|
உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த லெப்டினன்
கேணல் தியாகி திலீபனின் பதினாறாவது வருட நினைவு தினம் தமிழர் தாயகத்திலும் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து
வாழும் நாடுகளிலும் ஏககாலத்தில் அனுட்டிக்கப்படுகின்றன. தியாகி
திலீபனின் 15வது வருட நினைவுதினம் இலங்கை அரசாங்கத்திற்கும்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு
முதலாவது சுற்று பேச்சுவார்த்தை ஆரம்பித்த சூழலில்
அனுட்டிக்கப்பட்டது ஆனால் இம்முறை ஆறு சுற்றுப்
பேச்சுவார்த்தைகளின் பின்னர் சமாதான முயற்சிகள் தேக்கமடைந்துள்ள
நிலையில் அனுட்டிக்கப்படுகிறது.
லெப்டினன் கேணல் தியாகி திலீபன் இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின்
கீழ் சமாதான முயற்சிகள் என்ற போர்வையில் இரு நாட்டு அரசுகளின்
நலன்கள் மட்டும் கருத்தில்கொள்ளப்பட்டு காய்கள் நகர்த்தப்பட்ட வேளை
ஈழத்தமிழரின் எழுச்சிவடிவாக சாத்வீகப் போராட்டத்தில் குதித்தார்.
தற்போதைய சு10ழலிலும் சமாதான முயற்சிகள் தமிழ் மக்களின்
அபிலாசைகளுக்கு அப்பால் சிறீலங்கா அரசாங்கத்தினரும் சர்வதேச
சமூகத்தினதும் வர்க்க நலன்களை மட்டும் கருத்தில்கொண்டு
நகர்த்தப்படும் சு10ழ்நிலையில் ஈழத்தமிழ் மக்கள் தியாக தீபம்
திலீபனை அவரது போராட்டத்தை நினைவுகூருகின்றனர்.
தமிழீழ விடுதலைப்புலிகள் கடந்த காலங்களைவிட திலீபன் நினைவு
நிகழ்வுகளை தற்போதைய சமாதான முயற்சிகளின் யதார்த்தத்தை உணர்த்தும்
வகையில் வடக்கு - கிழக்கு மாகாணத்தில் படையினரின் கட்டுப்பாட்டுப்
பிரதேசங்களிலும் அனுட்டிக்க பரவலான ஏற்பாடுகளை மேற்கொண்டு
வருகிறார்கள்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இராணுவாPதியில் மட்டுமல்ல சாத்வீகப்
போராட்டத்திலும் உறுதியானவர்கள் என்பதை தலைவர் வழியில் தியாகி
திலீபன் நிரூபித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம்
திகதி செவ்வாய்க்கிழமைகாலை 9.55 மணிக்கு அப்போது யாழ்.மாவட்ட
அரசியல் பொறுப்பாளராக இருந்த லெப்டினன் கேணல் திலீபன்
நீராகாரமுமின்றி போராட்டத்தை ஆரம்பித்தபோது காந்திதேச அரசாங்கம்
பொருட்டாகவே கருதவில்லை. ஏளனமாக கையாண்டது என்பது அப்போது பலரும்
அறிந்த உண்மை.

ஐந்து அம்சக் கோரிக்கைகளையே அப்போது புலிகள் முன்வைத்திருந்தனர்.
ழூ மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக
திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்துநிறுத்தவேண்டும்.
ழூ சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும்
தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும்
விடுதலைசெய்யப்படவேண்டும்.
ழூ அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
ழூ ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக்
களையப்படவேண்டும்.
ழூ தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு
மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.
இந்தியப் படையினர் நிலைகொண்டிருந்தவேளை போர்நிறுத்தத்தைக்
கடைப்பிடித்த புலிகள் போராட்ட வடிவத்தை மாற்றி தமிழர் இலட்சியத்தை
வலியுறுத்த திலீபனால் ஆரம்பிக்கப்பட்ட போரட்டத்திற்கு அப்போது
வடக்கு - கிழக்கு மாகாணத்தின் சகல மாவட்டங்களிலும் அடையாள
உண்ணாவிரத நிகழ்வுகளும் எழுச்சி ஊர்வலங்களும் நடத்தப்பட்டன.
