www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

இணைந்த வடக்கு - கிழக்கு தாயகத்திலிருந்து மட்டு - அம்பாறை விலகுவது சாத்தியமற்றது திருமலை முதன்மை வேட்பாளர் சம்பந்தன் பேச்சு

யாழ்ப்பாணம் 25.03.2004

இணைந்த வடக்கு - கிழக்கு தாயகம் என்பதில் மட்டு - அம்பாறை தமிழ் மக்கள் விலகிப்போவது என்பது சாத்தியமற்றது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக வாக்களிக்குமாறு, எந்தத்தரப்பும் அங்கு மக்களை கோரியிருக்கவுமில்லை என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகமும், திருமலை மாவட்ட முதன்மை வேட்பாளருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக நேற்றுமுன்தினம் குடாநாட்டுக்கு வருகைதந்த அவர் - யாழ்.நகரில் தமிழரசுக் கட்சி தலைமையகத்தில் ஆதரவாளர்களிடையே உரையாற்றினார்.பேராசிரியர் சி.க.சிற்றம்பலம் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளர்களான - மாவை.சேனாதிராசா,சி.சிவமகாராசா மற்றும் க.ஈழவேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மாலை 5.15 மணியளவில் விமானம் மூலம் பலாலி விமானநிலையத்துக்கு வருகைதந்த இரா.சம்பந்தன், 6.15 மணியளவில் தமிழரசுக்கட்சி அலுவலகத்துக்கு வருகைதந்தார்.

ஆதரவாளர்களிடையே உரையாற்றிய அவர், பின்னர் ஊடகவியலாளர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். வட-கிழக்குப் பகுதி மக்களுக்கு இடைக்கால நிர்வாக கட்டமைப்பினை வழங்குவதன் மூலம்,முஸ்லிம் மக்களுக்கு அவர்களிடையே பிரசார நடவடிக்கைகளை தாங்;கள் முன்னெடுத்துவருகின்றோம். அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு முதன்மை வெற்றியைப்பெறும்.

இதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழுள்ள வன்னிப்பகுதி மக்களும் இந்தத் தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக உரிய நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றது எனத்தெரிவித்த அவரிடம் மட்டு - அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளர்கள் அழுத்தங்களுக்கு உட்படுத்தபட்டுள்ளனரா? என்ற கேள்விக்கு பதிலளித்த போது - இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிராக வாக்களிக்குமாறு எந்தத் தரப்புககளும் கோரியிருக்கவில்லை எனத்தெரி வித்தார்.

ஆயினும், மட்டு - அம்பாறை மாவட்டங்களில் போட்யிட்டு, வெற்றியீட்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்கள் வெற்றிபெற்ற பின்னர், ஏனைய கூட்டமைப்பின்; அங்கத்தவர்களுடன் இணைந்துசெயற்படுவரா?எனக் கேட்டபோது - சுயாட்சி மற்றும் தாயகக்கோரிக்கைகள்; உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்தே, மட்டு - அம்பாறை மாவட்டத்திலும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின்கீழ் அவர்கள் போட்டியிடுவதால், தொடர்ந்தும் அவர்கள் இணைந்தே செயற்படுவரெனவும் அவர் பதிலளித்தார்.

நன்றி:நமது ஈழநாடு

தமிழரின் ஒற்றுமைக்கு ஈனம் விளைவிக்க விரும்பவில்லை போட்டியிலிருந்து விலகிய சுயேட்சை வேட்பாளர்

யாழ்ப்பாணம் 25.03.2004

தமிழ் மக்களின் ஒற்றுமைக்கு ஈனம் விளைவித்தவனாக நான் விளங்க விரும்பவில்லை.அதனாலேயே, தேர்தலிலிருந்து ஒதுங்கினேன் என - யாழ்.மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிடுவதற்காக வேட்புமனுத்தாக்கல் செய்து, பின்னர் அதிலிருந்து ஒதுங்கிக் கொண்ட மார்க்கண்டு இராசேந்திரம் தெரிவித்தார்.நமது ஈழநாட்டிற்கு இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது -எதிர்வரும் ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் - ஜனநாயக உரிமையின் அடிப்படையில், எமக்குள்ள உரிமை யினடிப்படையில், போட்டியிடத் தீர்மானித்த நாம்,சுயேட்சைக்குழுவாக கடந்த மாதம் 17 ஆம் திகதி யாழ்.தேர்தல் அத்தாட்சி அலுவலரிடம் எமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தோம்.

எனினும், நாம் வீட்டிற்கு வந்ததும் எமது அயலவர்கள் எமக்கு அச்சுறுத்தல் வரும், கொலை செய்யப்படுவீர்கள், இந்தத் தேர்தலில் போட்டியிடாதீர்கள் எனக் கூறினார்கள். ஆனால், நான் வேட்பு மனுத்தாக்கல்செய்து இரண்டு நாட்களாகியும் அப்படி எதுவும் நடக்கவில்லை.அந்தவேளைதான், நாம் யோசித் தோம். தமிழர்கள் ஒன்றுபட்டு, ஒரு குடையின் கீழ் நிற்கவேண்டிய இந்த நேரத்தில், நாம் ஏன் எமது இனத்தை விற்றுப்பிழைக்கும் சிலரைப்போல வாழ நினைக்கவேண்டும்,அல்லது கதிரை ஆசைகொண்டு அலையும் வயோதிபர்களைப்போல் இராணுவத்தின் துணையுடன்,அடாவடித்தனம் புரியவேண்டும்.

எனவே, எமது இனத்தின் தியாகங்கள் மதிக்கப்படவேண்டுமானால்,எமது இனம் கீழ்த்தரமான ஈனகுணமற்ற ஒற்றுமையை மதிக்கும் இனமாக, சர்வதேசத்தால் மதிக்கப்பட வேண்டுமானால்,இந்தத் தேர்தலில் ஒற்றுமைக்கு வாக்களிக்கவேண்டும்.ஒற்றுமைப்பட தமிழரின் தேசத்தில் நடைபெறப்போகும் தேர்தலில் வேண்டுமானால் நாம் போட்டியிடுவோம் என எண்ணினேன். அதனால், நான் செய்த வேட்புமனுவை வாபஸ்பெற்றுக் கொண்டேன். இதனை இன்னும் சிலர் செய்தால் நன்றாக இருக்குமென நான் நினைக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

நன்றி:நமது ஈழநாடு

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]