|
எதிர்வரும் ஏப்பிரல் 2ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 13ஆவது
நாடாளுமன்றத்தேர்தலில்,தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும்
மாவைசேனாதிராஜாவை நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பாகவும்,இலங்கை
நிலவரம் தொடர்பாகவும்
நமதுஈழநாட்டுக்கு வழங்கிய செவ்வி.
தமிழ்மக்கள் உணர்வுரீதியாக ஒன்று பட்டு,இலங்கையில் அனைத்துத்
தமிழர்களும் ஒன்றுபட்டு ஓரணியில் நிற்பதை உலகுக்கு
எடுத்துக்காட்டும் வகையில் இந்தத் தேர்தல் அமையவேண்டும்
என்கின்ற கருத்தை ஆணித்தரமாகக் கொள்ளும் வகையில் அவரது
கருத்துக்கள் அமைந்திருந்தன.அவற்றை இங்கு தொகுத்து நோக்குவோம்.
கேள்வி:-சமகால தமிழ் மக்களின் இலக்குக்குறித்த தங்களின் கருத்து
எவ்வாறு அமைகிறது?
பதில்:- இன்று இந்தத் தேர்தலை மையமாக வைத்து உங்களுடைய
கேள்விக்கான விடையை அளிப்பதானால்,தென்னிலங்கைப் பேரினவாத அரசியல்
கட்சிகளின் போட்டியின் காரணமாகத்தான் இன்றைய தேர்தல்
உருவாக்கப்பட்டுள்ளது.கடந்த 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம்
திகதி இடம் பெற்ற பொதுத்தேர்தலில்-மக்கள் தெளிவானதொரு ஆணையை
வழங்கியிருந்தார்கள்.அதன்படி,தமிழீழ விடுதலைப்புலிகளுடனேயே
பேச்சுவார்த்தை நடத்தி,நாட்டில் இடம்பெற்றுவரும் போருக்கு
முடிவுகட்ட வேண்டும் எனவும்,தமிழீழ விடுதலைப் புலிகளே தமிழ்
மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்பதனையும்
வலியுறுத்தியிருந்தனர்.எனினும்,ஆறு ஆண்டுகள் நிலைத்திருக்க
வேண்டிய நாடாளுமன்றை,இரண்டு ஆண்டுகளில்
கலைத்ததன்மூலம்,ஜனாதிபதியின் திட்டமிடப்படாத அரசியல் நகர்வு
வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்மக்கள் மத்தியில் மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தும் வகையில்
சமாதான நகர்வை ஜனாதிபதி தடுத்து நிறுத்தி,புதிய தேர்தலுக்கு
ஆணையிட்டுள்ளார்.தென்னிலங்கை அதிகாரப்போட்டியின் ஒரு
கட்டமாகத்தமிழர்மீது அடக்குமுறையையும்,தீவிர இனவாதத்தையும்
கட்டவிழ்த்துவிடும் ஓர் தீய சக்தியான ஜே.வி.பியுடன் ஜனாதிபதி
கைகோர்த்து நிற்பது-அவர் என்றுமே தமிழர் விடயத்தில் சரியானதொரு
தீர்வை ஏற்படுத்தித்தருவாரா அல்லது அதற்கு முயல்வாரா என்ற
சந்தேகத்தை எம்மத்தியில் ஏற்படுத்தி நிற்கின்றது.
தமிழ்மக்களின் சமகால அரசியல் நிலை பற்றி நோக்கவேண்டிய கடைப்பாடு
எம்மத்தியில் உருவாகியுள்ளது.அந்தவகையில் கடந்த எட்டு
வருடங்களாகத் தென்னிலங்கை மக்கள்-பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவின் கட்சிக்கு வாக்களித்து,நாட்டில் சமாதானம்
ஏற்பட வேண்டும்,அதற்குத் தென்னிலங்கை அரசியல்வாதிகள் முயற்சி
எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளனர்.தமது அரசியல்
சுயலாபத்தைவிடுத்து,நாட்டின் நலனில் அக்கறைகொண்டு
செயற்படவேண்டும் என்பதை உணர்த்தியுள்ளன.
