|
Canadian
Tamil Professionals’ Association (CTPA)
|
Ottawa,
Canada
March 23, 2004 |
|
Press
Release |
புலம்பெயர்ந்து
கனடாவில் வாழ்கின்ற கனேடியத்தமிழர் தொழில்சார் வல்லுனர்கள்
அமைப்பானது (Canadian
Tamil Professionals Association)
வருகின்ற இலங்கைத் தேர்தலில் தமிழர்களின் அரசியல் தீர்வாக
தமிழர்களின் தேசியத்தையும், தாயகத்தையும், சுயநிர்ணய உரிமையையும்
வலியுறுத்தி, தமிழீழ மக்களின் ஏகபிரதிநிதிகளாக
விடுதலைப்புலிகளையும் அதன் தேசியத்தலைமையையும் அங்கீகரிக்கும்
தமிழர் கூட்டமைப்புக்கு (TNA) தனது முழு தரவினையும் வழங்குவதென
ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
கனேடிய தமிழர் தொழில்சார் வல்லுனர்கள் அமைப்பானது (CTPA)
கனடாவில் வாழ்கின்ற பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள்,
மருத்துவர்கள், பொறியியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், ஆசிரியர்கள்,
சட்டத்தரணிகள், கணக்காய்வாளர்கள் என மூவாயிரத்துக்கும்
மேற்பட்டவர்களை தனது அங்கத்தவர்களாகக் கொண்ட அமைப்பாகும்.
சிங்கள இனவெறி அரசுகளின் தமிழின அழிப்பு நடவடிக்கைகள்
ஈழத்தமிழரின் வாழ்வில் அழிவுகளையும், அவலங்களையும்,
அகதிவாழ்வையும் ஏற்படுத்திய போதிலும், இன்று ஈழத்தமிழரின்
போராட்டம் ஓர் உயரிய நிலையை அடைந்துள்ளது.
ஈழத்தமிழ் மக்களின் தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் தலைமையில்
போராட்டமானது, திட்டமிட்ட அரச குடியேற்றங்களுக்கும், இராணுவ
அடக்குமுறைகளுக்கும், இனக்கலவரங்களுக்கும் மத்தியிலும் -
மாபெரும் மக்கள் இயக்கமாக இன்று கட்டியெழுப்பப்பட்டு - அமைதியான
வழியிலே தீர்வொன்றினைக் காண வழியமைகின்ற வேளையிலே, அன்னிய
சக்திகளின் உதவியோடு அதனை முறியடிக்க சில தனிநபர்கள்
எடுத்துக்கொண்டுள்ள நடவடிக்கையையும் கண்டித்து கனேடிய தமிழர்
தொழில்சார் வல்லுனர்கள் அமைப்பானது தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஈழத்தமிழரின் வாழ்வு உய்வுபெற, உலகத்தமிழினம்
கைகொடுத்துப்பலப்படுத்தும் காலம் வந்து விட்டதால், வருகின்ற
தேர்தலிலே,
Ø உலக நாடுகளுக்கு தழிழரின் ஒற்றுமையை எடுத்துக்காட்டவும்,
Ø தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுக்கவும்,
Ø தேசியத்தலைமையை பலப்படுத்தவும்,
Ø அமைதி வழியிலே தீர்வு ஒன்றினைக்கண்டிடவும்,
ஈழத்தமிழ் மக்களாகிய நீங்கள் 'வீடு" சின்னத்திற்கு
வாக்களிக்குமாறு கனேடிய தமிழர் தொழில்சார் வல்லுனர்கள்
அமைப்பானது அன்புடன் கேட்டுக்கொள்கின்றது.
புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும், தாய்நிலம் நினைத்து வாழ்வோம்!!
கனேடியத்தமிழர் தொழில்சார் வல்லுனர்கள் அமைப்பு (CTPA)
ஒட்டாவா
கனடா.
தொடர்பு:
கலாநிதி பி. சிவசாமி
Dr.P.Sivasamy
தொ.பே: 1-613-240-7760
மார்ச் 23, 2004 |