திலீபனின் போராட்டத்தை அலட்சியப்படுத்துவதன்மூலம், கருத்தில்
எடுக்காது தவிர்ப்பதன்மூலம் மழுங்கடித்து விடாலமென இந்திய
தரப்பினர் திடமாக நம்பினர். எனினும் நீராகாரமின்றி உறுதி தளராத
போராட்டத்தை சில தினங்களின் பின்னரே உணர்ந்துகொண்டார்கள்.
பழ.நெடுமாறன், பண்ருட்டி ராமச்சந்திரன் போன்ற தமிழக அரசியல்வாதிகள்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு வந்து உண்ணா நோன்பிருந்த லெப்டினன்
கேணல் திலீபனைப் பார்வையிட்டார்கள்.
மறுபுறம் அப்போது இந்தியத் தூதுவராக இருந்த ஜே.என்.டிக்ஷித்,
இந்திய தென்பிராந்தியத் தளபதி திபேந்தர் சிங் உள்ளிட்ட இந்திய
உயர்மட்டக் குழுவுக்கும் புலிகளுக்குமிடையில் இடைக்கால நிர்வாக சபை
தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டபோதிலும் வெற்றியளிக்கவில்லை.
1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை
10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப்
பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார். இச்செய்தி
கேட்டு தமிழர் தாயகம் சோகத்தில் மூழ்கியது.
திலீபன் என்ற இயக்கப் பெயரைக்கொண்ட பார்த்திபன், யாழ்.ஊரெழுவைச்
சேர்ந்த இராசையா ஆசிரியரின் புதல்வராவார். இள வயதில் தாயை இழந்த
அவர் தந்தையின் அரவணைப்பில் வளர்ந்து ஊரெழு அரசினர் பாடசாலையில்
ஆரம்ப கல்வி பயின்றார். இடைநிலைக் கல்வியை யாழ்ப்பாணம் இந்துக்
கல்லூரியில் ஆரம்பித்த அவர், க.பொ.த. உயர்தரப் பாPட்சையில்
உயிரியல் பிரிவில் சித்தியடைந்து மருத்துவ பீடத்துக்கு தெரிவானார்.
எனினும் 1983 கறுப்பு ஜுலையை தொடர்ந்து மருத்துவபீட உயர் கல்வியைத்
துறந்து விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக தன்னை
இணைத்துக்கொண்டார்.
யாழ்.இந்துக் கல்லூரி உயர்வகுப்பு மாணவனாக இருந்தவேளை புலிகளின்
மூத்த உறுப்பினர்களான பொன்னம்மான், ராதா போன்றவர்களின் நட்பு
அவருக்கு பல்வேறு அனுபவ அறிவுகளை ஊட்டியதன் பின்னணியிலேயே
மருத்துவ பீட உயர் கல்வியை திலீபன் துச்சமாக மதிக்கத் தூண்டியது
எனலாம்.
புலிகள் அமைப்பில் இணைந்த பார்த்தீபன் திலீபன் எனப் பெயர்மாற்றம்
பெற்று போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு நிறைவுசெய்த பின்னர் வலிகாமப்
பிரதேசத்தில் அரசியல் பணிகளில் ஈடுபட்டார். அவரது ஆற்றல்,
அர்ப்பணிப்பு காரணமாக 1985 ஆம் ஆண்டு யாழ்.மாவட்ட அரசியல்
பொறுப்பாளராகக் கடமைபுரிந்தார்.
எனினும் அவ்வேளை படையினர் பல்வேறு ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளில்
ஈடுபட்டபோது இடம்பெற்ற முறியடிப்பு சமரின்போது திலீபன் வயிற்றில்
விழுப்புண் அடைந்தார். இதனால் அவரது சிறுகுடலின் ஒரு பகுதி
சத்திரசிகிச்சை மூலம் அகற்றப்பட்டபோதிலும் புத்துயிர்பெற்று
அரசியல் பணிகளில் ஈடுபட்டார்.
அவரது சிறுகுடல் அகற்றப்பட்டதை இனவாதிகளும் சிறீலங்கா அரசாங்கமும்
தெரிந்துகொண்டு திலீபனின் தியாகத்தைக் கொச்சைப்படுத்தும்
பிரச்சாரங்களை கடந்த 15 வருடங்களாக மேற்கொண்டு வருகின்றபோதிலும்
தமிழ் மக்கள் அதனைப் புறந்தள்ளி திலீபனின் தியாகத்தை
நினைவுகூர்ந்து வருகின்றனர்.
