www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

கந்தரோடை வரலாற்றுச் சின்னங்கள்

புரிந்துணர்வு ஒப்பந்தத்தையடுத்து எழுந்துள்ள சூழ்நிலை தென் பகுதி மக்களையும். வெளிநாட்டுப் பயணிகளையும் யாழ். குடாநாட்டை நோக்கிப் படையெடுக்க வைத்துள்ளது. இப்படையெடுப்பானது நமக்குப் பல அனுகூலங்களையும். பிரதிகூலங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது. தென்பகுதிப் பயணிகளின் வருகையில் நாகவிகாரையும் நயினாதீவில் அமைந்துள்ள விகாரையும் முக்கிய பார்வைத் தலங்களாக உள்ளன. அண்மை நாள்களில் அவர்களின் கவனம் கந்தரோடை தொல் பொருள் சின்னங்னளிலும் அதிகரித்துள்ளது.

கந்தரோடை வரலாற்றுச் சின்னங்கள் தொடர்பாக அண்மையில் ஒரு தினசரியில் கந்தரோடை பெளத்ததாதுகோபங்களைப் பார்வையிட வருபவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என்ற சாரப்பட ஒரு செய்தி வெளியாகி இருந்தது. தென்பகுதி வருகையாளரின் எண்ணப் பாங்கும் அதுவேதான். அவர்கள் - குறிப்பாக அதிகளவில் வரும் பெளத்தபிக்குகள் அவ்வரலாற்றுச் சின்னங்களை பெளத்த சின்னங்களாக பெளத்த தாதுகோபங்களாகவே கருதுகின்றனர் நமது கலை. பண்பாடு. வரலாறுதொடர்பான அக்கறைகள் மீண்டும் வெளிப்படுத்தப்படும் இத்தருணத்தில் நமது அரும்பெரும்பொருள்கள் காவுகொள்ளப்படாது காப்பற்றப்படவேண்டுமென்ற குரல்கள் ஒலிக்கும் இவ்வேளையில் கந்தரோடை தொடர்பான நமது கவனத்தைக் குவிக்கவேண்டியது அவசியமாகிறது கந்தரோடை தொடர்பாக மூவேறு தரப்பினர் தத்தம் அடையாளங்களை வெளிக்காட்டும் சின்னங்கள் கந்தரோடையில் இருப்பதாகக் கூறுகின்றனர்
அவ்வகையில் கந்தரோடையில் வழுக்கியாற்றை ஆதாரமாகக் கொண்ட தமிழர் குடியிருப்பு ஒன்றின் தோற்றத்தை ஒரு சாரார் வலியுறுத்துகின்றனர். கதிரமலை இராச்சியம் நின்று நிலவிய பிரதேசம் கந்தரோடை எனவும். இங்கு உக்கிர சிங்கன் முதலான மன்னர்கள் ஆட்சி செய்தனர் என்றும் செல்லப்படுகிறது.; பிறிதொரு சாரார். கதிரமலை இராச்சியம் இருந்த இடம் சுன்னாகம் சந்திக்குக் கிழக்காக இப்போது கதிரமலைச் சிவன்கோயில் உள்ள - பிரதேசம் என்று கூறுகின்றனர். லிங்கோற்பவர் எனப்படும் வீரசைவர்களின் ஈமத்தாழிகள் புதைக்கப்பட்டு. அங்கு எழுப்பப்பட்ட கல்லறைகளே அவையென இன்னொரு சாரார் வலியுறுத்துகின்றனர். அடுத்த சாரார். பெளத்த மதத்தினர்.
அவ்வகையில் பெளத்தம் நிலவிய இடமாகக் கந்தரோடையைச் சுட்டும் இவர்கள். சிங்கள மக்கள் இங்கு வாழ்ந்ததாக நிறுவ முற்படுகின்றனர். தமிழ் பெளத்தம் இருந்ததற்கான ஆதாரமாக வேறு சிலர் இவற்றை வலியுறுத்துகின்றனர் எவ்வாறெனினும். கந்தரோடை வரலாற்றுச் சிறப்புமிக்க இடம். வழுக்கியாறும். குளங்களும். மருத நிலமும். ஆலயங்களின் அரணும்மிக்க குடியிருப்புப் பகுதி. குடியிருப்புகளோடு இணைந்ததாக இவ்வரலாற்றுச் சின்னங்கள் காணப்படுகின்றன. இவ்வரலாற்றுச் சின்னங்கள் காணப்படும் காணி தியகராசபிள்ளை சிவகுருநாதன் என்பவருக்குச் சொந்தமாக இருந்தது. இக்காணியின் பெயர் கயற்கண்ணி சித்தியார் வளவு என்ற அழைக்கப்பட்டது.