இதனை உணர்ந்துகொண்டு,பிரதமர் ரணில் விக்கிரமசிங்க
நோர்வேயினுடாகப் புரிந்துணர்வு உடன்படிக்கையைக்
கைச்சாத்திட்டுக்கொண்டு,தமிழீழ விடுதலைப்புலிகளுடனான பேச்சை
முன்னேற்றகரமாக முன் னெடுத்துச்சென்றார்.யுத்தநிறுத்தத்தின்மூலம்
சரியான தீர்வுகிடைக்கும் என்பதை தமிழ் மக்கள் பெரும்
எதிர்பார்ப்புடன் அவதானித்துவந்தனர்.உயர்பாதுகாப்பு வலயங்களை
நீக்கி,பாதுகாப்பு என்ற பெயரிலான இராணுவக்கெடுபிடிகள் அகன்று,சுதந்திரமாக வாழ்க்கை கிடைக்குமென எதிர்பார்த்து நின்ற தமிழ்
மக்களுக்கு ஜனாதிபதியின் இந்தத் திடீர் அறிவிப்பு பாரிய
ஏமாற்றத்தைத் தந்துள்ளது.
இந்தநிலையில் மனமுடைந்து போகாமல்,தமது சமாதானத்தின் மீதான
நம்பிக்கையை சின்னாபின்னப்படுத்தாமல்,தொடர்ந்தும் தமிழர் அரசியல்
பலத்துடன் நின்று தொடர்ந்து சமாதான நடவடிக்கைகளை முன்னெடுக்க
வழிசெய்யவேண்டும் என்ற உணர்வு மேலோங்க வேண்டும்.தென்னிலங்கையில்
பேரினவாத சக்திகள் தீவிரபிரசாரத்தில் ஈடுபட்டிருப்பதுடன்,அவை
ஒன்றுபட்ட சக்திகளாகச் செயற்படத் தொடங்கியுள்ளனர்.இதற்குத்தமிழர் பக்கத் தேர்தல் உறுதியாக அமைந்தால்தான்,சமாதானம்
என்ற பேச்சுக்கே அருகதை உண்டு என்பதை சகல தமிழ் மக்களின் அரசியல்
நிலையில் நின்று உணர்த்தவேண்டும்.இதனைப் பலர்
விளங்கிக்கொண்டுள்ளனர்.அரசியல் தெளி வற்றிருப்போருக்கும் அதனை
விளங்கவைக்க வேண்டிய பொறுப்பும் எம்மிடம் உண்டு.
நாம் நான்கு கட்சிகள் - ஓர் ஒற்றுமையின் அடிப்படையில் தமிழரின்
பலத்தை உலகிற்குக் காட்டு முகமாக ஒன்று பட்டு நிற்கின்றோம்.இதற்குத் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் கலந்தாலோசனை
நடத்தி,அவர்களின் ஆதரவுடன் இந்தத்தேர்தலை
எதிர்கொள்கிறோம்.இராணுவபலம் பொருந்திய சக்தியாக உள்ள விடுதலைப்
புலிகள்-ஜனநாயக ரீதியிலும் ஓர் வலிமைமிக்க கட்டமைப்பை
உடையவர்கள்.இதனை அடிப்படையாகக் கொண்டே எம்மால் இந்தக்
கூட்டமைப்பு வளர்க்கப்பட்டு கூட்டமைப்பாக இயங்குகின்றோம்.
தமிழீழப் பகுதியின் 70சதவீதமான பிரதேசங்கள் இன்று தமிழீழ
விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ளன.உலகிலுள்ள
விடுதலைப் போரட்ட அமைப்புக்களிலும் பார்க்க,தமிழீழ விடுதலைப்
புலிகள் சிறந்த கட்டுக்கோப்புடையவர்களாக,பல சாதனைகளைப்
புரிந்தவர்களாக,அர்ப்பணிப்புக்களைப் புரிந்தவர்களாக,மிகவும்
பலம் பொருந்தியவர்களாக உள்ளார்கள்.இந்த நிலையில்தான் தென்னிலங்கை
அரசியல் கட்சிகளும் சரி,சர்வதேசமும் சரி - தமிழீழ விடுதலைப்
புலிகளையே முதன்மைப்படுத்தி பேச்சை ஆரம்பிக்கவேண்டுமென்பதை
வலியுறுத்திவருகின்றன.இதன் அடிப்படையில் உருவான சமாதான சூழல்
இன்று குழப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பலமறிந்து,அவர்களுடன் சரியானமுறையில்
பேசவேண்டிய முக்கியத்துவம் உணர்ந்த அரசியல் செயற்பாட்டையே
தமிழ்மக்கள் தமது உள்ளத்துணர்வுகளில்
கொண்டிருக்கின்றனர்.ஜனநாயகத்தை ஏற்படுத்திக்கொடுத்து தமிழீழ
விடுதலைப் புலிகளை ஆதரிப்பது தமிழர்களுக்குச் சரியான
தீர்வை-சிங்கள அரசு வழங்கத்துணையாக அமையும் என்றே
எண்ணுகிறேன்.சிங்களதேசம் இனவாதத்தைப் பலப்படுத்த
நினைக்கும்போது,நாம் தமிழீழ விடுதலைப்புலிகளின்
கரத்தைப்பலப்படுத்தி,ஜனநாயகத்தின் பலத்தையும் புலிகளுக்கு
வழங்கவேண்டும்.
