www.webtamilan.com
Every thing that you want Information Technology E-Bussiness(Hosting,Domain Name Registration) Tamilealam Neethi Chat
Home Page Go to the Previous page

தமிழர்கள் வாழ்வு-யாழ். கோட்டை பற்றிய சில குறிப்புகள்

யாழ்.கோட்டையினுள் உயரதிகாரிகளின் வீடுகள் வீரர்களுக்கான தொடர் இருப்பிடங்கள் களஞ்சியம் ஆயுதசாலைகளுடன் கிறிஸ்தவ தேவாலயமும் காணப்பட்டது.கோட்டையினுள் எப்போதும் தேவையான அளவு உணவுப் பொருட்கள் காணப்படும்.300கண்டி நெல்(கண்டி ஓர் அளவு).யாழ் கோட்டை போன்று மன்னார், ஊர்காவற்றுறை,காங்கேசன்துறை,பருத்தித்துறை,மட்டக்களப்பு,வெற்றிலைக்கேணி ஆகிய பகுதிகளிலும் கோட்டை கட்டியிருந்தாலும் யாழ் கோட்டை போன்று பாரியளவில் இல்லை.

யாழ் கோட்டை முதன்முதலில் கண்டி அரசன் செனரத் என்பவனால் தாக்கப்பட்டது.கண்டியரசனின் மகன் ராஜசிங்கன் யாழ்ப்பாணத்து அரசகுமாரி ஒருத்தியைத் திருமணம்செய்திருந்தான்.இதனால் தனக்கு உரிமை உண்டு என்றே படை ஒன்றை அனுப்பினான்.இப்படை பச்சிலைப்பள்ளியில் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றைத் தரைமட்டமாக்கியது.அங்கிருந்த குருமார் இருவரையும் கொள்றது.இவ்வாறு வந்த படை யாழ். கோட்டையை முற்றுகையிட்டது.அப்போது யாழ்.கோட்டையில் கப்பித்தனாக "லாங் நோட்தே செயிக்ஸாஸ்" என்பவர் இருந்தார்.1629ம் ஆண்டு இம்முற்றுகை இடம்பெற்றது.

13நாள் போர் நடைபெற்றது. யாழ்.கோட்டையை பலம் காணாது என்பதை அறிந்து கொழும்பு தேசாதிபதி "கொன்ஸ்தந்தினோ" பெரும் படையை "கர்வல் லோ சாவ்" என்பவரின் தலைமையில் அனுப்பியது.இதனால் சிங்களப்படை தோல்விகண்டது.கைதுசெய்யப்பட்டவர்கள் அடிமைகளாக்கியும் கொலையும் செய்யப்பட்டார்கள்.1658போர்த்துக்கேயருக்கும் ஒல்லாந்தருக்கும் இடையில் ஒல்லாந்து தளபதி 1500படை வீரரோடு கப்பல்கள் சிலவற்றில் மன்னாரைக் கைப்பற்றி பூநகரி ஊடாக யாழ் நோக்கிப் படையெடுத்தான்.ஒல்லாந்து தளபதியை யாழ் மக்கள் வன்கோயர் என்றும் ஒல்லாந்தே என்றும் அழைத்தனர்.

மார்ச் மாதமளவில் ஒல்லாந்துப் படை யாழ்ப்பாணத்திந் சில இடங்களைக் கைப்பற்றியது.வெளியில் இருந்து போர்த்துக்கேயர் கோட்டையினுள் சென்றுவிட்டனர்.யாழ் கடலேரிக்குள் புகுந்த கப்பல்கள் ஒல்லாந்து தளபதியின் கட்டளைக்காகக் காத்திருந்தன.பின் மாச்ச் 16தொடக்கம் ஜுன் 21வரை முற்றாக நடைபெற்றது. ஒல்லாந்தரின் வருகையை அறிந்த மக்கள் யுத்தம் நடைபெறும் என வீடுகளில் ஒதுங்கியிருந்து 3நாட்களின்பின் வெளியில் வந்தனர்."யார் ஆண்டால் என்ன"என்ற மனப்போக்கு அப்போது யாழ்.மக்களிடையே காணப்பட்டது.

இவ்வாறாக போர் தொடங்காது ஒல்லாந்து தளபதி காலம் கடத்தியது ஆச்சரியமாக இருந்தது. கோடடையினுள் உணவுப் பஞ்சம்,தண்ணீர்ப்பஞ்சம் ஏற்பட்டதும் போர்த்துக்கேயர் வலுவிழந்து தாக்குதல் தொடங்குவர்.பட்டினி போட்டுப் பணியவைப்பது தான் அவனது எண்ணமாக இருந்தது.அவனது எதிர்பார்ப்பு உண்மையானது.அரண்களில் இருந்த வீரர்களின் அமைதியின்மை சோர்வு என்பன ஏற்படுவதை அவதானித்தான்.கோவாவிலிருந்து உதவியை எதிர்பார்த்து வீணாகிவிட்டது.

போர்த்துக்கேயர் கிழக்குப் பக்க அரணினிலிருந்து முதலாவது பீரங்கிக் குண்டு ஒல்லாந்தரை நோக்கிவந்து வீழ்ந்தது.ஒல்லாந்த தளபதி கோட்டையைத் தாக்குமாறு தனது படைக்கு ஆணையிட்டான்.ஒல்லாந்தரின் முதல் குண்டிலேயே வடமுனை அரண் அழிந்தது.கோட்டைக்குக் கூக்குரல் எழுந்தது.யாழ் கோட்டைக்குள் பீரங்கிக் குண்டுகள் முற்றிலும் முடிந்தன.போர்த்துக்கேய வீரர்கள் கற்கள் நினைவுத் தூண்கள் என்பவற்றைப் பீரங்கியில் போட்டுச் சுட்டனர்.105நாள் ஆகியதும் அங்கிருந்த நாய்களும் உணவு இன்றி அங்கிருந்த நாய்களும் பூனைகளும் யாழ் கோட்டைக்குள் உணவாகின.போர்த்துக்கேயரால் விரட்டிப்பிடிக்கப்பட்ட சில பூனைகள் அகழிக்குள் விழுந்து இறந்தன.1658 ஜுன் போர்த்துக்கேயர் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தனர்.

All rights Reserved for Webtamilan.com© (2002) [Used Font is Unicode]