கந்தரோடை தொல்பொருள் சின்னங்கள் தொடர்பில் அக்கறை கொண்டவரும். இச்சின்னங்கள் பரவிக் கிடக்கும் காணிகளுடன் தொடர்புடையவருமான அ.தற்பரானந்தன் கூறும்போது கந்தரோடையில் தொல்பொருள்கள் தொடர்பான ஆய்வை மேற் கொண்டு அது தொடர்பான விவரங்களை முதலில் வெளியிட்டவர் போல் பீரஸ் ஆவார். அவர் அடிக்கடி கந்தரோடைக்கு வந்த தொல்பொருள்களைச் சேகரித்துச் சென்றுள்ளார். அவர்தான் கந்தரோடையின் தொன்மையை முதன்முதலில் வெளிப்படுத்தினார். தொல்பொருள்கள் தொடர்பில் அப்பகுதி மக்கள் அக்கறை காட்டாத சூழலில். முஸ்லிம் வியாபாரிகள் பலரும் வந்துபழைய நாணயங்கள். முத்துக்கள் போன்றவற்றைச் சேகரித்துச் சென்றனர். அவ் வேளையில் கந்தரோடை தமிழ்க் கந்தையா வித்தியாசாலையில் ஆசிரியராக இருந்த சி. பொன்னம்பலம் (ஆதவன்) தொல்பொருள்கள் கந்தரோடையை விட்டு வெளிச் செல்லக் கூடாது என்ற மனப்பாங்குடன் தனது மாணவர்களைப் பயன்படுத்தி. சேகரித்து வைத்திருந்தார் என்றார்;.
அமெரிக்காவின் பென்சில்வேனிய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த செல்வி விமாலா பெக்லி தலைமையிலான குழுவொன்று கந்தரோடையில் மேற்கொண்ட ஆய்வில் பானை ஓடு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. சி.மு அப்புத்துரை என்பவருக்குச் சொந்தமான பொரிக்கன்புலம் என்ற காணியிலிருந்து எடுக்கப்பட்ட இப்பானை ஓட்டில் பிராமி எழுத்துக்கள் காணப் பட்டன. இது கி.மு இரண்டாம் நுற்றாண்டைச் சேர்ந்தது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனா. போல் பீரிஸ் முதலானோர் கந்தரோடையின் தோன்மையை எடுத்துரைத்ததைத் தொடர்ந்து. 1952 ஆம் ஆண்டு தொல்டிபாருள் திணைக்களம் தி. சிவகுருநாதனிடமிருந்து கயற்கண்ணி காணியை வாங்கியது அதனைத் தொடர்ந்து 1960.1962.1964 ஆம் ஆண்டுகளில் புதைபொருள் ஆய்வுகளை மேற்படி திணைக்களம் மேற்கொண்டது. இவ்வாய்வுகள் நில மட்டத்திலிருந்து இரண்டு அடி ஆழத்துக்கு மாத்திரமே இடம்பெற்றன. இவ்வாய்வில் முருகைக் கற்களிலான வட்டவடிவ அத்திபாரஙகள் பல கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றைச் சூழ்ந்து ஒரு பெரிய அத்திபாரமும் காணப்பட்டது.புதைபொருள் ஆய்வுத் திணைக்களம் தனது ஆய்வுகளைத் தொடராமல் - 2 அடி ஆழத்துடனேயே - நிறுத்திக்கொண்டது. அது மட்டுமல்லாது கண்டபிடிக்கப்பட்ட அத்திபாரங்களில் மேல் கண்ட கற்களை நிரப்பி வைரமான கொங்கிறீட் இட்டு. தாதுகோப வடிவ அமைப்புக்களை உருவாக்கியது. பழைமையைக் காண்பிக்க மூன்று விரல்களைக் குத்தி அடையாளங்களும் இடப்பட்ன.
நாம் தற்போது காணுகின்ற இந்த அமைப்பு புதைபொருள் ஆய்வுத்திணைக்களத்தால் உருவாக்கப்பட்ட செயற்கை அமைப்புத்தான்.1970களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத் தொல்பொருள் கழகம் ஆரம்பிக்கபட்டது. பேராசிரியர் கா.இந்திரபாலா. பேராசிரியர் வி.சிவசாமி. அ.தற்பரானந்தன். ஆசிவநேசச்செல்வன் முதலான பலர் அங்கம் வகித்த இக்கழகம் யாழ்ப்பாணத்தின் தொல் பொருள்கள் தொடர்பாகவும். யாழ்.பொது நூலகத்தில் 10 தினங்கள்; இது தொடர்பான கருத்தரங்கு ஒன்றையும் நடத்தியது. இக்கழகத்தின் தோற்றம் கந்தரோடையில் புதைபொருள் ஆய்வுத் திணைக்களம் மேற்கொண்ட நடவடிக்கைகளுக்குச் சவாலாக அமைந்தது. அதுமட்டுமன்றி 1974ஆம் ஆண்டு உடுவில் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வி. தா;மலிங்கம் கந்தரோடை அகழ்வுவாய்வுகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார். அப்போதைய அரசமைப்பு விவகார அமைச்சராக இருந்த கொல்வின் ஆர்.டி.சில்வாவை விளித்து. நீர் ஒரு வரலாற்று ஆசிரியர் முழுமையாக ஆய்வு செய்யாமல். சரியான உண்மை வரலாற்றினை ஆராயாமல் தாதுகோப அமைப்புக்களைக் கட்டுவது தவறானது.
