www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat

இப்படியும்

சர்வதேசப்போலீஸ் தேடிய கோழித்திருடன்

-Kisukisu.com-
ருமேனியா நாட்டைச் சேர்ந்த 51 வயது நபர் அயாசி. இவர் 4 ஆண்டு களுக்கு முன்பு பக்கத்து வீட்டுக்காரரின் கோழிப்பண்ணையில் இருந்து 7 கோழிக்குஞ்சுகளைத் திருடினார். அதன் பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார்.

சமீபத்தில் அவர் நாடுதிரும்பினார். அப்போது எல்லைப்பாதுகாப்பு படை யினர் சர்வதேசப் போலீசார் இவரைத் தேடி வருவதாகத் தெரிவித்தனர். கோழிக்குஞ்சுகளைத் திருடியதற்காக சர்வதேச போலீசார் கைது வாரண்டு டன் சென்று அவரைக் கைது செய்தனர். அவருக்கு 3ஷி ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

4 நாட்கள் ஷவரில் நனைந்து உலக சாதனை

ஜெர்மன் நாட்டில் ஹோவல்காப் நகரைச் சேர்ந்த 17 முதல் 25 வயசுக்கு உட்பட்ட 5 ஆண்களும் 2 பெண்களும் 101 மணி நேரம் தொடர்ந்து ஷவரின் கீழ் நின்று உலக சாதனை படைத்தனர்.

கடந்த புதன் கிழமை 10 பேர் ஷவரில் நிற்கத் தொடங்கினர். இடையில் 3 பேர் இந்த சாதனை நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டனர். மீதி 7 பேர் மட்டும் 101 மணி நேரம் ஷவரில் நின்று சாதனை படைத்தனர்.

2000-ம் ஆண்டு பெர்லின் நகரைச் சேர்ந்த சில இளைஞர்கள் 100 மணி நேரம் ஷவரில் நின்று முதன் முதலாக சாதனை நிகழ்த்தினர். அதை இந்த 7 பேரும் இப்போது முறியடித்து உள்ளனர்.

மிக நிண்ட நேரம் ஷவரில் நின்ற 17 வயதுச் சிறுவனுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டது.

சாதனை நிகழ்த்திய 7 பேரும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் ஆனால் களைத்துப் போய் விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

நிறம் மாறிய பூனை

இங்கிலாந்து நாட்டில் ஒகேஹாம்ப்டன் நகரைச் சேர்ந்த தம்பதிகள் பிலிப் ஜோவான் எவார்த். இவர்கள் 9 வயது பூனையை வளர்த்து வந்தனர். வெள்னை நிறப்பூனையை எடுத்துக் கொண்டு வெளியே சென்றனர். திரும்பி வந்த பிறகு பார்த்தால், பூனையின் நிறம் கருநீலமாக மாறிவிட்டது.

தலை காதுகள் உடல் ஆகியவை கருநீலமாக மாறி விட்டன.

“மிருக வைத்தியரிடம் பூனையைக் கொண்டு சென்று காட்டினோம். அவரால் நிறம் மாறியதற்கான காரணத்தைக் கண்டு பிடிக்க முடியவில்லை இப்படி திடீர் என்று நிறம் மாறியது எங்களுக்கு கவலை அளிக்கிறது'’ என்று பிலிப் கூறினார்.

தினதந்தி-

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

திருமணத்தின் போது மாப்பிள்ளை காணவில்லை…தூங்கி கொண்டிருந்தவர் `திடீர்’ மாப்பிள்ளை ஆனார்!

- இது எப்படி இருக்கு? :Kisukisu.com—
ஆரணி, செ.6- ஆரணி அருகே திருமணம் நடக்க இருந்த போது மாப்பிள்ளை திடீரென மாயமாக ஓட்டமெடுத்தார். இதனால் தூங்கிக் கொண்டிருந்த மணப்பெண்ணின் மாமா மகன் `திடீர்’ மாப்பிள்ளை ஆனார்.