தமிழ்மக்கள் மத்தியில் சில கருத்து முரண்பாடுகள் தோன்றியிருப்பது
உண்மையே,அதே போல் மனச்சோர்வுகள் ஏற்பட்டிருப்பதும் உண்மையே
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் ஜனநாயக சக்தியாக நாம்
இணைந்திருப்பது பெரிய அரசியல் வெற்றியாகவே
கொள்ளப்படவேண்டும்.இலட்சியத்தை நோக்கிய பாதையில் ஏற்படக்கூடிய
சில தவறுகளையும்,தடைகளையும் கண்டு மனவேதனையோ,வெறுப்போ
கொள்ளாது,தமிழ்மக்கள் அனைவரும் ஒற்றுமைப்பட்டு நிற்கிறோம் என்பதை
உலகிற்கு காட்டவேண்டும்.அதுவே இன்றைய தேவை.இதனை மூத்த அரசியல்
தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர் சிலர் எண்ணிப் பார்க்கத் தவறியமை
வேதனைக்குரிய விடயம்.
தமிழர்கள்-கட்சி அரசியல் என்னும் நிலையிலிருந்து
விடுபட்டு,தமிழ்தேசியக் கூட்டமைப்பை தமிழ் தேசிய உணர்வு என்னும்
அடிப்படையிலேயே நோக்குகின்றனர்.அந்த மக்களின் உணர்வை நீங்கள்
எவ்வாறு பயன்படுத்தப் போகிறீர்கள்?
தனிப்பட்ட மனிதநலன்கள் கட்சி நலன் போன்றவற்றிற்கு அப்பால்,தமது
தமிழ்தேசிய இனத்தை உன்றுபடுத்தவேண்டிய கடைப்பாட்டில் உள்ளோம்.இதில்பலர் ஒருமித்த கருத்துடையவர்களாகவும்,தேர்தலை-தமிழினத்
தேசிய உணர்வாகவும் நோக்கி,தமிழ் தேசியக்கூட்டமைப்பைப்
பலப்படுத்த வேண்டு மென எண்ணியுள்ளார்கள் என்பது எமக்குத்
தெரியும்.இதில் எமக்கு இருக்கும் பாரிய பொறுப்பு சில
விரக்திச்சம்பவங்களால் உள்ளத்தில் உள்ள தமிழ் உணர்வை
மறந்து,எழுந்த மானமாகச் செயற்படும் நோக்கோடு இருப்போரை சரியான
தீர்மானமெடுக்கச் செய்வதாகும்.
தமிழ்மக்களின் உணர்வானது அவர்களது சுயநிர்ணய உரிமையை நாம் பயன்
படுத்துவதற்கு மக்களின் ஆணையை மீண்டும்
பெறவேண்டியுள்ளது.நடைபெறவுள்ள தேர்தலின்மூலம் தமிழ் மக்கள்
ஒன்றிணைந்து நிற்பதை உலகிற்கு எடுத்துக்காட்டி,எமது உரிமைகளை
மேலும் வலுவாக வலியுறுத்திக் கேட்கக்கூடிய நிலைப்பாட்டைத் தமிழ்
மக்கள் உருவாக்கித் தருவார்கள் என நம்புகின்றோம்.சர்வதேசம்
எப்போதும் அரசுகளை ஆதரிப்பது வழமை.ஆனால்,தமிழீழ விடுதலைப்
புலிகளின் சாமர்த்தியமான செயற்பாடுகளால் அவர்கள் பக்கத்து
உண்மைகளையும் விளங் கிக்கொண்டு,அவர்களைத் தமிழ் மக்களின்
பிரதிநிதிகளாக எண்ணத்தொடங்கியுள்ளனர்.