அதை உடனடியாக நிறுத்தி. மேலும் ஆய்வுகளைச் செய்யவேண்டும் என்று வேண்டினார் தருமர். அதை ஏற்றுக்கொண்ட கொல்வின் ஆர்.டி.சில்வா கந்தரோடைக்கு நேரில் விஜயம் செய்து. நிலைமைகளைப் பார்வையிட்டு. தொல் பொருள் திணைக்கள வேலைகளை நிறுத்துவித்தார். அதன்பின் திணைக்களம் எவ்வகையான ஆய்வுகளையும் இங்கு றே;கொள்ளவில்லை. எனினும். யாழ்ப்பாணப பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்த கலாநிதி ரகுபதி செ.கிருஷ்ணாராசா முதலானோர் இப்பகுதியில் கள ஆய்வுகளை மேற் பெகாண்டனர். இவர்களது ஆய்வின் பெறுபேறாக கி.மு.2ஆம் நூற்றாண்டுகால தமிழ் பிராமிக் கல்வெட்டுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதன்மூலம் கி.மு.2ஆம் நூற்றாண்டுக்கு முன்னர்வரை பூர்விகக் குடிகளாகத் தமிழர்கள் வாழ்ந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாது பண்டைத் தமிழர் தாழி அடக்கத்தைப் பறைசாற்றும் சான்றுகள் சிலவும் இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. சீன நாணயம். ரோம நாணயம். டச்சு நாணயம். சேது நாணயம் லக்சுமி நாணயம் முதலான பலவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. தமிழர் தொன்மையைப் பறைசாற்றும் கந்தரோடை பெளத்த தாது கோபங்களானதன் பின்னணி அரசின் திட்டமிட்ட செயற்பாட்டினாலேயே ஏற்பட்டது. இன்றைய சிங்கள பெளத்த மக்களின் வருகைக்கான வரலாற்றுத் தேடலுக்கான பாதையை 1960களில் அரச தொல்பொருள் திணைக்களம் ஏற்படுத்தியிருக்கிறது.
எனவே கந்தரோடை தொடர்பாக அதன் தொன்மை வரலாறு தொடர்பாக. மேலும் ஆய்வுகளைச் செய்து தமிழர் பூர்விகத்தை வெளிப்படத்தும் முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும். கந்தரோடையின் வரலாற்றுப் பெறுமானம் சிதைக்கப்படாது பாது காக்கப்படவேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பெருவிருப்பாக உள்ளது. யாழ். குடாநாட்டை விட்டு அரும்பொருள்கள் வெளிச்செல்வது குறித்து அண்மைய நாள்களில் கவனம் செலுத்தப்படுகிறது. கந்தரோடை வரலாற்றுச் சின்னங்கள் பலவும் கூட இவ்வாறு தாரை வார்த்துக்கொடுக்கப்பட்ட கைங்கரியமும் நடந்தேறியிருக்கிறது.
ஆதவன் பொன்னம்பலம் ஆசிரியர். கந்தரோடை தொடர்பான தொல் பொருள் சான்றுகள் பலவற்றைச் சேர்த்து வைத்திருந்தார் என்பதைக் கட்டுரையில் பார்தோமல்லவா? அவர் யாழ்ப்பாண அரச அதிபராக இருந்த பேணன் அபயசேகர என்பவருக்குத் தமிழ் கற்பிக்கும் பணியை மேற் கொண்டிருந்தார். அவ்வேளையில் அரச அதிபர் வேண்டியதன் பிரகாரம் தன்னிடமிருந்த அரும்பொருள்களை - வரலாற்று ஆதாரங்களை - அவர் கையளித்தார். அவை வித்தியோதய· வித்தியலங்கார பல்கலைக்கழகத்துக்கு அரசு அதிபரால் கையளிக்கப்பட்டன. பெளத்த பிக்குகள் பலரது வருகைக்கு அத்தொல்பொருள் சான்றுகள்தான் காரணமோ?

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]