www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page 04-11-2003

நீங்கள் தயாரா?

உறவுகளுக்கு வணக்கம்!

இன்று இணையத்தில் எவ்வளவோ தளங்கள் உலாவருகின்றன அவற்றுள் பல மக்களை தீய வழியில் இட்டுச்செல்கின்றன.பல நல்ல தகவல்களை வழங்குகின்றன.எது எப்படியாகிலும் இணையம் உண்மையில் ஒரு பெரும் சமுத்திரம் அதில்.மூழ்கி முத்தெடுக்க வேண்டியது ஒவ்வொரு பயனாளியினதும் கையில் தான் இருக்கின்றது.

இந்நிலையில் உலகில் நிறுவப்பட்ட இணையத்தளங்களில் பெரும்பாலானவை ஆங்கில மொழியில் தான் காணப்படுகின்றன. எல்லோருக்கும் ஆங்கில ஆறிவு இருக்கும் என்று எதிhடிபார்க்கமுடியாது.அதற்காக சொந்த மொழியில் எல்லா வற்றையும் எதிர்பார்க்கவும் முடியாது. அந்த வகையில் தற்போதுள்ள தமிழ் இனையத்தளங்களையும் அவற்றின் போக்குகளையும் ஆராய்ந்த நாம் அவற்றில் உள்ள குறைபாடுகளை நீக்கி எம் தமிழ் உறவுகளுக்கு நல்லதொருசேவையினை வழங்க முடிவு செய்தோம்.அதன் விளைவே இந்த webtamilan.com மற்றைய தமிழ்த் தளங்களைத் தழுவியுள்ள போதிலும் நிச்சயமாக webtamilan.com வித்தியாசமாக இருக்கப்போகின்றது.இதனை போகப் போக உங்களால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடியும்.தமிழ் உறவுகள் யுத்தம் காரணமாக உலகெங்கும் பரந்து வாழ்ந்து கொண்டிருக்கினறார்கள் தற்போது சமாதான சூழ்நிலை ஒன்று தாயகத்தில் உருவாகி வருகின்றது இருந்தபோதிலும் நாம் அடைய வேண்டிய இலக்கு நிச்சயமாக அருகில் இல்லை.ஆனாலும் நாம் இலக்கை அடையப்போவது உண்மை.

சனங்களின் கலைஞன் விவேக் கூறுவது போல் தமிழை வளர்க்கவேண்டுமெனில் அதனை இணையத்தில் ஏற்றவேண்டும்.அதை நாம் செய்யத்தயார் அதற்கு உறவுகளாகிய நீங்கள் தயாரா?

இத்தளத்தில் உள்ள ஒவ்வொரு பகுதியும் உங்களுக்காக திறந்துவிடப் பட்டிருக்கிறது.இது உங்கள் தளம் அந்தந்த பகுதிகளுக்கு எந்தந்த விடயங்கள் ஏற்புடையதென நீங்கள் கருதுகிறீர்களோ தயங்காதிர்கள்.உடனே எழுதி அனுப்புங்கள.உங்கள் ஆலோசனைகளையும் எதிர்பார்க்கின்றோம். -நன்றி
-ஆசிரியர்


 

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]