ஆரணி அடுத்த மாமண்டூரை சேர்ந்த மணி மகள் ஜெயந்தி என்ற பெண்ணுக்கும், சென்னையை சேர்ந்த குணசேகரன் மகன் முத்துக் கிருஷ்ணன் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சியக்கப்பட்டு நேற்று மாமண்டூரில் உள்ள ஸ்ரீதில்லையம்மன் திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெற ஏற்பாடாகி வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் (4_ம் தேதி) இரவு மாப்பிள்ளை, பெண் அழைப்பு நடந்தது. இந்நிலையில் திடீரென நேற்று விடியற்காலை மாப்பிள்ளை முத்துக்கிருஷ்ணன் காணாமல் போனதால் மண்டபம் திடீர் பரபரப்பானது. மாப்பிள்ளை வீட்டார், பெண்வீட்டார்கள் அதிர்ச்சி அடைந்தனர். மாப்பிள்ளை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

மாப்பிள்ளை உடன் வந்திருந்த நண்பர்கள் 10 பேரையும் மடக்கி வைத்து கொண்டு தீவிர விசாரணை செய்தனர். மேலும் ஆரணி தாலுகா காவல் துறையினருக்கு தகவல் தரப்பட்டது. போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் விசாரணை செய்தனர்.

பின்னர் பெண்ணின் தாய்மாமன் பார்த்திபன். மாமண்டூரை சேர்ந்தவர். அவரின் மகன் பாலாஜி என்பவரை திருமணம் செய்ய பெண் வீட்டார் கேட்டனர். பின்னர் உறவினர் தானே என பார்த்திபன் தன் மகனுக்கு ஜெயந்தியை திருமணம் செய்ய ஒப்புக் கொண்டார்.

பின்னர் பாலாஜியை தேடினர். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அவரை எழுப்பி நீதான் ஜெயந்தியின் கழுத்தில் தாலி கட்டவேண்டும் என தந்தை மற்றும் உறவினர்கள் கூறி மணமேடைக்கு அனுப்பினர். திருமணம் நல்லபடியாக நடந்தது.

திடீரென ஓடிப்போன மாப்பிள்ளை மண்டபத்தில் நுழைந்தான். இதனால் மேலும் பரபரப்பானது. போலீசாரும் பெண்வீட்டார் மாப்பிள்ளையின் தாய், தந்தை ஆகியோர் முத்துக்கிருஷ்ணனிடம் விசாரித்ததில், `எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை’ என கூறினார். மேலும், நான் விடியற்காலை முதல் எங்கே சென்றேன் என தெரியவில்லை என குடிபோதையில் உளறினார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

விஷம் குடித்து மனைவியின் சமாதியில் உயிரை விட்ட ரேசன் கடை ஊழியர்

-தினகரன்-
கிருஷ்ணகிரி, செப்.5- மனைவி இறந்ததால் மனம் உடைந்த ரேசன் கடை ஊழியர், அவரது சமாதியிலேயே விஷம் குடித்து உயிரை விட்டார்.
கிருஷ்ணகிரி வீரப்ப நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் செல்வம் (வயது45). கூட்டுறவு விற்பனை அங்காடியில் (ரேசன் கடை) விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.

செல்வத்தின் மனைவி கடந்த 3 வருடத்திற்கு முன் இறந்து விட்டார். இதனால் மனம் உடைந்த செல்வம் பலமுறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் உற வினரால் அவர் காப்பாற்றப்பட்டார். இந்த நிலையில் தனிமை யில் வாழ்ந்து வந்த செல்வத்திற்கு அடிக்கடி மனைவியின் நினைவு வாட்டி வந்துள்ளது. இதைத்தொடர்ந்து அவர் சில தினங்களுக்கு முன், பூச்சி மருந்து மற்றும் குளிர்பானம் ஆகியவற்றை வாங்கிக் கொண்டுமனைவியின் சமாதி பக்கம் சென்றhர். அங்கு குளிர்பானத்தில் விஷத்தை கலந்து குடித்து மனைவியின் சமாதியிலேயே படுத்து ,துடி துடித்து உயிரை விட்டார்.

இது பற்றிய தகவல் பையனப்பள்ளி கிராம நிர்வாக அதிகாரி ராம கிருஷ்ணனுக்கு தொpவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தார். மேலும் இது குறித்து கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்திலும் அவர் புகார் செய்தார்.

இதன் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனீர் பாஷh வழக்கு பதிந்து , பிணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறhர்.

மனைவியின் இறந்த துக்கம் தாளாமல், அவரது சமாதியிலேயே கணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அனுப்பியவர் வெப்தமிழன்

0 கருத்துக்கள்

 

அனைத்து உரிமைகளும் வெப்தமிழன்.கொம்© இற்குரியது(2002-2004)
 
[பாவனை செய்யப்பட்ட எழுத்துரு யுனிக்கோட]