண் வாரிசு பிறந்துள்ளது. சிசேரியன் மூலம் பிறந்த இந்த குழந்தை ஆரோக்கியமாக இருப்ப தாக அரண்மனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








0 கருத்துக்கள்:
உங்கள் கருத்துக்களை அனுப்ப Post a Comment
முகப்பு