www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page  

தமிழ் மக்கள் தமது ஐக்கியத்தை தேர்தலில் தவறாது நிரூபிக்க வேண்டும் 15 அமெரிக்க தமிழ் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்கிடையேயான வேறுபாடுகளை மறந்து ஒரே நிலைப்பாட்டோடும், உறுதிப்பாட்டோடும் தமது வாக்குகளை அளித்து, ஒற்றுமையை நிரூபிக்கத் தவறக்கூடாது என அமெரிக்காவிலுள்ள 15 தமிழ் அமைப்புக்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்துள்ளன.

'அரசியல் வேறுபாடு, மத வேறு பாடு, பிரதேச வாதம், தனிப்பட்ட அபிப்பிராயங்கள் ஆகியவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, தியாகத்தின் மத்தியில் கட்டி எழுப்பப்பட்ட தமிழர் ஒருமைப்பாட்டுக்கு ஐக்கியத்துக்கு ஆதரவு நல்குமாறு தமிழீழ மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்" என்றும் அக்கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.

இந்த அமைப்புக்கள் கூட்டறிக்கை ஒன்றின் வாயிலாக இவ் வேண்டுகோளை விடுத்துள்ளன. இதில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- இவ்வாண்டு தமிழ் மக்களுக்கு ஒரு சாதகமான நிலை உருவாகியுள்ளது. நீண்ட கால தியாகப் போராட்டத்தின் விளைவாக, தமிழர்களின் சுயநிர்ணயஉரிமை சர்வதேச hPதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எமது மூலாதார அரசியல் பிரச்சினைகளுக்கு முடிவு கட்டுவதற்காக, பல தசாப்தங்களாக அஹிம்சை hPதியிலான அரசியல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. முயற்சிகள் பலிதமாகவில்லை. பலன்கள் கிட்டவில்லை.

இதையடுத்து கடந்த 25 வருடங்களாக ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. இது எம்மை அடக்கி ஒடுக்கி வந்தவர்கள் மற்றும் மறுக்கப்பட்ட தமிழர்களின் உரிமைகள் என்பவற்றையும் அங்கீகரிக்கவும், அவற்றை மீண்டும் நிலை நாட்டவும் கட்டாயப்படுத்தியது.

காக்கை வன்னியின் காலந்தொட்டு, பல நு}ற்றாண்டுகளாக தமிழ் மக்களைச் சிதைத்துவந்த ஒற்றுமையின்மையும் காட்டிக் கொடுப்புக்களும் இன்றில்லை. ஒரு தலைமைத்துவத்தின் கீழ், தமிழர் ஐக்கியப்பட்டு விட்டனர். புல்லுருவிகள் ஓரங்கட்டப்பட்டு விட்டார்கள். இன்று தமிழர் தேசிய அணி ஒரு பலம் பொருந்திய அரசியல் கட்சி தமிழர்களின் ஒற்றுமையை அடிப்படையாகக் கொண்டு அது தேர்தலில் போட்டியிடுகின்றது. அது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மூன்று திம்புப் பிரகடனங்களை வலியுறுத்துகிறது. இலங்கைத் தமிழர்களை ஒரு தேசிய இனமாக அவர்களுக்கென ஒரு தாயகம் இருந்து வருவதை அங்கீகரித்தல், இத்தாயக மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்தல் ஆகியவையே அவையாகும்.

தமிழீழ மக்களின் ஏகப் பிரதிநிதியாக புலிகளை ஏற்றுக் கொள்கிறது. புலிகளின் இடைக்கால சுயநிர்ணய அதிகார ஆட்சிமுறை யோசனையை ஆதரிக்கின்றது. ஆகவே எதிர்வரும் பொதுத்தேர்தலில், ஈழத் தமிழர்களின் குரல் ஏகோபித்து ஒலிக்கவேண்டும். தமிழ்த் தலைமைத்துவத்தை அங்கீகரிப்பதாக அமையவேண்டும். பொதுத்தேர்தல் வெளிப்படுத்தும் எமது கட்டுக் கோப்பான முடிவு, சர்வதேச சமூகத்துக்கும் இலங்கை அரசுக்கும் ஓர் அழுத்தத்தைக் கொடுக்கும், தமிழர்களின் வேதனைகளுக்கு இறுதி முடிவு கட்ட வழிசமைக்கும். இக்கூட்டறிக்கையில் அமெரிக்க இலங்கைத் தமிழ்ச் சங்கம், டெக்ஸான் இலங்கைத் தமிழ்ச்சங்கம், புளோரிடா தமிழ்ச்சங்கம், கரோலினாஸ் தமிழ் ஈழ அமைப்பு, வாஷிங்டன் இலங்கைத் தமிழ்ச் சங்கம், ஒஹியோ இலங்கைத் தமிழ்க் கழகம், மிட் வெஸ்ட் தமிழ்ச் சங்கம், அமெரிக்க உலகத் தமிழர் இணைப்புக்குழு, உலகத் தமிழச் சங்கம், அமெ. தமிழ் அகதிகள் புனர்வாழ்வு நிறுவனம், வாஷிங்டன் தமிழர் நல, மனித உரிமைகள் சபை, அமெரிக்க தமிழர் செயற்பாட்டுக்குழு, நியூயோர்க் ஐனநாயகம், சமாதானம், நீதிக்கான சங்கம், லொஸ் ஏஞ்சல்ஸ் தமிழ் பாரம்பரிய சர்வதேச அமைப்பு, சீட்டில் வென்கூவர் தமிழ்ச்சங்கம் ஆகியவை கைச்சாத்திட்டுள்ளன.


நன்றி: வீரகேசரி

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]