1985களில் தமிழர் தாயகத்தின் உருவாக்கத்திற்கான உட்கட்டுமானத்
திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டபோது திலீபனின் பங்களிப்புக்
குறிப்பிடத்தக்கது. பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், தமிழீழ மாணவர்
அமைப்பு, சுதந்திரப் பறவைகள், ரடோ (சுயுனுழு) போன்ற அமைப்புகளின்
உருவாக்கத்தில திலீபனின் பங்களிப்பு முக்கியமாக இருந்தது.
சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்
யாழ்.கோட்டைக்கு முன்பாக இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றிய
லெப்டினன் கேணல் திலீபன், ~~ஈழத்தமிழ் மக்களின் தேசிய எழுச்சி
எப்போதெல்லாம் குமுறி எழுவதற்கு அறிகுறிகள் தென்படுவதற்கு
ஆரம்பிக்கின்றதோ அப்போதெல்லாம் எதிரி அவற்றை அடக்கி
ஒடுக்குவதற்காக ஒப்பந்தங்களுடன் வருகிறான். இலங்கை இந்திய
ஒப்பந்தமும் அவ்வகையில் மக்களின் விடுதலை தாகத்தை அடக்கி ஒடுக்கும்
ஒன்றே|| என்று கூறினார். அந்த தீர்க்கதரிசனத்தின் யதார்த்தத்தை
இன்றை சு10ழலிலும் நினைத்துப் பார்ப்பது பொருத்தமானது.
உலக விடுதலைப் போராட்ட வரலாற்றில் சாத்வீக ரீதியான போராட்ட
ஆயுதமாக உண்ணாவிரதம் பயன்படுத்தப்படுகிறது. ஐரிஸ் விடுதலைப்
போராட்ட வரலாற்றில் பொபி சானிஸ் சிறையில் இருந்தவாறு உண்ணா
நோன்பிருந்து உயிர் துறந்தார். ஆனால் ஈழ விடுதலைப் போராட்டத்தில்
நீராகாரமின்றி தியாகி திலீபனும் நீராகாரத்துடன் உண்ணா நோன்பிருந்த
அன்னையர் முன்னணியைச் சேர்ந்த அன்னை பூபதியும் உயிர்துறந்து
போராட்டத்துக்கு வலுச் சேர்த்தார்கள். இருவருமே மகாத்மா காந்தி
பிறந்த தேசத்திடம் நீதிகேட்டு தம்மை அர்ப்பணித்தார்கள்.
திலீபனின் தியாகத்தை விதந்த புலிகள் தலைவர் பிரபாகரன் " நான்
திலீபனை மனிதப் பிறவியாகப் பார்க்கவில்லை. தன்னை
எரித்துக்கொண்டிருக்கும் இலட்சிய செருப்பாகவே நான் அவனைக் கண்டேன்.
அதில் நான் பெருமைகொண்டேன். இலட்சிய உறுதியின் உச்சகட்டமாக திலீபன்
தன்னை அழித்துக்கொண்டான். அவன் உண்மையில் சாகவில்லை. காலத்தால்
சாகாதவரலாற்றுப் புருஷராக வாழ்ந்துகொண்டிருக்கிறான்" என்றார்
இன்றைய சூழலில் திலீபனின் தியாகத்தை இளைய தலைமுறையினர்
அறியாதவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு தெரியப்படுத்தி ஈழத்
தமிழர்களின் விடுதலைப்போராட்ட வரலாற்றை உணர்த்தக்கூடிய வகையில்
நினைவு தினத்தை அனுட்டிக்கவேண்டும்.
திலீபன் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தபோது நிலவிய
அதே சூழலில் இம்முறை அவனை நினைத்துப் பார்க்கிறோம். அன்று 650
மாவீரர்களின் தியாகத்தை திலீபன் விதந்துரைத்தார். இன்று தமிழ்
மக்கள் ஆயுத ரீதியிலான சமபலத்துடன் நின்று பேரம் பேசும் நிலைக்கு
வித்திட்ட தியாகிகளின் வரலாற்றில் திலீபனுக்கும் தனியான அத்தியாயம்
உண்டு.
தமிழ் மக்களது சுய நிர்ணய உரிமைப் போராட்டத்திற்கு வலுச்சேர்க்க
அனைத்து சக்திகளும் தம்மால் இயன்ற பங்களிப்பை வழங்குவதே
திலீபனுக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.
தேனாடான்
நன்றி வீரகேசரி(21/9/2003) |