கடந்த இரு ஆண்டுகளில் தென்னிலங்கை அரசியல் நிலைப்பாட்டை
அவதானித்த சர்வதேச சமூகம்-தமிழ்மக்கள் பக்கத்துக்க~;டங்களை
விளங்கிக்கொள்ள முற்பட்டுள்ளன.இந்த நிலையில் நடைபெறவுள்ள
தேர்தலிலும்,தமிழ் மக்களின் உணர்வுகள் ஒன்றிணைக்கப்பட
வேண்டியதேவை உருவாகியுள்ளதை உணரமுடிகிறது.தமிழீழ
விடுதலைப்புலிகள்-தமிழர் உரிமைக்காகப் போராடுகின்றனர்.அவர்களின்
முயற்சியிலேயே தமிழர்கள் ஓரளவு மதிப்புடன் வாழ்கின்றனர்
என்பதையும் சர்வதேச சமூகம் உணரத்தொடங்கியுள்ளது.இந்த நிலையில்
மலரப்போகும் சுதந்திர வாழ்க்கையைக் கட்டியெழுப்பத்தமிழ்
மக்களின் கரங்கள் பலப்படுத்தப்படவேண்டும்.
கடந்த பொதுத்தேர்தலின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின்
வேட்பாளராகப் போட்டியிட்ட ஆனந்தசங்கரி,தற்போது தனித்துப்
போட்டியிடுவதற்கான காரணம் என்ன?அவருக்குப் பின்னணிச்சக்;திகளின்
து}ண்டுதல் எதேனும் உண்டெனக்கருதுகிறீர்களா?
ஆனந்தசங்கரி கடந்த முறைத்தேர்தலில்,தமிழ்தேசியக் கூட்டமைப்பின்
சார்பில்,போட்டியிட்டு,நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு
செய்யப்பட்டிருந்தார்.பின்னர் கிளிநொச்சியில்,தமிழீழ விடுதலைப்புலிகளுடனான சந்திப்பிலும் கலந்துகொண்டார்.எனினும்,கடந்த
சிலமாதங்களாகத் தமிழ் மக்களுக்கு அவர் அளித்த வாக்குறுதியை
மறந்து,தமிழ் மக்கள் வழங்கிய ஆணை யைப்புறந்தள்ளிவிட்டு,தனது
இ~;டப்படி தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும்,அரசாங்கத்திற்கும்
இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் உச்சநிலை அடைந்திருந்த
வேளையில்,அதனைக் குழப்பும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்தார்.
அத்தோடு,தமிழ்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுடனும்
முரண்பட்டுக்கொண்டார்.இந்த நடவடிக்கைகளே அவரைத் தனியாக இந்தத்
தேர்தலில் போட்டியிடச் செய்திருக்கிறது.தென்னிலங்கை இனவாத
அரசியல் வாதிகளுக்கும்,தீவிர இனவாதம் கக்கும்
பத்திரிகைகளுக்கும் விருந்து வைப்பதாக இவரது கருத்துக்கள்
அமைந்திருந்தபோதிலும்,நாம் அவருடன் சமரசம் செய்துகொள்ள முயன்றோம்.எனினும்,அவருக்குப் பிரிந்து நின்று போட்டியிடவே
விரும்பமிருந்ததால்,இன்று தனியாகப் போட்டியிடுகின்றார்.இது பல
கருத்து மோதல்களைக்கூட உருவாக்குவதற்கு வழிவகுக்கும்.அவருடைய
செயல்கள் எமக்கு ஆச்சிரியத்தைத் தரும் வகையில் உள்ளது.கட்சி
விடயத்தை நீதிமன்றம்வரை கொண்டுசென்றது மட்டுமன்றி,ஜனாதிபதியையும்
தனியாகச்சென்று சந்தித்துள்ளார்.இத்தகைய செயல்கள் எல்லோருக்கும்
சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அமைகின்றது.
அனைவரும் ஒன்றிணைந்து நிற்கவேண்டும் என எண்ணும்நேரத்தில்,அவர்
தனித்து நின்று போட்டியிடுவதால்,மக்கள் மத்தியில்,குழப்பத்தை
ஏற்படுத்தக்கூடிய நிலை ஒன்றைத் தோற்றுவிக்கும்.ஆனாலும்,அவரின்
செயலை மக்கள் ஆதரிப்பார்கள் என எண்ணவில்லை ஏனெனில்,தனித்து
நிற்பவர்களால் எதனையும் சாதித்துவிடமுடியாது என்பது மக்களுக்குத்
தெரியும்ஜனாதிபதிகூட தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தான்
பேசவேண்டும் என்பதில் உறுதியாக நிற்கும்நிலையில்,விடுதலைப்
புலிகளின் கரத்தைப் பலப்படுத்தவேண்டியது தமிழ் மக்களின் கடமை
என்பதால்,சுயேட்சையாகப் போட்டியிடுவோரை மக்கள் நிராகரிப்பதற்கே
வாய்ப்புண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார். |